மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களின் வழிகாட்டுதலின் படி, சிவகாசியில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்!
நாள் - 22.08.2026
நேரம் - காலை 9 மணி முதல் - மாலை 3 மணி வரை
இடம் - A.A.A. பொறியியல் கல்லூரி, சிவகாசி
அனைவரும் தவறாமல் பங்கேற்று பயன்பெறுங்கள்!
#CMJosephVijay
வரலாற்றின் தடங்களைச் சுமந்தும், நவீனத்தின் வேகத்தோடு பயணித்து, தமிழகத்தின் வெற்றித் தலைநகராகத் திகழும் நம் சென்னையின் பெருமையைப் போற்றும் இந்நன்னாளில் அனைவருக்கும் எனது இனிய “சென்னை நாள்” நல்வாழ்த்துகள்!
வரலாற்றுச் சிறப்பும், பண்பாட்டுப் பெருமையும், கல்வி, மருத்துவம், தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பான வளர்ச்சியும், உழைப்பும், புதுமையும் சங்கமிக்கும் நகரமாக சென்னை விளங்குவதோடு, பல்வேறு மொழி, இன, பண்பாடுகளைச் சேர்ந்த மக்களை அரவணைத்து, அனைவருக்கும் வாய்ப்புகளை வழங்கும் மாநகரமாகவும் திகழ்கிறது.
சென்னையின் வரலாற்றுப் பெருமையையும் பண்பாட்டு அடையாளங்களையும் பாதுகாத்து, நவீன உட்கட்டமைப்புகளுடன் கூடிய உலகத்தரம் வாய்ந்த சீர்மிகு பெருநகராக சென்னையை மேலும் உயர்த்துவோம். அனைவருக்கும் சமவாய்ப்பும், பாதுகாப்பான சூழலும், வளமான வாழ்வும் கிடைத்திட உறுதியேற்போம்.
வளரட்டும் சென்னைப் பெருநகரம்!
உயரட்டும் மக்களின் வாழ்க்கைத்தரம்!
#CMJosephVijay
#MadrasDay
#MadrasDay2026
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, மாண்புமிகு இந்தியக் குடியரசுத் தலைவர் அவர்களால் வழங்கப்படும் தேசிய நல்லாசிரியர் விருதிற்கு தெரிவுசெய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டின் புளியம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆசிரியர் திரு.தங்கராஜ் மற்றும் மதுரை, பிஎம் ஸ்ரீ கேந்திரிய வித்யாலயா பள்ளி ஆசிரியை திருமதி அமுதா ஆகியோருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
மாணவர்களின் எதிர்காலத்தை வடிவமைக்கும் உன்னதப் பணியை மேற்கொண்டு வரும் தங்களின் அர்ப்பணிப்பு, புதுமையான கற்பித்தல் முறைகள் மற்றும் மாணவர் நலனில் கொண்ட அக்கறைக்கு கிடைத்துள்ள இந்த உயரிய அங்கீகாரம், தமிழ்நாட்டின் கல்விச் சிறப்புக்கும், ஒட்டுமொத்த ஆசிரிய சமூகத்திற்கும் மேலும் பெருமை சேர்க்கிறது.
இந்த தேசிய விருது தங்களின் பணிக்கு மேலும் ஊக்கமளித்து, எண்ணற்ற மாணவர்களின் வாழ்க்கையில் ஒளியேற்றட்டும்!
நல்வாழ்த்துகள்!
#CMJosephVijay
தஞ்சாவூர்: பாபநாசம் அருகே சரபோஜிராஜபுரத்தில் 20 ஆண்டுகளாக இயங்கி வந்த டாஸ்மாக் கடை மூடப்பட்டதை பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும், கும்மி அடித்தும் கொண்டாடிய பொதுமக்கள், முதல்வர் விஜய்க்கு நன்றி தெரிவித்தனர்!
#CMVijay | #Tanjavur | #Tasmac