சமூக உணர்வென்பது அடுத்துவருக்கு நீ கொடுக்கும் பாதுக்காப்பிலும்
உன் உரிமைக்கான உனது போராட்டத்திலும் இருக்கிறது.
என உணர்த்தியவர் சமூகநீதி தலைவர் #மாவீரன்_குரு 🔥
சேலத்தில் பா.ம.க. சட்டமன்ற உறுப்பினரை பணி செய்ய விடாமல் தடுத்து தாக்குவதா?
திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்!
சேலம் மேற்கு சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட முத்துநாயக்கன்பட்டி ஊராட்சி பாலக்குட்டப்பட்டியில் ரூ.4.5 கோடியில் புதிய பள்ளிக் கட்டிடம் கட்டுவதற்கான பணிகள் இன்று தொடங்கப்படுவதைப் பார்வையிடுவதற்காகச் சென்ற பா.ம.க. சட்டமன்ற உறுப்பினர் அருளை திமுகவினர் தடுத்து நிறுத்தி தள்ளி விட்டுள்ளனர். சட்டமன்ற உறுப்பினரை பணி செய்ய விடாமல் தடுத்து தாக்கியிருப்பது கண்டிக்கத்தக்கது.
பாலக்குட்டப்பட்டியில் பள்ளிக்கூடம் கட்டும் திட்டம் பா.ம.க. சட்டமன்ற உறுப்பினர் அருளின் மூன்றாண்டு கால தொடர் முயற்சியால் கொண்டு வரப்பட்டது ஆகும். ஒரு சட்டமன்ற உறுப்பினரை அவரது தொகுதிக்குட்பட்ட பகுதியில் அவரது முயற்சியால் கொண்டுவரப்பட்ட திட்டத்தின் தொடக்க விழாவில் கலந்து கொள்ளக்கூட விடாமல் தடுப்பது தான் பாசிசம் ஆகும். திமுகவினரின் பாசிசத்துக்கு மக்கள் முடிவு கட்டும் நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது. சட்டமன்ற உறுப்பினர் அருளை தாக்கியவர்கள் மீது தமிழக அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@arulramadassMLA@CMOTamilnadu@tnpoliceoffl
தூங்குவது போல் நடிக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களை எழுப்புவது தான் இந்தக் தொடர் முழக்க ஆர்ப்பாட்டத்தின் நோக்கமே...
- மருத்துவர் அன்புமணி இராமதாஸ்
பாமக தலைவர்
விடுதலைப் போராட்ட வீராங்கனை அஞ்சலையம்மாளின் நினைவு நாளில் அவரை வணங்குவோம், போற்றுவோம்!
இந்தியாவின் விடுதலைப் போராட்டத்தில் தனி முத்திரைப் பதிக்கும் அளவுக்கு பங்காற்றிய வீரப் பெண்மணி கடலூர் அஞ்சலையம்மாளின் 64-ஆம் நினைவு நாள் இன்று. இந்த நாளில் அவரது வீரத்தையும், துணிச்சலையும் போற்றி வணங்குகிறேன்.
ஆங்கிலேயர்களின் அடக்குமுறைகளைக் கண்டு அனைவரும் அஞ்சிய நிலையில், வெள்ளையர்களையே மிரள வைத்தவர் அஞ்சலையம்மாள். கொடியவன் நீலன் சிலை அகற்றும் போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்றவர். கடலூரில் அஞ்சலையம்மாளுக்கு சிலை அமைக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு மணி மண்டபம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்.
வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடியவரின் நிலத்தில் மரங்களை வெட்டி வீழ்த்துவதா? வடலூர் சத்தியஞான சபையில்
மரங்களை படுகொலை செய்வதை உடனே நிறுத்த வேண்டும்!
கடலூர் மாவட்டம் வடலூர் வள்ளலார் சத்திய ஞான சபை பெருவெளியை சுற்றி நன்கு வளர்ந்த நிலையில் உள்ள உள்ள 20-க்கும் மேற்பட்ட மரங்களை இராட்சத எந்திரங்களைக் கொண்டு இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் அகற்றி வருகின்றனர். பெருவெளி பகுதியில் நிழல் தரும் வகையில் வளர்ந்திருந்த அந்த மரங்கள் காரணமே இல்லாமல் வெட்டி வீழ்த்தப்படுவது கண்டிக்கத்தக்கது.
பிப்ரவரி 11ஆம் தேதி தைப்பூச பெருவிழா நடைபெற உள்ள நிலையில் அடிப்படை வசதிகளை செய்வதற்காகத் தான் மரங்கள் பிடுங்கப்படுவதாக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கூறப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசப் பெருவிழா கொண்டாடப்படும் நிலையில் எந்த ஆண்டும் இது போல் மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டதில்லை எனும் போது இந்த ஆண்டு மட்டும் மரங்களை வெட்ட வேண்டிய தேவை எங்கிருந்து வந்தது?
தைப்பூச நாளில் வடலூரில் வள்ளலார் ஜோதி தரிசனத்தைக் காண்பதற்காக 10 லட்சம் முதல் 15 லட்சம் வரையிலான பக்தர்கள் கூடினாலும், அனைவரும் எந்த சிக்கலும், இடையூறும் இல்லாமல் ஜோதி தரிசனம் காண்பதற்கு வசதியாகத் தான் 70 ஏக்கருக்கும் கூடுதலான பரப்பளவு கொண்ட பெருவெளியில் எந்த ஆக்கிரமிப்பும் செய்யக்கூடாது என்று வள்ளலாரே கூறியிருந்தார். அதன்படியே இதுவரை பராமரிக்கப்பட்டும் வந்தது. அத்தகைய பெருவெளியை வள்ளலார் பன்னாட்டு மையம் அமைப்பதற்காக ஆக்கிரமித்து விட்டு, கூடுதல் வசதிகளை செய்து தருவதாகக் கூறி மரங்களை அகற்றுவது முரண்பாடுகளின் உச்சம் ஆகும்.
வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடியதாக வள்ளலார் கூறியிருக்கிறார். அவரது நிலத்தில் வளர்ந்திருந்த மரங்களை வெட்டி வீழ்த்துவது வள்ளலாரால் வெறுக்கப்பட்ட உயிர்க்கொலை ஆகும். வள்ளலாரை மதிக்கும் அரசாக இருந்தால் சத்திய ஞானசபை வளாகத்தில் உள்ள மரங்களை வெட்டுவதை உடனடியாக நிறுத்த வேண்டும்; அந்தப் பகுதியில் புதிய மரக்கன்றுகளை நட்டு வளர்க்க இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@CMOTamilnadu
மாவீரன் ஜெ.குரு அவர்களின் 64வது பிறந்தநாளை முன்னிட்டு சேலம் மாநகர மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கட்சி அலுவலகத்தில் மாவீரன் அவர்களின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினோம் ...
#மாவீரன்_காடுவெட்டியார்
இன்றைய அரசியல் சூழலில் இந்த மனிதர் எங்களுடன் இருந்து இருத்தல் இப்போது இருப்பதை விட 100 மடங்கு பலமும், தைரியமும் இருந்து இருக்கும்.. தளபதி இல்லாத படை எப்படி இருக்கும் என புரிய வைத்த மாவீரா.. உன் புகழ் வாழ்க.. உன் வீரம் வாழ்க.. 🙏🙏🙏
மறைந்த வன்னியர் சங்க தலைவர்,
மாவீரன் ஜெ.குரு அவர்களின் 64-வது அகவை நாளில், மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களுடன் மலர் தூவி புகழ் வணக்கம் செலுத்தி வணங்கிய போது.! @draramadoss
மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் மாவீரன் ஜெ.குரு அவர்களின் 64-ஆம் பிறந்தநாளை முன்னிட்டு திண்டிவனம் கோனேரி குப்பத்தில் உள்ள வன்னியர் கல்வி கோயிலில் மாவீரனின் சிலைக்கு கட்சி நிர்வாகிகளுடன் மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்திய போது
மாவீரன் குரு நம்மை விட்டு மறையவில்லை...
உணர்வாக நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
என்னிடம் எல்லையில்லா அன்பு காட்டியவரும், மறைந்த வன்னியர் சங்கத் தலைவருமான மாவீரன் ஜெ.குரு அவர்களின் 64-ஆம் பிறந்தநாள் இன்று. மாவீரன் குரு மறைந்து 8 ஆண்டுகளாகி விட்டன. அவர் நினைவாக காடுவெட்டியில் மணி மண்டபம் அமைத்தோம். கல்விக்கோயிலின் சட்டக்கல்லூரியில் குருவுக்கு தனி வளாகம் அமைத்தோம். கம்பீரமான சிலையை கட்டமைத்தோம். அவற்றின் வழியாக குரு நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
மாவீரன் குரு நம்மை விட்டு மறையவில்லை... உணர்வாக நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவரது நினைவை எந்நாளும் போற்றுவோம். பாட்டாளி மக்கள் கட்சியை ஆட்சியில் அமர்த்துவோம் என்ற அவரது சபதத்தை நிறைவேற்றுவதற்காக உழைக்க இந்த நாளில் உறுதியேற்போம்.!
போதை மருந்து வணிகத்தை எதிர்த்த குத்துச்சண்டை வீரர்
டிஜிபி அலுவலகம் அருகில் வெட்டிக்கொலை: திராவிட மாடல் ஆட்சியில் அப்பாவி மக்களுக்கு பாதுகாப்பே கிடையாதா?
சென்னை ஐஸ் அவுஸ் பகுதியில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த குத்துச்சண்டை வீரர் ஒருவர் போதைப் பொருள் விற்பனை செய்யும் கும்பலால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டிருக்கிறார். தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் அலுவலகத்துக்கு மிக அருகில் நடந்துள்ள இந்த படுகொலை தான் தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் சட்டம் - ஒழுங்கு எந்த அளவுக்கு சீர்குலைந்திருக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டு ஆகும்.
ஐஸ் அவுஸ் பகுதியைச் சேர்ந்த 23 வயது இளைஞரான தனுஷ் குத்துச் சண்டைப் போட்டிகளில் பங்கேற்று ஏராளமான பதக்கங்களை வென்று கொடுத்துள்ளார். அதே பகுதியில் மோகன் என்பவர் கஞ்சா, போதை ஊசிகள், போதை மாத்திரைகள் போன்றவற்றை விற்பனை செய்து வந்திருக்கிறார். அதற்கு தனுஷ் எதிர்ப்பு தெரிவித்து வந்ததால், அவரை மோகனும் இன்னொருவரும் சேர்ந்து படுகொலை செய்திருக்கிறார்கள். இந்தப் படுகொலைக்கு காரணம் காவல்துறையின் அலட்சியம் தான்.
கொலை நடந்த ஐஸ் அவுஸ் பகுதி காவல்துறை தலைமை இயக்குனர் அலுவலகத்துக்கு மிக அருகில் உள்ளது. அந்தப் பகுதியிலேயே நீண்ட காலமாக கஞ்சா விற்பனை நடந்து வந்திருக்கிறது. காவல்துறை உண்மையாகவே செயல்திறன் மிக்கதாக இருந்திருந்தால் கஞ்சா விற்பனையை தடுத்தி நிறுத்தியிருப்பதுடன், அதற்கு காரணமானவர்களுக்கு தண்டனை பெற்றுத் தந்திருக்க வேண்டும். அதை செய்திருந்தால் தனுஷ் படுகொலை செய்யப்பட்டிருக்க மாட்டார். தனுஷுக்கும், மோகனுக்கும் பல ஆண்டுகளாக மோதல் இருந்த் வந்த நிலையில், தனுஷை மோகன் கும்பல் படுகொலை செய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதை உளவுத்துறை மூலம் தமிழக அரசு கண்டுபிடித்து தடுத்திருக்க வேண்டும். ஆனால், அதை செய்வதில் தமிழக அரசு படுதோல்வியடைந்து விட்டது.
தமிழ்நாட்டில் கொலை, கொள்ளைகள் உள்ளிட்ட அனைத்துக் குற்றங்களுக்கும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் புழக்கம் தான் காரணமாக இருக்கிறது. போதைப் பொருட்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று பாமக பலமுறை வலியுறுத்தினாலும் தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. அதனால், அப்பாவி மக்கள் பாதுகாப்பாக நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மக்கள் நலனில் அரசுக்கும், காவல்துறைக்கும் ஓரளவாவது அக்கறை இருந்தால் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் விற்பனையை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@CMOTamilnadu@tnpoliceoffl
கிழக்குக் கடற்கரை சாலையில் பெண்களை துரத்திச் சென்று தொல்லை கொடுத்த திமுகவினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்!
சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் இளம்பெண்கள் சிலர் பயணித்த மகிழுந்தை, திமுக கொடி கட்டப்பட்ட மகிழுந்தில் வந்த சிலர் வழிமறித்து மகிழுந்தில் இருந்த பெண்களிடம் அத்துமீறும் காட்சிகள் அடங்கிய காணொலி சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. சென்னை புறநகரின் மிக முக்கியமான சாலையில் பயணிக்கும் பெண்களை வழிமறித்து தொல்லை கொடுக்கும் அளவுக்கு சமூக விரோதிகளுக்கு துணிச்சல் ஏற்பட்டிருப்பது அச்சமும் கவலையும் அளிக்கிறது.
பாதிக்கப்பட்ட மக்கள் இது குறித்து கானாத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், குற்றம் செய்த சமூக விரோதிகள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்காத காவல்துறையினர், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நெருக்கடி கொடுப்பதாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதியும், பாதுகாப்பும் வழங்க வேண்டிய காவல்துறையினரே குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படுவது கண்டிக்கத்தக்கது.
சென்னையின் மிக முக்கிய சாலையில் பயணிக்கும் பெண்களை மகிழுந்தைக் கொண்டு தடுத்து நிறுத்தும் துணிச்சல் சமூக விரோதிகளுக்கு எவ்வாறு ஏற்பட்டது? மகிழுந்தில் திமுக கொடி கட்டப்பட்டிருந்ததாலா? அல்லது தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிராக எத்தகைய குற்றங்கள் நடந்தாலும் அதை அரசும், காவல்துறையும் கண்டு கொள்ளாது என்பதாலா? என்பது குறித்து அரசு விளக்கமளிக்க வேண்டும்.
சென்னையில் அண்மைக்காலமாக பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுவது கண்டிக்கத்தக்கது. கிழக்குக் கடற்கரை சாலையில் பெண்களை வழிமறித்து அத்துமீறிய, திமுக கொடி கட்டப்பட்ட மகிழுந்தில் வந்தவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@CMOTamilnadu@tnpoliceoffl
தமிழரசன் என்ற தம்பியை உயிருடன் பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்று அந்த குடும்பம் மூன்று நாட்கள் தெருவில் போரடியது உங்களுக்கு தெரியவில்லையா தளபதி அவர்களே.. ஒரு ட்வீட் போட கூட தகுதி இல்லயா அந்த தம்பி உயிருக்கு...
தினமலர் லட்சுமிபதி, நல்லி குப்புசாமி செட்டியார்,
நடிகர் அஜித், கிரிக்கெட் வீரர் அஷ்வின் உள்ளிட்ட
தமிழகத்தின் 13 பேர் பத்ம விருதுகள் வென்றிருப்பது மகிழ்ச்சி!
2025-ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ஜகதீஷ் சிங் கேகர் உள்ளிட்ட 7 பேருக்கு பத்ம விபூஷன் விருதுகளும், மக்களவையின் மறைந்த தலைவர் மனோகர் ஜோஷி உள்ளிட்ட 19 பேருக்கு பத்ம பூஷன் விருதுகளும், கிரிக்கெட் வீரர் அஷ்வின் உள்ளிட்ட 113 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகளும் அறிவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அவர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலதிபர் நல்லி குப்புசாமி செட்டியார், திரைப்பட நடிகர் அஜித், நடனக் கலைஞரும், நடிகையுமான ஷோபனா சந்திரசேகர் ஆகியோர் பத்மபூஷன் விருது வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்திருக்கின்றனர். கிரிக்கெட் வீரர் அஷ்வின், சமையல் கலை வல்லுனர் தாமோதரன், தினமலர் குழுமத்தைச் சேர்ந்த லட்சுமிபதி, பாரதி ஆய்வாளர் சீனி. விசுவநாதன், ஹட்சன் குழுமத் தலைவர் சந்திரமோகன், பறை இசைக்கலைஞர் வேலு ஆசான், எம்.டி.ஸ்ரீனிவாஸ், புரசை கண்ணப்ப சம்பந்தன் , ராதாகிருஷ்ணன் தேவசேனாதிபதி, குருவாயூர் துரை ஆகியோருக்கும் புதுவையைச் சேர்ந்த தவில் வித்வான் தட்சிணாமூர்த்தி ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருதுகளும் வழங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
பத்ம விருது பெற்ற அனைவரும் தங்களின் துறைகளில் மேலும் மேலும் சாதனை படைக்கவும், இன்னும் உயரிய விருதுகளை வெல்லவும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
#PadmaAwards2025
இறந்த தாயின் உடலை மிதிவண்டியில் எடுத்துச் சென்ற மகன்: அரசு மருத்துவமனையின் மனிதநேயமற்ற செயல் பற்றி விசாரணை தேவை!
திருநெல்வேலியில் உயிரிழந்த தாயாரின் உடலை அவரது மகன் 18 கிலோமீட்டர் தொலைவுக்கு மிதிவண்டியில் கட்டி எடுத்துச் சென்றதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது. இந்த அவல நிலைக்கு நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வாகத்தின் மனிதநேயமற்ற நடத்தை தான் காரணமாகும். மருத்துவமனை நிர்வாகத்தின் செயல் கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியை அடுத்த வடக்கு மீனவன்குளத்தைச் சேர்ந்த சிவகாமியம்மாள் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அவரது உயிரைக் காப்பாற்ற கடைசி வரை மருத்துவமனை முயன்றிருக்க வேண்டும். அந்த முயற்சி தோல்வியடைந்திருந்தாலும் கூட, அந்த மூதாட்டியின் உடலை மரியாதையுடன் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்திருக்க முடியும்.
ஆனால், அதை செய்யாத நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வாகம், உயிருக்கு கடுமையாக போராடிக் கொண்டிருந்த நிலையிலேயே சிவகாமியம்மாளை வீட்டிற்கு அழைத்துச் செல்லும்படி அவரது மகன் பாலனிடம் கூறியது தான் அனைத்து சிக்கல்களுக்கும் காரணம் ஆகும். மருத்துவமனையிலிருந்து சிவகாமியம்மாளை அழைத்துச் சென்ற சில நிமிடங்களிலேயே அவர் உயிரிழந்து விட்டதால், அடுத்து என்ன செய்வதென்று தெரியாத பாலன், தமது தாயாரின் உடலை மிதிவண்டியில் கட்டி எடுத்துச் சென்றுள்ளார். இப்படி ஒரு நிலை ஏற்படுவதை மருத்துவமனை நிர்வாகம் தவிர்த்திருக்க வேண்டும்.
சிவகாமியம்மாள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நிலையில், அவரை வீட்டிற்கு அழைத்துச் செல்வதாக அவரது மகன் பிடிவாதம் பிடித்ததால் தான், வேறு வழியின்றி அனுப்பி வைக்க நேரிட்டதாக மருத்துவக் கல்லூரி முதன்மையர் ரேவதி கூறியிருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. தமிழகத்தின் பெரும்பான்மையான அரசு மருத்துவமனைகளில் உயிரிழக்கும் நிலையில் இருப்பவர்களை வீட்டுக்கு அழைத்துச் செல்லுங்கள் என்று கூறி அனுப்பி வைப்பது வாடிக்கையாக உள்ளது. நோயாளிகளின் உறவினர்களே பிடிவாதம் பிடித்தாலும் மருத்துவமனை நிர்வாகம் அதை அனுமதிக்கக் கூடாது.
நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து எத்தகைய சூழலில் சிவகாமியம்மாள் அனுப்பப்பட்டார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும். இனிவரும் காலங்களில் உயிரிழக்கும் நிலையில் உள்ளவர்களை வீட்டிற்கு அனுப்பி வைப்பதை தவிர்க்க வேண்டும். சிலர் சென்டிமெண்ட் காரணமாக ஆபத்தான நிலையில் உள்ளவர்களை வீட்டிற்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று உறவினர்கள் விரும்பினால், மருத்துவப் பணியாளர்களின் கண்காணிப்பில், உரிய வசதிகள் கொண்ட அவசர ஊர்தி வாயிலாக மட்டுமே அவர்கள் அனுப்பி வைக்கப்படுவதை மருத்துவமனை நிர்வாகங்கள் உறுதி செய்ய வேண்டும்.
@CMOTamilnadu