ஆடு திருடியவருக்கு அரசுப் பதவியா?
வாணியம்பாடி அருகே புதூர் கிராமத்தில் ஆடு வளர்த்துத் தன் பிழைப்பை நடத்தி வரும் 65 வயது ஏழைப் பெண்மணியின் வாழ்வாதாரமான ஆட்டைத் திருடி, காரில் ஏற்றிச் சென்ற வழக்கில் சிசிடிவி (CCTV) ஆதாரங்களுடன் சிக்கிய வழக்கறிஞர் ஏ. ஷேக் சுல்தானை, முதல்வர் திரு. ஜோசப் விஜய் அரசு தற்போது திருப்பத்தூர் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தின் அரசு வழக்கறிஞராக நியமித்திருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது.
அரசு வழக்கறிஞர்களின் நியமனங்கள் லஞ்சத்தின் அடிப்படையில் நடப்பதாக ஏற்கனவே குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், இந்தச் சம்பவம் அதை மெய்ப்பிக்கும் வகையில் அமைந்துள்ளது.
எனவே, முதல்வர் திரு. @TVKVijayHQ அவர்கள் இந்த முறைகேடான நியமனத்தை உடனடியாக ரத்து செய்வதோடு, அதிகாரத்தைப் பயன்படுத்தி அரசு வேலைகளை விலை பேசுபவர்கள் மீதும், குற்றப் பின்னணி கொண்டவர்களைப் பதவியில் அமர்த்துபவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
இந்தியாவின் ஒற்றுமை, தேசிய ஒருமைப்பாடு மற்றும் வலிமையான எதிர்காலம் என்ற உயரிய இலட்சியங்களை முன்வைத்து பணியாற்றிய டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி அவர்களின் 125-வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு, இன்று பெரம்பலூரில் உள்ள ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற அவர்களின் வாழ்க்கை, சிந்தனை மற்றும் தேசத்திற்கான அர்ப்பணிப்பை எடுத்துரைக்கும் கருத்தரங்கில் பங்கேற்றது பெரும் மகிழ்ச்சியையும் பெருமையையும் அளித்தது.
இன்றைய இளைஞர்களும் மாணவ, மாணவியரும் டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி அவர்களின் நாட்டிற்கான பங்களிப்பு, தேசிய ஒருமைப்பாட்டிற்காக அவர் மேற்கொண்ட தொலைநோக்கு சிந்தனைகள் மற்றும் தேசப்பற்று குறித்து ஆழமாக எடுத்துரைத்த விதம் மிகவும் பாராட்டத்தக்கதாக இருந்தது. அவர்களின் உயரிய சிந்தனைகள் இன்றைய தலைமுறையையும் தாண்டி அடுத்த தலைமுறையினரிடமும் சென்றடைந்து வருவது இந்த கருத்தரங்கின் மூலம் தெளிவாக உணரப்பட்டது. இளைஞர்களின் தேசப்பற்றும், நாட்டின் வளர்ச்சிக்கான அவர்களின் விழிப்புணர்வும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் அளித்தது.
இந்நிகழ்வில் ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியின் தலைவர், தமிழக பாஜக மாநில இணைப் பொருளாளர் மற்றும் டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி அவர்களின் 125-வது ஜெயந்தி விழா மாநில இணைப் பொறுப்பாளரான திரு. சிவசுப்பிரமணியம் அவர்கள் உடன் கலந்துகொண்டது சிறப்பாக அமைந்தது.
(1/3)
சனாதன தர்மத்தின் “சக்தி” அளப்பரியது!
கடந்த மாதம் ஏழுமலையானை தரிசிப்பதற்காக, 9 கி.மீ தூரம் கொண்ட “அலிபிரி” நடைபாதையின் 3,550 படிக்கட்டுகளையும் மனம் தளராமல் ஏறி திருப்பதிக்கு சென்ற, சென்னையைச் சேர்ந்த 116 வயதான நவநீதம்மாள் என்பவரை அழைத்து, சகல வசதிகளுடன் “VVIP” போல் மீண்டும் ஒருமுறை குடும்பத்துடன் ஏழுமலையானை தரிசிக்க வைத்த ஆந்திர முதல்வர் திரு. @ncbn அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தள்ளாடும் வயதிலும் தனது வாழ்வியலான இந்து தர்மத்தை இறுகப் பற்றிக் கொள்ளத் துடிக்கும் நவநீதம்மாள் போன்றோரின் இறைபக்தி நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது என்றால், பிறரின் மத நம்பிக்கைகளை மதிப்புடன் போற்றும் ஆந்திர முதல்வரின் அர்ப்பணிப்பு நம்மை வியக்க வைக்கிறது. இவர்களைப் போன்ற உன்னத மனிதர்கள் உள்ளவரை, சனாதன தர்மம் வாழ்வாங்கு வாழ்ந்திருக்கும். அதன் பெருமைகள் உலகெங்கும் நிறைந்திருக்கும்!
வாழ்க தேசியம்! வளர்க தெய்வீகம்!
“ஆய்வு” என்ற பெயரில் தவெகவினர் நடத்தும் அட்டூழியங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்!
“ஆய்வு” என்ற பெயரில், விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள அரசுப் பள்ளிக்கு கேமராக்களுடன் சென்று, அங்குள்ள குழந்தைகளுக்கு ஆங்கிலம் தெரியவில்லை என்பதைக் குத்திக் காட்டி, மாணவர்கள் முன்னிலையிலேயே அங்குள்ள ஆசிரியர்களின் கற்பித்தல் திறனைக் குறை கூறி, “Last Bench” மாணவர்களுக்கு எதுவும் தெரியாது என்று லேபிள் ஒட்டிய தொழில்துறை அமைச்சர் செல்வி. @Keerthana4VNR -இன் ஆணவம் கடும் கண்டனத்திற்குரியது.
நேர்காணல் நடத்தும் ஸ்ட்ரிக்ட் கார்ப்பரேட் முதலாளி போல, படிக்கும் பிள்ளைகளிடம் துருவித் துருவி கேள்விகள் கேட்டு அவர்களைத் திணற வைப்பதற்கும், அங்குள்ள ஆசிரியர்களைக் குற்றவாளி கூண்டில் நிறுத்தி மகிழ்வதற்கும் பெயர் “ஆய்வு” கிடையாது, “அராஜகம்”. செல்லுமிடமெல்லாம் அதிகாரிகளை விட, கேமராமேன்களைக் கையோடு அழைத்துச் செல்லும் தவெக அமைச்சர்கள், “ஆய்வு செய்வது எப்படி” என்பது குறித்த அடிப்படையை தெரிந்து கொள்வது அவசியம். அதைவிட்டு விட்டு படிக்கும் பிள்ளைகளிடம் இப்படி தாழ்வு மனப்பான்மையை விதைக்க முயலக் கூடாது.
எனவே, முதல்வர் திரு. @TVKVijayHQ அவர்கள், களப்பணியில் அனுபவமற்ற தனது அமைச்சர்களுக்கு ஆய்வு செய்வதற்கான முறையான வழிமுறைகளை அறிவுறுத்த வேண்டும்! மேலும், தன்னைக் கற்றறிந்த ஞானி போல காட்டிக் கொள்வதற்காக அரசுப் பள்ளியில் படிக்கும் பிள்ளைகளை பகடைக்காய்களாகப் பயன்படுத்தி, அதை கேமராவில் பதிவு செய்து வெளியிட்ட அமைச்சர் செல்வி. கீர்த்தனா மீது முதல்வர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்!n
விவசாயிகளின் உயிருடன் விளையாடாதீர்கள் திரு. @TVKVijayHQ அவர்களே…!
தேர்தலின் போது தவெக அளித்த வாக்குறுதியின் படி, பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டுமென சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்று விட்டு வீடு திரும்பிய, 70 வயதான நாகை மாவட்ட விவசாயி திரு. சோமசுந்தரம் என்பவர் நெஞ்சுவலியால் உயிரிழந்து விட்டதாக வெளியாகியுள்ள செய்திகளைப் படித்தீர்களா முதல்வரே? இம்மரணத்தின் கறைகள் உங்கள் கரங்களிலும் படிந்துள்ளன என்பதை உணர்ந்தீர்களா?
“5 ஏக்கருக்குள் நிலம் வைத்திருப்போரின் அனைத்து பயிர்க்கடன்களும் ரத்து செய்யப்படும்” என்று கூறிய நீங்கள், அரியணையில் அமர்ந்த பிறகு பயிர்க்கடன்களில் வெறும் ரூ.75,000 -த்தை மட்டுமே தள்ளுபடி செய்வதாக மாற்றி அறிவித்தது அப்பட்டமான ஏமாற்று நாடகம். சொன்னதை சொன்னபடி செய்யாத உங்கள் துரோகத்தை ஜீரணிக்க முடியாமல் தான், தற்போது நூற்றுக்கணக்கான விவசாயிகள் மன உளைச்சலுடன் தெருவில் இறங்கிப் போராடி வருகின்றனர். ஆனால், போராடும் விவசாயிகளை நீங்கள் தொடர்ந்து அலட்சியப்படுத்துவது கடும் கண்டனத்திற்குரியது.
உலகிற்கே படியளக்கும் விவசாயிகளை இப்படி மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் வதைப்பதற்காக மக்கள் உங்களைத் தேர்ந்தெடுக்கவில்லை முதல்வரே. எனவே, போராட்டங்கள் மூலமாவது உங்கள் கவனத்தைப் பெற முடியுமா என தொடர்ந்து முயற்சித்துக் கொண்டிருக்கும் விவசாயிகளை இனியும் வஞ்சிக்காதீர்கள். இனியொரு உயிர்பலி நடக்கும் முன்னே, நீங்கள் சொன்னபடி பயிர்க்கடனை முழுமையாக ரத்து செய்யுங்கள்! உண்டி கொடுத்தோரின், வாழ்வாதாரத்தைப் பேணுங்கள்!
இன்றைய தினம் புதுச்சேரி மக்கள் பவனத்தில் மாண்புமிகு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் திரு. கைலாஷ் நாதன் IAS(Retd) @LGov_Puducherry அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து உரையாடியது மகிழ்ச்சி அளிக்கிறது.
‘விபி ஜி ராம் ஜி’ திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு ரூ.2,000 கோடி ஒதுக்கீடு - மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு நன்றி!
‘விக்சித் பாரத் ஜி ராம் ஜி’ திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு முதற்கட்ட தவணையாக ரூ.2,176.84 கோடி நிதியை ஒதுக்கியுள்ள மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. @narendramodi அவர்களுக்கும், மத்திய வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு. @ChouhanShivraj அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மத்திய அரசின் இந்த மக்கள் நலத் திட்டத்தின் மூலம், கிராமப்புற ஏழை, எளிய மக்களுக்கான வேலை நாட்கள் 100-லிருந்து 125 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், குறைந்தபட்ச தினசரி ஊதியம் 300 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் உள்ள லட்சக்கணக்கான கிராமப்புற குடும்பங்களின் பொருளாதார நிலை உயரும்.
பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான மத்திய அரசின் இத்தகைய உன்னத திட்டத்தின் பலன்கள், தகுதியுள்ள ஏழை, எளிய மக்களுக்கு முழுமையாகச் சென்றடைவதை முதல்வர் திரு. @TVKVijayHQ அவர்கள் உடனடியாக உறுதி செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
இன்றைய தினம், தமிழக பாரதிய ஜனதா கட்சியின் பாரம்பரிய வழக்கமான காரியகர்த்தர்களை நேரில் சந்தித்து, அவர்களுடனும் அவர்களின் குடும்பத்தினருடனும் அன்போடும், உறவோடும் கலந்துரையாடும் நிகழ்வின் ஒரு பகுதியாக, விழுப்புரம் வடக்கு மாவட்டம், திண்டிவனம் நகரச் அமைப்பாளர் திரு. மோதிஷ்குமார் அவர்களின் அலுவலகத்திற்குச் சென்று, அவரையும் அவரது குடும்பத்தினரையும் நேரில் சந்தித்து கலந்துரையாடும் வாய்ப்பு கிடைத்தது.
நமது தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் இன்றைய தினம் விழுப்புரம் வடக்கு மாவட்டத்தில் நடைபெற்ற விழுப்புரம் வடக்கு மாவட்ட மண்டல், மாவட்ட மற்றும் மாநில நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டத்தின் போது டாக்டர் ஷ்யாமா பிரசாத் முகர்ஜி அவர்களின் அவர்களின் 125 ஆவது ஜெயந்தி விழாவை முன்னிட்டு அவர் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினோம்.
இந்த நிகழ்வில் விழுப்புரம் வடக்கு மாவட்ட தலைவர் திரு. K R விநாயகம் அவர்கள் உடன் கலந்துகொண்டார்.
சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு! சாக்கு போக்கு சொல்லிக் கொண்டிருக்கும் முதல்வர்!
கடந்த வாரம் தமிழகத்தையே உலுக்கிய நெல்லை இரட்டைக் கொலையின் பதற்றம் தணிவதற்குள்ளேயே, கோவை சிங்காநல்லூர் பகுதியில் காங்கிரஸ் நிர்வாகி கடத்தப்பட்டுள்ள சம்பவமும், விருதுநகர் மாவட்டம் அருகே, திமுக கொடி கட்டிய காரை ஏற்றி ஒரு சிறுமியைக் கொலை செய்ய முயன்றுள்ள சம்பவமும் கடும் அதிர்ச்சியளிக்கின்றன.
பட்டப்பகலில் பொதுவெளியில் யார், யாரை வேண்டுமானாலும் மிரட்டலாம், தாக்கலாம், கொலை செய்யலாம் என்னுமளவுக்கு சட்டம் ஒழுங்கு சீரழிந்து கிடப்பதும், அதை ஜோசப் விஜய் அரசு வேடிக்கை பார்ப்பதும் கடும் கண்டனத்திற்குரியது. அதிலும் குறிப்பாக, தவெக ஆட்சியைத் தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கும் கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகளுக்கே பொதுவெளியில் பாதுகாப்பளிக்க முடியாமல் முதல்வர் திரு. @TVKVijayHQ அவர்கள் திணறுவது, அவரின் நிர்வாகத் தோல்வியைத் தான் நமக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. “மாற்றம்” வரும் என நம்பி வாக்களித்த மக்களுக்கு தினந்தினம் இப்படி உயிர்பயத்தைக் காட்டிக் கொண்டிருப்பது மன்னிக்க முடியாதது.
எனவே, ஆட்சி பொறுப்பேற்று இரண்டு மாதங்கள் நிறைவடையும் வேளையிலாவது, முந்தைய ஆட்சியில் சிதிலமடைந்த சட்டம் ஒழுங்கை சரி செய்வதில் முதல்வர் முனைப்புடன் செயல்பட வேண்டும்! தவறு செய்பவர்கள் மீது எவ்வித சமரசமுமின்றி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்!
இந்தியாவின் ஒற்றுமை, தேசிய ஒருமைப்பாடு மற்றும் வலிமையான எதிர்காலத்திற்கான தொலைநோக்கு சிந்தனையுடன் பொதுவாழ்வில் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய டாக்டர் ஷ்யாமா பிரசாத் முகர்ஜி அவர்களின் பிறந்தநாள் இன்று. நாட்டின் முன்னேற்றம், மக்கள் நலன் மற்றும் தேசிய ஒற்றுமைக்காக அவர் ஆற்றிய பங்களிப்பை நன்றியுடனும் மரியாதையுடனும் நினைவுகூருகிறோம்.
அவரது உயரிய இலட்சியங்களும், தேசப்பற்றும், மக்கள் சேவைக்கான அர்ப்பணிப்பும் நம்மை நல்லாட்சி, தேசிய முன்னேற்றம் மற்றும் மக்களுக்கான சேவை என்ற பாதையில் தொடர்ந்து செயல்பட ஊக்கமளிக்கட்டும். டாக்டர் ஷ்யாமா பிரசாத் முகர்ஜி அவர்களின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதையைச் செலுத்துவோம்.
இன்றைய தினம் திருநெல்வேலி மாவட்டம் மானூர் சட்டமன்ற தொகுதியிலுள்ள கானாப்பட்டி திரு. சத்யா அவர்களின் புதுமனை புகு விழாவில் கலந்துகொண்டு அவர் குடும்பத்தாருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டேன்.
அவர்களின் இந்த புதிய இல்லத்தில் அவர்கள் வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெற்று இன்புற்று வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தித்தேன். இந்த நிகழ்வில் திருநெல்வேலி வடக்கு மாவட்ட தலைவர் திரு. முத்து பலவேசம் அவர்கள் உடன் கலந்து கொண்டு வாழ்த்தினார்.
இன்றைய தினம் திருநெல்வேலி பாளையங்கோட்டையில் நடைபெற்ற திருநிறைச்செல்வன் நம்பி மற்றும் திருநிறைச்செல்வி உமா மகேஸ்வரி ஆகியோரின் திருமண நிச்சயதார்த்த விழாவில் கலந்து கொண்டு அவர்களை வாழ்த்தி ஆசீர்வதித்தேன்.
மேலும் விரைவில் திருமண வாழ்க்கையை தொடங்க இருக்கும் அவர்கள் வாழ்வில் எல்லா வளமும் வளமும் பெற்று இன்புற்று வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தித்தேன்.
இந்த நிகழ்வில் திருநெல்வேலி வடக்கு மாவட்ட தலைவர் திரு. முத்து பலவேசம் அவர்கள் உடன் கலந்து கொண்டு வாழ்த்தினார்.
இன்றைய தினம் திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்தில் நடைபெற்ற திருநிறைச்செல்வன் பால்துரை மற்றும் திருநிறைச்செல்வி கண்ணம்மாள் ஆகியோரின் திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி ஆசீர்வதித்தேன்.
மணமக்கள் இருவரும் எல்லா வளமும் நலமும் பெற்று இன்புற்று வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தித்தேன்.
இந்த நிகழ்வில் திருநெல்வேலி வடக்கு மாவட்ட தலைவர் திரு. முத்து பலவேசம் அவர்கள் உடன் கலந்து கொண்டு வாழ்த்தினார்.
நம் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மூத்த காரியகர்த்தாவும், தேசிய பொதுக்குழு உறுப்பினருமான வழக்கறிஞர் திரு. திருமலைசாமி அவர்களை பழனியில் உள்ள அவரது இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்து உரையாடினோம்.
இந்த நிகழ்வில் அன்புத் தம்பிகள் தமிழக பாஜகவின் மாநில இளைஞர் அணி துணைத்தலைவர் திரு. கமலேஷ் கண்ணன் அவர்கள் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர் திரு. கருப்பசாமி அவர்கள் உடன் இருந்தனர்.
முருகப்பெருமானின் சிறப்பு பெற்ற திருத்தலமான பழனியில் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமியை (பழனியாண்டவர்) மலையேறி தரிசிக்கும் அரிய பாக்கியம் கிடைத்தது.
அருள்மிகு முருகப்பெருமானின் திருவடிகளில், பாரத நாடு என்றும் வளமும், நலமும், ஒற்றுமையும் பெற்று முன்னேற வேண்டும்; அனைத்து மக்களும் அமைதியுடனும், இன்பத்துடனும் வாழ வேண்டும் என்று மனமாரப் பிரார்த்தனை செய்து வேண்டிக்கொண்டேன்.
இந்த ஆன்மிக தரிசனத்தில், தேசியச் செயலாளரும் தமிழக பாஜக மேலிடப் பொறுப்பாளருமான திரு. @MenonArvindBJP அவர்கள், மாநிலச் செயலாளர் திரு. @AKNPerumal அவர்கள், திண்டுக்கல் கிழக்கு மாவட்டத் தலைவர் திரு. முத்துராமலிங்கம் அவர்கள், மற்றும் திண்டுக்கல் மேற்கு மாவட்டத் தலைவர் திரு. ஜெயராமன் அவர்கள் ஆகியோர் உடன் கலந்து கொண்டு அருள்மிகு முருகப்பெருமானை தரிசித்து, நாட்டின் நலனுக்கும் மக்களின் வளமான எதிர்காலத்திற்கும் இணைந்து பிரார்த்தனை செய்தனர்.
வெற்றிவேல்! வீரவேல்!