தியாகிகள் தினத்தை முன்னிட்டுகிண்டி காந்தி நினைவுமண்டபத்திற்கு அருகில் இருக்கும் தியாகிகள் செண்பகராமன்,சங்கரலிங்கனார், பாஷ்யம் சிலைகளுக்கு பெ. ம.க மாநில இளைஞரணி அமைப்பாளர் பிரவீன்குமார் மாலைஅணிவித்தரர்.தலைமைநிலைய செயலாளர் சிவகுமார், செய்திதொடர்பாளர் ஜி.சந்தானம் மற்றும்பலர் உள்ளனர்
தமிழக பாரதிய ஜனதா கட்சிக்கு தலைவராக பொருப்பேற்றுள்ள கே.அண்ணாமலை அவர்களை பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள் இன்று கமலாலயத்தில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து சால்வை அணிவித்து பூங்கொத்து கொடுத்து பாராட்டுக்களை தெரிவித்தார்கள்.
உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கின்ற தேசிய முற்போக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தலைவர் #விஜயகாந்த் அவர்கள் பூரண குணமடைந்து வீடு திரும்பி தன்னுடைய அரசியல் பணியை தொடர வேண்டும் என்று இறைவனை பிராத்திக்கின்றேன். #தேமுதிக
அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் உறவினருக்கும் பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பாக ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் அன்னாரது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.
கருப்பு பூஞ்சை நோயை தொற்று நோயாக அறிவித்த தமிழக அரசு அந்த நோயில் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றுவதற்கு அதற்குரிய தடுப்பு மருந்துகளை எளிதில் கிடைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வரை கேட்டுக் கொள்கிறேன்!#DMK#M_K_Stalin
வடசென்னையில் ஐம்பதாண்டுகளுக்கு மேலாக ஏழை எளிய மக்களுக்கு இலவச மருத்துவ சேவை செய்து வந்த #Dr_பார்த்தசாரதி கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு உயிரிழந்த செய்தி வருத்தமளிக்கிறது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொருளாளர் #மு_முகமது_யூசுப் காலமானார் என்ற செய்தி அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் அன்னாரது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.#விடுதலை_சிறுத்தை
திருச்சி மரக்கடை பகுதியில் ஏழைகளுக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்ட பாரதரத்னா எம்.ஜி.ஆர். சிலை உடைப்பு கடும் கண்டனத்திற்குரியது. பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் விஷமிகளையும் சமூக விரோதிகளையும் அடையாளம் கண்டு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.