ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, மொழிக்கும், நிலத்துக்கும், வாழ்வுக்கும் இலக்கணம் வகுத்து வாழ்ந்த தமிழ்ப்பேரினத்தின் அறிவுசார் சொத்தாகத் திகழும் ஒப்பற்றப் பேராளுமை!
தமிழுக்கும், தமிழருக்கும், தமிழ்நாட்டுக்குமான கருத்தியல் காப்பரணாகத் திகழும் தமிழ்த்தேசியம் எனும் தன்னிகரற்ற தத்துவத்தைப் பன்னெடுங்காலமாகத் தூக்கிச் சுமந்து, சமகாலத் தமிழ்ப்பிள்ளைகளுடைய தோள்களுக்கு மாற்றிவிட்டிருக்கிற போற்றுதற்குரிய பெருந்தகை! இளைய தலைமுறையினருக்கு வழிகாட்டி, நெறிப்படுத்தும் முன்னத்திஏர்!
தனது கருத்தியல் வலிமையால் வரலாற்றுப்ப���ரட்டுகளையும், பொருந்தா திரிபுவாதங்களையும் முற்றாக உடைத்தெறிந்து, தமிழ்த்தேசிய இனத்தின் தனித்துவத்தையும், தமிழ்த்தேசியத் தத்துவத்தின் தனிச்சிறப்பையும் பறைசாற்றும் பேராசான்!
திருக்குறள் எனும் பொதுமறையை அறிவுக்கொடையாக உலகுக்கருளிய தமிழ்ப்பேரினத்தின் அறிவுமரபின் தொடர்ச்சியாகவும், அறம்சார்ந்த பொதுவாழ்வுக்கு இலக்கணமாகவும் திகழும் போற்றுதற்குரிய பெருந்தமிழர்!
தமிழி���த்தின் உயர்வுக்காகவும், மேம்பாட்டுக்காகவும், நலனுக்காகவும் தனது வாழ்நாளை அர்ப்பணித்துக் கொண்டு போராடிய மகத்தான மக்கள் போராளி! எங்களுக்கு உளவியல் பலமாக இருந்து எங்களை உத்வேகப்படுத்தி இன்னும் இன்னும் வேகமாக ஓடச் செய்திடும் எங்களின் முன்னோடி!
தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைவர்!
தமிழ்த்தேசியப் பேராசான்!
தமிழ்த்தேசிய இனத்தின் பெரியார்
அப்பா
பெ.மணியரசன்
அவர்களுக்கு
நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள்
நல்வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் தமிழ்த்தேசிய இனம் பெருமிதம் க��ள்கிறது.
தமிழ்த்தேசியப் பிள்ளைகள் நாங்கள் புத்துணர்ச்சியும், பூரிப்பும் அடைகிறோம்! இன்னும் பல்லாண்டு காலம் பெருவாழ்வு வாழ வேண்டுமென வாழ்த்துவதில் உளம் மகிழ்கிறேன்!
அன்னையர் நாள் வாழ்த்துகள்!
'சொர்க்கம் என்பது தாயின் காலடியில் இருக்கிறது!' என்கிறார் இறைதூதர் நபிகள் நாயகம்!
'என் வாழ்க்கையில் நான் கற்ற மிகப்பெரிய பாடங்கள் என் தாயிடமிருந்தே வந்தவை!' என்கிறார் அண்ணல் காந்தியடிகள்.
'என்னு��ைய எல்லா சாதனைகளுக்கும் காரணம் என் தாய்தான்!' என்கிறார் அபிரகாம் லிங்கன்.
'தாயின் அன்பை விட உயர்ந்தது உலகில் எதுவுமில்லை!' என்கிறார் வில்லியம் ஷேக்ஸ்பியர்.
'அம்மாவின் அன்பும் தியாகமும் குழந்தையின் வெற்றிக்கான முதல் விதை!' என்கிறார் நம்முடைய ஐயா அப்துல்கலாம்.
ஒரு குழந்தையின் முதல் ஆசிரியர் தாய்தான்!
ஈன்ற தாய்க்கு ஒப்பாக இவ்வுலகில் எதுவுமே இல்லை!
எல்லோருடைய இடத்தையும் தாய் நிரப்பிவிடுகிறாள்! ஆனால், தாயின் இடத்தை எவராலும் நிரப்பிவிட முடியாது!
மனிதனுக்கு மட்டுமல்லாது, உலகில் உள்ள எல்லா உயிரினங்களுக்கும் பொதுவானதாக இருக்கும் புனித உறவு தாய் மட்டும்தான்!
வார்த்தைகள் இல்லாமல் பேசினேன்!
கண்கள் இல்லாமல் பார்த்தேன்!
காற்று இல்லாமல் சுவாசித்தேன்!
கவலையில்லாமல் வாழ்ந்தேன்!
என் தாயின் கருவறையில்!
கோயிலில் ஒரு கருவறை இருக்கிறது அது நாம் உருவாக்கிய���ு; தாயிடம் ஒரு கருவறை இருக்கிறது, அது நம்மையே உருவாக்கியது!
நாம் எவ்வளவு பெரிய உயரத்திற்குப் போனாலும் நம்மைப் பார்த்து பொறாமைப்படாத ஒரே உயிர் உலகத்தில் உண்டென்றால், அது நம்மைப் பெற்றெடுத்த அன்னையே!
உலகத்தில் உள்ள செல்வங்கள் அனைத்தையும் ஒரு தட்டிலும், தாயின் பேரன்பை மற்றொரு தட்டிலும் வைத்தால்; தாயின் பேரன்பு இருக்கும் தட்டுதான் தாழ்ந்து இருக்கும்!
தாய்மையைப் போற்றுவோம்!
தாய்மையை வணங்குவோம்!
நம் தாய்மார்கள் அனைவருக்கும் அன்பு நிறைந்த அன்னையர் நாள் வாழ்த்துகள்!
நாம் தமிழர் கட்சி - பரமக்குடி சட்டமன்றத் தொகுதி, பெருமாள் கோவில் கிராமத்தையைச் சேர்ந்த வணிகர் ���ாசறையின் மாவட்ட இணைச்செயலாளர் அன்புத்தம்பி மு.ஆனந்தராஜ் அவர்களின் தந்தை ஐயா ஆ.முத்துராஜ் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த துயருற்றேன்.
ஆருயிர் தந்தையை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பிக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
ஐயா ஆ.முத்துராஜ் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!
நாம் தமிழர் கட்சி - விருத்தாச்சலம் சட்டமன்றத் தொகுதி, சுற்றுச்சூழல் பாசறையின் மாவட்டத் துணைச் செயலாளர் அன்புத்தம்பி மு.பிரபாகரன் அவர்களின் தந்தை ஐயா முருகேசன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த துயருற்றேன்.
ஆருயிர் தந்தையை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பிக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்���ும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்
ஐயா முருகேசன் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!
தமிழ்நாட்டு முதல்வராகப் பொறுப்பேற்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்களுக்கும், அவரது அமைச்சரவையினருக்கும் உளப்பூர்வமான வாழ்த்துகள்!
திமுக-அதிமுக அல்லாத ஒரு கட்சி பல்லாண்டுகள் கழித்து தமிழகத்தை ஆளவிருப்பதில் மகிழ்கிறேன்.
@TVKVijayHQ
எங்களின் உயிரோடும், உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!
மே 18, இனப்படுகொலை நாள்!
தமிழ்ப்பேரின எழுச்சிப் பொதுக்கூட்டம்
நாள் 18-05-2026 திங்கள்கிழமை
மாலை சரியாக 04 மணிக்கு
இடம்: மறைமலை நகர் நகராட்சி வி���ையாட்டுத் திடல். தேசிய நெடுஞ்சாலை.
மானத் தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம்!
நாம் தமிழர்!
பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற என் அன்பிற்கினிய தம்பி தங்கைகள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகள்!
அதே சமயம், தேர்வில் தோல்வியுற்ற என்னருமை தம்பி, தங்கைகளும் சிறிதும் மனம் தளர வேண்டாம்!
தோல்விதான் வெற்றியின் தாய்!
தோல்வி என்பது தோல்வி அல்ல; அதுதான் வெற்றிக்கான முதல் படி!
இன்று தோல்வி வந்தடைந்த உன்னிடம் நாளை வெற்றி வந்தடையா��ல் இருக்கப் போவதில்லை!
தோல்விகளால் உன்னை ஒருபோதும் தோற்கடிக்க முடியாது; நீ முயற்சிக்க தோற்காதவரை!
உலகில் வெற்றியின் சிகரங்கள் தொட்ட சாதனையாளர்கள் யாவரும் தோல்வியின் தழும்புகள் தாங்கியவர்கள் தான்!
மதிப்பெண்கள் ஒட்டுமொத்த வாழ்க்கையையும் தீர்மானிக்கும் மந்திர எண்கள் அல்ல! அவை குறிப்பிட்ட பாடத்தில் குறிப்பிட்ட காலத்தில் நீங்கள் பயின்றதை அளவிடும் வெறும் அளவீட்டு எண்கள்���ான்!
மதிப்பெண்கள் மட்டுமே மனித அறிவையும், ஆற்றலையும் தீர்மானிப்பதில்லை!
ஆகவே, என்னருமை தம்பி-தங்கைகள் தோல்வியை கண்டு துவண்டுவிடாமல் மீண்டும் முயற்சி செய்யுங்கள்! உறுதியாக வெற்றி பெறுவீர்கள்!
வருங்காலம் உங்கள் அனைவருக்கும் ந���்பிக்கை நிறைந்த வசந்த காலமாக அமைய அன்பும், வாழ்த்துகளும்!
நாம் தமிழர் கட்சி - தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த மாநில மகளிர் பாசறையின் ஒருங்கிணைப்பாளர் அன்புத்தங்கை பாப்பாத்தி அவர்களின் கணவர் சின்னசாமி அவர்கள் மறைவெய்தினார் எனும் துயரச்செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
உற்ற துணையை இழந்து வாடும் அன்புத்தங்கை பாப்பாத்தி அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
தம்பி சின்னசாமி அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!
நாம் தமிழர் கட்சி - குறிஞ்சிப்பாடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கருப்பன்சாவடி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தம்பி ராஜசிவம் அவர்களின் அன்புச்சகோதரர் ராஜேஷ் தம்பி ராஜேஷ் அவர்கள் உயிரிழந்துவிட்டார் என்ற துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன்.
அன்புச் சகோதரரை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பிக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன். தம்பி ராஜேஷ் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!
தமிழ்த்திரையுலகின் முன்னணி தயாரிப்பாளரும், சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளருமான பெருமதிப்பிற்கும், பேரன்பிற்கும் உரிய அப்பா ஆர்.பி.சௌத்ரி அவர்கள் வாகன விபத்தில் உயிரிழந்த துயரச்செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன். ஆருய��ர் தந்தையின் மறைவால் பெருந்துயரில் வாடும் அன்புத்தம்பிகள் ஜீவா, ரமேஷ் ஆகியோருக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், திரையுலகினருக்கும், ரசிகர���களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரினைப் பகிர்ந்துகொள்கிறேன்.
என்னுடைய திரைத்துறை பயணத்தில் என் மீது பெரும் நம்பிக்கை கொண்டு, அன்பும், அக்கறையும் பாராட்டியவர் அப்பா சௌத்ரி அவர்கள். அவரது மறைவு தனிப்பட்ட முறையில் என்னைப் பெரிதும் வாட்டுகிறது.
தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பற்பல வெற்றிப்படங்களை தயாரித்த அப்பா ஆர்.பி.சௌத்ரி அவர்கள் நிறைய பு��ுமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பும், வாழ்க்கையுமளித்து, புதிய படைப்பாளிகளைத் திரைத்துறைக்குத் தந்தப் பெருந்தகை ஆவார். மக்கள் குடும்பம் குடும்பமாகத் திரையரங்குக்குப் படையெடுக்கும் வகையில், காலத்தால் அழியாத ஆகச்சிறந்தப் படைப்புகளைக் கொடுத்த அவரது மறைவு கலைத்துறைக்கு ஏற்பட்டப் பேரிழப்பாகும்.
அப்பா சௌத்ரி அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்!
அண்மையில் நடைபெற்று முடிந்த சட்டமன்றப் பொதுத்தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்த தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும் என்னுடைய உளப்பூ���்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வெற்றிபெற்ற அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், பொறுப்பேற்கவுள்ள தம்பி விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழக புதிய அரசுக்கும் என்னுடைய வாழ்த்துகள்!
@TVKVijayHQ
தமிழர்களின் வரலாற்றுத்தாயகமான தமிழ்நாடு எனும் தாய்நிலத்தின் நலனுக்காகவும், உயர்வுக்காகவும் தொடர்ச்சியாகக் களப்பணியாற்றுவோம்.
மண்ணுக்கும், மக்களுக்குமான ஆக்கப்பூர்வ மாற்���ு அரசியலை பொறுப்புள்ள எதிர்க்கட்சியாய் நின்று நாம் தமிழர் கட்சி செயலாற்றும்.
மத்தியபிரதேச மாநிலம் ஜபல்பூரில் அமைந்துள்ள பர்கி அணை நீர்த்தேக்கத்தில் 29 பேர் சென்ற சுற்றுலா படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளான துயர நிகழ்வில் அதில் பயணித்த 9 பேர் உயிரிழந்த செய்தியறிந்து அதிர்ச்சியும் மிகுந்த மனவேத���ையும் அடைந்தேன். உயிரிழந்தவர்களில்
இந்திய பாதுகாப்புத் துறை வெடிமருந்து தொழிற்சாலையில் பணியாற்றி வந்த திருச்சி நவல்பட்டு அண்ணா நகரைச் சேர்ந்த சகோதரர் காமராஜ், அவருடைய மனைவி கார்குழலி, அன்புமகன் தமிழ்வேந்தன், உறவினர்கள் மயூரன் மற்றும் சவுபாக்கியவதி ஆகிய ஐந்து பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்
என்பது துயரத்தை மேலும் அதிகரிக்கிறது. நீரில் மூழ்கியபோதும் 4 வயது மகனை அணைத்த��டி மரணித்துள்ள தாயின் புகைப்படம் நெஞ்சை உலுக்குகிறது.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆறுதலை தெரிவித்து துயரில் பங்கெடுக்கின்றேன்.
இந்திய துணைக்கண்டம் முழுதும் கோடைக்காலம் மற்றும் பள்ளி விடுமுறை காலம் என்பதால் சுற்றுலாத்தலங்களில் மக்களின் கூட்டம் பன்மடங்கு அதிகரிக்கும் நிலையில் பாதுகாப்பு முன்னேற்பாடுகளை தொடர்புடைய ம��நில அரசுகள் உறுதிசெய்ய வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
மத்தியபிரதேச மாநில படகு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்!
நாம் தமிழர் கட்சி - இராமநாதபுரம் தொகுதிக்குட்பட்ட
மண்டபம் ஒன்றியத்தின் முன்னாள் தொழிற்சங்கப் பேரவைச் செயலாளர் அன்பு அண்ணன் தாமரைக்குளம் பா.அருளொளி முருகன் அவர்களின் தாயார் அம்மா லோகம்மாள் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், ஆழ்ந்த மனத்துயரும் அடைந்தேன்.
உயிருக்கினிய தாயை இழந்து வாடும் அண்ணன் அருளொளி முருகன் அவர்களுக்கும், குடும்பத்தாருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அம்மா லோகம்மாள் அவர்களுக்கு
என் கண்ணீர் வணக்கம்!
உலகத்தொழிலாளர் நாளில்
உழைக்கும் மக்களின் உரிமைகளை வென்றெடுக்க உறுதியேற்போம்!
”காலுக்குச் செருப்புமில்லை
கால் வயிற்றுக் கூழுமில்லை
பாழுக்கு உழைத்தோமடா – என் தோழனே
பசையற்றுப் போனோமடா”
எனப் பாடிய பொதுவுடைமைப் போராளி பெருந்தமிழர் நமது ஐயா ஜீவானந்தம் அவர்களின் பாடலைப்போல் எந்தக் காலத்திலும் யாராலும் ஏறெடுத்துப் பார்க்க கதியற்ற, எவராலும் திரும்பிப் பார்க்கப்படாத யாருமற்றவர்களாகவே உலகெங்கும் தொழிலாளர் பெருமக்கள் இன்றளவும் இருக்கிறார்கள்.
19 ஆம் நூற்றாண்டில் ஏற்பட்டத் தொழிற்புரட்சியின் காரணமாக எவ்வித விதிமுறைகளும், சட்டத்திட்டங்களும் இல்லாமல் இலாபம் சம்பாதிப்பதையே நோக்கமாகக் கொண்ட முதலாளிகளால் தொழிலாளர்கள் அடிமைகள் போல நடத்தப்பட்டனர். இதனைக் கண்டித்து 1886 ஆம் ஆண்டு மே 1 அன்று 8 மணி நேர வேலை, 8 மணி நேர உறக்கம், 8 மணி நேர ஓய்வு, என்கின்ற அடிப்படை உரிமைகளை நிறைவேற்றக் கோரி��ும், உழைப்புக்கேற்ற ஊதியம் என்பதை வலியுறுத்தியும் அமெரிக்கத் தொழிலாளர் கூட்டமைப்பு மிகப்பெரிய போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தது. மே - 4 அன்று அமெரிக்காவின் சிகாகோ ஹேமார்க்கெட் சதுக்கத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்களில் பணிபுரிந்த சுமார் 3 இலட்சத்து 50 ஆயிரம் தொழிலாளர்கள் வீதியில் இறங்கிப் போராடினார்கள். அவர்களின் போராட்டத்தை அமெரிக்க வல்லாதிக்க அரசு அடக்கி ஒடுக���க நினைத்து ஏராளமானத் தொழிலாளர்களைக் கொன்று குவித்தது. எனினும் தொழிலாளர்களின் எழுச்சிமிகுந்தப் புரட்சிக்கு அடிபணிந்த அமெரிக்க வல்லாதிக்க அரசு இறுதியில் 8 மணி நேர வேலை, உழைப்புக்கேற்ற அடிப்படை ஊதியம் என்கின்ற கோரிக்கைகளுக்கு ஒத்துக்கொண்டது. அந்த வரலாற்று வெற்றியை நினைவுகூறும் வகையில், பாரீசில் நடந்த சர்வதேச தொழிலாளர் கூட்டத்தில், 1890 ஆம் ஆண்டு மே 1 முதல் உலகளாவிய தொழிலாளர் த��னமாக கொண்டாட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்தியப் பெருநிலத்திலேயே தமிழரின் தாயகமான தமிழ்நாட்டில் சென்னை கடற்கரையில் 1923 ஆம் ஆண்டு மே 1 அன்று பெரும்புகழ் கொண்ட நம்முடைய பாட்டன், பொதுவுடமை போராளி ஐயா சிங்காரவேலர் தலைமையில் உ��ைப்பாளர் நாள் முதன்முறையாக கொண்டாடப்பட்டது. அதனடிப்படையில் இந்தியப் பெருநிலம் எங்கும் மே 1 அன்று உழைப்பாளர்கள் நாள் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.
அன்று தொடங்கி இன்றுவரை தொழிலாளர் நாள்தான் கொண்டாடப்படுகின்றதே தவிர தொழிலாளர்களை உலகம் கொண்டாடவில்லை. கொண்டாட்டத்துக்கு உரியவர்களாக தொழிலாளர்களை நடத்தவும் இல்லை என்பதுதான் வரலாற்றுப்பெருந்துயரமாகும்.
விவசாயம் முத��ாக வாழ்வியலுக்கான அத்தனைப் பணிகளிலும் தங்களை உளப்பூர்வமாக ஒப்புவித்துக்கொண்டு பணியாற்றும் உழைப்பாளர்களைச் சுரண்டி பன்னாட்டு பெருமுதலாளிகளுக்கு சேவை புரியும் தரகு நிறுவனங்களாகவே ஆளும் அரசுகள் செயல்படுகின்றன. அடக்குமுறைகள் மூலம் தொழிலாளர் உரிமைகளைத் தட்டிப்பறித்து முதலாளித்துவக் கைகூலிகளாக செயல்படும் அரசுகளுக்கு எதிராக, தங்களுக்குள் ஒற்றுமை பெருக்கி, தீயதை எதிர்த்து போராடும் துணிவும் – வலிமையும் பெற்ற பேராற்றலாகவும், முன்னேற்றப்பாதையில் நடைபோடும் பேராளுமையாகவும் தொழிலாளர் வர்க்கம் மேம்பட வேண்டும். ஆளும் அரசுகள் தொழிலாளர் உழைப்பினைச் சுரண்டி, உரிமைகளைப் பறிக்க முயன்றால், அத்தகைய கொடுங்கோன்மை அரசுகளைத் தூக்கி எறியவும் சிறிதும் அச்சமின்றி தொழிலாளர் வர்க்கம் துணை நின்றுள்ளனர் என்பதே கடந்தகால வரலாறாகும்.
ஆட்சி, அதிகாரத்தின் துணைகொண்டு உலகமயம், தாராளமயம் என முதலாளித்துவம் நம்மை அச்சுறுத்தும் அனைத்து அடக்குமுறைகளுக்கும் எதிராக உழைப்பாளர் உரிமைபெற்ற 'மே நாளில்' உழைப்புச் சுரண்டலுக்கெதிராக நாம் அனைவரும் ஒன்றுபட்டு தொழிலாளர் உரிமைகளை வென்றெடுக்க உறுதியேற்போம்!
இனியும் வெறும் நாளினை மட்டுமே ��ொண்டாடாமல், உழைக்கும் மக்களை ஒவ்வொரு நாளும் கொண்டாடுவோம்!
– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
நாம் தமிழர் கட்சியின் முன்னாள் தஞ்சை மண்டலச் செயலாளர் அன்புத்தம்பி ஒரத்தநாடு மு. கந்தசாமி அவர்கள் மறைவுற்ற செய்தி அறிந்து அதிர்ச்சியும், ஆழ்ந்த மனத்துயரும் அடைந்தேன்.
தம்பியை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து துயரில் பங்கேற்கிறேன்.
அன்புத்தம்பி கந்தசாமி அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்.
தமிழர்களின் இன ஓர்மையை சிதைக்கும் இலங்கை இனவாத அரசின் சதியை இருநாட்டு தமிழ் மீனவர்களும் ஒன்றுபட்டு முறியடிக்க வேண்டும்!
கோடியக்கரை அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்கள் மீது கடந்த 25.04.26 சனிக்கிழமை அன��று ஈழத்தாயகத்தினை சேர்ந்த 3 மீனவர்கள் தாக்குதல் நடத்தியதாகவும், அதன் காரணமாக தமிழ்நாட்டு மீனவர்கள் நடத்திய பதில் தாக்குதலில் இருவர் தப்பியோடிய நிலையில், காங்கேசன் துறையைச் சேர்ந்த அயந்தன் என்ற தமிழ் மீனவரை, தமிழ்நாட்டு மீனவர்கள் சிறைபடுத்தி கொண்டுவந்துள்ள நிக��்வு அதிர்ச்சியையும், மிகுந்த மனவேதனையையும் அளிக்கிறது. தமிழ்நாட்டு தமிழ் மீனவர்களுக்கும், ஈழத்தாயக தமிழ் மீனவர்களுக்கும் இடையே பகைமையை உருவாக்கும் இதுபோன்ற கசப்பான நிகழ்வுகள் மிகுந்த வருத்தமளிக்கிறது.
சிறைபிடிக்கப்பட்ட காங்கேசன்துறை மீனவர் அயந்தன் தற்போது தமிழக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், காவல்துறை இருதரப்பினர் மீதும் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றது. தமிழ்நாடு காவல்துறை விசாரணை மூலம் உண்மை நிலையை கண்டறிவதோடு, காயமடைந்த மீனவருக்கு உரிய மருத்துவம் அளித்து, அவர் விரைவில் தாயகம் திரும்ப உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஏற்கனவே, தமிழக மீனவர்கள் மீது சிங்கள இராணுவம் நடத்தி வரும் தொடர் தாக்குதல்களும், தமிழர் படகுகளைப் பறித்து அரசுடைமையாக்கிக் கொள்ளும் அநீதியும், வலையறுப்பு நிகழ்வுகளும், மீன்பிடிக்கச் செல்லும் தம��ழக மீனவர்களை நடுக்கடலிலே வைத்து தாக்குவது, ஆயுதத்தைக் கொண்டு துன்புறுத்துவது, அவர்களது உடைமைகளைப் பறித்துக்கொள்வது, படகுகளைச் சேதப்படுத்துவது, மீனவர்களைச் சிறைபிடிப்பது, துப்பாக்கிச்சூடு நடத்துவது என இலங்கை கடற்படை அரங்கேற்றிவரும் கொடுமைகளும் சொல்லி மாளக்கூடியதல்ல.
இலங்கை கடற்படையினரின் தாக்குதலின் மூலம் இதுவரை பல்லாயிரக்கணக்கான மீனவர்கள் உடல் உறுப்புகளைச் சிதையக் கொடுத்துள்ளனர். 850-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் நடுக்கடலிலே கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். தமிழக மீனவர்களின் கோடிக்கணக்கான சொத்துக்கள் சூறையாடப்பட்டிருக்கிறது. நூற்றுக்கணக்கான தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை சிறைகளில் தொடர்ச்சியாக வாடிக்கொண்டுள்ளனர். இரு��்தபோதிலும், இதுவரை தமிழக மீனவர்கள் மீதான இக்கோரத் தாக்குதல்களுக்கும், அநீதிகளுக்கும் எதிராக இந்திய ஒன்றிய அரசு கண்டனம் தெரிவித்ததுமில்லை. எதிர்வினையாற்றியதும் இல்லை.
இத்தகுச் சூழலில் இருநாட்டு தமிழ் மீனவர்களிடையே நடைபெறும் இதுபோன்ற தாக்குதல்கள், இலங்கை இனவாத ராணுவத்தால் திட்டமிட்டு நடத்தப்படும் கொடுமைகளை மறைத்து, இங்குள்ள தமிழ் மீனவர்களுக்கும், ஈழத்து தமிழ் மீனவர்கள���க்கும் இடையேதான் பிரச்சனை என்பதுபோன்ற தோற்றத்தை உருவாக்குவது நிலைமையை மென்மேலும் சிக்கலாக்கவே வழிவகுக்கும். தமிழ் மக்களிடையே நிரந்தர பகையை உருவாக்க நடைபெறும் இதுபோன்ற சூழ்ச்சிகள் குறித்து இருநாட்டு தமிழ் மீனவர்களும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். தொப்புள்கொடி சொந்தங்களான தமிழ் மீனவர்கள் தங்களுக்குள் நிலவும் எல்லை சிக்கலையும், மீன்பிடி சிக்கலையும் பேச்சுவ��ர்த்தை மூலம் எளிதில் தீர்த்துக்கொள்ள முடியும்.
சிங்கள இராணுவம் ஈவிரக்கமற்று தொடர்ச்சியாக தமிழக மீனவர்களைச் சிறைபடுத்தி வருவதும், கடுமையாகத் தாக்குவதும் தமிழர்கள் மீதான வன்மத்தின் வெளிப்பாடேயாகும். அதனை எந்த காலத்திலும் சிங்கள ராணுவம் கைவிடப்போவதில்லை. இந்திய ஒன்றிய அரசும், இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி நிலைத்த தீர்வை எந்த காலத்திலும் பெற்றுத்தரப் போவதுமில்லை.
ஆகவே, தமிழ்நாடு மற்றும் தமிழீழத் தமிழ் மீனவர்களும் எவ்வித சிறு பகைமைக்கும் இடமளிக்காமல், தங்களுக்குள் நிலவும் சிறு சிறு சிக்கல்கள் குறித்து திறந்த மனதுடன் அமர்ந்து பேசி, நிலையான தீர்வு காண முன்வர வேண்டும். அதன் மூலம், இருநாட்டு தமிழ் மீனவர்களிடையே பகையை உருவாக்கி, உருவெடுத்து வரும் இன ஓர்மையை சிதைக்க முயலும் இலங்கை இனவாத அரசின் திட்டமிட்டச் சதியை தமிழர்கள் ஒற்றுமையுடன் முறியடிக்க வேண்��ும்.
தற்போது, தமிழ்நாடு காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள, மீனவர் அயந்தனுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளித்து, விரைந்து தாயகம் திருப்பி அனுப்ப காவல் துறை மற்றும் ஒன்றிய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
தம்முடைய கந்தகக்குரலால் தாயக கீதம் இசைத்த பாசறைப் பாணர், தமிழீழத் தாயகப்பற்றாளர்..!
எறிகணை வரிகள் எழுதி தமிழர்களின் இதயங்களில் உறங்கிக்கொண்டிருந்த விடுதலை உணர்வை தட்டி எழுப்பிய புரட்சியாளர்..!
தமிழ்த்தேசியத் தலைவரின் பேரன்பையும், பெருமதிப்பையும் பெற்ற பெருந்தகை..!
என் மீதும் நாம் தமிழர் கட்சி மீதும் பேரன்பு கொண்டு நேசித்து, நாம் தமிழர் மேடையை தம் இன்னிசையால் நிறைத்த
தமிழிசை ஏந்தல்..!
தம்முடைய எழுத்து, இசை, குரல் என்று யாவற்றையும் தாயக விடுதலைக்கு ஒப்புவித்து, வாழ்நாள் முழுவதும் தமிழ் மண்ணிற்கும், மக்களுக்காகவுமே வாழ்ந்து மறைந்த விடுதலைப் பாணர்..!
பாசறைப்பாணர் அப்பா தேனிசை செல்லப்பா அவர்களின் இறுதி வணக்க நிகழ்வில் இன்று 29-04-2026 பங்கேற்று இறுதி வணக்கம் செலுத்த��னேன்.
அப்பா தேனிசை செல்லப்பா அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!
தமிழ்த்தேசியத் தலைவரின் பேரன்பையும், பெருமதிப்பையும் பெற்ற பெருந்தகை.
தம்முடைய எழுத்து, இசை, குரல் என்று யாவற்றையும் தாயக விடுதலைக்கு ஒப்புவித்து, வாழ்நாள் முழுவதும் தமிழ் மண்ணிற்கும், மக்களுக்காகவுமே வாழ்ந்து மறைந்த போற்றுதற்குரிய பெருமகன், பாசறைப் பாணர் அப்பா தேனிசை செல்லப்பா அவர்கள் மறைவெய்தியதையடுத்து இன்று 28-04-2026 பிற்பகல் படப்பையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற இறுதி வணக்க நிகழ்வில் பங்கேற்று இறுதி வணக்கம் செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தேன்.
மூன்று மாநிலத் தேர்தல் முடிவுகள் வெளிவந்து, புதிய அரசுகள் அமைந்த பிறகே காவிரி மேலாண்மை ஆணையக் கூட்��த்தை கூட்ட வேண்டும்!
காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் 29.04.2026 அன்று நடைபெறும் என்று அறிவித்து இருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா ஆகிய மூன்று மாநிலங்களில்
சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற்று, தேர்தல் முடிவுகள் இன்னும் வெளிவராத நிலையில்
கூட்டத்தை நடத்த காவிரி மேலாண்மை ஆணையம்
முயல்வது வன்மையான கண்டனத்துக்குரியது.
காவிரி ஆற்றினை பங்குகொள்ளும் மூன்று முக்கிய மாநிலங்களிலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் இன்னும் அமையாத நிர்வாகச் சூழலில், காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தை அவசர அவசரமாக கூட்ட வேண்டிய அவசியம் என்ன வந்தது?
முழுமையான அதிகாரம் பெறாத அரசுகளால் எப்படி முக்கிய முடிவுகளை எடுக்க முடியும்?
மாநிலங்களின் உயர் அதிகாரிகள் வேற்று மாநிலங்களை சேர்ந்தவர்களாக இருக்கும் சூழலில் மண்ணின் ��ரிமைகளையும், மக்களின் உணர்வுகளையும் எப்படி உரத்து எழுப்புவார்கள்? நடைபெறவுள்ள கூட்டத்தில் மேகதாது அணை கட்டுமானம் குறித்த முக்கிய விவாதங்கள் நடைபெறவுள்ள நிலையில், இதர மூன்று மாநிலங்களில் அதிகாரம் படைத்த அரசுகள் இல்லாத நிலையில், கூட்டம் முழுக்க முழுக்க ஒருபக்க சார்பாக மாறி கர்நாடகாவுக்கு சாதகமாகிவிடாதா?
யாருடைய உத்தரவின் பேரில் இத்தனை அவசரமாக காவிரி மேலாண்மை ஆணையம் கூட��டப்படுகிறது? யாருடைய நலனுக்காக இத்தனை அவசரமாக ஆணையக் கூட்டம் நடைபெறுகிறது? தமிழ்நாட்டு மக்களை வஞ்சிக்க,
கர்நாடக மாநிலத்தை ஆளும் காங்கிரசு அரசு மற்றும் இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசின் கூட்டுச் சூழச்சியாகவே இக்கூட்டம் நடத்தப்படுவதாக தோன்றுகிறது. கச்சத்தீவு போன்று தமிழ்நாட்டின் உரிமைகளை பறிக்கும் இத்தகைய வரலாற்றுச் சதிகளை இனியும் அனுமதிக்க முடியாது.
ஆகவே, தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா ஆகிய மூன்று மாநிலத் தேர்தல் முடிவுகள் வெளிவந்து, புதிய அரசுகள் அமைந்த பிறகே காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தை கூட்ட வேண்டுமென்று வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி