I exposed this koththu last week with all the evidence, and once again, Briyani Man picked up my tweet as a reference, investigated further, and exposed the DMK IT Wing’s fake narrative.
Thanks, Rabi! 🙌🔥
தரவுகள் பேசட்டும்!!
2022 முதல் 2024 வரை, திமுக ஆட்சி காலத்தில், தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கு எதிரான பதிவு செய்யப்பட்ட குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்துள்ளன.
2022 – 6,580
2023 – 6,968
2024 – 10,046
2022-ஐ விட 2024-ல் மட்டும் 52.7% உயர்வு!
குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிய இந்த காலகட்டம் குறித்து தான் சட்டப்பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கேள்வி எழுப்பினார்.
இந்த அதிர்ச்சியூட்டும் தரவுகள் சட்டப்பேரவையில் முன்வைக்கப்பட்டதும், பதில் சொல்ல முடியாமல் திமுக திணறியது!
கேள்விகளுக்கு பதில் சொல்லத் தைரியமும், உண்மைத் தரவுகளை எதிர்கொள்ளத் துணிவுமின்றி சட்டப்பேரவையை விட்டு ஓட்டம் பிடித்தால் மட்டும் உண்மை மாறிவிடாது!
இதுதான் கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியின் உண்மை முகம்!!
தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் இன்று ஒரு முக்கியமான, வரலாற்றுச் சிறப்புமிக்க நாள்.
முதன்முறையாக, மாண்புமிகு முதலமைச்சர் @CMOTamilnadu திரு. விஜய் அவர்கள் தமிழ்நாட்டின் முதலமைச்சராக தேசியக் கொடியை ஏற்றுகிறார். 1970-க்குப் பிறகு பிறந்த ஒரு தலைவர் தமிழ்நாட்டின் முதலமைச்சராக தேசியக் கொடியை ஏற்றுவது, புதிய தலைமுறை அரசியலின் வருகையைப் பிரதிபலிக்கும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணமாகும்.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நாளில் முதலமைச்சர் திரு. விஜய் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். மக்களின் இதயங்களையும் எண்ணங்களையும் வென்று இந்தப் பொறுப்பை அடைய அவர் மேற்கொண்ட கடின உழைப்பு, விடாமுயற்சி மற்றும் தியாகங்கள் பாராட்டுக்குரியவை.
59 ஆண்டுகளுக்குப் பிறகு, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாண்புமிகு அமைச்சர்கள் திரு. @RajeshKumarSMLA மற்றும் திரு. @Viswanathan_INC அவர்கள் தமிழ்நாடு அமைச்சரவையின் அங்கமாக இருப்பது பெருமைக்குரிய தருணம். தமிழ்நாட்டின் முன்னேற்றத்தில் பங்கேற்று, அதை நேரில் காணும் இந்த வரலாற்றுப் பொறுப்பை அவர்கள் சிறப்பாக நிறைவேற்ற எனது வாழ்த்துகள்.
தமிழ்நாட்டின் நலனையும், மக்களின் முன்னேற்றத்தையும் முன்னிறுத்தி நாம் அனைவரும் தொடர்ந்து ஒன்றிணைந்து செயல்படுவோம்.
ஜெய் ஹிந்த்! 🇮🇳
#CMVijay
#Congress
#IndiaAt80
அரசியல் விரக்தியின் உச்சத்தில் மாண்புமிகு முதலமைச்சர் விஜய் அவர்களையும் அவரது தாயாரையும் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இழிவாகப் பேசியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அரசியல் நாகரிகமற்ற முறையில் தரம் தாழ்ந்து பேசுவது இவருக்கு இது முதல் முறையல்ல; தொடர் வாடிக்கையாகிவிட்டது.
பொதுவெளியில் கவனத்தைப் பெற பெண்களை இழிவுபடுத்தும் , தனது அருவருக்கத்தக்க பேச்சுக்குத் தமிழ்நாட்டு மக்களிடமும் முதலமைச்சரிடமும் உடனடியாக நிபந்தனையற்ற பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்!
#CMVijay
தமிழ்நாட்டின் அரசியல் களத்தை அநாகரிகமாக்கும் பேச்சுகள் தொடர்ந்து அரங்கேறுவது மிகவும் கண்டிக்கத்தக்கது. திமுகவின் திரு. உதயநிதி ஸ்டாலினைத் தொடர்ந்து, தற்போது தமிழக பாஜக மாநிலத் தலைவர் திரு. நயினார் நாகேந்திரன் அவர்களும், அரசியல் நாகரிகத்தின் எல்லைகளை மீறி, தமிழக முதலமைச்சர் திரு. விஜய் அவர்களின் தாய் குறித்துக் கருத்து கூறியிருப்பது மிகவும் துரதிருஷ்டவசமானது.
அரசியலில் இருப்பவர்கள் தங்கள் வார்த்தைகளுக்கும், செயல்களுக்கும் பொறுப்புடன் இருக்க வேண்டும். கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். கொள்கைகளை விமர்சிக்கலாம். ஆட்சியின் செயல்பாடுகளைக் கேள்வி கேட்கலாம். ஆனால், ஒருவரின் குடும்பத்தினரை, குறிப்பாக அவர்களின் தாயாரை இழிவுபடுத்தும் வகையில் பேசுவது எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
இந்த வகையிலான தரக்குறைவான கருத்துக்கள், முப்பது, நாற்பது ஆண்டுகளுக்கு முன்பாகவே காலாவதியாகிப் போன அரசியல். இன்றைய தமிழக இளைஞர்களுக்கும், வளரும் நமது குழந்தைகளுக்கும் கற்றுக் கொடுக்க வேண்டியது இத்தகைய மூன்றாந்தர அரசியல் அல்ல.
அறமும் நீதியும் ஒருபோதும் வீழாது!
கரூரிலுள்ள நம் சொந்தங்களுக்கு பணியாணை வழங்கியதற்கு மாண்பமை உயர்நீதிமன்றம் விதித்த தடைக்கு, மாண்பமை உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
மேலும், இதில் அரசியலைக் கலக்க வேண்டாம் என்றும், அரசு வேலைவாய்ப்பு வழங்குவதை எப்படி கேள்விக்குள்ளாக்க முடியும் என்றும் மாண்பமை உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
உயிரிழந்தவர்களை சித்தரித்து கேலியும் அவமதிப்பும் கலந்த AI வீடியோக்களை உருவாக்கிப் பரப்பியவர்கள் ஒருபுறம், உயிரோடு இருக்கும் அவர்களின் குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்குக் கிடைத்த உதவியையே சட்டப் போராட்டமாக்கியவர்கள் மறுபுறம்!
அரசியல் செய்வதற்கு மேடைகள் இருக்கின்றன, தேர்தல்கள் இருக்கின்றன, கொள்கைகள் இருக்கின்றன. ஆனால், துயரத்தில் இருக்கும் குடும்பங்களின் கண்ணீரிலும், வயிற்றிலும், வாழ்வாதாரத்திலும் அரசியல் செய்வதை மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்.
அரசியல் காழ்ப்பிற்கு மாண்பமை உச்சநீதிமன்றத்தின் கேள்விகளே இன்று பதிலடியாகியுள்ளன!
உண்மையே வெல்லும்!
100 நாட்களில் ₹1,02,514 கோடி முதலீடுகள்!
1,27,788 பேருக்கு வேலைவாய்ப்பு!
இது வெறும் புள்ளி விவரம் அல்ல…
தமிழ்நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கான புதிய பாதை!
வார்த்தைகளால் அல்ல…
வளர்ச்சியால் பேசும் ஆட்சி!
The TVK Govt has made a strong debut in its first 100 days of governance, attracting ₹1,02,514 crore in investments and creating new employment opportunities for 1,21,788 people under the leadership of Hon’ble CM Thiru @CMOTamilnadu .
This govt’s distinctive vision and commitment to TN’s future are reflected in the growing investor confidence in the state.
Heartiest congratulations to the Hon’ble CM on this remarkable milestone. This augurs well for Tamil Nadu’s journey ahead. Wishing many more milestones and greater achievements in the years to come! 💐
Onwards to a $1.5 trillion Tamil Nadu! 📈🔥
#CMJosephVijay #TamilNadu #VettriTN #VettriTNConclave2026
வெற்றித் தலைவர் வென்றது
தமிழக மக்களின் மனங்களை மட்டுமின்றி, தமிழகத்தை நம்பி வந்த முதலீட்டாளர்களையும்தான்,
100 நாட்களில் 1 லட்சம் கோடிக்கும் அதிகமான முதலீடுகள் என்றால் , வருங்காலங்களில் முதலீடுகள் இன்னும் பல மடங்கு அதிகரிக்கும், லட்சக்கணக்கான வேலை வாய்ப்புகள் பெருகும்.
வெற்றித் தலைவரால்தான்
வெற்றித் தமிழகம் சாத்தியமாகும்!
#VettriTNConclave2026
இந்தக் காணொளியில் தெரிவிக்கப்பட்டுள்ள புகார் தொடர்பாக உரிய விசாரணை மேற்கொள்வதற்காக, மின்வாரிய குழுவினர் சம்பந்தப்பட்ட நபரை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு, மின் இணைப்பு எண் மற்றும் முழுமையான முகவரியை வழங்குமாறு கேட்டுக்கொண்டனர்.
அதற்கு சம்பந்தப்பட்ட நபர் உடனடியாக தகவல்களைத் தெரிவிப்பதாகக் கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்துள்ளார். அதன் பின்னர், இதுவரை மின் இணைப்பு எண் மற்றும் முகவரியை வழங்கவில்லை. மேலும், பலமுறை மின் வாரியம் சார்பில் தொலைபேசி மூலம் தொடர்புகொள்ள முயற்சித்தும், அழைப்பை ஏற்கவில்லை.
புகாரின் உண்மைத் தன்மையை நேரில் ஆய்வு செய்து, தேவையான நடவடிக்கை எடுப்பதற்காக மின்வாரிய பொறியாளர் குழுவினர் நேரில் சென்று ஆய்வு செய்ய தயாராக உள்ளனர்.
எனவே, சம்பந்தப்பட்ட நுகர்வோர் சரியான மின் இணைப்பு எண் மற்றும் முகவரியை வழங்கினால், அந்த மின் இணைப்பு தொடர்பான விவரங்கள் மறுஆய்வு (Reassessment) செய்யப்பட்டு, பிரச்சனைக்கு உரிய தீர்வு காண மின்வாரியம் சார்பில் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
உண்மை நிலவரம் முழுமையாக அறியாமல், இந்த விவகாரம் தொடர்பாக தேவையற்ற வதந்திகள் அல்லது தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்களின் புகார்களுக்கு உரிய முறையில் தீர்வு காண மின்வாரியம் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
#JUSTNOW || போலீசார் லஞ்சம் கேட்டால் 78717-23000 என்ற கைப்பேசி எண்ணில் மக்கள் புகாரளிக்கலாம்..
காவல் துறையினர் தங்கள் பணிகளை செய்ய மக்கள் லஞ்சம் தரக் கூடாது - சென்னை காவல்துறை கோரிக்கை
#Chennai | #Police | #Bribe | #Complaint | #PolimerNews