1000 உறுப்பினர் சேர்க்கை ம���காம்
விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி.
கடையல் பேரூராட்சி,
பாகோடு பேரூராட்சி, களியக்காவிளை பேரூராட்சி,
வன்னியூர் ஊராட்சி,
விளவங்கோடு ஊராட்சி.
@_ITWingNTK
#நாம்தமிழர்வெல்கவே
நவம்பர் 1
தெற்கெல்லை போராட்டத்தின் வெற்றித்திருநாள்.
குமரி தமிழர்நிலம் தாய்த் தமிழ் நாட்டோடு இணைந்த நன்னாள்.
இனம் காக்க மொழி,நிலம், சுயமரியாதை காக்க போராடிய நம் முன்னோர்களுக்கு வீர வணக்கம் செலுத்துகிறோம்.
தாய்த் தமிழ் உறவுகள் அனைவரும் தமிழ்நாடு நாள் வாழ்த்துகள்.
என் குமரி மாவட்ட சொந்தங்கள் அனைவருக்கும் குமரி விடுதலை நாள் வாழ்த்துகள் 💖
@_ITWingNTK@NTK_Kanyakumari@NaamTamilarOrg #Manidhi #MariaJennifer #NaamTamilar #Kanyakumari #தமிழ்நாடு_நாள் #குமரி_விடுதலை_நாள்
தமிழ்த்திரையுலகில் தன் திறமைமிக்க நடனம், உரையாடல், உச்சரிப்பு, உடல்மொழி, சண்டைக்காட்சிகள் என அனைத்திலும் தன்னுடைய ஆற்றலைப்பெருக்கி, ஆகச்சிறந்த நடிப்புத்திறனால் இளைஞர்கள், பெண்கள், முதியவர்கள் முதல் ஒவ்வொரு வீட்டிலுமுள்ள சின்னஞ்சிற��� குழந்தைகள் வரை அனைத்துத்தரப்பு மக்களின் மனங்களையும் வென்று, தமிழ்நாட்டு மக்கள் தங்கள் குடும்பத்தில் ஒருவராக நினைக்கும் அளவிற்கு, எல்லோரது நேசத்தையும் பெற்று உச்சம்தொட்டு உயர்ந்து நிற்கும் அன்புத்தம்பி!
காலங்காலமாய் ஏமாளிகளாய் வாழும் சாமானிய மக்களின் வாழ்வில் சரித்திர மாற்றத்தைக் கொண்டுவருவதற்காக அரசியலில் அடியெடுத்து வைத்து, மக்கள் பணியில் தம்மை ஈடுபடுத்தி, வெற்றி��ொள்ள முனைந்துள்ள,
எனதருமை இளவல்,
எனது அன்புத்தளபதி,
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர்,
என்னுயிர்த் தம்பி விஜய் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துகள்!
@tvkvijayhq @actorvijay
நாகர்கோவில் மாநகராட்சி தரமற்ற சாலை பணிகளை கண்டித்தும் கள்ளக்குறிச்சியில் நடந்த கள்ளச்சாராய கொலைகளை கண்டித்தும் குமரி மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக கண்ட ஆர்ப்பாட்டம்..!
#கொலைகார_திமுக
இனிமேல் அனைத்து கட்சி கூட்டத்திற்கு அண்ணன் சீமானை அழைக்க வேண்டும் என்ற காரணத்திற்காகவே கூட்டமே நடத்த மாட்டாங்க 😁
ஏறக்குறைய 36 இலட்சம் வாக்குகள் பெற்று நாம் தமிழர் கட்சி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக மாறியுள்ளது...💪
#NTK_RiseOfRevolution🎙️❤️🔥
அன்னையர் தின நல்வாழ்த்துகள்!
வார்த்��ைகள் இல்லாமல் பேசினேன்!
கண்கள் இல்லாமல் பார்த்தேன்!
காற்று இல்லாமல் சுவாசித்தேன்!
கவலையில்லாமல் வாழ்ந்தேன்!
என் தாயின் கருவறையில்!
உலகத்தில் புனிதத்திலும் புனிதமானவர் நம் அன்னையே!
அன்னையை மதிக்காதவன் எவ்வளவு பெரிய அரசன் ஆனாலும் புழுவிற்கு சமமானவன்.
அன்னை அருகில் இருந்தால் எமனுக்குக்கூட நடுக்கம் வரும்.
எல்லோருடைய இடத்தையும் அன்னை வகிக்க முடியும்: ஆனால் அன்னையின் இடத்தை யாராலும் வகிக்க முடியாது!
தாய் எப்போதும் தாய் தான்! உலகில் புனிதத்திலும் புனிதமானவள் அவளே!
தாயை மட்டும் கண்ணீர் சிந்தவிடாதீர்கள்! நம் தாயின் கண்ணீரை கடவுள் கணக்கெடுத்துக் கொண்டிருக்கிறான்.
நாம் எவ்வளவு பெரிய உயரத்திற்குப் போனாலும் நம்மைப் பார்த்து பொறாமைப்படாத ஒரே உயிர் உலகத்தில் உண்டென்றால், அது நம்மைப் பெற்றெடுத்த அன்னையே!
உலகத்தில் உள்ள செல்வங்கள் அனைத்தையும் ஒரு தட்டிலும், தாயின் பேரன்பை மற்றொரு தட்டிலும் வைத்தால்; தாயின் பேரன்பு இருக்கும் தட்டுதான் தாழ்ந்து இருக்கும்!
நம் அன்னையர் அனைவருக்கும் அன்பு நிறைந்த அன்னையர் தின வாழ்த்துகள்!
என் உயிர்க்கினிய தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!
சனாதனத்திற்கு எதிராக சமரச சன்மார்க்கம் என்னும் தமிழர்களின் சமத்துவ மெய்யியலை மீட்டெடுத்த திருவருட்செல்வர் வள்ளலார் வாழ்ந்து வழிகாட்டிய வடலூர் பெருவெளியை, ஆய்வு மையம் என்ற பெயரில் திமுக அரசு வலுக்கட்டாயமாகக் கையகப்படுத்துவதைக் கண்டித்தும், மக்களின் எதிர்ப்பையும் மீறி அவசர அவசரமாக தொடங்கியுள்ள கட்டுமானப்பணிகளை நிரந்தரமாக நிறுத்தக்கோரியும் தெய்வத்தமிழ்ப் பேரவை மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைவரும், தெய்வத்தமிழ்ப் பேரவையின் ஒருங்கிணைப்பாளருமான ஐயா பெ.மணியரசன் அவர்களின் தலைமையில் வருகின்ற 04-05-2024 சனிக்கிழமையன்று, மாலை 03 மணியளவில் வடலூரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது.
தெய்வத்தமிழ்ப் பேரவையைச் சேர்ந்த பல்வேறு ஆளுமைகளுடன் நாம் தமிழர் கட்சி சார்பாக நானும் பங்கேற்று கண்டனவுரையாற்றவிருக்கும் இம்மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கட்சி���ின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதி உள்ளிட்ட அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், தெய்வத்தமிழ்ப் பேரவை உறவுகளும், வீரத்தமிழர் முன்னணி பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும், வள்ளலார் வழி மெய்யன்பர்களும், பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு பேரழைப்பு விடுக்கிறேன்.
பண்பாட்டுப் புரட்சி இல்லாது; அரசியல் புரட்சி வெல்லாது!
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
உழைக்கும் மக்களின் உன்னத வாழ்வு உயர்நிலை எய்த உறுதியேற்போம்!
தங்கள் ஒப்பற்ற உழைப்பால் உலகைச் சீரமைத்த உழைப்பாளர்களின் உன்னதத் திருநாள�� மே தினமாகும். நமக்காக, நம் தேவைகளுக்காக, நம் வளர்ச்சிக்காக, நம் பாதுகாப்புக்காக நாள்தோறும் உடல் உழைப்பு புரியும் எளிய மக்களின் வாழ்க்கை மட்டும் காலாகாலத்துக்கும் மாறாமல் இருக்கிறது.
காடாகவும், மலையாகவும் கிடந்த உலகை வாழுமிடமாகவும், தெருவாகவும் வடிவமைத்தவர்கள் தொழிலாளர்கள்தான். உலகின் வளர்ச்சியைத் தூக்கிச் சுமக்கும் முதுகெலும்புகளாக வாழும் தொழிலாளர் வர்க்கத்தினருக்கா��� வளர்ச்சி இன்றைக்குச் சொல்லிக் கொள்ளும் நிலையில் இல்லை.
”பாலின்றி பிள்ளை அழும்
பட்டினியால் தாய் அழுவாள்
வேலையின்றி நாமழுதோம் – என் தோழனே
வீடு முச்சூடும் அழும்,
காலுக்கு��் செருப்புமில்லை
கால் வயிற்றுக் கூழுமில்லை
பாழுக்குழைத்தோமடா – என் தோழனே
பசையற்றுப் போனோமடா”
எனப் பாடிய ஐயா ஜீவாவின் பாடலைப்போல் எந்தக் காலத்திலும் யாராலும் ஏறெடுத்துப் பார்க்கக் கதியற்ற, எவராலும் திரும்பிப் பார்க்கப்படாத யாருமற்றவர்களாகவே நம் தொழிலாளர் உறவுகள் இருக்கிறார்கள்.
விவசாயம் தொடங்கி வாழ்வியலுக்கான அத்தனைப் பணிகளிலும் தங்களை உளமாற அர்ப்பணித்துக்கொண்டு ��ணியாற்றும் உழைப்பாளர்களை நம்மில் எத்தனை பேர் திரும்பிப் பார்க்கிறோம். காலங்காலமாக தூக்கிச் சுமந்த தோள்களைத் தூக்கியெறியும் நன்றி உணர்வற்ற உள்ளங்களாகவே நம்மில் பலரும் நடந்து கொள்கிறோம். தொழிலாளர் மேன்மையும் அவர்கள் வாழ்வுக்கான வளமையும் பெருக உலகத்தார் அனைவருமே இன்றைய நாளில் உளமார உறுதியேற்க வேண்டும்.நமக்காகப் பாடுபடுபவர்களை கைதூக்கிவிட நாம் அனைவருமே ஒன்றுபடவும் வேண்��ும்.
ஒரு தேசத்தின் வளர்ச்சிக்கு ஆக்கப்பூர்வ சக்தியாக விளங்கும் தொழிலாளர் வர்க்கத்தை மேம்படுத்த ஆளுகின்ற ஆட்சியாளர்கள் எல்லாவித முனைப்புகளையும் காட்ட வேண்டும்.
தங்களுக்குள் ஒற்றுமைப் பெருக்கி எத��யும் தட்டிக் கேட்கும் மகத்தான ஆற்றலாகவும், முன்னேற்றப் பாதையில் அடி வைக்கும் ஆளுமையாகவும் தொழிலாளர் வர்க்கம் மேம்பட உலகெங்கும் ஒவ்வொரு நாளும் அயராது உழைத்து உயிர்கள் வாழ உலகை செதுக்கும் தொழிலாளர் உறவுகளுக்கு 'மே' நன்நாளில் என்னுடைய புரட்சிகர வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
மத வெறுப்பு அரசியல் செய்து மக்களை பிளவுபடுத்துவதுதான் மோடி கி கேரன்டியா?
ராஜஸ்தானில் மோடியின் வெறுப்பரசியல் பரப்புரையை வன்மையாக கண்டிக்கிறோம்.
#LokSabhaElection2024#Modi#NaamTamilar
ஒற்றையால்விளை அரசு உயர்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியி��் எனது சனநாயக கடமையான வாக்கினை செலுத்தினேன். அனைவரும் தவறாமல் உங்கள் வாக்குகளை பதிவு செய்யுங்கள். #Election2024 #LokSabhaElection2024