அழுகிப்போன வெங்காயத்தை அவதூறாக உரித்த தி.மு.க.வின் முகமூடியை தீயசக்தி தி.மு.க. அரசால் நியமிக்கப்பட்ட குழு உறுப்பினர் ஒருவரே தாறுமாறாக உரித்து உப்புக்கண்டம் போட்டு உள்ளார்.
வெற்று விளம்பர ஊழல் மாடல் அரசாங்கம் நடத்திய கடந்த தி.மு.க. ஆட்சியில் புதிய நூலகங்களுக்கான நூல் மற்றும் மின்நூல் கொள்முதல் செய்ய கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 5ஆம் தேதியிட்ட அரசாணை ஒன்று வெளியிடப்பட்டது. நூல்களைப் பரிந்துரை செய்யவும் குழு அமைத்து அதற்கான அரசாணையும் அதே 5.11.2025 அன்றே வெளியிடப்பட்டுள்ளது. அக்குழுவில் நவீன இலக்கியம் மற்றும் திறனாய்வு சம்பந்தமான நூல்களைப் பரிந்துரைக்கும் குழுவிற்காக இடம்பெற்றவர்தான் பேராசியரும் எழுத்தாளருமான திரு.பெருமாள் முருகன் அவர்கள்.
இவர்தான் கோவை பெரியார் அறிவுலகத்திற்கு நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் தரமற்ற நூல்களாகக் கொள்முதல் செய்யப்பட்டு ஊழல் நடந்துள்ளதாக உலகிற்கு அறிவித்துள்ளார்.
ஊர் உலகமே அறிந்திராத பதிப்பகம், இதுவரை உலகம் அறிந்திராத இலக்கியச் செய்திகள் என அத்தனையும் பொய்யும் புரட்டுமானதாக உள்ளதாகப் பிட்டுப் பிட்டு வைத்துள்ளார் பேராசிரியர் திரு.பெர��மாள் முருகன் அவர்கள்.
பெரியார் அறிவுலகத்தை ஊழல் உலகமாக்கி இருக்கும் தி.மு.க. இதற்கு என்�� பதில் சொல்லப் போகிறது?. பெரியார் சொன்ன வெங்காயம் இந்த ஊழல் தி.மு.க.தான் என்பதை ஒப்புக்கொள்ளப் போகிறதா இல்லையா?.
மண், மொழி, மானம் காத்தவர்களே நாங்கள்தான்; தமிழ் மொழியைக் கண்டுபிடித்ததே நாங்கள்தான்; தமிழ் மொழியியலின் மூளையே நாங்கள்தான்; தமிழ் இலக்கியக் கடலை எங்கள் சட்டைப் பையில் அடக்கி வைத்திருக்கும் அதிகாரம் பெற்றவர்களே நாங்கள்தான்; தமிழே நாங்கள்தான் என்று ஊரை ஏமாற்றுவதற்காக உரக்கக் கூவும் கூட்டமே எப்போதும் ஊழல் கூட்டமாக இருக்கும் என்பதற்கு உதாரணம், ஊழலின் ஊற்றுக்கண்ண��ன தி.மு.க.தான் என்பது ஊரறிய வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
பெரியார் அறிவுலகம் உள்ளிட்ட புதிய நூலகங்களுக்கான நூல் பரிந்துரைக் குழு அமைக்கப்பட்டு, கடந்த தி.மு.க. ஆட்சியில் 5.11.2025 தேதியிட்ட அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. அக்குழுவில்
நவீன இலக்கியங்கள் மற்றும் திறனாய்வு நூல்களைப் பரிந்துரைக்கும் குழுவில் இடம்பெற்றிருந்த பேராசிரியர் திரு.பெருமாள் முருகன் அவர்களே, பெரியார் அறிவுலகத்திற்கு நூல் கொள்முதல் செய்யப்பட்டதில் ஊழல் நடந்துள்ளதை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளார். ஊழலின் ஊற்றுக்கண்ணைக் கண்டறிந்துள்ள அவரைப் பாராட்டியே ஆக வேண்டும்.
நாம் அரசியலுக்கு வந்தபோதே பெரியார் பெயரை வைத்துக் கொள்ளை அடித்து வருவது தி.மு.க.தான் என்று பகிரங்கமாக நமது மாநாட்டிலேயே அறிவித்தோம். ஊழலின் ஊற்றுக்கண்ணே தி.மு.க.தான் என்பதையும் இன்று வரை நாம் மட்டுமே சமரசமின்றி���் சொல்லி வருகிறோம். எப்போதும் தி.மு.க. பற்றி நாம் சொல்வது உண்மைதான் என்பதைத் தி.மு.க.வே மெய்ப்பி��்து உள்ளது. அதற்கான இப்போதைய உதாரணமாக, கோவை பெரியார் அறிவுலகத்தில் நடந்துள்ள புத்தகக் கொள்முதல் ஊழலே சாட்சியாகி உள்ளது.
தி.மு.க. கொஞ்சம் வித்தியாசமாக ஊழல் செய்து, கோவை பெரியார் அறிவுலகத்தையே ஊழல் உலகமாக மாற்றியிருக்கிறது. ஊழல் இலக்கியம் படைப்பதில் தி.மு.க. உயர் ரகம்தான் என்பதும் தெரிய வந்துள்ளது.
பெரியார் அறிவுலகத்தைப் பார்த்துப் பார்த்துக் கட்டியதாகத் தம்பட்டம் அடித்துக்கொண்ட தி.மு.க. தலைமை, இப்படி நூல்கள் கொள்முதல் செய்வதிலும் பார்த்துப் பார்த்து, தரமற்ற நூல்களாகப் பரிந்துரை செய்து ஊழல் செய்துள்ளதை உலகமே பார்த்துக் கைகொட்டிச் சிரிக்கிறது.
கடந்த தி.மு.க. ஆட்சியில்தான் எத்தனை எத்தனை ஊழல்கள் நடந்துள்ளன! நகராட்சித் துறையில் ஊழல்! டாஸ்மாக்கில் ஊழல்! டெண்டர்களில் ஊழல்! ஒவ்வொரு துறையிலும் ஊழலோ ஊழல் எனத் தங்களுக்காக ஒரு மிகப் பெரிய ஊழல் உலகத்தையே ���ருவாக்கியதுதான் தி.மு.க. என்பது அடுத்தடுத்து அம்பலமாகி வருகிறது.
இந்த ஊழல்களின் வரிசையில், நம் வீட்டுப் பிள்ளைகள் மற்றும் மாணவர்களின் நலன் சார்ந்த பள்ளிக் கல்வித் துறையில் ஊழல் நடந்துள்ளதும் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டதும் உலகறிந்த செய்தியே. ஆனால், அதன் தொடர்ச்சியாக இப்போது நம் பிள்ளைகளும் மாணவர்களும் பயன்படுத்தக் கட்டப்பட்ட அறிவுலக நூலகம் சார்ந்தும் ஊழலா?
தி.மு.க.வின் வரலாறு தெரிந்தவர்களுக்கு இது ஒன்றும் அதிர்ச்சிக்கு உரியதன்று. ஆனால், அனைத்தும் மக்கள் பணம் என்பதால்தான் நம் மனம் பதைபதைக்கிறது.
மக்களின் வாழ்வை நேரடியாகப் பாதிக்கின்ற வகையில் தொடர்ந்து ஊழல் செய்வதையே வழக்கமாகக் கொண்டுள்ள தி.மு.க.வைத் தமிழ்நாட்டின் வருங்காலத் தலைமுறையும் மன்னிக்கவே மன்னிக்காது. தமிழ்நாட்டுக் குடும்பங்களும் இனி தி.மு.க.வை அப்புறப்படுத்தாமல் விடமாட்டார்கள்.
பெரியார் பெயரை வைத்துக் கொள்ளை அடிப்பதையும் ஊழல் செய்வதையும் தமிழை வைத்துக் கொள்ளை அடிப்பதையும் ஊழல் செய்வதையும் ஒரு வரலாறாகவே நிகழ்த்தி வரும் தி.மு.க., மக்கள் மன்றத்தில் இனி நிமிரவே முடியாமல் நிரந்தரமாகத் தலைகுனிந்து நிற்கப் போவது உறுதி.
தேசியத்தையும், தெய்வீகத்தையும் தனத��� இரு கண்களாகப் போற்றி வாழ்ந்த சுதந்திரப் போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் பிறந்த நாள் மற்றும் குருபூஜை நாளில், அவரது நாட்டுப்பற்றையும், தியாகத்தையும், சமூகநீதிக்கான பங்களிப்பையும் போற்றி வணங்குகிறேன்.
வீரம் செறிந்த தனது பேச்சாற்றலால், நாட்டு மக்களிடையே சுதந்திரக் கனலை மூட்டிய தெய்வீகத் திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்கள், நேதாஜ�� சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் கொள்கைகளைத் தீவிரமாகப் பரப்பி, இந்திய தேசிய இராணுவத்திற்கு ஆதரவைத் திரட்டி, நாட்டின் விடுதலைக்காகப் போராடினார்.
சாதி, மத எல்லைகளைக் கடந்து மனிதநேயத்தை ��ட்டுமே தனது மூச்சாகக் கொண்டு வாழ்ந்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் இலட்சியப் பாதையில் தொடர்ந்து பயணிப்போம்!
#CMJosephVijay
தன் ரசிகர் மன்றத்தின் முன்னாள் தலைவர் திரு.அன்பில் மகேஷ், தமிழகக் கல்வித்துறை அமைச்சராக இருந்தபோது தரமான ஊழல் செய்ததை மெச்சி வரவேற்று அறிக்கை அளித்துள்ளார் சர்க்கஸ் ஷோவின் நகைச்சுவையில்கூட எடுபடாத உலகப்புகழ் காமெடி நடிகர் உதயநிதி.
திரு.அன்பில் மகேஷ், கொள்ளைக் கூட்டமான தி.மு.க.விற்கு கோபுரப் புகழ் சேர்த்திருப்பதால் குதூகலம் அடைந்ததால், த.வெ.க. மீது தரம் தாழ்ந்��ு பாய்ந்திருக்கிறார்.
‘தொட்டுப் பார், தூக்கிப் பார்’ என்று வெற்று வாய்ச் சவடால் விட்ட உளறல் திலகம் இப்போது சட்டம் தன் கடமையைச் செய்திருப்பதப் பார்த்து முக்காடிட்டு மூக்குச் சிந்தி அழுதிருக்கிறார்.
தாத்தா-தந்தை-மகன் மற்றும் அதற்குப் பிறகும் என நான்கு தலைமுறை நட்பு எனச் சிலாகிக்கும் நண்பேண்டா காமெடிச் சித்திரக்காரர், ‘சட்டப்படி எதிர்கொள்வார் சகோதரர்’ என்று தன் நண்பரின் ஊழலுக்காக நா தழுதழுக்கிறார். தன் கெழுதகை நண்பருக்காக கிலுகிலுப்பை வேறு ஆட்டுகிறார்.
டம்மிப் புகழ்பெற்ற காமெடி கதாநாயகனான கதறல் திலகத்தின் கண்டன அறிக்கையை காமெடி அறிக்கையாகவே மக்கள் பார்க்கின்றனர்.
ஊழல் செய்துவிட்டு உதார் விட்டால் மக்கள் உரிய பாடத்தைப் புகட்டாமல் இருக்க மாட்டார்கள் என்பதை இந்த உதறல் திலகம் எப்போதுதான் உணரப் போகிறாரோ?.
தந்தையும் மகனும் தங்கள் குடும்ப நண்பர் ஊழலே செய்யவில்லை என்றோ செய்யவும் மாட்டார் என்றோ ஓர் உறுதியான உத்தரவாதத்தை ஒருவரியில்கூட தரவில்லையே ஏன்? ஏன்? ஏன்?
"நாங்கள்தான் ஆலமரம்… யார் ஆண்டாலும் நாங்கள்தான் ஆள��ம் கட்சி" என்று ஆணவத்தில் கொக்கரித்த திமுகவின் முகத்திரை இன்று கிழிகிறதா?
ஒருபுறம், பள்ளி மாணவர்களின் கல்வியுடன் தொடர்புடைய விவகாரத்தில் ஊழல் குற்றச்சாட்டில் நடிப்பு அரக்கன் கைது! மறுபுறம், அரசு வேலைக்காகப் பல ஆண்டுகள் இரவு பகல் பாராமல் படிக்கும் இளைஞர்களின் கனவுகளைப் பணத்திற்காகச் சிதைத்ததாகக் கூறப்படும் விவகாரத்தில் மற்றொரு முன்னாள் அமைச்சரின் மறு��ய்வு மனு தள்ளுபடி!
மாணவர்களின் கல்வியையும், இளைஞர்களின் வேலைவாய்ப்புக் கனவுகளையும் கூட ஊழலுக்கான வேட்டைக்காடாக மாற்றிவிட்டு, உத்தமர் வேடம் போடுவதற்குக் கூசவில்லையா Senior Generational abuser?
"கொள்கைதான் உயிர்" என்று மேடைகளில் முழங்கிவிட்டு, அதிகாரத்தைப் பயன்படுத்தி மக்களின் வரிப்பணத்தைக் கொள்ளையடிப்பதுதான் இந்தப் பண்ணையார் கட்சியின் வரலாறு!
ஆறே மாதத்தில் இந்த ஆட்சி முடிந்துவிடும் என்று ஏறும் கல்யாண மேடைகளிலெல்லாம் மைக் பிடித்துப் புலம்பும் Sweet Uncle!
இனி வரும் காலங்களில், திமுக ஒரு தீயசக்தி மட்டுமல்ல, ஊழலின் ஊற்றுக்கண் என்றும் மக்கள் பேசுவார்கள்! அதற்கும் சேர்த்து புலம்பித் தள்ளுங்கள்!
#கரப்ஷன்_முன்னேற்ற_கழகம்
பிரபல சமையல் கலைஞர் செஃப் தாமு என்று அழைக்கப்படும் திரு.கே.தாமோதரன் அவர்களின் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது.
தனது சமையல் திறமையாலும், தனித்துவமான அணுகுமுறையாலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வாயிலாகச் சமையல் கலையை மக்களிடம் கொண்டு சேர்த்தவர். 2010 ஆம் ஆண்டில் தனிநபரின் மிக நீண்ட சமையல் மாரத்தான் என்ற கின்னஸ் உலக சாதனையைப் படைத்ததோடு, பத்மஸ்ரீ விருதும் பெற்ற பெருமைக்குரியவர். அவரது மறைவு சமையல் கலைத் துறைக்குப் ப��ரிழப்பாகும்.
அவரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், சமையல் கலையை நேசிக்கும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தாய்நாட்டின் விடுதலைக்காக தம் இன்னுயிரைத் தியாகம் செய்த, சிவகங்கைச் சீமையை ஆண்ட மருது சகோதரர்களின் நினைவு நாளில், அவர்தம் ஒப்பற்ற வீரத்தையும், அளப்பரிய தியாகத்தையும் போற்றி எனது வீரவணக்கத்தைச் செலுத்துகிறேன்.
இந்தியாவின் முதல் சுதந்திரப் போருக்கு முன்னதாகவே, ஆங்க��லேய ஆதிக்கத்தை எதிர்த்து, அனைவரையும் விடுதலைப் பாதையில் ஒன்றிணைக்கும் வகையில், 'ஜம்புத் தீவு பிரகடனத்தை' முழங்கிப் போராடிய மருது சகோதரர்களின் அர்ப்பணிப்பு போற்றுதலுக்குரியது.
விடுதலை உணர்வைத் தமிழ் மண்ணில் விதைத்த மருது சகோதரர்களின் வீரவரலாறு தலைமுறைகளைக் கடந்தும் நிலைத்திருக்கட்டும்!
#CMJosephVijay
நேற்றிரவு அப்படியொரு மழை பெய்ததன் சுவடே தெரியவில்லை. சென்னை சாலைகள் பளிச்சென்று இருக்கின்றன. பரபரவென்று வேலை செய்திருக்கிறது விஜய் அரசு. நல்லது!
#TVKGovt
தமிழ்த் திரையுலகின் தனித்துவமான இசையமைப்பாளரும், கானா பாடல்களால் எளிய மக்களின் மனங்களைக் கவர்ந்தவருமான 'தேனிசைத் தென்றல்' திரு.தேவா அவர்கள் மறைந்த ச��ய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும், ஆழ்ந்த வேதனையும் அடைந்தேன்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்ததோடு, பல கானா பாடல்களை எழுதி, அவரே பாடியும் உள்ளார். கலைமாமணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்ற திரு.தேவா அவர்களின் இசைப் பயணமும், பாடல்களும் திரையிசை வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும். அவரது மறைவு தமிழ்த் திரையுலகிற்கு பேரிழப்பாகும்.
இசையமைப்பாளர் திரு.தேவா அவர்களை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், திரைத்துறையினருக்கும், இசை ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
#Jailer2 – A Massive Disappointment! ⭐⭐ (2/5)
Had huge expectations from Jailer 2, but unfortunately, the film falls completely flat!
The first half offers some decent moments, thanks to Nelson's trademark comedy, Rajinikanth's screen presence, and Anirudh's BGM. However, the weak screenplay, predictable writing, and underwhelming second half ruin the overall experience.
Even Rajinikanth's superstar aura couldn't save the film. The villains lack impact, the cameos feel forced, and the elevation scenes fail to deliver the expected goosebumps.
Expected a blockbuster entertainer, but got a forgettable, below-average sequel. A huge letdown considering the hype and expectations!
My Rating: ⭐⭐ 2/5
FIRST JAILER 2 REVIEW FROM FOREIGN COUNTRIES 💥 | 1/5 ⭐
படம் சுத்தமா நல்லா இல்லை! 😑
ஜெயிலர் முதல் பாகம் கொடுத்த எதிர்பார்ப்போடதான் Jailer 2 பார்க்கப் போனேன். ஆனால், படம் முடிஞ்சு வெளியே வரும்போது, *“எதுக்குடா இந்தப் படத்துக்கு வந்தோம்?”* அப்படின்னு தோணுச்சு!
🎬 **Story & Screenplay:** கதையிலேயே பெரிய சுவாரஸ்யம் இல்லை. திரைக்கதை ஆமை வேகத்துல நகருது. தேவையில்லாத காட்சிகளை எல்லாம் நீளமாக வச்சு, படத்தோட வேகத்தையே குறைச்சிட்டாங்க. பல இடங்களில் லேக்; எப்போ கதை நகரு��்னு காத்திருக்க வேண்டிய நிலைமை.
🎵 **BGM & Music:** அனிருத் மேல பெரிய எதிர்பார்ப்பு இருந்துச்சு. ஆனால், இந்தப் படத்துல BGM பல இடங்களில் சுத்தமா வொர்க் ஆகலை. மாஸ் சீன்களுக்குக்கூட எதிர்பார்த்த எஃபெக்ட் கிடைக்கல. பாடல்களும் பெருசா ஈர்க்கலை. இசையே படத்துக்குப் பலமாக இல்லாதது பெரிய மைனஸ்!
🎭 Cameo & Fan Service:ஹ்ரித்திக் ரோஷன் கேமியோ உட்பட, சில கேமியோக்கள் கதைக்கு என்ன அவசியம் என்ற கேள்வியை எழுப்புகின்���ன. பெரிய ஸ்டார்களைத் திரையில் காட்டினால் ரசிகர்கள் குஷியாகிவிடுவார்கள் என்ற கணக்கில், கதைக்கு உண்மையிலேயே தேவையா என்று யோசிக்காமல் காட்சிகளை வைத்த மாதிரி இருக்கிறது. கேமியோ வந்ததும் விசில் அடிக்கலாம்; ஆனால் அது படத்தின் கதையை வலுப்படுத்துகிறதா என்பதுதான் முக்கியம்!
Rajini 🤡:தலைவர் ஸ்கிரீன்ல வரும்போது மாஸ் இருக்கிறது. ஆனால், தலைவரோட ஸ்டைலையும் ஸ்கிரீன் பிரசன்ஸையும் மட்டும் நம்பி ஒரு ம���ழுப் படத்தையும் ஓட்ட முடியாது. வலுவான கதை, விறுவிறுப்பான திரைக்கதை, தரமான இசை எல்லாமே தேவை.
Final Verdict:
ஜெயிலர் 2-ல் மாஸ் காட்ட வேண்டும் என்ற முயற்சி தெரிகிறது. ஆனால், கதை, திரைக்கதை, BGM, பாடல்கள் எனப் பல விஷயங்கள் ஏமாற்றமளிப்பதாக உணர முடிகிறது. தேவையற்ற கேமியோக்களும் படத்தின் ஓட்டத்துக்கு உதவவில்லை என்றால், எவ்வளவு பெரிய ஸ்டார்களைக் கொண்டு வந்தாலும் என்ன பயன்?
**ஒரு விஷயம் மட்டும் தெ��ிவு:**
*Star Power இருந்தால் மட்டும் போதாது; Strong Story Power-ம் வேண்டும்!*
ரஜினி ரசிகர்களின் எதிர்பார்ப்பை இப்படித்தான் பூர்த்தி செய்ய வேண்டுமா? 🤦♂️
#Jailer2 #Jailer2Review
என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம்.
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல் முடிவுகள் வெளிவந்��ுவிட்டன. மக்கள் மனத்தில் நம் தமிழக வெற்றிக் கழகத்திற்கென இருக்கும் முதன்மைச் சக்திக்கான முதலிடமும், நமது மனசாட்சி உள்ள மக்களாட்சி மீதான நம் சொந்தங்களின் ஆழ்மன விருப்பமும் மீண்டும் நிரூபிக்கப்பட்டு உள்ளன.
வாக்குகளுக்கு ஒரு பைசா கொடுக்காமல், யாரையும் பட்டியில் அடைத்து அவமானப்படுத்தாமல், திருமங்கலம், ஈரோடு கிழக்கு ஃபார்முலா என்று எந்த ஃபார்முலாவும் இல்லாமல் அன்பு, பாச, உறவ��� ஃபார்முலா மற்றும் ஜனநாயகம் காக்கும் ஃபார்முலாவை வைத்து வென்ற தேர்தல் இது. தமிழகம், ஊழல் சக்திகளின் கோட்டை இல்லை. மாறாக, மாபெரும் மக்கள் சக்தியின் கோட்டை, மக்கள் மனத்தில் நீங்கா இடம் பெற்ற அன்பு மிக்க தூய சக்தியின் கோட்டை என்பதை நிரூபித்துள்ளது. தமிழக இடைத்தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், பணநாயகச் சூத்திரத்தையே அடித்து நொறுக்கிப் பெற்றுள்ள வெற்றியே இது.
கண்டகண்ட பேரங்கள் நடந்ததாக அவதூறு பேசிய மிருகக் குணப் பேச்சுக்கு எல்லாம் மக்கள் தகுந்த பதிலடியைத் தரமாகத் தந்துள்ளனர். அப்படிப் பேசியவர்களை மக்கள் வெகுதூரத்தில் ஒதுக்கி வைத்து, அவர்கள் மனத்தில் மீண்டும் தோல்வி பாரத்தை ஏற்றி உள்ளனர்.
இரண்டு தொகுதிகளிலும் நாம் இரண்டு நாள்கள் பிரசாரம் மேற்கொண்டதை நக்கலாகவும் நையாண்டியாகவும் பேசியவர்களுக்குத்தான் இப்போது மக்கள் பதிலடி தந்துள்ளனர். இதேபோல கடந்த ஏப்ரல் மாதம் நடந்த சட்டமன்றப் பொதுத்தேர்தலிலும், தமிழகம் முழுக்கப் பிரசாரம் செய்ய அன்றைய தீய சக்தி தி.மு.க., நம்மை அனுமதித்து இருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதை மக்களிடமே கேட்டுத் தெரிந்துகொள்ளட்டும்.
நம்மைப் பொறுத்தவரை, என்றைக்கும் நாம் மக்கள் பக்கம்தான் நிற்போம். மக்களோடு மக்களாகத்தான் இரண்டறக் கலந்து இருப்போம். அது நம் கடமை மட்டுமன்று. மக்களுக்கான நமது நன்றிக் கடன் அது. எப்போதும் நம் தமிழக மக்களுக்காக முழுமூச்சுடன் நன்றி விசுவாசத்துடனேயே இருப்போம் என்பது நூறு சதவீதம் உறுதி.
இந்த வேளையில், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் வாக்களித்து வெற்றி பெறச் செய்துள்ள நம் சொந்தங்கள் அனைவருக்கும் உங்கள் குடும்பத்தில் ஒருவனாக, உறவாக நன்றி சொல்வதில் மனம் மகிழ்கிறேன். நெஞ்சம��� நெகிழ்கிறேன்.
இரண்டு தொகுதிகளிலும் வெற்றிக்காக உழைத்த மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், வி.சி.க., ம.தி.மு.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளின் மதிப்பிற்குரிய தலைவர்களுக்கும், மாண்புமிகு அமைச்சர்களுக்கும், கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த மாநில, மாவட்ட மற்றும் அனைத்து நிலை நிர்வாகிகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோ��்.
மேலும், எப்போதும் போலச் சிறப்பாகக் களப் பணியாற்றிய நம் மாண்புமிகு அமைச்சர்களுக்கும் மாநில, மாவட்ட மற்றும் அனைத்து நிலை த.வெ.க. நிர்வாகிகளான நம் தோழர்களுக்கும் நம் நெஞ்சார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
இந்த இடைத்தேர்தலில், வெற்றிச் சின்னமாம் விசில் சின்ன��்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள நம் வேட்பாளர்களான சகோதரி திருமதி மரகதம் குமரவேல் (மதுராந்தகம் தொகுதி), சகோதரி திருமதி சத்தியபாமா (தாராபுரம் தொகுதி) ஆகியோருக்கும் நம் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
இப்போதும் சொல்கிறேன். இந்த வெற்றி, தனிப்பட்ட இந்த விஜய்யின் வெற்றியோ, தனிப்பட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றியோ அல்ல. இது முழுக்க முழுக்கப் பெண்கள் மீதான அவதூறு பே��்சுக்கு எதிரான வெற்றி. தரம் தாழ்ந்த வகையில் நடத்தப்பட்ட தனிப்பட்ட தாக்குதலுக்கு எதிரான வெற்றி. அப்பழுக்கற்ற தலைவர்களுக்கும் அவர்களின் தொண்டர்களுக்கும் செய்த துரோகத்திற்கு எதிரான வெற்றி.
மொத்தத்தில், அரசியல் நாகரிகத்திற்குக் கிடைத்த வெற்றி. தனிமனித நாகரிகத்திற்குக் கிடைத்த வெற்றி. எல்லாவற்றுக்கும் மேலாக மக்களுக்குக் கிடைத்த வெற்றி. வாக்காளர்களுக்குக் கிடைத்த வெற்றி. இது இனிமேலும் தொடரும். தொடர்ந்தேதான் தீரும். மீண்டும் மீண்டும் இனிவரப் போகும் வெற்றிகளுக்கும் சேர்த்து இப்போதே நன்றி.
நல்லதே நடக்கும்.
வெற்றி நிச்சயம்.
விஜய் அரசியலுக்கு வந்து விட்டார் என்பதற்காக, அவரைப் போலவே திரைத்துறையில் இருந்து அரசியலுக்கு வந்து நானும் முதல்வராகிவிடலாம் என்று நினைப்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல.
தனுஷ், சிவகார்த்திகேயன், போன்ற இந்த நடிகர்களும் அரசியலுக்குள் வருவதற்கான ஆசை இருக்கலாம். ஆனால் அரசியல் என்பது திரை நட்சத்திர அந்தஸ்தை மட்டும் வைத்து உருவாகிவிடக்கூடிய களம் அல்ல.
விஜய்க்கு உருவாகியுள்ள அரசியல் ஆதரவு, நீண்டகால ரசிகர் வட்டாரம், அவரைச் சுற்றி உருவான அரசியல் எதிர்பார்ப்பு என பல காரணிகள் உள்ளன.
எல்லோரும் விஜயாகிவிட முடியாது.
திரையில் கிடைக்கும் புகழை அரசியலில் மக்கள் ஆதரவாக மாற்றுவத��� இரு வேறு விஷயங்கள்.
அரசியலில் இறங்குபவர்கள் தங்களுக்கென தனித்த அரசியல் பாதையையும், கொள்கையையும், மக்கள் தொடர்பையும் உருவாக்க வேண்டியிருக்கும் எனவே
விஜய் என்பவர் ஒருவர் தான்
என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில், யாருக்கும் வழங்கிடாத பேரன்பையும், பெருவாரியான வாக்குகளையும் நமக்கு வாரி வழங்கி, வாகை சூடும் வரலாற்றைத் திரும்ப வைத்து, உங்களின் முதல் சேவகனாக என்னை அமர்த்திய உங்களுக்கு என் நன்றிக் கடனைத் திருப்பி அளிக்கும் நேரமிது. உண்மையான மனசாட்சியுள்ள மக்களாட்சியை அமர்த்திய தமிழக மக்கள் அனைவருக்கும் எவ்வளவு நன்றி சொன்னாலும் அது மிகையாகாது. தற்போது நடைபெற்றுக் கொண்டிருப்பது, தமிழக மக்களாகிய உங்கள் தலைமையிலான ஆட்சி! இந்த ஆட்சி தொடர்ந்திட, மென்மேலும் வலுப்பெற உங்கள் ஆதரவு எப்போதும் தேவை.
கடந்த 25ஆம் தேதி (25.09.2026) மதுராந்தகம் தொகுதியிலும், 30ஆம் தேதி (30.09.2026) தாராபுரம் தொகுதியிலும் இடைத்தேர்தலுக்காக நாம் பரப்புரை மேற்கொண்டோம்.
இதனைத் தொடர்ந்து கடந்த 2ஆம் தேதி (02.10.2026) மதுராந்தகம் தொகுதியிலும், இன்று (04.10.2026) தாராபுரம் தொகுதியில் வாகனப் பிரசாரம் மேற்கொண்டோம்.
இந்த இடைத்தேர்தல் பரப்புரைக்காக நாம் வந்த போது, செங்கல்பட்டு மாவட்ட மக்களும், கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட மக்களும் நமக்களித்த வரவேற்பும், நம்மிடம் காட்டிய அன்பும் பாசமும் எதற்கும் நிகரில்லாதது. எக்காலத்திற்கும் என் நெஞ்சில் நிலைத்திருக்கக் கூடியது. இதற்காக எவ்வளவு நன்றி சொன்னாலும் அது மிகையாகாது. இதற்காக உங்களுக்கு வாழ்நாள் கடமைப்பட்டுள்ளோம்.
நடைபெற உள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில், இவ்வளவு காலமாக நம்மை ஏமாற்றி வந்த, தீய சக்தியையும், தீர்ந்துபோன சக்தியையும் புறந்தள்ளுவீர்கள்; மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி சார்பில் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்களை ஆதரிப்பீர்கள்; மதுராந்���கம் தொகுதி திருமதி மரகதம் குமரவேல் மற்றும் தாராபுரம் தொகுதி திருமதி சத்தியபாமா ஆகியோருக்கு வெற்றிச் சின்னமாம் நமது விசில் சின்னத்தில் உங்களின் பொன்னான வாக்குகளை அளிப்பீர்கள் என்பதை இந்த நாடறியும். அதற்காக நான் முன்கூட்டியே உங்களுக்கு என் நன்றியை உரித்தாக்குகின்றேன்.
மேலும், இந்தத் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், தேர்தல் கண்காணிப்பாளர்கள், தேர்தல் பொறுப்பாளர்கள், மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், மாவட்டக் கழக நிர்வாகிகள், முழு ஒத்துழை��்பு நல்கிய தன்னார்வலர்கள் குழு, காவல் துறையினர், மருத்துவக் குழுவினர், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி.
தமிழ்நாட்டு மக்களுக்கான முதன்மைச் சக்தியான நாம், மக்கள் நலன்களைக் காப்பதற்காக, எதிலும், எப்போதும் சமரசம் செய்துகொள்ளவே மாட்டோம். லஞ்சம், ஊழலற்ற நேர்மையான நிர்வாகத்துடன் மனசாட்சி உள்ள மக்களாட்சியை இப்போது போலவே எப்போதும் தொடர்வோம்!
மீண்டும் நினைவூட்டுகிறோம்.
தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதி மக்களே, நீங்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டிய ஒரே சின்னம் உங்கள் வெற்றிச் சின்னமான விசில் சின்னம் என்பதை மறந்துவிடாதீர்கள்.
நல்லதே நடக்கும்.
வெற்றி நிச்சயம்.
ஜப்பானில் நடைபெற்றுவரும் 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், ஆடவர் கிரிக்கெட் பிரிவில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள இந்திய ஆடவர் அணிக்கும், அவ்வணியில் இடம்பெற்றுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தர் அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தர் அவர்களின் சாதனையைப் பாராட்டி, தமிழ்நாடு அரசின் சார்பில் உயரிய ஊக்கத்தொகையாக ரூ.75 இலட்சம் வழங்கப்படும். அவரது வெற்றி இளைய தலைமுறையினருக்கு புதிய உத்வேகத்தையும், நம்பிக்கையையும் அளிக்கும்.
வாஷிங்டன் சுந்தர் அவர்கள் கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக விளையாடி மேலும் பல சாதனைகள் படைக்க வாழ்த்துகிறேன்!
#CMJosephVijay
#AsianGames2026
அகிம்சை என்னும் பேராயுதத்தால் உ���கையே வியக்க வைத்து, இந்தியத் திருநாட்டிற்கு விடுதலையைப் பெற்றுத்தந்த மாபெரும் தலைவர், நமது தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளின் பிறந்த நாளில் அவரது தேசப்பற்றையும், தியாக வாழ்வையும் போற்றி வணங்குகிறேன்.
எளிமை, நேர்மை, மனிதநேயம், சமத்துவம், சமூக நல்லிணக்கம் ஆகியவற்றைத் தனது வாழ்வின் நெறிகளாகக் கொண்டு, உலகம் முழுமைக்கும் அன்பையும், சகோதரத்துவத்தையும் பரப்பிய மாமனிதராகத் திகழ���ந்தவர்.
மகாத்மா காந்தியடிகளின் கனவுகளை நனவாக்கி, அமைதியும், நல்லிணக்கமும், சகோதரத்துவமும் தழைத்திடும் சமூகத்தை உருவாக்கி, நாட்டின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் பாதுகாத்து, அவர் காட்டிய அறவழியில் நமது வெற்றிப் பயணத்தை��் தொடர்வோம்!
#CMJosephVijay
#GandhiJayanti