மாண்புமிகு அமைச்சர் @Keerthana4VNR அவர்களே இனிமே பொது வெளில நீங்க காண்ட்ரவர்சி ஆகுற மாதிரி ஒரு செயல் செய்தாலும் கேள்வி கேட்கப்படும். இவ்வளவு நாள் உங்களை திமுக டார்கெட் பண்றாங்கனு அமைதியா இருந்தா நீங்களே வாரத்துக்கு ஒரு கண்டன்ட் கொடுத்துட்டு இருக்கீங்க
முதல்ல குழந்தைகள்ட்ட எப்படி நடந்துக்கணும் எப்படி பேசணும்னு கத்துக்கோங்க இன்றைய செயல்பாடுகள்ல. ஒரு இடத்துக்கு இன்ஸ்பெக்ஷன் போறீங்களா அந்த வேலைய மட்டும் பார்க்கவும். உங்கள சுத்தி மீடியா இருக்கிறது என்பதை கொஞ்சமாவது உணர்ந்து செயல்படவும். பத்திரிகையாளர்கள் கிட்ட பேசுறீங்களா எந்த மாதிரி ரியாக்ட் பண்ணனும் எப்படி பேசணும்னு தயாரிப்போட போங்க 🙏
ஒவ்வொரு முறையும் முதலமைச்சர் கூப்ட்டு எப்படி நடந்துக்கணும் என்னன்னு பேசணும்னு பாடம் எடுக்க முடியாது. விரைந்து கற்றுக் கொள்ளுங்கள் திருத்திக்கோங்க 🙏
இல்லனா அது கட்சிக்கும் தலைவருக்கும் தான் கெட்ட பேரு இனிமேல் இதை மாற்றிக் கொள்ளுங்கள் இல்லையென்றால் விமர்சனமாக எடுத்துரைக்கப்படும் ஒவ்வொரு முறையும்...🎯🎯
கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் அருகே 1144 ஹெக்டேர் நிலப்பரப்பில் அணுக்கனிமச் சுரங்கம் அமைக்க ஆதரவு அளிக்கும் வகையில், இத்திட்டத்திற்கான ஒதுக்கீட்டு ஆணையை ஓராண்டிற்கு நீட்டித்து தவெக பொய்க்கால் குதிரை அரசு அரசாணை வெளியிட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.
இதே திட்டத்தை, கடந்த 03.11.2024 அன்று நடந்த அக்கட்சியின் செயற்குழு கூட்டத்தில் எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.
அந்த தீர்மானத்தில் இத்திட்டத்தை தென் தமிழகத்தை பாழ்படுத்தும் முயற்சி என்று குறிப்பிட்டுள்ள இன்றைய ஆளுங்கட்சி, இதனை அபாயம் விளைவிக்கும் நாசகார நச்சுத் திட்டம் என்று கூறி இதனை கைவிட வலியுறுத்தி உள்ளது.
தற்போது அந்த நிலைப்பாட்டில் என்ன மாற்றம் வந்துவிட்டது? ஆட்சிக்கு வருவதற்கு முன் நாசகார நச்சுத் திட்டமாக இருந்தது, இப்போது நன்மை பயக்கும் நலத்திட்டம் ஆகிவிட்டதா @CMOTamilNadu ?
எதற்கு இந்த இரட்டை வேடம்?
மேலூர் அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்கம் பிரச்சனையை சட்டமன்றத்தில் எழுப்பி, பல ஆதாரப்பூர்வமான கேள்விகளை அரசை நோக்கி கேட்டு மக்களுக்காக நின்றவன் நான். “மக்கள் பிரச்சனைக்கு உயிரைக் கொடுத்து காப்பாற்றுவோம்” என்று சட்டப்பேரவையிலேயே முழங்கினேன் நான். இந்த வரலாறெல்லாம் இன்றைய ஆட்சியாளர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
அடுத்த கட்சி MLA-க்களை வலைவீசி, குதிரை பேரம் பேசி இழுப்பதற்கும், “கல்லாப்பெட்டி கூட்டணி” என்று தேர்தலுக்கு முன் சொன்ன கட்சிகளை எல்லாம், தங்கள் “Sofa கூட்டணி”க்குள் நுழைப்பதற்கும் இடையே இப்படி ஒரு அரசாணை வெளியிட்டால் அதனை கண்டுகொள்ள மாட்டார்கள் என்று நினைத்தீர்களா?
மக்களுக்கான பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்து, மக்களுடன் நிற்பது மட்டும் தான் @AIADMKOfficial-ன் ஒரே பணி!
அது ஒருநாளும் மாறாது!
நச்சுத் திட்டம் என்று இன்றைய ஆளுங்கட்சி சொன்ன திட்டத்தை இப்போது செயல்படுத்த முனைவது குறித்த காரணத்தை இன்றைய முதலமைச்சர் விளக்க வேண்டும்; உள்ளபடியே அது நச்சுத் திட்டம் தான் என்றால் இதனை தடுத்து நிறுத்த வேண்டும் என இந்த அரசை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial
உயிர் காக்கும் உயரிய பணியை அர்ப்பணிப்புடனும், கருணையுடனும் மேற்கொண்டு வரும்
அனைத்து மருத்துவர்களுக்கும்
தேசிய மருத்துவர் தின நல்வாழ்த்துகள்.
கொரோனா உள்ளிட்ட பெருந்தொற்றுக் காலத்திலும் முன்னணி வீரர்களாக நின்று பல உயிர்களைக் காத்திட்ட தங்களின் அரும்பணி நினைவுகூரத்தக்கது.
தங்களின் சேவை தொடர்ந்து மக்கள் நல்வாழ்வினை உறுதிசெய்திடும் வகையில் அமைந்திட எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
@AIADMKOfficial
Guyss ! It's Finalised Guindy .
Within Next week We Will Get Approval For Guindy Location
Get Ready Guyss Mostly By Next Month First Week Of Sunday .
#Young_ADMK We Are Coming For You ! ♥️💪
எந்த துறை அமைச்சரும் அவங்க கேள்விக்கு பதில் சொல்ல மாட்டாங்க…
அவ்வளவு ஏன்…. சட்டம் ஒழுங்கு பத்தி கேட்டா முதல்வர் கூட பதில் சொல்ல மாட்டாரு!
தமிழக சட்டப்பேரவையின் வரலாற்றில் இந்த பேரவை ஒரு விநோதம், விசித்திரம் தான்..!!
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் தொடங்கிய நிலையில், பேரவையின் நேரலை ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது...
முழு நேரலை..
முழு நேரலை...
அத்தனையும் உருட்டா சார்!
ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை.
நல்லா இருக்கு சார் உங்க மாற்றம்.
எந்த வாக்குறுதியும் நிறைவேத்துற மாதிரி ஐடியாவே இல்ல போல, அப்படித்தானே சார்!
#TNAssembly
எனது மகன் மிதுன் அவர்கள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் அடிப்படை உறுப்பினராக மட்டும் தான் இருக்கின்றார். அவர் எந்தப் பதவியிலும் இல்லை என்பதை திட்டவட்டமாக தெரிவித்துக்கொள்கிறேன்.
என்னுடைய மகன் அரசியலுக்கு வரமாட்டார்!
-மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள்.
மாற்றம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்தார்கள்.
மாற்றத்தை எதிர்பார்த்த மக்களுக்கு ஆளுநர் உரையில் ஏமாற்றமே மிச்சம்.
ஆளுநர் உரை “கனவில் போடப்பட்ட நீர்க்கோலம்”!
-மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள்.
சட்டமன்றத் தேர்தல் தோல்வி குறித்து, கழகம் அமைப்பு ரீதியாகச் செயல்படும் அனைத்து மாவட்டங்களுக்குமான ஆலோசனைக் கூட்டம் எம்.ஜி.ஆர். மாளிகையில் நடைபெறும்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கும் அனைத்து நிர்வாகிகளுக்கும் பேச வாய்ப்பளிக்கப்பட்டு, அவர்கள் தெரிவிக்கும் கருத்துகளின் அடிப்படையில் கட்சியில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்படும்.
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படும் எனும் வாக்குறுதி என்ன ஆனது?
பெண்கள் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்ற வாக்குறுதி என்ன ஆனது?
-மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள்.
ஆளுநர் உரை “கனவில் போடப்பட்ட நீர்க்கோலம்”.
புதிய திட்டங்கள் இருக்கும் என எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றம். வெள்ளை அறிக்கையில் இருந்தது தான் ஆளுநர் உரையிலும் இருந்தது.
-மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள்.
கழகத்தின் இரு பெரும் தெய்வங்களின் ஆசியுடன், கழக பொதுச்செயலாளர் @EPSTamilNadu அவர்களின் ஆணைக்கிணங்க என்னை கரூர் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெறச் செய்த கரூர் மாநகராட்சிகளுக்கு உட்பட்ட கரூர் தெற்கு பகுதயில் உள்ள பொதுமக்களையும் கழக நிர்வாகிகளையும் சந்தித்து எனது அன்பு நிறைந்த நன்றிகளை தெரிவித்துக்கொண்டேன்.
#Karur
1/2