இன்றைய சட்டமன்றத்தில் பல கட்சிகளின் பிரதிநிதிகள் ரத்தன் பண்டிட் OSD யாக பதவி அமர்த்தப்பட்டதற்கு நிறைய எதிர்ப்புகளும் கேள்விகளும் வந்தது. இதற்கு எந்த வித எதிர்ப்பும் இன்றி அது பரிசீலிக்கபடும் என பதிலளித்தார் முதல்வர் விஜய் அவர்கள்.
சொல்லி முடித்து சட்டமன்றம் முடிந்த அடுத்த ஒரு மணி நேரத்திற்குள் அவர் அந்த பதவி ��ணையை திரும்ப பெற்றார்.
இந்த நிகழ்வை இதை கடந்த அரசோடு @mkstalin @Udhaystalin ஒப்பிட்டோம் என்றால், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் மரணம் நடக்கையில் அதை சரியாக கவனிக்காம தவறிய காவல்துறை அதிகாரிகளை பணியிட நீக்கம் செய்தார்கள் ஆனால், செய்த அடுத்த மாதமே மீண்டும் பதவி அமர்த்தப்பட்டனர். இதுதான் நடந்த தவறுக்கு அவர்கள் கொடுத்த தண்டனை !!
மெட்ராஸ் உயர்நீதி மன்றம் இந்த நிகழ்வை குறித்து பல காட்டமான கேள்விகளை திமுக அரசை பார்த்து கேட்டது, செவிடாக இருந்த அரசிற்கு அது கொஞ்சம் கூட கேட்கவில்லை என்பதே உண்மை..
எந்த வித ஆக்கப்பூர்வ விமர்சனமாக இருந்தாலும் இப்போது இருக்கும் அரசு ஏற்கும் !
தவறு இருக்குமே ஆனால் அதை திருத்திக்கொள்ளும் !
இதுதான் ஜனநாயகம் !
@CMOTamilnadu @TVKVijayHQ
Source : https://t.co/uJz7SW2Glj
கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதைப் பற்றி திமுக பேசுவது தான் மக்களுக்கு சிரிப்பாக இருக்கிறது. நீங்கள் செய்த திராவிட மாடல் ஆட்சி எவ்வளவு மோசமாக இருந்தது என்பதற்கு கொளத்தூரின் தோல்வியே சாட்சி.
Attempting to club together 65% of the vote share from different parties is a desperate attempt to delegitimize a clear mandate. Democracy is defined by who the people choose to lead, not by a hypothetical sum of those who didn't. If we followed your logic, nearly 2.76 crore people voted against your own standing. Turning a respected assembly into a platform for social media memes doesn't make you relatable,it makes you look politically immature. A legislative hall is for leadership, not for meme creators.
வாக்குறுதி மோசடி என்று கதறும் கழகக் குரங்குகளே!
வாக்குறுதியில் தெளிவாகவே "தகுதியுள்ளவர்களுக்கு 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம்" என்று கூறப்பட்டுள்ளது. அதை திட்டமிட்டு திரித்து பேசுவது அரசியல் நேர்மையின்மை.
"100 யூனிட் இலவச மின்சாரம் அனைவருக்கும் இல்லையா?" என்று கேட்பவர்களுக்கு ஒரு எளிய பதில், தமிழகத்தின் பெரும்பாலான குடும்பங்கள் 500 யூனிட்டிற்குள் தான் மின்சாரம் பயன்படுத்துகின்றனர். உண்மையில் உதவி தேவைப்படுபவர்களை முன்னிலைப்படுத்தி, பெரும்பான்மை மக்களுக்கு பயன் தரும் வகையில்தான் இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கட்டணம் செலுத்தும் திறன் உள்ளவர்களுக்கும், உண்மையில் சிரமப்படும் குடும்பங்களுக்கும் ஒரே மாதிரி சலுகை வழங்குவதற்குப் பதிலாக, தேவையுள்ளவர்களுக்கு அதிக நிவாரணம் வழங்குவது தான் சமூகநீதிக்கும் பொருளாதார பொறுப்புக்கும் பொருத்தமான அணுகுமுறை.
மேலும், மின்சார வாரியம் ஏற்கனவே கடும் நிதிச் சுமையில் இயங்கிக் கொண்டிருக்கிறது. அந்த நிலையை கருத்தில் கொண்டு, வாரியத்தை மேலும் பலப்படுத்தவும், சேவையை மேம்படுத்தவும் உதவும் வகையில் இந்த திட்டம் வக���க்கப்பட்டுள்ளது. மக்கள் நலனும், நிர்வாக பொறுப்பும் இணைந்த சமநிலையான முடிவு இது.
எனவே பொய் பிரச்சாரம் செய்வதை நிறுத்திவிட்டு, ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை முன்வையுங்கள். ஆரோக்கி��மான கருத்துக்கள் எங்களை மேலும் மெருகேற்றும் 😊
அதிகாரத்திற்காக திமுக மற்றும் அதிமுக கூட்டணி அமைக்க நினைப்பது அரசியல் அவமானம்.
ஒரே பெரிய கட்சியாக உள்ள #TVK மட்டுமே ஆட்சியை அமைக்க தகுதியானது. திமுகவின் செயல்கள் கடுமையாக கண்டிக்கத்தக்கவை.
- பினராயி விஜயன், முன்னாள் கேரள முதல்வ���்.
தமிழக வெற்றிக்கழகம் ஆட்சியமைக்க உரிமை கோருவதை அங்கீகரிக்காத ஆளநர் மற்றும் தமிழ்நாட்டின் அரசியல் எதிர்காலம் குறித்து மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன்.
🚨🚨🚨
புளியறை-ஏடமன் பொருளாதார வழித்தடம் திட்டம் !!
சூழலியல் ரீதியாக எளிதில் பாதிப்படையக்கூடிய மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கு மத்தியில், முன்மொழியப்பட்டுள்ளது புளியாறை-ஏடமான் பொருளாதார வழித்தடம் திட்டம். இத்திட்டம் வனவிலங்குகளின் வாழ்விடங்களுக்கும் மலைச்சூழல் அமைப்புகளுக்கும் கடுமையான ஆபத்தை விளைவிக்க கூடியது.
தென்காசி மாவட்டம் புளியறைக்கும் கேரளாவின் இடமோனுக்கும் இடையிலான NH-744 வழித்தடத்தில் இணைப்பை மேம்படுத்துகிறது. இந்த வழித்தடம், மேற்குத் தொடர்ச்சி மலையின் மிகவும் சுற்றுச்சூழல் உணர்திறன் மிக்க பகுதிகளில் ஒன்றான, யுனெஸ்கோ உலக பாரம்பரியத் தலம் மற்றும் உலகின் எட்டு "���ிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பல்லுயிர் பெருக்க மையங்களில்" ஒன்றான பகுதி வழியாகச் செல்கிறது.
கேரளாவில் உள்ள செந்துர்ணி வனவிலங்கு சரணாலயத்தையும், தமிழ்நாட்டில் உள்ள நெல்லை வனவிலங்கு சரணாலயத்தையும் முன்மொழியப்பட்ட பாதை சந்திக்கிறது. தற்போதுள்ள தரைவழிச் சாலையை நான்கு அல்லது ஆறு வழிச்சாலையாக விரிவுபடுத்துவது, வனவிலங்குகளின் வாழ்விடங்களைத் துண்டாக்கி, யானைகள், புலிகள் ம��்றும் பல சிறிய பாலூட்டி இனங்கள் பயன்படுத்தும் முக்கியமான வலசைப் பாதைகளைச் சீர்குலைக்கக்கூடும் என்று சுற்றுச்சூழல் வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
திட்டமிடுபவர்கள், நிலத்தடி சுரங்கங்கள் மற்றும் உயர்த்தப்பட்ட மேம்பாலங்களை உள்ளடக்கிய மாற்றுப் பொறியியல் அணுகுமுறையை முன்மொழிந்துள்ளனர்.
ஆனால், திட்டத்தின் முதற்கட்ட விவரங்களின்படி இந்த வழித்தடத்தின் சுமார் 10.12 கி.மீ. பகுதியானது, மலைப்பாங்கான ���ிலப்பரப்பில் துளையிடப்பட்ட இரட்டைச் சுரங்கங்கள் வழியாகச் செல்லும். இதில் நெடுஞ்சாலையானது வன மலைகளை ஊடுருவிச் செல்வதற்குப் பதிலாக, அதன் அடியில் செல்வதற்கு வழிவகுக்கும்.
இந்தச் சுரங்கங்கள் சுமார் 11 மீட்டர் விட்டம் கொண்டதாக இருக்கும் எனவும் இதற்குக் கடினமான பாறை அமைப்புகள் வழியாகப் பெரிய அளவில் துளையிட வேண்டியிருக்கும். பாறை அடுக்குகளை உடைத்துக்கொண்டு செல்ல, இத்தகைய சுரங��கப் பணிகளில் பொதுவாகக் கடுமையான வெடிபொருட்கள் பயன்படுத்தப்படும், தொடர்ச்சியான வெடிவைப்புகள் வலுவான அத��ர்வுகளை உருவாக்கக்கூடும் என்றும், அவை வனவிலங்குகளின் வாழ்விடங்களுக்கு இடையூறு விளைவிப்பதோடு, எளிதில் பாதிப்படையக்கூடிய மலைச் சரிவுகளின் நிலைத்தன்மையையும் பாதிக்கக்கூடும்.
சுரங்கப்பாதைகளுக்குக் கூடுதலாக, சுரங்கம் தோண்டுவது சாத்தியமில்லாத பகுதிகளில் சுமார் 18 உயர் மட்ட மேம்பாலங்களும் இந்தத் திட்ட வடிவமைப்பில் அடங்கும். இந்த உயர்த்தப்பட்ட கட்டமைப்புகள், சாலைக்குக் கீழ��� வனவிலங்குகள் நடமாட அனுமதிப்பதையும், இரண்டு வனக் காப்பகங்களுக்கு இடையே சூழலியல் இணைப்பைப் பராமரிக்க உதவுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன.
இருப்பினும், கட்டுமானப் பணிகளின் அளவே சுற்றுச்சூழல் அமைப்புக்கு மீளமுடியாத சேதத்தை ஏற்படுத்தக்கூடும்.
மலைச் சூழல் அமைப்புகள் மிகவும் உணர்திறன் மிக்கவை என்றும், அவற்றுக்குக் கவனமான பாதுகாப்பு தேவை. மேற்குத் தொடர்ச்சி மலைகள் உலகின் மிக ���ுக்கியமான பல்லுயிர் பெருக்க மையங்களில் ஒன்று. மேலும், முன்மொழியப்பட்ட இந்தச் சாலையானது கேரளா மற்றும் தமிழ்நாட்டிற்கு இடையே உள்ள இரண்டு வனவிலங்கு சரணாலயங்கள் வழியாகச் செல்வதால், களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் சூழல் மண்டலத்தை மறைமுகமாகப் பாதிக்கக்கூடும் என்றும் அவர் கூறினார்.
சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குழு ஒன்று அப்பகுதிக்கு��் சென்று கள ஆய்வு மேற்கொண்டு, அத்திட்டத்தால் ஏற்படக்கூடிய சூழலியல் தாக்கம் குறித்த விரிவான அறிக்கையை வெளியிடத் திட்டமிட்டு இருக்கிறார்கள். இருப்பினும், இத்திட்டத்தைச் செயல்படுத்தி வரும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI), முன்மொழியப்பட்ட வழித்தடத்திற்கான வன அனுமதியைக் கோரி ஜனவரி மாதம் விண்ணப்பித்தது. இந்த முன்மொழிவு தற்போது பரிசீலனையில் இருப்பதாகவும், தென்காசி மாவட்ட வன அலுவலரிடம் கோப்பு நிலுவையில் உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
சுமார் 5,100 கோடி ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ள புளியறை-ஏடமான் வழித்தடம், மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உள்கட்டமைப்பு மேம்பாட்டையும் சுற்றுச்சூழல் பாதிப்பு அடைய செய்யும்.
விளைவுகள் :
இந்தத் திட்டத்திற்காக சுமார் 23,500 மரங்கள் வெட்டப்படலாம்.
செந்தூர்னி வனவிலங்கு சரணாலயம் (கேரளா) மற்றும் நெல்லை வனவிலங்கு சரணாலயம் (TN) ஆகியவற்றை வெட்டுகிறது.
மலைப் பகுதியில் அதிகப்படியான துளையிடுதல் தேவைப்படும்.
தொடர்ச்சியான வெடிப்புகளும் அதனைத் தொடர்ந்து ஏற்படும் கடுமையான அதிர்வுகளும் சுற்றுச்சூழல் அமைப்பைச் சீர்குலைக்கக்கூடும்.
வனவிலங்குகள் ��ாதைகள் ஆபத்துக்குள்ளாகின்றன,
இதன் விளைவாக களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் பிரதிபலிக்கும்.
#SaveWesternGhats