Unfazed by political tides and remaining deeply resilient through every season, iyya @EPSTamilNadu stands as an enduring rock of leadership.
#WeStandWithEPS#எடப்பாடியார்
தென்காசி அருகே 5000 நெல்மூட்டைகள் தீயில் எரிந்து சேதம்..
ஆனால் அங்கேயும் ரீல் மோகத்தில் ஆளும் அரசின் ஆச்சரியக்குறிகள்!
மக்களின் வேதனை ஒரு Reel Content அல்ல என்பதை எப்போதுதான் இந்த ஆச்சரியக்குறிகள் உணரப் போகிறார்களோ!
அங்க விவசாயிகள் உழைப்பு தீ-யா கொழுந்துவிட்டு எரிஞ்சுட்டு இருக்கும்போது எப்படி இவங்களுக்கு Camera Angle எல்லாம் set பண்ணி வீடியோ எடுக்க மனசு வருதோ தெரில..
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
சொந்தக் கட்சிப் பெண் நிர்வாகியால் பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளாக்கப்பட்டது, ஏரல் வாரச்சந்தைக் குத்தகைதாரர்களிடம் கமிஷன் கேட்டது எனத் தொடர் சர்ச்சைகளுக்குச் சொந்தக்காரரான ஸ்ரீவைகுண்டம் தவெக சட்டமன்ற உறுப்பினர் விஜி சரவணன்,
வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் செய்ய வேண்டிய பணியில் தலையிட்டு, அதிகப்பிரசங்கித்தனமாகச் செயல்பட்டு தன்னையே கேலிப்பொருளாக்கிக்கொண்டார்.
#பொய்க்கால்_குதிரை_அரசு
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள் தலைமையில்,
திருநெல்வேலி மாநகர் மற்றும் திருநெல்வேலி புறநகர் மாவட்டக் கழகங்களுக்கு உட்பட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தலைமைக் கழகம் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மாளிகையில் நடைபெற்றது.
#AIADMK
தர்மபுரி பேருந்து நிலையம் போன்ற மக்கள் நடமாட்டம் மிகுந்த இடத்திலேயே, இளம்பெண் மீது நடத்தப்பட்ட கத்திக்குத்து சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது.
பெண்களின் பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்டது என்று தம்பட்டம் அடிக்கும் 'சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை' என்ன செய்து கொண்டிருக்கிறது?
#பொய்க்கால்_குதிரை_அரசு
தனியார் மருத்துவக் கல்லூரிகள் நிகர்நிலை பல்கலைக்கழகங்களாக மாறுவதால் மாநில அரசுக்கு ஏற்படும் இட ஒதுக்கீட்டு இழப்பை சரிசெய்ய மத்திய அரசும், தமிழகத்தை ஆளும் த.வெ.க. அரசும் உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்!
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள் தலைமையில்,
திருச்சி புறநகர் தெற்கு மற்றும் திருச்சி புறநகர் கிழக்கு மாவட்டக் கழகங்களுக்கு உட்பட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தலைமைக் கழகம் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மாளிகையில் நடைபெற்றது.
#AIADMK
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள் தலைமையில்,
திருச்சி மாநகர் மற்றும் திருச்சி புறநகர் வடக்கு மாவட்டக் கழகங்களுக்கு உட்பட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தலைமைக் கழகம் புரட்சித் தலைவர் எம்ஜிஆர்
மாளிகையில் நடைபெற்று வருகிறது
#AIADMK
ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கும் விந்தையான த.வெ.க. அரசுக்கு கண்டனம்!
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
தூத்துக்குடி மாவட்டம், ஏரல் பகுதியில் 50 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் வாரச் சந்தையில், ஏலம் குத்தகைக்கு எடுத்தவர்களிடம் பணம் கேட்டு ஸ்ரீவைகுண்டம் தவெக சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி. சரவணன் மிரட்டல் விடுக்கிறார்.
பணம் தர மறுத்ததால், இத்தனை ஆண்டு காலமாகச் செயல்பட்டு வந்த சந்தை மூடப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதையறிந்து வியாபாரிகளுக்கு ஆதரவாக அனைத்துக் கட்சியினரும் போராட்டம் நடத்தியதால், வேறு வழியின்றி சந்தை வழக்கம்போல் செயல்படும் தற்போது அறிவித்துள்ளனர். இதுதான் தூய ஆட்சியா??
- தூத்துக்குடி தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் திரு. S.P. சண்முகநாதன் அவர்கள்
ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கும் விந்தையான த.வெ.க. அரசுக்கு கண்டனம்!
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
விவசாயக் கடன் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும் எனத் தேர்தல் வாக்குறுதி அளித்துவிட்டு, ஆட்சிக்கு வந்ததும் விவசாயிகளை ஏமாற்றிய இந்த 'பொய்க்கால் குதிரை' அரசின் முதலமைச்சரைக் கண்டித்து, ஆயிரக்கணக்கான விவசாயிகள் இன்று சென்னையில் மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
"அடுத்த ஜென்மத்தில் விவசாயியாகப் பிறக்க வேண்டும்" என்று மேடையில் வசனம் பேசி உணர்ச்சிவசப்பட்ட முதலமைச்சர், தன் ஆட்சியில் தன்னால் ஏமாற்றப்பட்ட இந்த ஆயிரக்கணக்கான விவசாயிகளின் அவலநிலை குறித்து ஒரு வார்த்தையாவது வாய் திறப்பாரா?
#பொய்க்கால்_குதிரை_அரசு
சில ஆண்டுகளுக்கு முன்பு, தனக்குச் சொந்தமான திரையரங்கில் தற்போதைய முதலமைச்சர் நடித்த திரைப்படம் வெளியானபோது, முறையான டிக்கெட் வைத்திருந்தும் நரிக்குறவர் சமூகத்தினரை உள்ளே அனுமதிக்க மறுத்து சர்ச்சையில் சிக்கிய மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர் @rhevanth95
நேற்று நடைபெற்ற தனது சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத் திறப்பு விழாவில், மக்களுக்காகப் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களைக் கொண்டு எச்சிலைச் சுத்தம் செய்ய வைத்து இழிவுபடுத்தியுள்ளார். சமூகத்தில் பின்தங்கிய நிலையிலுள்ள மக்களைத் தொடர்ச்சியாக இத்தகைய செயல்கள் மூலம் இழிவுபடுத்துவது எந்த மாதிரியான மனநிலை?
#பொய்க்கால்_குதிரை_அரசு
இந்திய விடுதலை போராட்ட வீரர்,
"கல்வியே ஒடுக்கப்பட்டோரின் பேராயுதம்" என்று முழங்கி, சமுதாயத்தில் விளிம்புநிலை மக்களின் உரிமைக்குரலாக ஓங்கி ஒலித்து, வாழ்நாள் முழுவதும் சமூகநீதிக்காக போராடிய சமூக சீர்திருத்தப் புரட்சியாளர் ஐயா #இரட்டைமலை_சீனிவாசன் அவர்களின் பிறந்தநாளில் அவர்தம் பெரும்புகழைப் போற்றி வணங்குகிறேன்.
@AIADMKOfficial
கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் திருச்சி மாவட்டத்தில் இரண்டு பேர் போதை ஊசி செலுத்தி உயிரிழந்த நிலையில், அதே திருச்சி மாவட்டத்தில் தற்போது பள்ளி மாணவர்கள் கஞ்சா பயன்படுத்தும் வீடியோ வெளியாகி நெஞ்சை பதற வைக்கிறது.
தமிழகத்தில் போதைப் பொருட்களால் இளைஞர் சமூகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், பொய்க்கால் குதிரை அரசின் முதல்வர் அது குறித்துச் சற்றும் அக்கறை செலுத்தாமல், குதிரைபேர அரசியலில் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ-க்களை எப்படி விலை பேசி வாங்குவது என்பதில் மட்டுமே குறியாக இருப்பது தமிழகத்தின் சாபக்கேடு.
#பொய்க்கால்_குதிரை_அரசு
சொந்தக் கட்சியைச் சேர்ந்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் அறிவுறுத்தல்களை ஒரு பொருட்டாக கூட மதிக்காமல், பள்ளிகளில் தொடர்ந்து ரீல்ஸ் (Reels) எடுத்து அத்துமீறலில் ஈடுபடும் தவெக நிர்வாகிகள்
#பொய்க்கால்_குதிரை_அரசு