மருத்துவ நூலக மாநாட்டில் நூலக நிறுவனம்
இந்த மாநாட்டில் ஷதிஷ்னி மதியழகன் அவர்கள் “இலங்கை மருத்துவ வரலாற்று ஆவணமாக்கம்” செயற்றிட்டம் பற்றியும் செயற்றிட்டம் மூலம் முன்னெடுக்கப்பட்டுள்ள ஆவணப்படுத்தல் நடைமுறைகள் பற்றியதுமான ஆய்வுக் கட்டுரையை முன்வைத்திருந்தார்.
2026 - க.பொ.த உயர் தர மாணவர்களுக்கான
நூலக நிறுவனத்தின் “பள்ளிக்கூட நூலகம்”
தரம் 12, 13 மாணவர்களுக்கான கல்வி வளங்களை இலகுவாகவும் இலவசமாகவும் பெற்றுக்கொள்ள: https://t.co/L5PFQyiOJo
ஆவணங்களைப் பாதுகாப்போம், வரலாற்றை நிலைநிறுத்துவோம் - சர்வதேச ஆவணக்காப்பக தினம் – ஜூன் 9
ஆவணக்காப்பு மற்றும் எண்ணிமப் பாதுகாப்பு ஊடாக எமது சமூகத்தின் அறிவுக் களஞ்சியத்தை எதிர்கால தலைமுறைகளுக்காக நிலைநிறுத்தும் பணியில் நூலக நிறுவனம் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகிறது.
நூலக நிறுவனத்திற்கு இதுவரை வழங்கப்பட்ட நிதி அனுசரணையின் அடிப்படையில் 10 முன்னணி நிறுவனங்கள்
நூலக நிறுவனத்திடம் நிலுவையில் உள்ள 70-க்கும் மேற்பட்ட ஆய்வுசார் செயற்றிட்டங்களை முன்னெடுக்க, அனைவரையும் எங்களுடன் இணைந்து இம்மகத்தான பணியை மேலும் வலுப்படுத்துமாறு அன்புடன் அழைக்கிறோம்.
உங்களுடைய பிள்ளைகளின் இறுதி நேரத் தயாரிப்புகள் மேலும் பயனுள்ளதாக அமைய, நூலக நிறுவனத்தின் பள்ளிக்கூட நூலகம் வலைத்தளத்தில்,
1000+ க்கும் மேற்பட்ட வினாத்தாள்கள்
முக்கியமான பாடத்திட்ட வழிகாட்டிகள்
போன்ற பயனுள்ள கல்வி வளங்கள் அனைத்தையும் இலவசமாக அணுகலாம்.
https://t.co/1f9bHfrovf
மறைந்த பேராசிரியர் கோபாலபிள்ளை மகாதேவா அவர்கள் பாதுகாத்து வைத்திருந்த IATR ஆவணங்கள், அவரது மகளான வைத்திய கலாநிதி உலா மகாதேவா அவர்களால் பேராசிரியர் சி. சிவலிங்கராசா அவர்களிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டன.
எரிக்கப்பட முடியாத இணைய நூலகத்தைக் கட்டி எழுப்புவோம்!
2005 முதல் இன்றுவரை "6,515,650" பக்கங்களைக் கொண்ட "182,534" ஆவணங்களை உலகிற்கு திறந்த அணுக்கத்தில் வழங்கியுள்ளோம்.
மேலதிக தகவல்களுக்கு :
https://t.co/zxuuCJWne5
https://t.co/7y5QgQ2eAa
மட்டக்களப்பு பொது நூலக திறப்பு விழாவில் “நூலக நிறுவனம்”
எமது வரலாறு, பண்பாடு மற்றும் அறிவுப் பாரம்பரியங்களை எதிர்கால தலைமுறைகளுக்காகப் பாதுகாக்கும் இந்த அர்ப்பணிப்பான பயணத்தில், நீங்களும் இணைய இன்றே நூலக நிறுவனத்துடன் இணைந்திடுங்கள்!
மட்டக்களப்பு பொது நூலக திறப்பு விழாவில், “நூலக நிறுவனம்”
மட்டக்களப்பு பொது நூலக வளாகத்தில், மே மாதம் 21, 22 மற்றும் 23 ஆம் திகதிகளில் கற்றல் சார்ந்த பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்று வருகின்றன. இந்நிகழ்வில் நூலக நிறுவனத்தின் காட்சிக்கூடமும் இடம்பெற்றிருந்தது.
நூலக நிறுவனத்தின், 2026 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்திற்கான செயற்பாடுகள் மற்றும் அடைவுகள்:
நிறுவனத்தின் மாதாந்த செயற்பாடுகள் அனைத்தும், ஒவ்வொரு துறைசார்ந்த ரீதியாகவே முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
நூலக நிறுவனம் மற்றும் அதன் செயற்பாடுகள் குறித்து நூலக நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அலுவலர் அவர்களால் IBC நேரலைக்கு வழங்கப்பட்ட நேர்காணல்.
https://t.co/xlqutYMpcX
பேராசிரியர் நடராஜா ஶ்ரீஹரன் அவர்களின் நூலக வருகை - 2026
நூலக நிறுவனத்தினால் முன்னெடுக்கப்படும் “வட இலங்கை மருத்துவ வரலாற்று ஆவணமாக்கம்” செயற்றிட்டத்தினுடைய தொடக்குநராகிய இவர், இன்று வரை அதன் செயற்றிட்ட ஆலோசகராக இருந்து அதனை முன்னெடுப்பதற்கான வழிகாட்டுதல்களை வழங்கி வருகின்றார்.
Raj Sivanathan அவர்கள் “Smart Board Digital Education: Transforming Sri Lanka’s Future” என்ற கட்டுரையில் நூலக நிறுவனத்தின் https://t.co/uQMbDm2ZOM வலைத்தளம், டிஜிட்டல் மயமாகி வரும் இலங்கையின் கல்வி அமைப்பிற்கான சிறந்த தளமாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
https://t.co/L0XQtt8y3v
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இந்துக் கற்கைகள் பீடத்தினுடைய சைவசித்தாந்தத்துறையைச் சேர்ந்த 12 மாணவர்களின் உள்ளக பயிற்சியினுடைய இறுதி நாள் நிகழ்வானது கடந்த 08.04.2026 புதன்கிழமை காலை 09.30 மணிக்கு யாழ் சுண்டிக்குழியில் அமைந்துள்ள நூலக நிறுவனத்தில் இடம்பெற்றது.
ஞானம் சஞ்சிகையின் நிறுவுனரும் புகழ்பூத்த எழுத்தாளருமான சாகித்யரத்னா தி. ஞானசேகரன் அவர்கள் 11-04-2026 அன்று இயற்கை எய்தினார்.
அன்னாரது மறைவையொட்டி, அவரின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதுடன், அவர்களின் துயரிலும் நூலக நிறுவனம் பங்குகொள்கிறது.
நூலக நிறுவனத்தின், 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான செயற்பாடுகள் மற்றும் அடைவுகள்:
நிறுவனத்தின் மாதாந்த செயற்பாடுகள் அனைத்தும், ஒவ்வொரு துறைசார்ந்த ரீதியாகவே முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
யாழ் இந்து மகளிர் கல்லூரி ஆவணப்படுத்தல்
செயற்றிட்டத்தின் அறிமுகம், செயற்றிட்டத்தின் அடைவுகள் மற்றும் ஆவணப்படுத்தப்பட்ட விடயங்கள் குறித்தும்
மற்றும், நூலக நிறுவனத்தின் திறந்த கல்வி வளங்கள் (Open Education Resources) செயற்றிட்டம் பற்றியும் மாணவர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டது.
Great to learn about @noolaham's work digitizing & preserving Tamil documentary heritage, while expanding access to knowledge for students, researchers & communities.
Important contribution to protecting history, memory & information for future generations. @unescoindia