அடுத்த நூறு ஆண்டுகளுக்குக் கழகத்தின் பயணம் தொடர்வதற்கான தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது செயற்குழு!
Bore அடிக்கிறது என அரசியலுக்கு வந்தவர்களல்ல நாம்; போராட வந்தவர்கள்!
Comeback கொடுப்பதில் Specialist-ஆன நாம், திரும்ப வருவோம்; வட்டியும் முதலுமாகத் திருப்பிக் கொடுப்போம்!
தமிழ்த்தாய் வாழ்த்துக்காக ஆளுநரை எதிர்க்க தவெக அரசு அஞ்சி நடுங்குவது ஏன்?
தமி���்த்தாய் வாழ்த்தை இயற்றிய தமிழ்ப் பெருங்கவிஞர் மனோன்மணீயம் சுந்தரனார் பெயரில் அமைந்துள்ள பல்கலைக்கழகத்திலேயே, தமிழ்த்தாய் வாழ்த்தை 3ம் இடத்திற்குத் தள்ளிவிட்டு வந்தே மாதரத்தை முதலில் ஒலிக்கச் செய்து தமிழ்நாட்டையும், மொழியையும் அப்பட்டமாக அவமதித்துள்ளார் ஆளுநர்!
தமிழ்நாட்டின் மாநிலப் பாடலான தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்ந்து அவமதிக்கப்படும்போதும், ஆளுநரைக் கண்டிக்கக் க��ட வக்கில்லாமல், அவருக்கு அஞ்சி நடுங்கி மௌனியாகப் பதுங்கிக் கிடக்கிறது இந்த டம்மி முதல்வரின் தவெக அரசு!
தன் முதலமைச்சர் நாற்காலியைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்பதற்காக, ஆளுநரிடம் ரகசியச் சமரசம் செய்துகொண்டு, ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டின் மானத்தையும் டெல்லியிடம் அடமானம் வைத்துவிட்டதா இந்த கோழை அரசு?
தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்த ஆளுநரைச் சட்டமன்றத்தை விட்டே ஓடவிட்ட நெ���்சுரம் மிக்க திமுக அரசு எங்கே? பதவிக்காகத் தன் தாய்மொழியையே ஆளுநரின் காலடியில் அடமானம் வைக்கும் இந்தச் சுயநலக் கோழைகளின் அரசு எங்கே?
தவெக ஆட்சி அமைந்ததில் இருந்தே முதல்வர் பதவியேற்பு விழா, சட்டமன்றம், இப்போது பட்டமளிப்பு விழா எனத் தமிழுக்கும் தமிழர்களுக்கும் தொடர் அவமானங்கள் அரங்கேறி வருகின்றன.
தமிழர்களின் சுயமரியாதையை விற்றுச் அரசியல் பிழைப்பு நடத்தும் இந்த அடிமை அரசுக்கு தமிழ்நாட்டு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்!
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்கூட்டம் எதிர்வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், கழகத்தலைவர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதலின்படி, கழக சட்டமன்ற உறுப்பினர்���ளுக்கான ஆலோசனைக் கூட்டத்தை காணொளி வாயிலாக இன்று நடத்தினோம்.
தலைவர் அவர்களின் ஆலோசனையின் பேரில், தமிழ்நாடு நலன் சார்ந்து கழக சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் ஆற்ற வேண்டிய ஆக்கப்பூர்வமான பணிகள் குறித்துப் பல்வேறு கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டோம்.
#DMK #MLAsMeeting
#TNAssembly
மேகதாது அணை கட்ட தமிழ்நாட்டின் அனுமதி கர்நாடகாவிற்குத் தேவை இல்லை என்ற ஒன்றிய இணை அமைச்சரின் பதில் காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமையை கேள்விக்குறியாக்கி இருக்கிறது.
டெல்லி எஜமானர்களை பகைத்துக் கொள்ளாமலும் - ஆட்சிக்கட்டிலைக் காப்பாற்ற காங்கிரஸுக்கு எதிராக பேசாமலும், தமிழ்நாட்டின் உரிமையை அடகு வை���்துள்ளார் முதலமைச்சர்.
இந்த பிரச்சினையில், தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் ஓரணியில் சென்று ஒன்றிய அரசிடம் மேகதாதுவுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டுமென சட்டப்பேரவையில் பேசி இருந்தேன்.
கர்நாடகாவில் பட வசூல் பாதிக்கும் என்ற பயத்தில், இந்த #SofaModel முதலமைச்சர், எதிர்க்கட்சிகள் சொன்னதையும் கேட்கவில்லை - விவசாயிகளின் கோரிக்கையையும் ஏற்கவில்லை.
இனியும் காலம் தாழ்த்தினால் தமிழ்நாட்டு விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் பறிபோகும்.
எனவே, மேகதாதுவில் அணை கட்டும் முயற்சியை முறியடிக்க முதலமைச்சர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
#CauveryRights
#Mekedatu
சர்வாதிகார #SofaModel அரசால் பழிவாங்கும் நோக்கத்தில் கைது செய்யப்பட்டுள்ள கழக சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் மார்க்கண்டேயன் அவர்களை பாளையங்கோட்டை மத்திய சிறையில் இன்று சந்தித்தோம்.
சிறையில் இருந்தாலும் முன்பை விட இன்னும் வேகமாக கழகப்பணி - மக்கள் பணியாற்றிடும் உத்வேகத்துடன் உள்ள அண்ணன் மார்க்கண்டேயன் அவர்களிடம் நலம் விசாரித்தோம்.
அவரின் விடுதலைக்காக கழகத்தலைவர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதலின்படி, கழக வழக்கறிஞர்கள் மேற்கொண்டு வரும் சட்ட நடவடிக்கைகளை எடு��்துக்கூறி ஆறுதல் தெரிவித்தோம்.
மிசா - எமர்ஜன்சியை பார்த்தது தி.மு.கழகம். தத்தித்தாவி ஆட்சிக்கு வந்து தறிகெட்டு அரசு நடத்தும் #Sofa அரசின் கைது நடவடிக்கைகளுக்கு எல்லாம் கழகத்தின் கடைக்கோடி தொண்டர்கள் கூட அஞ்ச மாட்டார்கள்.
விமர்சனத்துக்காக செய்யப்படும் ஒவ்வொரு கைதின்ப���தும் நீதிமன்றத்திடம் குட்டுப்படும் இந்த ஆட்சியாளர்கள், மக்கள் மன்றத்திலும் சரிவைச் சந்திப்பது உறுதி.
@mlavilathikulam
@geethajeevandmk @ARROffice @AbdulWahabMLA
There will be no justice for students until NEET is abolished.
Today, we, the DMK MPs, staged a protest within the Parliament premises demanding the complete abolition of NEET, which continues to shatter the dreams of countless students aspiring to pursue medical education.
நீட் ஒழியும் வரை, மாணவர்களுக்கு விடிவில்லை!
நம் பிள்ளைகளின் மருத்துவ கல்வி கனவை சிதைக்கும் நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தி, இன்று நாடாளுமன்ற வளாகத்தில் தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டபோது.
#BanNEET #DMKforStudents #AbolishNEET #DMKinParliament #SaveStudents
மாண்புமிகு @CMOTamilNadu அவர்களு��்குச் சில கேள்விகள்:
1) தமிழ்நாட்டின் கோரிக்கையைக் காவிரி மேலாண்மை ஆணையம் தொடர்ந்து நிராகரித்து வரும் நிலையில் இதுகுறித்து பிரதமரிடம் பேசாதது ஏன்?
2) தமிழ்நாட்டின் நீர்வளத்துறை அமைச்சர் என்ன செய்துகொண்டிருக்கிறார்?
3) தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசை எதிர்த்துப் பேச என்ன பயம்?
4) அனைத்துக் கட்சிக் கூட்டத்தை ஏன் கூட்டவில்லை?
5) மேகதாது அணைக்கு எதிரான சட்டமன்றத் தீர்மானத்தை அனைத்துக் கட்சி உறுப்பினர்களுடன் சென்று பிரதமரிடம் நேரில் அளிப்பது எப்போது?
6) தவிக்கும் டெல்டா விவசாயிகளுக்கான நிவாரணத் தொகுப்பு எங்கே?
தூத்துக்குடியில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அருணாச்சலம் என்னும் இளைஞர், காவலர்களின் தாக்குதலுக்கு ஆளாகி மரணமடைந்து இருப்பது வேதனை அளிக்கிறது.
போலீஸ் தனக்கு இழைத்த அநீதியை தனது இறுதி நிமிடங்களில் அருணாச்சலமே எடுத்துச் சொன்னதைப் பார்க்கும் போது நெஞ்சம் கல���்குகிறது.
காவல் மரணங்களின் போது துறைக்குப் பொறுப்பு வகிக்கும் முதல் அமைச்சர், கடும் நடவடிக்கைகளை எடுக்காமல் மவுனம் காப்பதால், இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
மகன��� இழந்து கண்ணீர் வடிக்கும் அருணாச்சலத்தின் குடும்பத்துக்கு, திரைப்படத்தைப் பார்த்துக் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கும் இந்த ஆட்சியாளர்கள் என்ன பதில் வைத்து இருக்கிறார்கள்?
#Custodialdeath
NEET தேர்வில் மட்டுமல்ல, #NEET தேர்வே மோசடிதான் என்பதை படம்பிடித்துக் காட்டுகிறது கழகத்தலைவர் @mkstalin அவர்களின் இன்றைய @the_hindu Op-Ed கட்டுரை!
ஏழை எளிய, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, கிராமப்புற, அரசுப்பள்ளி மாணவர்களின் மருத்துவம் உள்ளிட்ட உயர்கல்விக் கனவைச் சிதைப்பதே NEET போன்ற நுழைவுத்தேர்வுகளின் உண்மையான நோக்கம்!
அந்தத் தடையை உடைப்பதற்கான படையாக #DMK என்றைக்கும் முன் வரிசையில் வாள் தூக்கி நிற்கும்.
#BanNEET #AbolishNEET
ஆட்சி அதிகாரம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தமிழினத்திற்காகவே வாழ்ந்து வழிகாட்டிய த��ைவர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளான நேற்று, கழக மகளிரணி சார்பில் நடைபெற்ற நிகழ்வில் ஆற்றிய உரை.
தமிழ்நாடு அரசின் அலட்சியத்தால் நமது அரசு மருத்துவர்களுக்கு கிடைக்க வேண்டிய 152 உயர் சிறப்பு மருத்துவ படிப்பு இடங்கள் அகில இந்திய தொகுப்பிற்கு சரண்டர் செய்யப்படும் நிலை உருவாகியுள்ளது.
அரசு வழக்கறிஞர் முறையாக வாதங்களை எடுத்து வைக்காத காரணத்தால் நமது அரசு மருத்துவர்களுக்கான வாய்ப்புகள் கைநழுவி போவது மட்டுமல்ல, நமது மாநில சுகாதாரக் கட்டமைப்புக்கே இது பின்னடைவை ஏற்படுத்தும்.
அலட்சியம் காட்டாமல் உடனடி நடவடிக்கை எடுத்து இதனை தடுத்திட தமிழ்நாடு அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
#SuperSpeciality #MedicalCourses #StateRights
நெல்லை மாநகர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் காரணமாக பொதுமக்கள் பயன்பெறும் வகையில் வெளிவட்ட சாலைகள் (Outer Ring Road ) அமைப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ஆனந்த் மோகன் அவர்களிடம் கோரிக்கை மனு வழங்கியபோது.
@arivalayam@mkstalin@Udhaystalin@KanimozhiDMK@NELLAISUBBUDMK