தமிழக முதலமைச்சர் விஜய்யின் கவனத்திற்கு... @CMOTamilnadu
ராமநாதபுரத்தில் பயணிகள் நிற்கும் இடத்தில் நிற்காமல் சென்ற அரசுப் பேருந்தை, கூலி வேலை முடித்து வீடு திரும்ப முயன்ற பெண்மணி ஒருவர் தொடர்ந்து ஓடிவந்து பிடிக்க முயன்றுள்ளார். இருப்பினும் ஓட்டுநர் பேருந்தை நிறுத்தாமல் சென்றதால் மனவேதனையடைந்த அப்பெண், "எங்களுக்கு இலவசப் பயணம் வேண்டாம்; கட்டணமே பெறப்பட்டாலும் பரவாயில்லை! ஆனால் பெண்களை மதித்து பேருந்து நிறுத்தத்தில் முறைப்படி நிறுத்தி ஏற்றிச் செல்லுங்கள்" என கண்ணீருடன் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். இந்த வீடியோவை விகடனின் சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்து இது குறித்து மக்களின் கருத்தைக் கேட்டிருந்தோம். அதற்குப் பலரும், "இதுபோன்று பல மாவட்டங்களிலும் நடப்பதாகவும், பெண்கள் தொடர்ந்து உதாசீனப்படுத்தப்படுவதாகவும் கூறி, தமிழக முதல்வர் விஜய் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தங்களது கருத்துகளைப் பதிவிட்டு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
#CMVijay | #TNGovt | #GovtBus | #VetriPayanam | #Vikatan
மைசூர் தசரா விழாவில் கிரிக்கெட் வீராங்கனை ஸ்ரேயங்கா பாட்டீலின் வருகையால் உற்சாகமடைந்த ரசிகர்கள், ‘RCB... RCB...’ எனக் கோஷமிட்டனர்.
#RCB | #ShreyankaPatil | #VikatanReels
"எங்களுக்கு இலவசப் பயணம் வேண்டாம், பணம் வேண்டும் என்றாலும் வாங்கிக்கொள்ளுங்கள்! ஆனால் பெண்களை மதித்து பேருந்து நிறுத்தத்தில் முறைப்படி நிறுத்தி ஏற்றிச் செல்லுங்கள்."
- ராமநாதபுரத்தில் கண்ணீருடன் பெண் ஆதங்கம்
இது குறித்து உங்கள் கருத்து என்ன?
#CMVijay | #TNGovt | #GovtBus | #Ramanathapuram | #ShareWithVikatan
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் அக்னி தீர்த்தக் கடற்கரையில் இருந்து புறப்பட்ட அரசுப் பேருந்து, பயணிகள் நிற்கும் இடத்தில் நிற்காமல் சென்றுள்ளது. கூலி வேலை முடித்து வீடு திரும்ப முயன்ற பெண்மணி ஒருவர், பேருந்தை பிடிப்பதற்காகப் பின்னாடியே தொடர்ந்து ஓடிவந்துள்ளார். இருப்பினும் ஓட்டுநர் பேருந்தை நிறுத்தாமல் சென்றதால் மனவேதனையடைந்த அப்பெண், ஒரு ஆட்டோவைப் பிடித்துப் பின்தொடர்ந்து சென்று பேருந்து நிலையத்தில் பேருந்தை மறித்து ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். "எங்களுக்கு இலவசப் பயணம் வேண்டாம், பணம் வேண்டும் என்றாலும் வாங்கிக்கொள்ளுங்கள்! ஆனால் பெண்களை மதித்து பேருந்து நிறுத்தத்தில் முறைப்படி நிறுத்தி ஏற்றிச் செல்லுங்கள். இதை முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்" என அப்பெண் கண்ணீருடன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். அப்போது ஓட்டுநர் அப்பெண்ணிடம் எதிர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், இந்த நிகழ்வைப் படம் பிடித்த செய்தியாளரையும் மிரட்டும் தொனியில் நடந்துகொண்டார். பேருந்தில் இருந்த மற்ற பயணிகளும் அப்பெண்ணுக்கு ஆதரவாகப் குரல் கொடுத்தனர். அதன்பின் அப்பெண்மணி தொடர்ந்து அழுதுகொண்டே அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
#CMVijay | #TNGovt | #GovtBus | #Ramanathapuram | #VikatanReels
"முதலமைச்சர் மனம் கோணும்படி எது நடந்தாலும் கைது செய்யப்படுகிறார்கள். பாஜகவின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் முதல்வரை தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்துள்ளார். அவரை எதிர்த்து எதாவது நடவடிக்கை எடுத்துள்ளாரா? அந்த அளவிற்கு தைரியம் இருக்கிறதா? ஆனால், எதிர்க்கட்சியில் இருப்பவர்கள் கைது செய்யப்பட்டு பழிவாங்கும் நடவடிக்கை தொடர்ந்து எடுக்கப்படுகிறது. அப்படிப்பட்ட ஒரு நடவடிக்கைதான் கார்த்திகாவின் கைது." - கனிமொழி
#Kanimozhi | #DMK | #TVK | #Vijay | #NainarNagendran | #BJP
"இந்த மழை நேரத்தில் 17,000 மாநகராட்சி ஊழியர்கள் இரவோடு இரவாக வேலை பார்த்திருக்கிறார்கள். அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் என அனைவரும் வேலை பார்த்திருக்கிறார்கள். ஆனால், களத்தில் மேயர், துணை மேயர், கவுன்சிலர்கள் என யாரையும் காணவில்லை. திட்டமிட்டு கட்சித் தலைமை களத்திற்கு போகாதீர்கள் என்று சொல்லிருப்பார்களா என்று தெரியவில்லை. திமுகவிடம் இந்தக் கேள்வியை நீங்கள் கேட்க வேண்டும்." - துரை வைகோ
#DuraiVaiko | #DMDK | #GCC