அரசியல் பழக்கு!!!
80s kids and many 90s kids அன்பர்களுக்கு... 🙏
இன்றைய தேதிக்கு கிட்டத்தட்ட நாம் அனைவருமே பெற்றோர்கள். (Sorry da 90s kids....) 😁😁😁.
நாம் பிறந்தது pre liberalisation இந்தியா. அப்போது இருந்த ஒருவித சமூகப் பொருளாதார இறுக்க நிலை இப்போது கிடையாது.
1991ல் திறக்கப்பட்ட பொருளாதாரம் நமக்கு பல்வேறு வாய்ப்புகளை வழங்கியது. நாம் கல்வியிலும் பொருளாதாரத்திலும் ஓரளவு வளர்ந்தோம்.
ஆனால் நம் பெற்றோர்கள் செய்த தவறுகளை நாம் மீண்டும் செய்கிறோம் என்று தோன்றுகிறது.
நம் பெற்றோர்கள் அரசியலைக் கண்டு ஒதுங்கி, பிள்ளைகள் ஒழுங்கா படிச்சா போதும். அரசியல் எல்லாம் வேண்டாம் என்ற மனநிலையில் தான் இருந்தார்கள்.
அப்படித்தான் நம்மை வளர்த்தார்கள்.
நாமும் கிட்டத்தட்ட அதே மனநிலையில் தான் இருக்கிறோம்.
ஆனால் ஒரு மெல்லிய வேறுபாடு இருக்கிறது. நாம் வளர்ந்த காலகட்டத்தில் நிறையப் படிக்க வாய்ப்பு கிடைத்தது (பாட நூல்கள் தவிர்த்து)...
நிறையப் பேசினோம். கபடி கிரிக்கெட் கில்லி கோலி என்று தெருவில் இறங்கி விளையாடினோம். அதன் விளைவாக நூல்களும் தெருக்களும் நம் எண்ணங்களை ஓரளவு பரந்து விரிவடைய வைத்தது, சகிப்புத்தன்மையை இயல்பாக்கியது.
மேலும் நாம் வளர்ந்த காலங்களில் இருந்த இயல்பான பொருளாதாரப் போதாமை நம்மிடம் ஒரு ஆழமான survival and fighting instinctஐ வளர்த்து விட்டது.
கடினமான காலங்கள் போராடும் தன்மையை வளர்க்கிறது. ஆனால் இப்போது அப்படி இல்லை. ஒரு வித பொருளாதார உபரி இருக்கும் சமூகச் சூழலில் வாழ்கிறோம்.
நம் குழந்தைகளுக்குக் கேட்ட உடனே எல்லாம் கிடைத்து விடுவதால் போராடும் தன்மை முற்றிலும் சிதைந்து விடுகிறது.
ஒரு சின்ன ஏமாற்றத்தைக் கூட தாங்கும் உள வலிமை இல்லை.
நம்மைச் சிந்திக்கவும் வைத்து சகிப்புத்தன்மையையும் ஊட்டி வளர்த்தவை நூல்களும் தெருக்களும்.
இரண்டுமே நம் குழந்தைகளுக்கு முழுமையாகக் கிடைக்கவில்லை. பாதுகாப்பு காரணமாகவும் மற்றும் பிற சமூக பொருளாதார காரணங்களுக்காகவும் நாம் நமது குழந்தைகளைத் தெருவில் இறங்கி விளையாட விடுவதில்லை.
நூல்கள் பற்றிச் சொல்லவே வேண்டாம். பொருளாதார உபரி போலவே, தகவல் உபரியும் (excessive information) பரந்து இருக்கும் காலகட்டம் இது.
நமது குழந்தைகளின் attention span மிக மிகக் குறைவு. நம்மால் ஒரு வேள்பாரியையோ, கடல் புறாவையோ, பொன்னியின் செல்வனையோ முழுமையாகப் பொறுமையாக ரசித்துப் படிக்க முடியும்.
நமது குழந்தைகளிடம் அதை எதிர்பார்க்க முடியாது. மொத்த நூலில் உள்ள contentகளை வீடியோவாகவோ அல்லது ஆடியோ நூல்களாகவோ நுகர விரும்புகிறார்கள். மொத்தத்தில் நூல்கள் வாசிக்கும் பழக்கம் மிக மிகக் குறைவு.
அதைத் தாண்டி வேறொரு சிக்கலும் உள்ளது.
நூல்கள் படிக்கும் பழக்கம் நம்மைத் தேட வைத்தது. நல்ல நூல்களைத் தேடிப் போனோம். நமது குழந்தைகளைப் பொறுத்தவரை தேடல் என்பதும் முற்றிலும் குறைந்து விட்டது.
அவர்கள் எதைப் பார்க்க வேண்டும் கேட்க வேண்டும் என்பதை algorithms தான் முடிவு செய்கின்றன.
நம் பெற்றோர்கள் நமக்குத் தரத் தயங்கிய அரசியல் அறிவை நூல்களும், தெருக்களும், பொருளாதாரப் போதாமை கொடுத்த தேடலும் தந்தன.
நமக்கு உதவிய எந்தக் காரணிகளும் நமது குழந்தைகளுக்கு உதவப் போவதில்லை. இருக்கும் ஒரே வழி பெற்றோர்கள் தான். நாமே தான்.
நேரம் கிடைக்கும் போது குழந்தைகளுக்கு அரசியல் பற்றி விளக்குங்கள். அரசியல் பேசுங்கள். அரசியல் கோட்பாடுகள் (conservativism, liberalism, communism, socialism, communalism, nationalism, constitutions, democracy, autocracy, plutocracy) பற்றி நிறையப் பகிருங்கள், உரையாடுங்கள்.
அரசியல் சார்ந்த கதைகளைப் பகிருங்கள். அரசியல் நிகழ்வுகளைப் பற்றி விளக்குங்கள்.
நிகழ்வுகளின் அரசியலைப் புரிய வையுங்கள்.
இதை நாம் செய்யத் தவறினால் நாம் அவர்களை எந்த மாதிரியான சமூகச் சூழலில் விட்டுப் போகிறோம் என்று எண்ணிப் பாருங்கள்.
கனவு காணக் கூடத் தெரியாத, கனவே இல்லாத, உழைக்கத் தயங்கும், சகிக்க விரும்பாத, போராட்ட குணம் இழந்த, எளிதில் manipulate ஆகக் கூடிய, ஏமாற்றத்தையும் தோல்வியையும் தாங்க இயலாத ஒரு சமூகம் தான் கண்ணில் தெரிகிறது.
அவர்களை instant gratification மற்றும் attention metricsகளால் உருவாக்கப்பட்ட போலியான ஒரு உலகத்தில் மூழ்கி விடாமல் காத்து நிஜ உலகைக் காட்ட வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.
எனவே அரசியல் தெரிந்த, தெளிந்த ஒரு சமூகத்தை நமது குழந்தைகளுக்குத் தருவது நமது கடமை. அதற்கு ஒவ்வொரு குழந்தையையும் வீட்டிலேயே அரசியல்மயப்படுத்துவது தானே சிறந்த வழி dear 80s kids!!!
#அரசியல்பழகு
#அரசியல்பழக்கு
🙏🙏🙏
@alexpaulmenon, @Captain_Mani72@vijaypnpa_ips
அரசியல் பழக்கு #2
#தாழ்பணிதல்தவிர்
கடந்த வாரம் இளைய மகள் பயின்று வரும் ஆடல் பயிற்சிப் பள்ளியின் ஆண்டு விழா நடைபெற்றது. அனைத்து குழந்தைகளும் மேடையில் நடனம் ஆடித் தங்கள் திறனை வெளிப்படுத்தினர்.
நன்றாகவே ஆடினார்கள்.
முடிவில் அனைத்து குழந்தைகளுக்கும் ஆசிரியர் மேடையில் வைத்துப் பரிசுகள் வழங்கினார்.
பரிசு பெற்ற குழந்தைகளில் சிலர் மேடையிலேயே ஆசிரியர் காலில் விழுந்து ஆசி பெற்றனர். ஒரு மாணவர் நெடுஞ்சாண் கிடையாக விழுந்தார்.
என் மகள் உட்பட பல குழந்தைகள் காலில் விழவில்லை (தனக்கு முன்னால் இருந்த சிலர் காலில் விழுந்த போதிலும்).
நிகழ்ச்சி முடிந்து காரில் கிளம்பும் போது கேட்டேன், நிறைய பேர் ஆசிரியர் காலில் விழுந்தார்களே நீ ஏன் விழவில்லை நவி?
நவி திருப்பி என்னிடம் கேட்டார்: எதுக்குப்பா கால்ல விழனும்? யார் கால்லயும் எதுக்கும் விழக் கூடாதுன்னு நீ தான சொன்ன? இப்போ ஏன் இப்படி கேக்குற? என்று நிறைய எதிர் கேள்விகள். அருகில் இருந்த துணைவியார், நவி, நீ ஒரு வேளை காலில் விழுந்திருந்தால் அப்பாவுக்குக் கோபம் வந்திருக்கும் என்று சொன்னார்.
உள்ளூர நிறைய மகிழ்ச்சி.
காலில் விழும் பழக்கம் தவறானது. ஒருவர் மீதான மரியாதையையும் மதிப்பையும், பணிவான நடத்தை வழியாக வெளிப்படுத்தினாலே போதும். காலில் விழுந்து வணங்கித் தான் மரியாதையை வெளிப்படுத்த வேண்டும் என்கிற தேவை இல்லை.
ஒரு ஆசிரியருக்குத் தனது மாணவர்களின் சாதனை தான் மகிழ்ச்சியைத் தரும். காலில் விழுவது அல்ல.
காலில் விழுவதை குழந்தைகளிடம் normalise செய்வது பின்னாளில் அவர்களின் தன்னம்பிக்கை குறைந்து, தேவைக்காக சுயமரியாதையைக் குறைத்து வாழ்வது தவறில்லை என்ற எண்ணம் வளரக் கூட வாய்ப்பு உள்ளது.
அதை விட மோசமாக, அந்தப் பழக்கம் பின்னாளில், பிறர் தன் காலில் விழ வேண்டும் என்று எதிர்பார்க்கும், காலில் விழுவதை ரசிக்கும் உள்ளப் பிறழ்வு நோயாக மாறவும் வாய்ப்பு உள்ளது.
(ஒரு வேளை, காலில் விழும் பழக்கம் இருந்து பின்னாளில் தன்னம்பிக்கை குறையாமலும், பிறரைத் தன் காலில் விழ வைக்க நினைக்காமலும் அரிதான சிலர் இருக்கலாம்).
எதையும் over glorify செய்வது மிகவும் தவறு; அது தாய், தந்தை, ஆசிரியர், இறைவன் என்று யாராக இருந்தாலும் சரி, உங்கள் சுயமரியாதையை விடப் பெரியது என்று எதுவும் இல்லை.
அதை விட முதன்மையாக, உங்களுடன் வாழும், பழகும் சக குழந்தைகள் மற்றும் மனிதர்களுக்கும் சுயமரியாதை இருக்கிறது. அதையும் உணர்வது அவசியம்.
பணிவு என்பது தாய் தந்தை ஆசிரியர் இறைவன் என்று சுருக்கி விடாமல் அனைவருடனும் பணிவுடன் நடந்து கொள்வது தான் அடிப்படைப் பண்பு.
குழந்தைகளுக்குக் கற்றுத் தர வேண்டிய முதல் அரசியல் பாடம்:
Over Glorification is Wrong. உயர்மைப்படுத்துதல் தவறு.
Celebrity culture is toxic.
அது தாயோ, தந்தையோ, ஆசிரியரோ கடவுளோ, நடிகரோ, அரசியல் தலைவரோ, இந்திய குடிமைப் பணி அதிகாரியோ (😁😁), பாதுகாப்புப் படை வீரரோ, யாரும் Larger than you கிடையாது. சக மனிதருக்குத் தரும் இயல்பான மரியாதையைத் தந்தால் போதும்.
சாதனையாளர்களை வாழ்த்துங்கள்; சாதனைகளை அந்தந்த நேரங்களில் அங்கீகரித்துக் கொண்டாடுங்கள்.
அதற்குப் பிறகு அவர்கள் உங்களைப் போல் சக மனிதர்கள்; அவ்வளவு தான். தலையில் தூக்கி வைக்க வேண்டிய தேவை இல்லை.
"மாட்சியின் பெரியோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே"
எனும் இரண்டாயிரம் ஆண்டுத் தமிழ் மரபை நமது குழந்தைகளுக்குக் கடத்தினாலே போதும். அவர்கள் மனதில், இந்த சமூகம் ஏற்கனவே திணித்த, இனியும் திணிக்கப் போகிற அனைத்து பேதங்களையும் உடைக்கும்.
பேதங்களைச் சுற்றி நிகழும் அரசியலில் இருந்து நம் குழந்தைகள் விடுபட உதவும்.
#அரசியல்பழக்கு
#வியத்தல்இல
#இகழ்தல்தவிர்
#நிமிர்ந்துநில்
#கனிவும்பணிவும்வெல்லும்
Be Humble; Don't Surrender.
#SarvamMaya . Wonderful Feel Good Film. Bit slow, but ரசிக்க வைக்கிறது. வெள்ளிகிழமை இரவு டின்னர் முடித்து விட்டு ரசித்துப் பார்க்கலாம்.
ஒரு பேயை இவ்வளவு ரசிச்சு பாக்க வெச்ச இயக்குநருக்கும் படக்குழுவுக்கும் நன்றி.
#அழகியபேயே ☺️🥰
#MissYouDelulu
அரசியல் பழக்கு!!!
80s kids and many 90s kids அன்பர்களுக்கு... 🙏
இன்றைய தேதிக்கு கிட்டத்தட்ட நாம் அனைவருமே பெற்றோர்கள். (Sorry da 90s kids....) 😁😁😁.
நாம் பிறந்தது pre liberalisation இந்தியா. அப்போது இருந்த ஒருவித சமூகப் பொருளாதார இறுக்க நிலை இப்போது கிடையாது.
1991ல் திறக்கப்பட்ட பொருளாதாரம் நமக்கு பல்வேறு வாய்ப்புகளை வழங்கியது. நாம் கல்வியிலும் பொருளாதாரத்திலும் ஓரளவு வளர்ந்தோம்.
ஆனால் நம் பெற்றோர்கள் செய்த தவறுகளை நாம் மீண்டும் செய்கிறோம் என்று தோன்றுகிறது.
நம் பெற்றோர்கள் அரசியலைக் கண்டு ஒதுங்கி, பிள்ளைகள் ஒழுங்கா படிச்சா போதும். அரசியல் எல்லாம் வேண்டாம் என்ற மனநிலையில் தான் இருந்தார்கள்.
அப்படித்தான் நம்மை வளர்த்தார்கள்.
நாமும் கிட்டத்தட்ட அதே மனநிலையில் தான் இருக்கிறோம்.
ஆனால் ஒரு மெல்லிய வேறுபாடு இருக்கிறது. நாம் வளர்ந்த காலகட்டத்தில் நிறையப் படிக்க வாய்ப்பு கிடைத்தது (பாட நூல்கள் தவிர்த்து)...
நிறையப் பேசினோம். கபடி கிரிக்கெட் கில்லி கோலி என்று தெருவில் இறங்கி விளையாடினோம். அதன் விளைவாக நூல்களும் தெருக்களும் நம் எண்ணங்களை ஓரளவு பரந்து விரிவடைய வைத்தது, சகிப்புத்தன்மையை இயல்பாக்கியது.
மேலும் நாம் வளர்ந்த காலங்களில் இருந்த இயல்பான பொருளாதாரப் போதாமை நம்மிடம் ஒரு ஆழமான survival and fighting instinctஐ வளர்த்து விட்டது.
கடினமான காலங்கள் போராடும் தன்மையை வளர்க்கிறது. ஆனால் இப்போது அப்படி இல்லை. ஒரு வித பொருளாதார உபரி இருக்கும் சமூகச் சூழலில் வாழ்கிறோம்.
நம் குழந்தைகளுக்குக் கேட்ட உடனே எல்லாம் கிடைத்து விடுவதால் போராடும் தன்மை முற்றிலும் சிதைந்து விடுகிறது.
ஒரு சின்ன ஏமாற்றத்தைக் கூட தாங்கும் உள வலிமை இல்லை.
நம்மைச் சிந்திக்கவும் வைத்து சகிப்புத்தன்மையையும் ஊட்டி வளர்த்தவை நூல்களும் தெருக்களும்.
இரண்டுமே நம் குழந்தைகளுக்கு முழுமையாகக் கிடைக்கவில்லை. பாதுகாப்பு காரணமாகவும் மற்றும் பிற சமூக பொருளாதார காரணங்களுக்காகவும் நாம் நமது குழந்தைகளைத் தெருவில் இறங்கி விளையாட விடுவதில்லை.
நூல்கள் பற்றிச் சொல்லவே வேண்டாம். பொருளாதார உபரி போலவே, தகவல் உபரியும் (excessive information) பரந்து இருக்கும் காலகட்டம் இது.
நமது குழந்தைகளின் attention span மிக மிகக் குறைவு. நம்மால் ஒரு வேள்பாரியையோ, கடல் புறாவையோ, பொன்னியின் செல்வனையோ முழுமையாகப் பொறுமையாக ரசித்துப் படிக்க முடியும்.
நமது குழந்தைகளிடம் அதை எதிர்பார்க்க முடியாது. மொத்த நூலில் உள்ள contentகளை வீடியோவாகவோ அல்லது ஆடியோ நூல்களாகவோ நுகர விரும்புகிறார்கள். மொத்தத்தில் நூல்கள் வாசிக்கும் பழக்கம் மிக மிகக் குறைவு.
அதைத் தாண்டி வேறொரு சிக்கலும் உள்ளது.
நூல்கள் படிக்கும் பழக்கம் நம்மைத் தேட வைத்தது. நல்ல நூல்களைத் தேடிப் போனோம். நமது குழந்தைகளைப் பொறுத்தவரை தேடல் என்பதும் முற்றிலும் குறைந்து விட்டது.
அவர்கள் எதைப் பார்க்க வேண்டும் கேட்க வேண்டும் என்பதை algorithms தான் முடிவு செய்கின்றன.
நம் பெற்றோர்கள் நமக்குத் தரத் தயங்கிய அரசியல் அறிவை நூல்களும், தெருக்களும், பொருளாதாரப் போதாமை கொடுத்த தேடலும் தந்தன.
நமக்கு உதவிய எந்தக் காரணிகளும் நமது குழந்தைகளுக்கு உதவப் போவதில்லை. இருக்கும் ஒரே வழி பெற்றோர்கள் தான். நாமே தான்.
நேரம் கிடைக்கும் போது குழந்தைகளுக்கு அரசியல் பற்றி விளக்குங்கள். அரசியல் பேசுங்கள். அரசியல் கோட்பாடுகள் (conservativism, liberalism, communism, socialism, communalism, nationalism, constitutions, democracy, autocracy, plutocracy) பற்றி நிறையப் பகிருங்கள், உரையாடுங்கள்.
அரசியல் சார்ந்த கதைகளைப் பகிருங்கள். அரசியல் நிகழ்வுகளைப் பற்றி விளக்குங்கள்.
நிகழ்வுகளின் அரசியலைப் புரிய வையுங்கள்.
இதை நாம் செய்யத் தவறினால் நாம் அவர்களை எந்த மாதிரியான சமூகச் சூழலில் விட்டுப் போகிறோம் என்று எண்ணிப் பாருங்கள்.
கனவு காணக் கூடத் தெரியாத, கனவே இல்லாத, உழைக்கத் தயங்கும், சகிக்க விரும்பாத, போராட்ட குணம் இழந்த, எளிதில் manipulate ஆகக் கூடிய, ஏமாற்றத்தையும் தோல்வியையும் தாங்க இயலாத ஒரு சமூகம் தான் கண்ணில் தெரிகிறது.
அவர்களை instant gratification மற்றும் attention metricsகளால் உருவாக்கப்பட்ட போலியான ஒரு உலகத்தில் மூழ்கி விடாமல் காத்து நிஜ உலகைக் காட்ட வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.
எனவே அரசியல் தெரிந்த, தெளிந்த ஒரு சமூகத்தை நமது குழந்தைகளுக்குத் தருவது நமது கடமை. அதற்கு ஒவ்வொரு குழந்தையையும் வீட்டிலேயே அரசியல்மயப்படுத்துவது தானே சிறந்த வழி dear 80s kids!!!
#அரசியல்பழகு
#அரசியல்பழக்கு
🙏🙏🙏
@alexpaulmenon, @Captain_Mani72@vijaypnpa_ips
முகநூலில் இருந்து சுட்டது:
(ஒரிஜினலாக எழுதியதும் நானே தான். No copyrights problem 😄😄)
"புறாவின் உயிரைக் காப்பாற்ற தன் தொடையில் இருந்து சதையை அறுத்து கழுகுக்குத் தந்து, கருணையின் உருவமாகத் திகழும் சிபிச்சக்கரவர்த்தியாகிய தங்களை இப்பூலோகம் உள்ளவரை..." என்று அரண்மனைக் கவிஞர் ஒருவர் சிபியைப் பார்த்து புகழ்ந்து கொண்டிருக்கும் போது புயலென உள்ளே வந்தார் ராஜமாதா.
அங்கே சிபி தொடை காயத்தால் ஏற்பட்ட வலியுடனும் ஒரு புறாவின் உயிரைக் காப்பாற்றிய பெருமிதத்துடனும் அமர்ந்திருந்தார்.
☺️☺️☺️
ராஜமாதா நேரே அரண்மனைப் புலவரைப் பார்த்து, " ஏன்டா அவன் தான் பைத்தியக்காரத்தனமா தொடைல இருந்து சதையை வெட்டி கழுகுக்குத் தந்தான்னா, நீயும் அந்த நாயைப் புகழ்ந்திட்டு இருக்கிறயா? வெளியே எட்டிப் பார்.
🥹🥹
இவன் தொடைக்கறி தர்றான்னு தெரிஞ்சு நூற்றுக்கணக்கான கழுகுகள் ஊர்ல இருக்கிற புறாக்களை எல்லாம் நைசா அரண்மனை பக்கமா விரட்டி வந்து தொடைக்கறிக்காக waiting. நீ குடுப்பியாடா வெண்ண? இதுல புகழ்ந்து பாடல் வேற...".
🤧🤧🤧
சிபி வெளியே எட்டிப் பார்த்தான். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை கழுகுகள்; அரண்மனையில் உள்ள அத்தனை பேரின் தொடைகளும் பத்தாது.
நீதி: லாஜிக் இல்லாம ஏதாவது செஞ்சா யாரா இருந்தாலும் கலாய்ப்போம் 🤣🤣🤣🤣
Today we watched #Sirai in Zee5. Nicely crafted movie. One can connect with the entire movie emotionally. As 80s kids, we are able to connect ourselves with many sequences.😀😀
அப்துல் ரவூப், காவலர்களின் குறைந்த பட்ச அதிகாரத்தை வைத்து எளியவர்களுக்கு உதவுது, @iamVikramPrabhu வின் வெகு இயல்பான நடிப்பு, தமிழின் well crafted story, #SureshRajakumari யின் tight screenplay மற்றும் இயக்கம், மூணாறு ரமேஷின் மாஸ் காட்சிகள் பற்றிப் பலர் எழுதி விட்டதால் கவனம் பெறத் தவறிய பிற விஷயங்கள் பற்றி எழுதுகிறேன்.
அந்தக் காலகட்டங்களில் கலர் டிவி அரிதிலும் அரிது. திருமணம், கோயில் திருவிழா புதுமனை புகுவிழாவில் ஆரம்பித்து துக்க வீடு, விசேஷ நாள் வரை எல்லா நிகழ்வுகளிலும் டிவியும், டெக் என்று சொல்லப்பட்ட Video Cassette Playerம் இன்றியமையாத அங்கங்கள். 📺
அப்போது டிவி பார்ப்பதற்காக கையில் பாய்களை எடுத்துக் கொண்டு இரவில் அந்தப் பகுதியில் உள்ள வீட்டு நிகழ்வுகளுக்குப் போவது வெகு இயல்பாக நடந்தேறிய கலாச்சார நிகழ்வு.
அப்போதெல்லாம் டிவி டெக் வாடகைக்கு விடுவது ஒரு முக்கியமான தொழில். அதை ஆப்பரேட் செய்யும் இளைஞர் ஹீரோ ரேஞ்சுக்கு மாஸ் காட்டுவது வழக்கம்.
அப்படி ஒரு டிவி நிகழ்வில் இருந்தே அப்துலுக்கும் கலையின் அக்கா கணவருக்குமான பகை தொடங்குவதாகக் காட்டியது எதார்த்தமான காலக் கண்ணாடி.
டிவி டெக் மாதிரியே 90களின் பிற்பகுதி மற்றும் 2000ன் முற்பகுதியில் தமிழர்களிடம் இருந்து பிரிக்க முடியாத இன்னொன்று மினிபஸ்.
நான் வளர்ந்த தாளமுத்துநகர் பகுதிக்கு மட்டும் தூத்துக்குடி பேருந்து நிலையத்தில் இருந்து கிட்டத்தட்ட 25 மினிபஸ் சேவைகள் இருந்தன.
இந்தப் படத்தில் அங்கங்கே தென்பட்டாலும் க்ளைமாக்ஸ் காட்சியில் மினிபஸ்ஸை கிட்டத்தட்ட ஒரு character ஆகக் காட்டிய விதம் அருமை.
(எழுத நிறைய உள்ளது. நாளை மீதி).
(1/n)There's a well known spar between Newton and Leibnitz on who invented Calculus. அது கவுண்டமணி-செந்தில் ஸ்டைல்ல... 😄
#Goundamani#NewtonLeibnitz
(கவுண்டமணி) டேய் தகப்பா. இந்த ரெண்டு வெள்ளக்கார பெருசுங்க கூட காலைலயே என்னடா பேசிட்டு இருக்க?
(செந்தில்) மை சன் . இவங்க தான் நியூட்டனும் லெப்னிட்ஸும். கால்குலஸ் கண்டுபிடிப்பு விஷயத்துல பெரிய பஞ்சாயத்து. அத நான் தான் தீர்த்து வைக்கனும்னு நம்ம ஊர் பஞ்சாயத்துல வந்து நிக்குறாங்கப்பா.
கவுண்டமணி) டேய் பைசன்!!இவரு பெரிய சுப்ரீம் கோர்ட் ஜட்ஜ். தீர்ப்பா அள்ளி தெளிப்பாரு. அப்படியே ஓடிப் போயிடு. டேய் சயின்ட்ஸ்ட்ஸ். என்றா பஞ்சாயத்து. டெல் மீ.
3/n (நியூட்டன்) நான் உடனே ராயல் சொசைட்டில லெப்னிட்ஸ் என்னோடத காப்பி அடிச்சுட்டான் னு புகார் தந்தேன்.
(கவுண்டமணி) வெரி குட். ராயல் சொசைட்டி என்ன தீர்ப்பு தந்தாங்க?
(நியூட்டன்) நான் தான் கால்குலஸ கண்டுபிடிச்சேன்னு அங்கிருந்த சயின்டிஸ்ட்ஸ் அறிக்கை குடுத்தாங்க.
(கவுண்டமணி) அதான் பஞ்சாயத்த முடிச்சு வெச்சாச்சுல்ல. இங்கே என்னடா பண்றீங்க கால்குலஸ் மண்டையனுகளா?
(லெப்னி) அங்கே தாங்க பிரச்சினை. அந்த தீர்ப்பு வந்தப்போ ராயல் சொசைட்டி செக்ரட்டரி யார்னு கேளுங்க.
(கவுண்டமணி) டேய் ஆப்பிள். யார்ரா ராயல் சொசைட்டி செக்ரட்டரி?
(நியூட்டன்) நான் தாங்க
(கவுண்டமணி) டேய் ஆப்பிள் மூஞ்சா. நீ ரொம்ப டேஞ்சரஸான ஆளா இருப்ப போல.
(லெப்னி) அது கூட பரவாயில்ல. நியூட்டன் தான் கால்குலஸ் கண்டுபிடிச்சாரானு ராயல் சொசைட்டி அறிக்கை தந்தாங்கள்ல, அத டைப் பண்ணது யாருன்னு கேளுங்க.
(குத்துங்க எசமான் குத்துங்க என்று குரல்...)
(கவுண்டமணி) டேய் கடிச்சு போட்ட ஆப்பிள் மண்டையா. யார்ரா அந்த அறிக்கைய ரெடி பண்ணினது?
(நியூட்டன்) நான் தான் பண்ணினதா ஒரு புரளி...
(கவுண்டமணி) டேய் நியூட்டா. இப்படி ஒரு டுபாக்கூர் வேலைய பாத்து வெச்சுட்டு எப்புடிறா பால் வடியுற மாதிரி முகத்த வெச்சிருக்க. டேய் லெப்புனி. நீ உண்மைலயே பாவம் டா. எங்கூரு நாட்டாமை கிட்ட சொல்லி நல்ல தீர்ப்பா வாங்கித் தாரேன்.
#NewtonLeibnitz #Goundamani