News Update || ஓட்டுக்கு ரூ.6,000
தாராபுரத்தில் வாக்காளர்களுக்கு தவெகவினர் ஒரு ஓட்டுக்கு ரூ.6,000 வழங்குவதாக நாதக வேட்பாளர் கார்த்திகா குற்றச்சாட்டு
ஜி-பே போன்ற ஆன்லைன் பணப்பரிமாற்ற செயலிகள் மூலமாகவும், டிபன் பாக்ஸ்களில் மறைத்து வைத்தும் பணம் வழங்கப்படுவதாகவும் தேர்தல் நடத்தும் உதவி அலுவலரிடம் புகார்
ElectionComplaint | VoteForCash
#Dharapuram #TVK #NTK
இதற்கு பெயர்தான் அரசியல்.
திரையரங்குகளில் டிக்கெட் எடுக்க ஓடுவது போல அடித்து கொண்டு ஓடுவது போல அல்ல அது.
அல்லது பக்கம் பக்கமாக எழுதி கொடுத்ததை வசனம் என்ற பெயரில் வாந்தி எடுப்பதும் அல்ல அது.
உதாரணமாக நிமிர்ந்து நிற்பது .
நீதிமன்றமே பாராட்டுகிற நாம் தமிழர் !
"ஆளுங்கட்சிக்கு வாக்களித்தால் இந்த 2 சட்டமன்ற தொகுதிகளோடு இடைத்தேர்தல் நின்றுவிடாது; இன்னும் 10, 15 எம்எல்ஏக்களை வாங்கத் தயாராக இருக்கின்றனர்"
- தாராபுரம் தொகுதி நாதக வேட்பாளர் கார்த்திகா நியூஸ் 18க்கு பேட்டி
#Dharapuram#NTK#ByElection#Karthika#News18Tamilnadu
மக்கள் காசை வீணடிக்க மாட்டேன் என சொன்னீர்கள்..? தமிழ்நாட்டில் உங்கள் ஆட்சியின் 100 நாள் சாதனையை கர்நாடகா, கேரளா, தெலங்கானா, ஆந்திராவில் முழுபக்க விளம்பரம் கொடுத்தது ஏன்..? இந்த கேள்விக்கு யார் பதில் சொல்வார்கள்..? சீமான் நறுக் கேள்வி..
#Tiruppur | #NTK | #Seeman | #ByElection | #PolimerNews
If I am elected as the Member of the Legislative Assembly (MLA) from the Dharapuram constituency, I will be a strong voice for the entire Kongu region.
Our Chief Coordinator, Senthamizhan Seeman, assures you that we will work towards making the Anamalaiyar–Nallar Dam project.
#ntk
#seeman
#Dharapuram
#byelection2026
#சட்டமன்றத்தில்_நாம்தமிழர்
@NTK_Dharapuram@Karthika_MCK
சட்டமன்ற இடைத்தேர்தல் – 2026
நாம் தமிழர் கட்சி
வேட்பாளர்கள் அறிவிப்பு
வருகின்ற புரட்டாசி 19ஆம் நாள் 06-10-2026 அன்று நடைபெறவிருக்கும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்குட்பட்ட மதுராந்தகம், தாராபுரம், தட்டாஞ்சாவடி(புதுச்சேரி) சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக கீழ்க்காணும் வேட்பாளர்கள் போட்டியிடவிருக்கிறார்கள் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
35. மதுராந்தகம்
கோ.ஜானகிராமன் B.E.,M.B.A.
இளநிலை பொறியியல், முதுகலை வணிக மேலாண்மை
101. தாராபுரம்
மு.கார்த்திகா B.E.
இளநிலை பொறியியல்
09. தட்டாஞ்சாவடி (புதுச்சேரி)
ச.கார்த்திக் குமாரி
அழகுக்கலை வல்லுநர்
சட்டமன்ற இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வெற்றிக்கு கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும் முழு ஒத்துழைப்பை நல்குமாறு அன்போடு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
புரட்சி வாழ்த்துகளுடன்,
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
#சட்டமன்றத்தில்_நாம்தமிழர்
சட்டமன்ற இடைத்தேர்தல் - 2026 வேட்பாளர்கள் அறிவிப்பு
மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி
பொறியாளர்
கோ.ஜானகி ராமன்
இளநிலை பொறியியல், முதுகலை வணிக மேலாண்மை
தாராபுரம் சட்டமன்றத் தொகுதி
பொறியாளர்
மு.கார்த்திகா
இளநிலை பொறியியல்
தட்டாஞ்சாவடி சட்டமன்றத் தொகுதி (புதுச்சேரி)
ச.கார்த்திக் குமாரி
அழகுக்கலை வல்லுநர்
தேர்தல் நாள்: 06.10.2026
#சட்டமன்றத்தில்_நாம்தமிழர்
தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் - 2026 வேட்பாளர்
பொறியாளர்
மு.கார்த்திகா
இளங்கலை பொறியியல்
தேர்தல் நாள் : 06.10.2026
#சட்டமன்றத்தில்_நாம்தமிழர்
மாயோன் மேய காடுறை யுலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலெனச் சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே” என்று பகுத்துப் பாடிய தொல்காப்பியர் கூற்றிற்கேற்ப, தமிழினத்தினுடைய, முல்லை நிலத்தின் இறைவனாகவும், ஆயர் குலத்தின் தலைவனாகவும் இருக்கிற எம்மின இறை மாயோனுடைய பெரும்புகழைப் போற்றுகிற நாள் இன்று.
முதல் திணையான குறிஞ்சி நிலத்திற்கும், மூன்றாம் திணையான மருத நிலத்திற்கும் இடையில் முல்லை நிலத்தில் வாழ்ந்ததால் நாங்கள் ‘இடையர்கள்’ என்று அழைக்கப்பெற்றோம். அது காரணப்பெயர் தானே தவிர, எங்களின் குடிப்பெயர் ‘கோன்’, ‘ஆயர்’ என்பது தான். முதலில் ‘கோன்’ என்பது முல்லை நிலத்தின் தலைவன் கையில் பெரிய கோலை ஏந்தி நின்றதால் நாங்கள் ‘கோன்’ என்று அழைக்கப்பெற்றோம்.
பிற்காலத்தில் அது அரசன் கையில் செங்கோலாக மாறியது. ‘வரப்புயர நீர் உயரும், நீர் உயர நெல் உயரும், நெல் உயர குடி உயரும், குடி உயர கோல் உயரும், கோல் உயரக் கோன் உயர்வான்’ என்று பாடலே உள்ளது. ‘கோன்’ என்றால் மன்னன் என்று பொருள். ஆடு, மாடுகளை மேய்க்கும் வேலையை செய்ததால், நாங்கள் ‘மேய்ப்பர்கள்’, ‘ஆயர்கள்’ என்று அழைக்கப்பெற்றோம். முதன்முதலாக தோன்றியது எழுத்தல்ல, எண் தான். ஆடு, மாடுகளை எண்ணுவதற்காக நாங்கள் எண்களை கண்டுபிடித்தோம். எங்கள் தமிழர் மறை, வள்ளுவப் பெருமகனார் தந்தருளிய வாழ்க்கை நன்னெறியில் கூட, ‘எழுத்தென்ப ஏனை எண்ணென்ப’ என்று பாடாமல் “எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு” என்று எண்ணை முதலில் வைத்து தான் பாடுகிறது. அப்படி பெருமைப்பட வாழ்ந்த ஒரு இனத்தின் மக்கள் நாங்கள்.”
“எங்கள் மாயோன் பிற்காலத்தில் ‘கண்ணன்’,’திருமால்’, ‘பெருமாள்’ என்று அழைக்கப்படுகிறார். அதில் ‘மால்’ என்றால் ‘கருப்பு’ என்று பொருள். கருகருவென்று மேகம் கூடி மழையை பொழிந்துவிட்டு மாயமாக மறைந்துவிடுவதனால், மாயவன், மாயோன் என்று அழைத்து நாங்கள் வணங்கத் தொடங்கினோம். எனவே, நாங்கள் வணங்கும் தெய்வத்தை மரியாதையோடு அழைக்க வேண்டும் என்று கருதியதனால் ‘திருமால்’ என்றும், பின்னாட்களில் அதுவே ’பெருமாள்’ என்றெல்லாம் அழைக்க காரணம். ஆரியர்களின் வருகைக்கு பிறகு அதுவே கிருஷ்ணராகி, கிருஷ்ண பரமாத்மாவாக மாறிவிட்டது. ஆனாலும், தமிழ் பிள்ளைகள் நாங்கள் வரலாற்றின் தொன்மத்திலிருந்து தழைக்க விரும்புவதால், ‘மாயோன் பெருவிழா’ என்று கொண்டாடி வருகிறோம்.
உலகத்தமிழர்கள் அனைவருக்கும் மாயோன் பெருவிழா வாழ்த்துகளைத் தெரிவித்துகொள்கிறேன்.
எங்கள் இறைவன், ஆயர்குல தலைவன், ‘மாயோன்' பெரும்புகழ் போற்றி! போற்றி!’
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
சீமான் அவர்கள் "Truly Ram" வலையொளிக்கு கொடுத்த பேட்டியை பார்த்தேன்.அதில் கப்பலோட்டிய தமிழன் திரைப்படம் பற்றியும் சிவாஜி அவர்களின் நடிப்பை பற்றியும் பேசியிருந்தார்
நேர்காணலை பார்த்துவிட்டு கப்பலோட்டிய தமிழன் படத்தையும் பார்த்தேன்❤️
வாய்ப்பிருந்தால் இரண்டையும் பார்த்துவிடுங்கள்
உலக வரலாற்றில் அடுத்தவரின் உயிர் காக்க தன்னுயிரைத் தீயிட்டு ஈகம் புரிந்த முதல் அரசியல் புரட்சிப்பெண்!
தன்னுடைய மூன்று அண்ணன்மார்களின் உயிர், தூக்குக் கயிற்றின் எதிரே நிற்கும்போது, தன்னுடைய உயிரைக் கொடுத்தாவது அதைக் காக்க வேண்டும் என்கிற நோக்கத்தோடு, தன் உடலுக்குத் தீயிட்டு, ஒரு புரட்சித்தீயை இந்த நிலத்தில் பற்றவைத்த பெரும் நெருப்பு!
தமிழர் பண்பாட்டு மரபில் தன்னைச் சார்ந்தவர் நலன் காக்க தம்முயிர் துறந்து தெய்வங்களான தமிழின முன்னோர்கள் போல, இனத்தின் விடுதலைக்காக இன்னுயிர் ஈந்து உலகத்தமிழர் உள்ளங்களில் நீக்கமற நிறைந்து வாழும் நம் இனத்தின் காவல் தெய்வம்!
தம்முயிரையே ஈகம் தந்த புனிதப்போராட்டத்தின் மூலம் எழுவர் விடுதலைக்கு வித்திட்ட வீரத்தமிழச்சி தங்கை செங்கொடிக்கு நம்முடைய வீரவணக்கத்தை செலுத்துவோம்!
நாம் தமிழர்!
தமிழர்களின் வீரக்கலையான ஏறுதழுவுதலை (ஜல்லிக்கட்டு)
‘இளைஞர்களைச் சீரழிக்கும் விளையாட்டு' என இழிவுபடுத்துவதா?
சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா கருத்தைத் திரும்பப்பெற்று மன்னிப்புக் கோர வேண்டும்!
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி
அரசியலை விடவா ஜல்லிக்கட்டில் சாதி இருக்கிறது?
சாதி ஜல்லிக்கட்டில் இல்லை ,இந்தியாவில் இருக்கிறது.இந்தியாவில் இருக்கும் எல்லாவற்றிலும் சாதி கலந்திருக்கிறது.சாதி இருக்கும் விடயங்களை ஒழிக்க வேண்டும் என்றால் இந்நாட்டில் ஒன்றுமே மிஞ்சாது.
ஒழிக்க வேண்டியது சாதியை , ஜல்லிக்கட்டை அல்ல
கர்நாடக வனப்பகுதிக்குள் மூன்று தமிழர்களைச் சுட்டுக் கொன்றுவிட்டு, ஆணவத்தோடு கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் பேசுவதா?
@CMOTamilnadu@TVKVijayHQ
கர்நாடக வனப்பகுதியில் மூன்று அப்பாவித்தமிழர்களை ஈவிரக்கமற்றுச் சுட்டுக்கொன்றுவிட்டு, எங்கள் மாநிலத்தின் விவகாரத்தில் தலையிடாது, உங்கள் வேலையைப் பாருங்கள் எனத் துளியும் குற்றவுணர்ச்சியோ, பொறுப்புணர்ச்சியோ இல்லாது கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் பேசியிருப்பது ஆணவத்தின் உச்சம். தமிழர்களையும், தமிழ்நாட்டின் தன்மான உணர்வையும் சீண்டிப் பார்க்கும் வகையிலான கர்நாடக அரசின் போக்கைக் கடுமையாகக் கண்டிக்கிறேன்.
ஒவ்வொரு முறையும் காவிரி நதிநீரில் தமிழர்களுக்கான உரிமையையும், பங்கீட்டையும் கேட்டு நாங்கள் போராடும் போதெல்லாம் இனவெறியைத் தூண்டிவிட்டு, கர்நாடகத்தில் வாழும் தமிழர்களைத் தாக்கி, தமிழர்களின் வணிகத்தலங்களைத் தகர்த்து, அவர்களது வாழ்வாதாரத்தைக் கேள்விக்குறியாக்கி, தமிழர்களை ஏதிலிகளாக தமிழ்நாட்டுக்கு விரட்டியடிக்கும் கன்னட இனவெறியின் நீட்சியாகவே, மூன்று தமிழர்கள் வனப்பகுதிக்குள் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். அத்துப்பாக்கிச்சூடு தமிழர்கள் என்பதாலேயே, திட்டமிட்டு நடத்தப்பட்ட இனப்படுகொலையாகும்.
மான் வேட்டையாடியதாகப் பொய்யானக் குற்றச்சாட்டைக் கூறி, மூன்று குற்றமற்ற தமிழர்களைக் கொன்றுகுவித்ததோடு மட்டுமல்லாது, தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் கருத்துகூட சொல்லக்கூடாது; கண்டனம்கூட தெரிவிக்கக்கூடாது என கர்நாடக முதல்வர் சிவக்குமார் பேசியிருப்பது மிக மோசமான அடாவடித்தனத்தின் வெளிப்பாடு. கர்நாடக மாநிலத்துக்குள் தமிழர்களுக்கு என்ன நடந்தாலும் கேட்கக்கூடாதெனக் கூறுவாரென்றால், காவிரி நதிநீரைத் தராது வஞ்சிக்கும் கர்நாடக அரசின் மீதுள்ள கோபத்தில் தமிழ்நாட்டுக்குள் வாழும் கன்னடர்களைத் தமிழர்கள் நாளைத் தாக்கினாலும் கேள்விகேட்காது இருந்துவிடுவாரா அம்மாநில முதல்வர் சிவக்குமார்? தமிழ்நாட்டுக்குள் வாழும் கன்னடர்களுக்கு என்ன நடந்தாலும் கவலையில்லை என இருந்துவிடுவாரா? மூன்று தமிழர்கள் வனத்துறையினரால் கொலைசெய்யப்பட்டு, அதில் தொடர்புடைய வனத்துறையினர் கொலைவழக்கின் கீழ் கைதுசெய்யப்படவோ, அம்மாநில அரசின் சார்பில் தமிழர்களிடம் மன்னிப்புக் கேட்கவோ செய்யாத சிவக்குமாருக்கு, எங்களைப் பேசக்கூடாதெனச் சொல்வதற்கான உரிமையையும், துணிவையும் யார் கொடுத்தது? கர்நாடகாவுக்குள் தமிழர்களுக்கு என்ன நடந்தாலும் கேள்வி கேட்கக் கூடாதெனச் சொல்ல நீங்கள் யார்? நீங்கள் உங்கள் மாநிலத்துக்கு முதல்வராக இருக்கலாம். எங்கள் இனத்தவருக்கு உத்தரவுப் பிறப்பிக்கவோ, கட்டளையிடவோ உங்களுக்கு என்ன உரிமையிருக்கிறது? ஒவ்வொரு முறையும் கர்நாடகாவில் தமிழர்கள் மீது தாக்குதல் தொடுக்கப்படும்போதெல்லாம் தமிழ்நாடும், தமிழர்களும் சனநாயகத்தன்மையோடு நடந்து கொள்வதை ஏமாளித்தனமெனக் கருதினால், உங்கள் அறியாமைக்கு நாங்கள் பொறுப்பல்ல பெருமக்களே! தமிழர்கள் திருப்பி அடித்தால் என்ன நடக்குமென்பதை தமிழீழத்தில் உலகம் பார்த்தது. முப்படைகளைக் கொண்ட மகத்தான மக்கள் இராணுவத்தைக் கட்டியெழுப்பி, உலக வல்லாதிக்கங்களை எதிர்த்துச் சண்டையிட்ட மாவீரத்தைப் போர்க்களத்திலே நிகழ்த்திக் காட்டிய புறநானூற்றுத் தலைவன் பெருமாவீரன் பிரபாகரனின் பிள்ளைகள் நாங்கள்; எல்லையைக் காத்து நின்ற வனக்காவலன் வீரப்பனாரின் வாரிசுகள் நாங்கள். எங்கள் சனநாயக உணர்வைக் கோழைத்தனமெனக் கருதினால், அதற்கான பெரும் விலையை நீங்கள் கொடுக்க வேண்டி வரும் என எச்சரிக்கிறேன்.
தமிழர்கள் எனும் மூத்தத் தேசிய இனத்தின் குடிகளைச் சீண்டுவது போலவும், அவமதிப்பது போலவும் பேசுவதைக் கைவிட்டு, கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் நாவடக்கிப் பேச வேண்டும். கன்னடர் எனும் தேசிய இனத்தையும், அதன் குடிகளையும் ஆரத்தழுவி முழுதாய் நேசிக்கிறோம். பேரன்பு கொண்டு அம்மக்களோடு உறவுபாராட்ட எண்ணுகிறோம். அதற்காக, தமிழ்த்தேசிய இனத்தின் மீது பகைமையும், வெறுப்பும் கொண்டு, கர்நாடக அரசு செய்யும் அட்டூழியங்களை இனியும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருக்க முடியாது. தமிழர்களின் பரந்த மனப்பான்மையையும், பெருந்தன்மையையும், சனநாயக உணர்வையும் அலட்சியப்படுத்திச் செயல்பட முனைந்தால், பொறுத்துக்கொண்டு இருக்க முடியாது. தமிழ்நாடு என்பது உலகமெங்கும் பரவி வாழும் தமிழர்களுக்கான வரலாற்றுத்தாயகம். உலகின் எந்த மூலையில் தமிழர்களுக்கு ஒரு இன்னல் விளைந்தாலும் தமிழ்நாட்டிலிருந்து ஆதரவுக்குரல்கள் ஒலிக்கத்தான் செய்யும். அதனைக் கேள்வி கேட்பதற்கு கர்நாடக முதல்வர் சிவக்குமாருக்கு எந்த உரிமையுமில்லை.
ஆகவே, மூன்று அப்பாவித்தமிழர்களைச் சுட்டுக்கொன்ற கர்நாடக அரசின் வனத்துறையினர் மீது கொலைவழக்குப் பதிவுசெய்யப்பட்டு, கைதுசெய்யப்பட்டு, மூன்று பேரின் குடும்பத்தாருக்கும் தலா ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். அதற்கு தமிழ்நாட்டை ஆளும் தவெக அரசு கர்நாடக அரசுக்கு அரசியல் அழுத்தமும், நெருக்கடியும் கொடுக்க வேண்டுமென நாம் தமிழர் கட்சியின் சார்பாக வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி