இன்று (15.08.2026) காலை, மாண்புமிகு தமிழக நிதியமைச்சர் திரு. மரிய வில்சன் அவர்களைச் சந்தித்தேன்.
அப்போது, சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) திருத்த மசோதா, 2026 தொடர்பாக, மாநிலங்களின் அதிகாரங்களையும் நிதி ஆதாரங்களையும் பாதிக்கும் அம்சங்கள் குறித்து மாண்புமிகு அமைச்சர் அவர்களிடம் விரிவாக எடுத்துரைத்தேன். இம்மசோதா 12.08.2026 அன்று மக்களவையிலும், 13.08.2026 அன்று மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இம்மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழுவிற்கு (Standing Committee) அனுப்பி விரிவாக ஆய்வு செய்ய வேண்டும் என்றும், மாநில அரசுகளுடன் கலந்தாலோசிக்க வேண்டும் என்றும் ஒன்றிய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் திரு. கிஷன் ரெட்டி அவர்களை நேரில் சந்தித்து, நான் உள்ளிட்ட எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தினோம்.
மேலும், மாநிலங்களின் வரி விதிக்கும் அதிகாரத்தைப் பாதுகாக்கும் வகையில், Section 9D-ஐ நீக்கும் திருத்த முன்மொழிவையும் நான் தனிப்பட்ட முறையில் மக்களவை சபாநாயகர் திரு. ஓம் பிர்லா அவர்களிடம் சமர்ப்பித்திருந்தேன். ஆனால், எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகளை ஏற்காமல், எவ்வித விரிவான விவாதமுமின்றி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இம்மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
இம்மசோதாவில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள Section 9D, “கனிம வளங்கள் மீதான உரிமை” மற்றும் “கனிமங்கள் தாங்கிய நிலங்கள்” மீது மாநில அரசுகள் வரி விதிப்பதற்கு கட்டுப்பாடுகளை ஏற்படுத்துகிறது. மாநில அரசுகளால் ஏற்கனவே விதிக்கப்பட்டு, இதுவரை வசூலிக்கப்படாமல் நிலுவையில் உள்ள லட்சக்கணக்கான கோடி ரூபாய் வருவாயையும் இனி வசூலிக்க முடியாத நிலையை இந்தத் திருத்தம் ஏற்படுத்துகிறது. இதனால் மாநிலங்களின் முக்கியமான நிதி ஆதாரங்கள் பாதிக்கப்பட்டு, அவற்றின் நிதிசார் தன்னாட்சிக்கு கடுமையான சவால் ஏற்படும்.
மாண்புமிகு உச்சநீதிமன்றத்தின் ஒன்பது நீதிபதிகள் கொண்ட அமர்வு 2024-ஆம் ஆண்டு வழங்கிய தீர்ப்பில், கனிமங்கள் தாங்கிய நிலங்கள் மீது வரி விதிக்கும் அதிகாரம் மாநிலங்களுக்கு இருப்பதைத் தெளிவுபடுத்தியுள்ளது.
இந்தத் தீர்ப்பின் அடிப்படையில்தான் தமிழக அரசு Tamil Nadu Mineral Bearing Land Tax Act, 2024 மற்றும் Tamil Nadu Mineral Bearing Land Tax Rules, 2025 ஆகியவற்றை இயற்றியது. 04.04.2025 முதல் இவ்வரி வசூலிக்கப்பட்டு வருகிறது. 2025–26ஆம் ஆண்டில் புவியியல் மற்றும் சுரங்கத்துறை மூலம் கிடைத்த ரூ.4,395.68 கோடி வருவாயில், ரூ.2,265 கோடி Mineral Bearing Land Tax மூலம் கிடைத்துள்ளது. இந்தச் சட்டத் திருத்தம் அமலுக்கு வந்தால், தமிழகத்தின் இந்த முக்கியமான வருவாய் ஆதாரம் பாதிக்கப்படும்.
எனவே, இது வெறும் வருவாய் இழப்புப் பிரச்சினை அல்ல; மாநிலங்களின் அதிகாரம், நிதிசார் தன்னாட்சி மற்றும் இந்தியாவின் கூட்டாட்சித் தத்துவத்தைப் பாதிக்கும் பிரச்சினையாகும்.
இந்த விவரங்களை மாண்புமிகு நிதியமைச்சர் திரு. மரிய வில்சன் அவர்களிடம் எடுத்துரைத்து, தமிழகத்தின் நிதி உரிமைகளைப் பாதுகாக்க ஒன்றிய அரசிடம் வலுவாக வலியுறுத்த வேண்டும் என்றும், தேவையான சட்டரீதியான முன்னெடுப்புகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டேன்.
எனது கோரிக்கையை கவனத்துடன் கேட்டறிந்த மாண்புமிகு நிதியமைச்சர் அவர்கள், தமிழக அரசின் சார்பில் எனக்கு நன்றி தெரிவித்ததுடன், இந்த விவகாரத்தில் மாண்புமிகு தமிழக முதல்வர் அன்பு சகோதரர் திரு ஜோசப் விஜய் அவர்கள் தலைமையிலான தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று உறுதியளித்தார்.
அன்புடன்,
துரை வைகோ
நாடாளுமன்ற உறுப்பினர் – திருச்சி
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (ம.தி.மு.க.)
15.08.2026
#DuraiVaiko #mdmk #tvk #cmvijay #MariaWilson
இன்று (05.08.2026), நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள ஒரு அரங்கில் நடைபெற்ற, தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய தொகுதி மறுவரையறை மசோதா (Delimitation Bill) தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில், இந்தியா கூட்டணியைச் சேர்ந்த தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்றனர்.
அக்கூட்டத்தில் நானும் கலந்து கொண்டு எனது கருத்துக்களை பதிவு செய்தேன்.
-
துரை வைகோ
நாடாளுமன்ற உறுப்பினர் - திருச்சி,
மறுமலர்ச்சி திமுக,
05.08.2026
புது தில்லி.
#DuraiVaiko #tvk #mdmk #cmvijay #delimitation
இன்று (05.08.2026) மாண்புமிகு ஒன்றிய ரயில்வே அமைச்சர் திரு. அஸ்வினி வைஷ்ணவ் அவர்களை புதுடெல்லியில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்து, எனது திருச்சிராப்பள்ளி நாடாளுமன்றத் தொகுதி மக்களின் நீண்டகால ரயில்வே கோரிக்கைகள் மற்றும் மத்திய தமிழ்நாட்டின் ரயில்வே இணைப்பை மேம்படுத்தும் நோக்கில் ஆறு முக்கிய கோரிக்கை மனுக்களை வழங்கினேன்.
முதலாவதாக, 07355/07356 ஹூப்ளி – இராமேஸ்வரம் சிறப்பு விரைவு ரயில் மற்றும் 06243/06244 மைசூரு – காரைக்குடி சிறப்பு விரைவு ரயில் ஆகியவை தொடர்ந்து அதிக பயணிகள் பயன்பாட்டைப் பெற்று வருவதால், அவற்றை நிரந்தர ரயில் சேவைகளாக மாற்றுமாறு கோரிக்கை வைத்தேன்.
இரண்டாவதாக, மத்திய தமிழ்நாட்டிற்கும் தெற்கு கர்நாடகாவிற்கும் இடையேயான நேரடி இரவு நேர ரயில் இணைப்பை ஏற்படுத்தும் வகையில், திருச்சிராப்பள்ளி – சாமராஜநகர் இரவு நேர விரைவு ரயிலை அறிமுகப்படுத்துமாறு வலியுறுத்தினேன்.
மூன்றாவதாக, சமீபத்தில் நிரந்தர சேவையாக மாற்றப்பட்ட 17077/17078 திருச்சிராப்பள்ளி – சார்லப்பள்ளி விரைவு ரயிலை வாராந்திர சேவையிலிருந்து தினசரி (Daily )அதிவிரைவு ரயிலாக இயக்க கேட்டுக்கொண்டேன்.
நான்காவதாக, இந்திய ரயில்வேயின் Vision 2030 திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் ரயில்கள் புறப்படும் (Train Originating Capacity) திறனை இரட்டிப்பாக்கும் திட்டத்தில் திருச்சிராப்பள்ளியையும் இணைத்து, கூடுதல் நடைமேடைகள், பராமரிப்பு வசதிகள் மற்றும் முனைய உள்கட்டமைப்பை மேம்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு ஏற்கனவே நான் கடந்த 04.02.2026 மற்றும் 26.05.2026 அன்று கோரிக்கை விடுத்ததையும் அமைச்சர் அவர்கள் அந்த நகரங்களின் பட்டியலில் திருச்சியையும் சேர்ப்பதாக உறுதியளித்ததையும் நினைவு படுத்தியபோது திருச்சியை அந்த பட்டியலில் இணைக்க ஏற்கனவே உத்தரவிட்டுள்ள தகவலையும், உறுதியாக பட்டியலில் திருச்சி இருக்கும் என்ற தகவலையும் என்னிடம் தெரிவித்தார்.
ஐந்தாவதாக, 09125/09126 கான்பூர் – மதுரை சிறப்பு ரயிலை, கரூர் – திண்டுக்கல் வழித்தடத்திற்கு பதிலாக திருச்சிராப்பள்ளி வழியாக நிரந்தரமாக இயக்கி, திருச்சிராப்பள்ளி சந்திப்பில் நிறுத்தம் வழங்குமாறு கேட்டுக்கொண்டேன். இந்த ரயில் முன்னர் கான்பூர் – திருச்சிராப்பள்ளி சிறப்பு ரயிலாக இயக்கப்பட்டபோது பயணிகளிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்ததையும் எடுத்துரைத்தேன்.
ஆறாவதாக, புதுக்கோட்டை, காரைக்குடி, அருப்புக்கோட்டை வழியாக திருச்சிராப்பள்ளி – திருச்செந்தூர் தினசரி பகல் நேர இன்டர்சிட்டி விரைவு ரயிலை அறிமுகப்படுத்துமாறு வலியுறுத்தினேன். இந்த ரயில் சேவை மாணவர்கள், தொழிலாளர்கள், வணிகர்கள், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமான பயணிகளுக்கு பெரிதும் பயனளிக்கும் என்பதையும் எடுத்துரைத்தேன்.
மேற்கண்ட அனைத்து கோரிக்கைகளையும் மாண்புமிகு ஒன்றிய ரயில்வே அமைச்சர் அவர்கள் கவனத்துடன் கேட்டறிந்து, உரிய பரிசீலனை செய்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக உறுதியளித்தார்.
அன்புடன்,
துரை வைகோ
நாடாளுமன்ற உறுப்பினர் (திருச்சி)
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (ம.தி.மு.க.)
05.08.2026 | புதுடெல்லி
#DuraiVaiko #trichy #pudukottai #tvk #mdmk
இன்று (05.08.2026) மாண்புமிகு ஒன்றிய ரயில்வே அமைச்சர் திரு. அஸ்வினி வைஷ்ணவ் அவர்களை புதுடெல்லியில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்து, எனது திருச்சிராப்பள்ளி நாடாளுமன்றத் தொகுதி மக்களின் நீண்டகால ரயில்வே கோரிக்கைகள் மற்றும் மத்திய தமிழ்நாட்டின் ரயில்வே இணைப்பை மேம்படுத்தும் நோக்கில் ஆறு முக்கிய கோரிக்கை மனுக்களை வழங்கினேன்.
முதலாவதாக, 07355/07356 ஹூப்ளி – இராமேஸ்வரம் சிறப்பு விரைவு ரயில் மற்றும் 06243/06244 மைசூரு – காரைக்குடி சிறப்பு விரைவு ரயில் ஆகியவை தொடர்ந்து அதிக பயணிகள் பயன்பாட்டைப் பெற்று வருவதால், அவற்றை நிரந்தர ரயில் சேவைகளாக மாற்றுமாறு கோரிக்கை வைத்தேன்.
இரண்டாவதாக, மத்திய தமிழ்நாட்டிற்கும் தெற்கு கர்நாடகாவிற்கும் இடையேயான நேரடி இரவு நேர ரயில் இணைப்பை ஏற்படுத்தும் வகையில், திருச்சிராப்பள்ளி – சாமராஜநகர் இரவு நேர விரைவு ரயிலை அறிமுகப்படுத்துமாறு வலியுறுத்தினேன்.
மூன்றாவதாக, சமீபத்தில் நிரந்தர சேவையாக மாற்றப்பட்ட 17077/17078 திருச்சிராப்பள்ளி – சார்லப்பள்ளி விரைவு ரயிலை வாராந்திர சேவையிலிருந்து தினசரி (Daily )அதிவிரைவு ரயிலாக இயக்க கேட்டுக்கொண்டேன்.
நான்காவதாக, இந்திய ரயில்வேயின் Vision 2030 திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் ரயில்கள் புறப்படும் (Train Originating Capacity) திறனை இரட்டிப்பாக்கும் திட்டத்தில் திருச்சிராப்பள்ளியையும் இணைத்து, கூடுதல் நடைமேடைகள், பராமரிப்பு வசதிகள் மற்றும் முனைய உள்கட்டமைப்பை மேம்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு ஏற்கனவே நான் கடந்த 04.02.2026 மற்றும் 26.05.2026 அன்று கோரிக்கை விடுத்ததையும் அமைச்சர் அவர்கள் அந்த நகரங்களின் பட்டியலில் திருச்சியையும் சேர்ப்பதாக உறுதியளித்ததையும் நினைவு படுத்தியபோது திருச்சியை அந்த பட்டியலில் இணைக்க ஏற்கனவே உத்தரவிட்டுள்ள தகவலையும், உறுதியாக பட்டியலில் திருச்சி இருக்கும் என்ற தகவலையும் என்னிடம் தெரிவித்தார்.
ஐந்தாவதாக, 09125/09126 கான்பூர் – மதுரை சிறப்பு ரயிலை, கரூர் – திண்டுக்கல் வழித்தடத்திற்கு பதிலாக திருச்சிராப்பள்ளி வழியாக நிரந்தரமாக இயக்கி, திருச்சிராப்பள்ளி சந்திப்பில் நிறுத்தம் வழங்குமாறு கேட்டுக்கொண்டேன். இந்த ரயில் முன்னர் கான்பூர் – திருச்சிராப்பள்ளி சிறப்பு ரயிலாக இயக்கப்பட்டபோது பயணிகளிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்ததையும் எடுத்துரைத்தேன்.
ஆறாவதாக, புதுக்கோட்டை, காரைக்குடி, அருப்புக்கோட்டை வழியாக திருச்சிராப்பள்ளி – திருச்செந்தூர் தினசரி பகல் நேர இன்டர்சிட்டி விரைவு ரயிலை அறிமுகப்படுத்துமாறு வலியுறுத்தினேன். இந்த ரயில் சேவை மாணவர்கள், தொழிலாளர்கள், வணிகர்கள், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமான பயணிகளுக்கு பெரிதும் பயனளிக்கும் என்பதையும் எடுத்துரைத்தேன்.
மேற்கண்ட அனைத்து கோரிக்கைகளையும் மாண்புமிகு ஒன்றிய ரயில்வே அமைச்சர் அவர்கள் கவனத்துடன் கேட்டறிந்து, உரிய பரிசீலனை செய்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக உறுதியளித்தார்.
அன்புடன்,
துரை வைகோ
நாடாளுமன்ற உறுப்பினர் (திருச்சி)
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (ம.தி.மு.க.)
05.08.2026 | புதுடெல்லி
#DuraiVaiko #trichy #pudukottai #tvk #mdmk
மாண்புமிகு ஒன்றிய இரயில்வே துறை அமைச்சர் திரு. அஸ்வினி வைஷ்ணவ் அவர்களை அவரது நாடாளுமன்ற அலுவலகத்தில், இன்று (05.08.2026) காலை நேரில் சந்தித்து, நேற்று வெளியிடப்பட்ட தலைவர் அவர்களின் நாடாளுமன்ற உரைகளின் தொகுப்பான Vaiko in Parliament நான்கு தொகுதிகளையும் அவரிடம் வழங்கினேன்.
தலைவர் மீது பெருமதிப்பும், என்மீது சகோதர பாசமும் கொண்ட அமைச்சர் அவர்கள், அந்நூல்களை மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டு தலைவருக்குத் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
அன்புடன்,
துரை வைகோ
நாடாளுமன்ற உறுப்பினர் (திருச்சி)
மறுமலர்ச்சி திமுக
05.08.2026
#DuraiVaiko #mdmk #tvk #trichy #Aswinivaishnaw
மாண்புமிகு ஒன்றிய நிதி அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் அவர்களை அவரது நாடாளுமன்ற அலுவலகத்தில், இன்று (05.08.2026) மாலை நேரில் சந்தித்து, நேற்று வெளியிடப்பட்ட தலைவர் அவர்களின் நாடாளுமன்ற உரைகளின் தொகுப்பான Vaiko in Parliament நான்கு தொகுதிகளையும் அவரிடம் வழங்கினேன்.
அதனை மகிழ்வுடன் பெற்றுக்கொண்டு, தலைவரின் நலம் விசாரித்து தனது வாழ்த்துகளைத் தலைவரிடம் தெரிவிக்கச் சொல்லி கேட்டுக்கொண்டார்.
அன்புடன்,
துரை வைகோ
நாடாளுமன்ற உறுப்பினர் (திருச்சி)
மறுமலர்ச்சி திமுக
05.08.2026
#DuraiVaiko #tvk #mdmk #trichy
#NirmalaSeetharaman
இயக்கத் தந்தை தலைவர் வைகோ அவர்களின் நாடாளுமன்ற உரைகளைத் தொகுத்து நூலாக வெளியிடவிருக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விழா, சிறப்பான முறையில் நடைபெற உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
கழக மாவட்டங்களை ஐந்து மண்டலங்களாகப் பிரித்து, ஒவ்வொரு மண்டலத்திற்கும் மூன்று தன்னார்வலர்களை நியமித்துள்ளேன். அவர்களது தொடர்பு எண்களையும் இத்துடன் இணைத்துள்ளேன்.
சென்னை மண்டலம்
1. வடசென்னை கிழக்கு மாவட்டம்
2. வடசென்னை வடக்கு மாவட்டம்
3. வடசென்னை தெற்கு மாவட்டம்
4. வடசென்னை மேற்கு மாவட்டம்
5. தென் சென்னை மேற்கு மாவட்டம்
6. தென் சென்னை தெற்கு மாவட்டம்
7. தென்சென்னை வடக்கு மாவட்டம்
8. செங்கல்பட்டு வடக்கு மாவட்டம்
9. செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம்
10. செங்கல்பட்டு மேற்கு மாவட்டம்
11. காஞ்சிபுரம் மாவட்டம்
12. திருவள்ளூர் மாவட்டம்
13. ஆவடி மாநகர் மாவட்டம்
தன்னார்வலர்கள்:
திரு. ஹரிஸ் பாலா - 9663774858
திரு. கவின் - 9384617262
திரு. ஜானகிராமன் - 9841277308
வடக்கு மண்டலம்
1. வேலூர் மாவட்டம்
2. ராணிப்பேட்டை மாவட்டம்
3. திருப்பத்தூர் மாவட்டம்
4. திருவண்ணாமலை தெற்கு மாவட்டம்
5. திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம்
6. திருவண்ணாமலை வடக்கு மாவட்டம்
7. விழுப்புரம் மாவட்டம்
8. கள்ளக்குறிச்சி மாவட்டம்
9. கடலூர் கிழக்கு மாவட்டம்
10. கடலூர் மேற்கு மாவட்டம்
11. கடலூர் தெற்கு மாவட்டம்
தன்னார்வலர்கள்:
திரு. தரணி வேலன் - 7200416400
திரு. ஆசைத்தம்பி - 9789983907
திரு. ஏகலைவன் - 7904345155
மத்திய மண்டலம்
1. மயிலாடுதுறை மாவட்டம்
2. நாகப்பட்டினம் மாவட்டம்
3. திருவாரூர் தெற்கு மாவட்டம்
4. திருவாரூர் வடக்கு மாவட்டம்
5. தஞ்சாவூர் தெற்கு மாவட்டம்
6. தஞ்சாவூர் வடக்கு மாவட்டம்
7. திருச்சி மாநகர் மாவட்டம்
8. திருச்சி புறநகர் வடக்கு மாவட்டம்
9. திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம்
10. அரியலூர் மாவட்டம்
11. பெரம்பலூர் மாவட்டம்
12. கரூர் மாவட்டம்
13. புதுக்கோட்டை மாவட்டம்
தன்னார்வலர்கள்:
திரு. சேத்ரா - 9500606015
திரு. சசிகுமார் - 9942671930
திரு. கார்த்திகேயன் பொன்ராஜ் - 9841185969
மேற்கு மண்டலம்
1. சேலம் கிழக்கு மாவட்டம்
2. சேலம் மேற்கு மாவட்டம்
3. சேலம் மத்திய மாவட்டம்
4. நாமக்கல் கிழக்கு மாவட்டம்
5. நாமக்கல் மேற்கு மாவட்டம்
6. கிருஷ்ணகிரி மாவட்டம்
7. தருமபுரி மாவட்டம்
8. ஈரோடு மாநகர் மாவட்டம்
9. ஈரோடு கிழக்கு மாவட்டம்
10. ஈரோடு மேற்கு மாவட்டம்
11. ஈரோடு தெற்கு மாவட்டம்
12. கோவை மாநகர் மாவட்டம்
13. கோவை புறநகர் வடக்கு மாவட்டம்
14. கோவை புறநகர் தெற்கு மாவட்டம்
15. நீலகிரி மாவட்டம்
16. திருப்பூர் மாநகர் மாவட்டம்
17. திருப்பூர் தெற்கு மாவட்டம்
18. திருப்பூர் வடக்கு மாவட்டம்
தன்னார்வலர்கள்:
திரு. சுப்புராஜ் - 9841947943
திரு. ஜேசன் விஜய் - 8778401470
திரு. பிரதீப் சேதுபதி - 8072989882
தென்மண்டலம்
1. மதுரை மாநகர் மாவட்டம்
2. மதுரை புறநகர் வடக்கு மாவட்டம்
3. மதுரை புறநகர் தெற்கு மாவட்டம்
4. தேனி மாவட்டம்
5. திண்டுக்கல் மேற்கு மாவட்டம்
6. திண்டுக்கல் கிழக்கும் மாவட்டம்
7. தென்காசி வடக்கு மாவட்டம்
8. தென்காசி தெற்கு மாவட்டம்
9. இராமநாதபுரம் மாவட்டம்
10. சிவகங்கை மாவட்டம்
11. விருதுநகர் கிழக்கு மாவட்டம்
12. விருதுநகர் மேற்கு மாவட்டம்
13. விருதுநகர் மத்திய மாவட்டம்
14. தூத்துக்குடி வடக்கு மாவட்டம்
15. தூத்துக்குடி தெற்கு மாவட்டம்
16. திருநெல்வேலி மத்திய மாவட்டம்
17. திருநெல்வேலி புறநகர் மாவட்டம்
18. கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம்
19. கன்னியாகுமரி மேற்கு மாவட்டம்
தன்னார்வலர்கள்:
திரு. செல்லச்சாமி - 8072896678
திரு. சஞ்சய் - 9499909765
திரு. சுமேஷ் - 9443002861
தலைவரின் நூல் வெளியீட்டு விழாவிற்குத் தலைநகர் டெல்லிக்கு வருகை தரும் தோழர்களின் தொடர்பு வசதிக்காகவே இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவர்களைத் தொடர்பு கொண்டு, உங்கள் பயணத் தேவைகளுக்கான உதவிகளைப் பெற்றுக்கொள்ளலாம்.
இந்நூல் வெளியீட்டு விழாவிற்கு வருகை தரவுள்ள கழகத் தொண்டர்கள், தோழர்கள், நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட தாங்கள் அனைவரையும், “வருக! வருக!” என இன்முகத்துடன் நான் வரவேற்கிறேன்.
உங்களின்
துரை வைகோ
நாடாளுமன்ற உறுப்பினர்(திருச்சி)
மறுமலர்ச்சி திமுக
#Duraivaiko #congress #tvk #RahulGandhi #AkileshYadhav
இன்று (04.08.2026) காலை 10 மணி அளவில், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. மல்லிகார்ஜுன் கார்கே அவர்களின் அறையில் இந்தியா கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் மறுமலர்ச்சி திமுக சார்பில் நான் பங்கேற்று எனது கருத்துகளை முன்வைத்தேன்.
நீட் விவகாரத்தில், அன்றைய ஒன்றிய கல்வி அமைச்சர் திரு. தர்மேந்திர பிரதான் அவர்கள் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டங்களில் காவல்துறையினரும் குண்டர்களும் மாணவர்களைத் தாக்கிய சம்பவங்கள் குறித்து ஒன்றிய உள்துறை அமைச்சர் இரு அவைகளிலும் உரிய பதிலளிக்க வேண்டும் எனக் கோரப்பட்டது.
அதேபோல், ராமர் கோயில் திருட்டு விவகாரம் குறித்தும் அவையில் விவாதிக்க நேரம் ஒதுக்க வலியுறுத்தப்பட்டது.
கடந்த வாரம் இதே கூட்டத்தில் நான் காவேரி விவகாரத்தில் ஒன்றிய அரசு தலையிட்டு தமிழ்நாட்டின் உரிமையை நிலைமாட்ட கோரி நாடாளுமன்றத்தில் விவாதிக்க வலியுறுத்த வேண்டும் என கோரியிருந்தேன்.
இன்றைய கூட்டத்தில், கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளில் நாட்டிற்கு பெரும் பங்களிப்பை வழங்கி வரும் சிறுபான்மையினரான இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் நடத்தும் தொண்டு நிறுவனங்களுக்கு இடையூறு செய்யும் வகையில் கொண்டுவரப்பட்ட (FCRA) வெளிநாட்டிலிருந்து நிதி பெறுவதற்கான கட்டுப்பாட்டுச் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என எனது கோரிக்கையை வலியுறுத்தினேன்.
அன்புடன்
துரை வைகோ
நாடாளுமன்ற உறுப்பினர் (திருச்சி)
மறுமலர்ச்சி திமுக
04.08.2026
புதுடெல்லி
#DuraiVaiko #mdmk #tvk #cmvijay #kaveri
மறுமலர்ச்சி திமுகவின் சார்பில் மக்களின் முதல்வர், மாற்றத்தின் முதல்வர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் சகோதரர் ஜோசப் விஜய் அவர்களுக்கும், மாண்புமிகு அமைச்சர் சகோதரர் ராஜ்மோகன் அவர்களுக்கும், தமிழக வெற்றிக் கழக தோழர்கள் அனைவருக்கும் எனது கோடான கோடி நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
நன்றி நன்றி நன்றி..!
#DuraiVaiko #cmvijay #rajmohan #tvk #mdmk
டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் ஆய்வு மையம் சார்பில் சென்னை, ரம்ஜான் மஹாலில் இன்று நடைபெற்ற விழாவில், எனக்கு 'டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் தேசிய விருது 2026' வழங்கப்பட்டதில் பெருமகிழ்ச்சியும் எல்லையற்ற பெருமிதமும் அடைகிறேன்.
இவ்விழாவினைத் தொடங்கி வைத்து, விருதினை எனக்கு வழங்கி கௌரவித்த தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் மாண்புமிகு @jcd_prabhakar திரு. ஜெ.சி.டி. பிரபாகர் அவர்களுக்கும், பாராட்டுச் சான்றிதழை வழங்கிய மாண்புமிகு அமைச்சர் @AadhavArjuna திரு. ஆதவ் அர்ஜுனா அவர்களுக்கும் எனது உளமார்ந்த நன்றிகள்.
விழாவில் சிறப்பானதொரு ஆசியுரை வழங்கிய தகைசால் தமிழர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் @IUMLTNOfficial கே.எம். காதர் மொய்தீன் அவர்களுக்கும், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுச் சிறப்பித்த மாண்புமிகு அமைச்சர் திரு. ஏ.எம். ஷாஜகான் அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், வருகை தந்து சிறப்பித்து தங்களின் இனிய வாழ்த்துரைகளை வழங்கிய சட்டமன்ற உறுப்பினர் திரு. கே.வி. விஜய் தாமு மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. அபுபக்கர் ஆகியோருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
இந்தச் சிறப்பான விழாவினை ஒருங்கிணைத்த ஆய்வு மையத்தின் இயக்குநர் திரு. பூவச்சல் சுதீர், ஆலோசனைக் குழுத் தலைவர் திரு. பி.எம். உசேன் ஜிப்ரி தாங்கல் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கும், நிகழ்வில் கலந்துகொண்டு என்னை வாழ்த்திய அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறேன். மாபெரும் அறிஞர் டாக்டர் கலாம் அவர்களின் பெயரால் அமைந்துள்ள இவ்விருது எனது பொதுவாழ்வில் மேலும் உத்வேகத்தை அளிக்கிறது.
#Vaiko #MDMK #APJAbdulKalamNationalAward
புது டில்லியில் மைய அரசின் ஏவுதலில் மாணவர்கள் மீது காவல்துறையின் காட்டுமிராண்டித் தாக்குதல்!
நீட் தேர்வை இரத்து செய்யக் கோரியும், நீட் கேள்வித் தாள் வெளியானதற்குக் காரணமான மத்திய கல்வி அமைச்சர் @dpradhanbjp தர்மேந்திர பிரதானை பதவி விலகக் கோரியும் டில்லி ஜந்தர் மந்தரில் ஜூலை 20 ஆம் நாள் இலட்சக்கணக்கான மாணவர்களும், கரப்பான் பூச்சி இயக்கத்தினரும் அமைதியான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் காவல்துறை குண்டாந்தடிகளைக் கொண்டு போராட்டக்காரர்கள் மீது கடுமையான தாக்குதல் நடத்தியது. கண்ணீர்ப் புகை பிரயோகிக்கப்பட்டது. பல மாணவ - மாணவிகள் படுகாயமுற்றனர். டில்லி நகரம் ஒரு இராணுவ கூடாரம் போல் காட்சி அளித்தது.
தடியடியால் காயப்பட்ட மாணவர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சியினரால் ஆங்காங்கு பாதுகாக்கப்பட்டனர். தடியடியில் காயமுற்ற மாணவர்கள் டில்லியில் மண்டி ஹவுஸ் என்று அழைக்கப்படும் இடத்தில் உள்ள சுர்ஜித் பவனில் பாதுகாப்பாக வைக்கப்பட்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர்@MABABYCPIM தோழர் பேபி அவர்களும், அக்கட்சியின் முன்னணித் தலைவர்களில் ஒருவரான பிருந்தா காரத் அம்மையாரும், நானும் ஆங்காங்கு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்களை ஊக்கப்படுத்திக் கொண்டே சுர்ஜித் பவனுக்குச் சென்றோம். தடியடியில் காயப்பட்ட மாணவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறி, உங்கள் போராட்டத்திற்கு நாங்கள் தோள் கொடுப்போம் - துணை நிற்போம் என்று உறுதி கூறினோம்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாணவர் பிரிவான எஸ்.எப்.ஐ. அமைப்பைச் சேர்ந்த மாணவ - மாணவியர் காலவரையறையற்ற உண்ணாநிலை அறப்போரில் ஈடுபட்டிருந்ததால் அதனைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு வேண்டி தோழர் பேபி அவர்கள், அவர்களுக்கு பழச்சாறு கொடுத்து உண்ணாநிலை அறப்போரை முடித்து வைத்தார்.
நான் அம் மாணவர்களிடையே போராட்டத்தை ஆதரித்து உரையாற்றும்போது,
“இந்த மாணவர் போராட்டம் நியாயமான காரணங்களுக்காக வெடித்து எழுந்த உரிமைப் போராட்டமாகும். தர்மேந்திர பிரதான் அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும். நீட் தேர்வு முழுமையாக இரத்து செய்யப்பட வேண்டுமூ, நீட் கேள்வித் தாள் வெளியானதற்கு காரணமானவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மாணவ - மாணவிகள் மீது அராஜக தாக்குதலில் ஈடுபட்ட காவல்துறையினரை உடனடியான பணி நீக்கம் செய்ய வேண்டும். இப்போராட்டத்தை அடக்குமுறையால் ஒடுக்கிவிட முடியாது என மத்திய அரசுக்கு எச்சரிக்கிறேன்” என்று குறிப்பிட்டேன்.
கரப்பான் பூச்சி இயக்கத்தினரும், எண்ணற்ற இளைஞர்களும் இப்போராட்டத்தில் எதற்கும் அஞ்சாமல் உறுதியாக நின்று போராடுகிறார்கள். இப்போராட்டத்திற்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழம் தன்னுடைய முழுமையான ஆதரவை தெரிவிப்பதுடன், மத்திய அரசுக்கும், டெல்லி மாநில அரசுக்கும், காவல்துறைக்கும் வன்மையான கண்டனத்தை தெரிவிப்பதோடு, உரிமைக்காக, நியாயத்திற்காக, நீட் தேர்வை இரத்து செய்ய வேண்டும் என்பதற்காக கிளர்ந்தெழும் போராட்டத்தை காவல்துறையைக் கொண்டும், துணை இராணுவத்தைக் கொண்டும் அடக்க மேலும் முனைந்தால் அது புரட்சியாக வெடிக்கும் என எச்சரிக்கிறேன்.
வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
22.07.2026
#mdmk #vaiko #duraivaiko #banneet
இன்று (31.07.2026) மாண்புமிகு ஒன்றிய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் திரு. ஜோதிராதித்ய எம். சிந்தியா அவர்களை புதுடெல்லியில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்து, திருச்சிராப்பள்ளி மாவட்டம், கீழப்பத்து பகுதியில் டிஜிட்டல் பாரத் நிதி (Digital Bharat Nidhi - DBN) திட்டத்தின் கீழ் புதிய 4G மொபைல் கோபுரம் அமைக்க கோரி விரிவான மனுவை வழங்கினேன்.
இக்கோரிக்கை தொடர்பாக, கடந்த 13.10.2025 அன்று நடைபெற்ற மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு (DISHA) கூட்டத்தில் கீழப்பத்து, பாலூர் அக்கிரஹாரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் நிலவி வரும் மொபைல் சேவை குறைபாடு குறித்து நான் எழுப்பியிருந்தேன். மேலும், 16.02.2026 அன்று இதுதொடர்பாக ஒன்றிய அரசுக்கு விரிவான கோரிக்கை மனுவையும் அனுப்பியிருந்தேன்.
அதன் தொடர்ச்சியாக, பி.எஸ்.என்.எல். (BSNL) திருச்சிராப்பள்ளி முதன்மை பொது மேலாளர் மேற்கொண்ட கள ஆய்வு மற்றும் தொழில்நுட்ப மதிப்பீட்டில், தற்போதுள்ள மொபைல் கோபுரத்திலிருந்து கிடைக்கும் 4G சேவை கீழப்பத்து மற்றும் பாலூர் அக்கிரஹாரம் பகுதிகளில் போதுமானதாக இல்லை என்பதும், புதிய 4G மொபைல் கோபுரம் அமைப்பது தொழில்நுட்ப ரீதியாக அவசியம் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்தேன்.
மேலும், கீழப்பத்து, பாலூர் அக்கிரஹாரம், மேக்குடி, லட்சுமி நகர் மற்றும் பேரூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 10,000 -க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதிகளில் எந்த தொலைத்தொடர்பு நிறுவனமும் போதுமான சேவையை வழங்காததால், கல்வி, அவசரத் தொடர்பு, அரசு சேவைகள் மற்றும் டிஜிட்டல் சேவைகளைப் பெறுவதில் பொதுமக்கள் கடுமையான சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர் என்பதை எடுத்துரைத்தேன்.
எனவே, பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் பரிந்துரையை ஏற்று, டிஜிட்டல் பாரத் நிதி (DBN) திட்டத்தின் கீழ் கீழப்பத்தில் புதிய 4G மொபைல் கோபுரம் அமைக்க விரைவில் ஒப்புதல் வழங்கி, பணிகளை தொடங்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டேன்.
இக்கோரிக்கையை மாண்புமிகு அமைச்சர் அவர்கள் கவனத்துடன் கேட்டறிந்து, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாக உறுதியளித்தார்.
அன்புடன்,
துரை வைகோ
நாடாளுமன்ற உறுப்பினர் (திருச்சி)
மறுமலர்ச்சி திமுக
31.07.2026
புதுடெல்லி
#DuraiViko #trichy #BSNL #cmvijay #Jyotiradityamscindia
நேற்று ANI செய்தி நிறுவனத்திற்கு வந்தே மாதரம் தொடர்பான ( The Prevention of Insults to National Honour (Amendment) Bill, 2026) மசோதா நாடாளுமன்றத்தில் விவாதமின்றி நிறைவேற்றப்பட்டது குறித்து நான் அளித்த பேட்டி.
துரை வைகோ
நாடாளுமன்ற உறுப்பினர் - திருச்சி
மறுமலர்ச்சி திமுக
31.07.2026
புதுடெல்லி.
#DuraiVaiko #cmvijay #tvk #mdmk #VandheMaatharam
நேற்று (28.07.2026) நள்ளிரவில் நாடாளுமன்றத்தில் பொதுத் தேர்வுகள் (முறைகேடுகளைத் தடுக்கும்) திருத்த மசோதா குறித்து பேசினேன்.
என் உரையில், NEET உள்ளிட்ட பொதுத் தேர்வுகளில் தொடர்ச்சியாக நடைபெறும் வினாத்தாள் கசிவுகள், அதனால் மாணவர்களும் பெற்றோர்களும் எதிர்கொள்ளும் வேதனை, கே. ராதாகிருஷ்ணன் குழுவின் பரிந்துரைகளை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியம், தேர்வு முறையில் வெளிப்படைத்தன்மையையும் பொறுப்புணர்வையும் உறுதி செய்ய வேண்டிய தேவை ஆகியவற்றை வலியுறுத்தினேன்.
மேலும், மாணவர்களின் போராட்டத்தால் ஏற்பட்ட மாற்றங்களையும், "கரப்பான் பூச்சிகள்" என்று கேலி செய்யப்பட்ட போதிலும் தலைகுனியாமல் நீதிக்காகவும் நியாயத்திற்காகவும் தொடர்ந்து போராடிய ஜென் Z தலைமுறையின் உறுதியையும் பாராட்டினேன்.
இளைஞர்களின் குரலை யாராலும் நிரந்தரமாக அடக்க முடியாது. உண்மையும் ஜனநாயகமும் இறுதியில் வெல்லும்.
– துரை வைகோ
நாடாளுமன்ற உறுப்பினர்
#DuraiVaiko #CJP #SonamWangchuk
#AbhijitDipke #SauravDas
இன்று (30.07.2026) நாடாளுமன்றத்தில், எதிர்க்கட்சிகளின் கருத்துகளைக் கூட கேட்காமல், The Prevention of Insults to National Honour (Amendment) Bill, 2026 மசோதாவை விவாதமின்றி நிறைவேற்றிய ஒன்றிய பாஜக அரசின் ஜனநாயக விரோத நடவடிக்கையை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
மகாத்மா காந்தி, நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், ரவீந்திரநாத் தாகூர் உள்ளிட்ட தேசியத் தலைவர்கள், இந்தியாவின் மதச்சார்பற்ற தன்மையையும் தேசிய ஒருமைப்பாட்டையும் கருத்தில் கொண்டு, வந்தே மாதரம் பாடலின் முதல் இரண்டு சரணங்களை மட்டுமே தேசியப் பாடலாக ஏற்றுக்கொண்டனர். மத வழிபாட்டுக் குறிப்புகள் இடம்பெற்றுள்ள பிற சரணங்கள் தேசியப் பாடலின் அங்கீகரிக்கப்பட்ட பகுதியாக சேர்க்கப்படவில்லை.
08.12.2025 அன்று மக்களவையில் நடைபெற்ற வந்தே மாதரம் பாடலின் 150-ஆவது ஆண்டு சிறப்பு விவாதத்தில், இந்த வரலாற்று உண்மையை நானும் பதிவு செய்திருந்தேன்.
ஆனால் இன்று, எதிர்க்கட்சிகளுக்கு பேசுவதற்குக் கூட வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில், இந்தத் திருத்தத்தின் மூலம் முழு வந்தே மாதரம் பாடலையும் பாடுவதை கட்டாயமாக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது இந்தியாவின் மதச்சார்பற்ற அடிப்படைக்கும், பன்முகத்தன்மைக்கும், சிறுபான்மை மக்களின் உணர்வுகளுக்கும் உரிய மரியாதை அளிக்காத அணுகுமுறையாகும்.
இந்த விவகாரம் குறித்து அவையில் ஒரு நிமிடமாவது பேச அனுமதி கோரிய எனக்குக்கூட வாய்ப்பு மறுக்கப்பட்டது. கருத்து வேறுபாடுகளை ஒடுக்கி, விவாதமின்றி மசோதாவை நிறைவேற்றுவது நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மாண்புகளுக்கு எதிரானது.
இந்தியாவின் மதச்சார்பற்ற தன்மையையும், ஜனநாயக மரபுகளையும், அனைத்து மதங்களையும் மொழிகளையும் சேர்ந்த மக்களின் உரிமைகளையும் பாதுகாப்பதே நம் அனைவரின் கூட்டுப் பொறுப்பாகும்.
துரை வைகோ
நாடாளுமன்ற உறுப்பினர்- திருச்சி
மறுமலர்ச்சி திமுக
புது தில்லி
30.07.2026
#duraivaiko #mdmk #tvk #iuml #congress
இன்று (27.07.2026) மாண்புமிகு ஒன்றிய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் திரு. மன்சுக் மாண்டவியா அவர்களை புதுடெல்லியில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்து, திருச்சிராப்பள்ளியில் ஊழியர் மாநிலக் காப்பீட்டுக் கழகத்தின் (ESIC) துணை மண்டல அலுவலகத்தை விரைவாக செயல்பாட்டிற்குக் கொண்டு வர கோரி விரிவான மனுவை வழங்கினேன்.
இக்கோரிக்கை தொடர்பாக நான் ஏற்கனவே ஒன்றிய அரசிடமும், ESIC நிர்வாகத்திடமும் பலமுறை தொடர்ந்து வலியுறுத்தியதன் விளைவாக, திருச்சிராப்பள்ளி துணை மண்டல அலுவலகத்தை தொடங்குவதற்கான நிர்வாக ஒப்புதல்கள் வழங்கப்பட்டதுடன், துணை மண்டலக் குறியீடு (Sub Regional Code – 89) ஒதுக்கீடு செய்யப்பட்டு, அலுவலகக் கட்டிடம் தேர்வு செய்வதற்கான டெண்டர் நடைமுறைகளும் மேற்கொள்ளப்பட்டன.
இருப்பினும், கட்டிடத்தை இறுதி செய்வது, பொறுப்பு அலுவலரை நியமிப்பது, தேவையான பணியாளர்களை நியமிப்பது, சென்னை மற்றும் சேலம் அலுவலகங்களிலிருந்து கோப்புகள் மற்றும் நிர்வாகப் பொறுப்புகளைப் பிரித்து மாற்றுவது உள்ளிட்ட பணிகள் இன்னும் நிறைவடையாததால், அலுவலகம் இதுவரை செயல்பாட்டிற்கு வரவில்லை என்பதை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்தேன்.
திருச்சிராப்பள்ளியில் ESIC துணை மண்டல அலுவலகம் செயல்பாட்டிற்கு வந்தால், மத்திய தமிழ்நாட்டைச் சேர்ந்த லட்சக்கணக்கான காப்பீடு பெற்ற தொழிலாளர்கள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் தொழில் நிறுவனங்கள் விரைவான மற்றும் எளிதான ESIC சேவைகளைப் பெறுவதுடன், நிர்வாகச் செயல்திறனும் குறிப்பிடத்தக்க அளவில் மேம்படும் என்பதை வலியுறுத்தினேன்.
எனது கோரிக்கையை மிகவும் கனிவுடன் கேட்டறிந்த மாண்புமிகு அமைச்சர் அவர்கள், உடனடியாக துறை சார்ந்த உயர் அதிகாரியை தொலைபேசியில் தொடர்புகொண்டு, தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தாமதமின்றி மேற்கொள்ளுமாறும், பணிகள் நிறைவடைந்தவுடன் நேரடியாக தமக்குத் தெரிவிக்குமாறும் அறிவுறுத்தினார்.
அன்புடன்
துரை வைகோ
நாடாளுமன்ற உறுப்பினர்
(திருச்சி - ம.தி.மு.க.)
27.07.2026 | புதுடெல்லி
#DuraiVaiko #cmvijay #tvk #trichy #esic
திருச்சிராப்பள்ளி ESIC துணை மண்டல அலுவலகம் – முக்கிய முன்னேற்றம்!
நேற்று மாண்புமிகு ஒன்றிய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் திரு. மன்சுக் மாண்டவியா அவர்களை நேரில் சந்தித்து, திருச்சிராப்பள்ளி ESIC துணை மண்டல அலுவலகத்தை விரைவாக செயல்பாட்டிற்குக் கொண்டு வர வலியுறுத்தினேன்.
உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரியை தொலைபேசியில் தொடர்புகொண்ட மாண்புமிகு அமைச்சர் அவர்கள், மீதமுள்ள பணிகளை தாமதமின்றி நிறைவு செய்து, பணிகள் முடிந்தவுடன் நேரடியாக தமக்குத் தெரிவிக்குமாறு அறிவுறுத்தினார்.
இதன் தொடர்ச்சியாக, டெண்டரில் பங்கேற்ற 8 கட்டிடங்களில், பொருத்தமான ஒரு கட்டிடம் தேர்வு செய்யப்பட்டு, நேற்று (27.07.2026) மாலை சேலம் ESIC துணை மண்டல அலுவலகத்திலிருந்து ESIC தலைமையகத்திற்கு (புதுடெல்லி) இறுதி ஒப்புதலுக்காக பரிந்துரை அனுப்பப்பட்டுள்ளது.
அரசியல் கருத்தியல் வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் மக்கள் நலன் மற்றும் பொதுச் சேவையைப் பொறுத்தவரை அரசியல் ஒருபோதும் தடையாக இருக்கக் கூடாது என்பதே நான் அரசியலுக்கு வந்த நாள் முதல் கடைப்பிடித்து வரும் கொள்கை. மக்கள் நலன் சார்ந்த விஷயங்களில் அரசியலைத் தாண்டி செயல்பட வேண்டும் என்ற எனது நிலைப்பாடு இன்றும் மாறவில்லை. அதே உணர்வுடன் இவ்விவகாரத்தில் விரைந்து செயல்பட்ட மாண்புமிகு ஒன்றிய அமைச்சர் அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
அன்புடன்,
துரை வைகோ,
நாடாளுமன்ற உறுப்பினர் - திருச்சி,
மறுமலர்ச்சி திமுக.
28.07.2026.
#DuraiVaiko #cmvijay #tvk #trichy #esic
திருச்சிராப்பள்ளி ESIC துணை மண்டல அலுவலகம் – முக்கிய முன்னேற்றம்!
நேற்று மாண்புமிகு ஒன்றிய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் திரு. மன்சுக் மாண்டவியா அவர்களை நேரில் சந்தித்து, திருச்சிராப்பள்ளி ESIC துணை மண்டல அலுவலகத்தை விரைவாக செயல்பாட்டிற்குக் கொண்டு வர வலியுறுத்தினேன்.
உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரியை தொலைபேசியில் தொடர்புகொண்ட மாண்புமிகு அமைச்சர் அவர்கள், மீதமுள்ள பணிகளை தாமதமின்றி நிறைவு செய்து, பணிகள் முடிந்தவுடன் நேரடியாக தமக்குத் தெரிவிக்குமாறு அறிவுறுத்தினார்.
இதன் தொடர்ச்சியாக, டெண்டரில் பங்கேற்ற 8 கட்டிடங்களில், பொருத்தமான ஒரு கட்டிடம் தேர்வு செய்யப்பட்டு, நேற்று (27.07.2026) மாலை சேலம் ESIC துணை மண்டல அலுவலகத்திலிருந்து ESIC தலைமையகத்திற்கு (புதுடெல்லி) இறுதி ஒப்புதலுக்காக பரிந்துரை அனுப்பப்பட்டுள்ளது.
அரசியல் கருத்தியல் வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் மக்கள் நலன் மற்றும் பொதுச் சேவையைப் பொறுத்தவரை அரசியல் ஒருபோதும் தடையாக இருக்கக் கூடாது என்பதே நான் அரசியலுக்கு வந்த நாள் முதல் கடைப்பிடித்து வரும் கொள்கை. மக்கள் நலன் சார்ந்த விஷயங்களில் அரசியலைத் தாண்டி செயல்பட வேண்டும் என்ற எனது நிலைப்பாடு இன்றும் மாறவில்லை. அதே உணர்வுடன் இவ்விவகாரத்தில் விரைந்து செயல்பட்ட மாண்புமிகு ஒன்றிய அமைச்சர் அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
அன்புடன்,
துரை வைகோ,
நாடாளுமன்ற உறுப்பினர் - திருச்சி,
மறுமலர்ச்சி திமுக.
28.07.2026.
#DuraiVaiko #cmvijay #tvk #trichy #esic