மனம் திறந்து நிறைவா பாராட்டுறதுலயும், மத்தவங்களுக்கு அளவுக்கு அதிகமான அன்பக் குடுக்குறதுலயும் அவர் முதல்வரே ❤️
Honourable CM : இந்த government அமஞ்சதுக்கு பாதி காரணம் உன் பாடல் வரிகள் பா (Not Literally. என் பங்கு மதிக்கப்படுகிறது என்று நான் உணர்ந்துகொள்ள, அன்பின் மிகுதியில் அவர் சொன்ன சொற்கள் என்றே உணர்கிறேன்)
நான் எழுத வருவதற்கு முன்பே அவர் இமாலய நட்சத்திரம். இந்த வெற்றி அவர் உழைப்பின் பரிசு. இருந்தும் இப்படி சொல்ற மனசு.. அதான் தளபதி🥹
என���்கு இது வரலாற்றுப் பதிவு.. இனி வரலாற்றில் எந்த விருதும் அவர் சொல்லுக்கு ஈடாகப்போவதில்லை. வாழ்வில் மறக்க முடியாத நாள் ❤️
தமிழ் இலக்கிய உலகிலும், தமிழ்த் திரையிசை வரலாற்றிலும் தனி முத்திரை பதித்து நூற்றாண்டு காணும் கவியரசு கண்ணதாசன் அவர்களுக்கு எனது புகழ் வணக்கங்கள்.
மனித வாழ்வின் உணர்வுகளையும், தத்துவச் சிந்தனைகளையும், சமூக விழிப்புணர்வையும் தனது படைப்புகளின் மூலம் எளிய தமிழில் தந்து அனைவரின் மனங்களிலும் நீங்கா இடம் பிடித்தவர் கவியரசு கண்ணதாசன்.
காலங்களைக் கடந்தும் தலைமுறைகளை வழிநடத்தும் இலக்கியப் பொக்கிஷங்களாக அவரது படைப்புகள் திகழ்கின்றன.
தமிழ்மொழி உள்ளவரை கவியரசரின் புகழும் படைப்புகளும் என்றும் நிலைத்திருக்கும்.
#CMJosephVijay
@TVKVijayHQ
இந்து சமய அறநிலையத்துறையில் நிதி இல்லாததால், கோவிலில் உள்ள கோடிக்கணக்கான நிதியை எடுத்து திருமண மண்டபம், வணிக வளாக கட்டுமானம் என்று டெண்டர் விட்டு, அதில் 40% வரை லஞ்சம் பெற்றார் சேகர் பாபு.
தீவிர கடவுள் பக்தி கொண்டவரான துர்கா ஸ்டாலின், இந்த லஞ்ச பணத்தில் பங்கு வாங்கினார். ஸ்டாலின் வீட்டில் உப்பு, புளி மிளகாய் முதல் வாகனங்களுக்கு எரிபொருள் போடுவது வரை அனைத்தையும் கவனித்துக் கொண்டது சேகர்பாபுதான்.
கோவில் நிதியை திருடி அதை அனுபவித்துவிட்டு, அதை கடவுள் கண்டுகொள்ள மாட்டார் என்று துர்கா எப்படி நம்பினார் என்பது புரியவில்லை !
ஒரு வகையில், தன் மாமனார் கருணாநிதியை விட துர்கா பெரிய நாத்திகராக இருந்திருக்கிறார்.
கோவில் நிதியில் நடந்து கொண்டிருந்த கட்டுமா���ங்களை நிறுத்த உத்தரவிட்ட விஜய் அரசுக்கு வாழ்த்துக்கள் !
பெண்களின் பாதுகாப்பில் சமரசம் இல்லை எனும் முழக்கத்துடன் சிங்கப்பெண் அதிரடிப்படை தொடங்கப்பட்டுள்ளது. அதற்கென சுமார் 354 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும், 2500 புதிய பணியிடங்கள் உ��ுவாக்கப்படும் என்றும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், தம்பி விஜய் @TVKVijayHQ அறிவித்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.
தமிழ் நாடு அரசு எடுத்துள்ள இந்த நல்ல முன்னெடுப்பை முழுமனதோடு வரவேற்கிறேன். அறிவிப்புகள் செயல்பாட்டுக்கு வந்து, ஒவ்வொரு பெண்ணுக்கும் அரணாக அமையும் என நம்புகிறேன்.
Amazing to see so many women in action as part of the Singapen task force!! Great initiative by CM @TVKVijayHQ, hope it betters the situation on ground!
தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூட்டுக்கு அப்பாவிப் பொதுமக்கள் பலியாகினரே. அப்போது அந்தத் துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்டவர் யார்? காவல் துறை யார் கையில் இருந்தது? யாருக்கும் தெரியாமல் யாருடைய உத்தரவும் இல்லாமலே அவ்வளவு பெரிய துப்பாக்கிச் சூடு நடந்ததா? அப்போது முக��்தை மூடித் தூங்கியவர், முதல்வராக இருந்தாரா?
தமிழகமே அதிர்ந்து அலறிய அவ்வளவு பெரிய சம்பவத்தை டிவி பார்த்துத் தெரிந்துகொண்டதாக அப்போது சொன்னவர் யார்? தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்று முதல்வர் பதவியைத் தட்டிச் சென்றவர்தான் அவர் என்பது தமிழகம் அறியாததா?
எம்.ஜி.ஆரின் மக்கள் சக்தியை, ஜெயலலிதா அம்மையாரின் கட்டுப்பாடான தொண்டர்கள் கொண்ட சக்தியை யாரிடமோ அடகு வைத்��ு, மற்றும் பலர் கட்சியாக்கியவர், தீய சக்தி தி.மு.க.வுடன் சேர்ந்து தீர்ந்துபோன சக்தியாக்கியவர், உள்நோக்கத்துடன் விஷம் கக்குவதைத் தமிழக மக்கள் அறியாதவர்களா என்ன?
மக்கள் பாதிப்பைத் தன் பாதிப்பாக உணரும், மக்கள் விரும்பும் முதல்வரைத் தமிழகம் பெற்றுள்ளது. மக்கள் மீது அக்கறை கொண்டதால்தான் உடனடி நடவடிக்கையில் காவல் துறையை ஈடுபடச் செய்கிறார். சட்டம் ஒழுங்கைக் கட்டிக் காக்க, தொடர் ந���வடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுபற்றி எ��ையும் அறிந்துகொள்ளாத மிஸ்டர் தீர்ந்துபோன சக்தி, அறியாமையில் அறிக்கை விட்டுக் கூவினால் எப்படி?
கட்சியைக் கலகலக்க வைத்து, அடகு வைத்துக் கரைத்து, அகில உலக அரசியல் கோர்ஸான கட்சியைக் காணாமல் போகச் செய்யும் கோர்ஸ் படித்தவர், அரசியல் பாடம் எடுத்தால் எப்படி?
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை டிவியில் பார்த்துத் தெரிந்துகொண்ட, தீர்ந்துபோன இந்தச் சக்தி, இப்போது டிவிகூட பார்க்காமல��, தூர்ந்துபோன சக்தியுடன் ஆட்சி அமைக்கத் திருட்டுத்தனமாகக் கூட்டணி போட்டது போல, அவர்கள் எழுதிக் கொடுத்த அறிக்கையையும் தவழ்ந்துபோய்ப் பெற்று வந்து தன் பெயரில் வெளியிடுகிறாரா?
பெண்கள் பாதுகாப்பிலும், போதைப் பொருள் தடுப்பிலும், சட்டம் ஒழுங்கைக் காப்பதிலும் மனசாட்சி உள்ள மக்களாட்சியான எங்கள் வெற்றித் தலைவரின் ஆட்சி, தவறு செய்வோர் மீது கடுமையான நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுக��கும். மக்களுக்காகவே உழைக்கும்.
இசைஞானி இளையராஜா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
தேனி மாவட்டம், பண்ணைப்புரம் என்ற கிராமத்தில் பிறந்து, தனது சகோதரர்களுடன் இசைப் பயணத்தைத் தொடங்கி, “அன்னக்கிளி” என்ற திரைப்படத்தின் மூலமாக திரைத்துறையில் கால்பதித்து, உலகப் புகழ்வாய்ந்த சிம்பொனி இசை வரை பல சாதனைகளைப் படைத்து, இசை உலகின் மகுடமாகத் திகழ்ந்துவரும் இசைஞானி இளையராஜா அவர்கள் தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்து வருகிறார்.
உங்கள் இசை இன்னும் பல தலைமுறைகளுக்கு வழிகாட்டும் ஒளியாகவும், ஊக்கமாகவும் தொடர்ந்து ஒலிக்கட்டும். தமிழர்களின் பெருமையாக விளங்கும் தங்களுக்கு எங்களின் அன்பும், மரியாதையும் கலந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், எனது ஆருயிர் தலை��ர் @CMOTamilnadu | @TVKVijayHQ அவர்களின் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றியது எல்லையற்ற மகிழ்ச்சி.
இந்த வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுத்த மாண்புமிகு அமைச்சர், கழக பொதுச்செயலாளர் @BussyAnand அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.
மலைக்கோட்டை மாநகரமான திருச்சிராப்பள்ளி என்றும் தளபதியின் கோட்டையாக திகழும்!
#தமிழகவெற்றிக்கழகம்
தியாகம் செய்யாதவர்களெல்லாம் ஆட்சிக்கு வந்துவிட்டார்கள் என்று ஆதங்கப்படுகிறார் @dmk_raja .
E.V.வேலு, ரகுபதி, சாத்தூர் ராமச்சந்த��ரன், @PKSekarbabu , செந்தில்பாலாஜி, தங்கத் தமிழ்செல்வன், @OfficeOfOPS , திண்டுக்கல் லியோனி, திருமாவேலன், போன்ற வந்தேரிகளுக்கு வாழ்வு கொடுத்த @arivalayam , தியாகத்தைப் பற்றி பேசுவதுதான் ஆச்சரியமாக இருக்கிறது. வாழ்க தியாகிகள்..!
திருச்சி கிழக்கு பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் விஜயை வரவேற்க கட்டப்பட்டிருந்த 500+ வாழை மரங்கள் - இருந்த இடத்தில்.. இருந்த படியே..
#Tiruchirappalli | #CMVijay | #Trichy
தன் இதயத்தோடு நெருங்கி வாழும் திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நெகிழ்ச்சியோடு சிரம் தாழ்த்தி தன் நன்றியை தெரிவித்துக்கொண்டதோடு,
மக்களுக்கான மனசாட்சியுள்ள உண்மையான மக்களாட்சியை அமைத்துக் கொடுத்த தமிழ்நாட்டு மக்களுக்கும் தன் நன்றியை தெரிவித்துக்கொண்டார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்.