மாணவர் போராட்டத்தை திமுக போராட்டமாக மாற்ற உதயநிதி முயன்றார்” – RSS நிர்மல் குமார்
மங்குனி அமைச்சரே…!
வரலாறு தெரியாமல் பேசுவது வேறு; வரலாற்றையே தலைகீழாக திரித்து பேசுவது வேறு. நீங்கள் செய்திருப்பது இரண்டாவது.
தமிழ்நாட்டில் நீட் எதிர்ப்பு என்ற நெருப்பை ஒரு நாளும் அணைய விடாமல், ஒவ்வொரு மாணவனின் கண்ணீரையும் அரசியல் உரிமைப் போராட்டமாக மாற்றிய பெருமை திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும், அண்ணன் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் உண்டு. தமிழ்நாட்டில் நீட் எதிர்ப்பு என்ற நெருப்பை ஒரு நாளும் அணைய விடாமல் பாதுகாத்த இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம். அந்தப் போராட்டத்திற்கு உயிரும், உறுதியும், தொடர்ச்சியும் கொடுத்தவர்களில் முன்னணியில் இருப்பவர் அண்ணன் உதயநிதி ஸ்டாலின்.
இதை தமிழ்நாடு மட்டுமல்ல, இந்திய அரசியலே அறியும்.உங்களுக்கு தெரியவில்லை என்றால் உங்கள் ஓனர் மோடி, அமித்ஷாவை போய் கேளுங்கள் அவர்கள் சொல்லுவார்கள் உதயநிதி ஸ்டாலின் யார் என்று!
நீங்கள் இன்று கேள்வி கேட்கும் தகுதியைப் பற்றி முதலில் பேசுவோம்.
தமிழ்நாடு முழுவதும் நீட் தேர்வால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் கதறியபோது, RSS-லும், BJP-யிலும் இருந்துகொண்டு “எல்லா மாநிலங்களும் ஏற்றுக்கொண்டுவிட்டன; தமிழ்நாடும் ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்று தமிழ்நாட்டு மாணவர்களின் எதிர்காலத்தை அடகு வைத்தவர்களில் ஒருவர்தான் நீங்கள்.
தமிழ்நாட்டு மாணவர்களின் எதிர்காலத்திற்கு எதிராக குரல் கொடுத்தது யார்?
அப்போது நீங்கள் எங்கே இருந்தீர்கள்?
ஒரு மாணவரின் வீட்டுக்குச் சென்றீர்களா?
ஒரு தற்கொலை செய்த மாணவரின் குடும்பத்திற்கு ஆறுதல் சொன்னீர்களா?
ஒரு போராட்டத்தையாவது நடத்தினீர்களா?
ஒரு மனுவையாவது கொடுத்தீர்களா?
இல்லை!
ஆனால்…
நீட் பாதிப்பால் கதறிய மாணவர்களை நேரில் சந்தித்து, அவர்களின் கண்ணீரை கேட்டவர் அண்ணன் உதயநிதி ஸ்டாலின்.
அவர்களை கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் அழைத்துச் சென்று, “நீங்கள் தனியாக இல்லை; தமிழ்நாடு உங்களுடன் நிற்கிறது” என்ற நம்பிக்கையை விதைத்தவர் உதயநிதி ஸ்டாலின்.
தமிழ்நாட்டு மாணவர்களை ராஜஸ்தான், கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களுக்கு தேர்வு எழுத அலைக்கழித்தபோது, அவர்களுக்காக குரல் கொடுத்தது திமுக.
“NEET விலக்கு எங்கள் இலக்கு” என்ற முழக்கத்தை வீதியிலிருந்து சட்டமன்றம் வரை கொண்டு சென்றவர் திமுகவின் இளைஞர் அணி செயலாளர் அண்ணன் உதயநிதி ஸ்டாலின்.
85 லட்சம் கையெழுத்துகளை திரட்டி குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய வரலாற்று முயற்சிக்கு தலைமை தாங்கியது உதயநிதி ஸ்டாலின்.
அது மட்டுமா?
* தமிழ்நாடு முழுவதும் நீட் எதிர்ப்பு கருத்தரங்கங்கள்.
* இளைஞர் அணி மாநில மாநாட்டில் தீர்மானம்.
* மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள்.
* தொடர் போராட்டங்கள்.
* உண்ணாவிரதப் போராட்டங்கள்.
* சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம்.
* ஒன்றிய அமைச்சர்களை நேரில் சந்தித்து வலியுறுத்தல்.
* ஆளுநரை நேரில் சந்தித்து கோரிக்கை.
இந்தப் பட்டியல் எழுத ஆரம்பித்தால் ஒரு புத்தகம் ஆகிவிடும்.
இன்று இந்தியா முழுவதும் மாணவர்கள் “Fair NEET” என்று கேட்கிறார்கள்.
தமிழ்நாடு மட்டும் “BAN NEET” என்று முழங்குகிறது.
அந்த அரசியல் புரிதலை உருவாக்கிய இயக்கம் திமுக. அந்த முழக்கத்தை மக்கள் இயக்கமாக மாற்றிய தலைமையில் முன்னணியில் இருப்பவர் அண்ணன் உதயநிதி ஸ்டாலின் என்பதுதான் மறுக்க முடியாத உண்மை.
மாணவர்களின் கண்ணீரை அரசியலாக்கியது திமுக அல்ல; மாணவர்களின் கண்ணீரை அரசியலாக்க வேண்டிய அவசியத்தை உருவாக்கியது ஒன்றிய அரசின் நீட் கொள்கை.
இப்போது புரிகிறது…
மாணவர்கள் போராடுவது உங்களுக்கு பிரச்சினையல்ல. அந்தப் போராட்டத்தின் முன் வரிசையில் எப்போதும் திமுக இருப்பதுதான் உங்கள் வயிற்றெரிச்சல்.
ஏனென்றால், மாணவர்களுடன் நிற்பவர்கள் வரலாற்றில் இடம் பெறுவார்கள்.
மாணவர்களுக்கு எதிராக நிற்பவர்கள் வரலாற்றின் குப்பைத்தொட்டியில் தூக்கி வீசப்படுவார்கள்.
தற்குறி கூட்டத்தை தூக்கி வீசும் நாள் நெருங்குகிறது.
எனவே…
எனவே, RSS-ன் பழைய வசனங்களை மீண்டும் ஒப்பிக்கும் முன், தமிழ்நாட்டின் நீட் எதிர்ப்பு வரலாற்றைப் படித்துவிட்டு பேசுங்கள்.
தமிழ்நாட்டின் மாணவர் உரிமைப் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் எந்தக் கருத்துக்கும், தமிழ்நாட்டு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்
நீட் எதிர்ப்பு என்பது ஒரு கட்சியின் அரசியல் அல்ல. அது தமிழ்நாட்டு மாணவர்களின் உயிர் உரிமைப் போராட்டம் என்பதனை உணர்ந்து, மற்றவர்களுக்கும் உணர்த்துபவர் அண்ணன் உதயநிதி ஸ்டாலின் அவர்கள்
எச்சரிக்கை Mr. நிர்மல் குமார் அவர்களே!!
தமிழ் கா அமுதரசன் BE.,MBA.,
மாணவர் அணி துணைச் செயலாளர்
திமுக
26.07.2026
@mkstalin@Udhaystalin
காவிரி நீருக்காகக் கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை எனும் சதிவலையில் தமிழ்நாடு முதலமைச்சர் சிக்கக் கூடாது. வேண்டாம் இந்த விஷப் பரீட்சை!
நாம் பல்லாண்டுகள் சட்டப்பூர்வமாகப் போராடிப் பெற்ற உரிமைகளைச் சிதைப்பதாகவே பேச்சுவார்த்தை முயற்சிகள் அமையும். நீதிமன்றத்தில் பின்னடைவை ஏற்படுத்திவிடும்.
இதனால்தான், கடந்த காலங்களில் இந்த யோசனை முன்வைக்கப்பட்ட போதெல்லாம் உறுதியாக அதனை நிராகரித்தது தி.மு.க.!
கூட்டணி மயக்கத்தில் தமிழ்நாட்டின் காவிரி உரிமை பணயமாகிடக் கூடாது என்பதே டெல்டா விவசாயிகளின் ஒருமித்த குரல்.
அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி; விவசாயச் சங்கத்தினருடன் பேசி அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வோம்!
பேச்சுவார்த்தைக்காகக் கர்நாடகம் செல்லும் முடிவை மாண்புமிகு @CMOTamilNadu கைவிட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
மாண்புமிகு @CMOTamilNadu அவர்களுக்குச் சில கேள்விகள்:
1) தமிழ்நாட்டின் கோரிக்கையைக் காவிரி மேலாண்மை ஆணையம் தொடர்ந்து நிராகரித்து வரும் நிலையில் இதுகுறித்து பிரதமரிடம் பேசாதது ஏன்?
2) தமிழ்நாட்டின் நீர்வளத்துறை அமைச்சர் என்ன செய்துகொண்டிருக்கிறார்?
3) தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசை எதிர்த்துப் பேச என்ன பயம்?
4) அனைத்துக் கட்சிக் கூட்டத்தை ஏன் கூட்டவில்லை?
5) மேகதாது அணைக்கு எதிரான சட்டமன்றத் தீர்மானத்தை அனைத்துக் கட்சி உறுப்பினர்களுடன் சென்று பிரதமரிடம் நேரில் அளிப்பது எப்போது?
6) தவிக்கும் டெல்டா விவசாயிகளுக்கான நிவாரணத் தொகுப்பு எங்கே?
துப்புரவுத்தொழிலாளர்கள் போராட்டம் நடந்தபோது, கூலி படம் பார்த்த ஸ்டாலின் கெட்டவர் என்றால் இப்போ மாணவர்கள் போராட்டம் நடக்கும்போது ஜனநாயகன் பார்க்கும் விஜய் யாரு?
NEET was introduced with three principal promises: (1) reduce the burden, (2) eliminate commercialisation, and (3) improve standards.
On every one of these counts, #NEET has failed. It has merely shifted the centre of learning from schools to coaching centres.
The problem with NEET has always been structural, not merely procedural. Recent events have vindicated that concern.
The ongoing student protests must serve as a wake-up call for the Union Government. It's time to trust the states. It's time to abolish NEET.
Read my op-ed in today's @The_Hindu: https://t.co/wFlPB09zUT
To my Parliamentary question regarding whether the new TN Government has requested the Central Government to change the proposed site of the Parandur Chennai Greenfield Airport, and if so, the details of such a request, including dates and the Government's response; the Hon'ble Minister of State @mohol_murlidhar replied with a firm NO!
Therefore the 10200 crore Parandur Greenfield Airport project conceived by DMK Govt remains unaffected based on the Union Minister’s reply.
My other question on the status of Chennai, Coimbatore, Salem, Tiruchirappalli, Madurai and Tuticorin airports, indicating the project-wise budget allocation, physical and financial progress, expected date of completion and other relevant details is also answered.
@mkstalin@Udhaystalin@arivalayam