நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை, ஒரு குவிண்டாலுக்கு ₹72 உயர்த்தி, ₹2,441 ஆகவும், மேலும் 14 வகை பயிர்கள் மற்றும் தானியங்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயித்தும், விவசாயிகள் நலனை முன்னிறுத்தி அறிவிப்பு வெளியிட்டுள்ள மாண்புமிகு பாரதப் பிர���மர் திரு @narendramodi அவர்களுக்கு, தமிழக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சார்பாக, மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
14 வகை பயிர்கள் மற்றும் தானியங்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயித்திருப்பது, தமிழகத்தில் உள்ள பல ஆயிரக்கணக்கான சிறு, குறு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதோடு, அவர்களுக்குச் சிறந்த வருமானத்தையும் உறுதி செய்யும்.
தமிழகத்தில், தேர்தல் வாக்குறுதியாக, ஒரு குவின்டால் நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக ₹3,500 வழங்கப்படும் என்று கூறி ஆட்சிக்கு வந்துள்ள தமிழக முதலமைச்சர் திரு @TVKVijayHQ அவர்கள், தமிழக அரசு சார்பாக வழங்கப்படும் ஊக்கத்தொகையை உயர்த்தி, ₹3,500 ஆக விவசாயிகளுக்கு விரைவில் வழங்குவார் என்று எதிர்பார்க்கிறோம்.
"திரு. பவன் கல்யாண் அவர்கள் தலைமையிலான APSRTC, திருப்பதியில் இருந்து பழனி வரை பக்தர்களின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றும் வகையில் தினமும் இரண்டு பேருந்து சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது."🙏🏻
மகத்தான மக்கள் சேவையை ���ெய்து வரும் ஆந்திரப் பிரதேச துணை முதல்வர் திரு. பவன் கல்யாண் அவர்களை தலைவர் திரு. அண்ணாமலை அண்ணன் பாராட்டி, வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.🧡
#Annamalai | #PawanKalyan
Delighted to have participated in a thought-provoking session at Stanford University hosted by the Stanford India Policy and Economics Club (SIPEC). It was a pleasure engaging in a spirited exchange with Thiru @ShashiTharoor avl, INC MP for Thiruvananthapuram, and my brother, Thiru @Tejasvi_Surya avl, BJP MP for Bengaluru South, on the current political landscape & the future trajectory of our great nation.
The energy at Stanford reflects the global interest in India's growth story. Deeply grateful to the organisers and the vibrant student community for fostering such a crucial dialogue on the ideas that will shape a New India. (1/2)
குடும்பத்திற்காகவும் குழந்தைகளின் எதிர்காலத்திற்காகவும் ஓய்வின்றி உழைத்து, அனைவரையும் அன்பால் இணைக்கும் மையப்புள்ளியாகத் திகழும் தாய்மார்கள் அனைவருக்கும், இனிய அன்னையர் தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நம் வாழ்வின் முதல் ஆசிரியர்களாக இருந்து உலகை அறிமுகப்படுத்தி, எண்ணற்ற தியாகங்களால் நம்மை வடிவமைப்பது, நமது தாய்மார்களே. தாயின் அன்பும், தியாகமும், தன்னலமற்ற அர்ப்பணிப்பும் மனித வாழ்வின் மிகப் பெரிய வரங்களாகும்.
குடும்பங்களையும் சமூகத்தையும் உறுதியாக வடிவமைக்கும் அனைத்து தாய்ம���ர்களின் பேரன்பும், பொறுமையும் என்றென்றும் போற்றுதலுக்குரியது.
இனிய அன்னையர் தின நல்வாழ்த்துகள்.
மீஞ்சூர் அருகே உள்ள வல்லூர் வாலாஜா நகரில், வீட்டில் தேர்வுக்குப் படித்துக் கொண்டிருந்த மாணவியை, கஞ்சா போதையில் வீட்டினுள் புகுந்த கும்பல், பட்டாக்கத்தியால் வெட்டி, மாணவி தற்போது ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.
ஐந���து ஆண்டு கால திமுக ஆட்சியின் அவலம், இன்று கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு, போதைப் பொருள் புழக்கம் பெருகி, வீட்டிற்குள் இருக்கும் நமது குழந்தைகளுக்கே பாதுகாப்பில்லாத நிலை இன்று உருவாகியிருக்கிறது.
மாணவியைத் தாக்கிய மூன்று பேர் கொண்ட போதைக் கும்பலில், காவல்துறையினர் இதுவரை, ஒருவனை மட்டுமே கைது செய்திருப்பதாகத் தெரிகிறது. போதைப் பொருள் கடத்துபவனும், விற்பவனும், பயன்படுத்துபவனும் எங்கு இருக்கிறான் என்பது தமிழக காவல்துறைக்குத் தெரியாதா? திமுக அதிகாரமட்டம், காவல்துறையின் கைகளைக் கட்டிப் போட்டிருப்பத��் விளைவு, இன்று ஒவ்வொரு நாளும், தமிழக மக்கள் ஒவ்வொருவரின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகியிருக்கிறது.
திமுகவினர் பணம் சம்பாதிக்க, போதைப் பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தாமல் இருக்கும் திமுக ஆட்சி அகற்றப்படவில்லை என்றால், அடுத்த ஐந்து ஆண்டுகளில், நமது குழந்தைகளின் எதிர்காலம் என்ன ஆகும் என்ற அச்சம் ஏற்படுகிறது.
தமிழகம் முழுவதும் போதைப்பொருள்களை புழக்கத்தில் விடுபவர்கள�� மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க, தமிழக காவல்துறையை வலியுறுத்துகிறேன். பொதுமக்கள் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. தங்கள் குழந்தைகளைக் காப்பாற்ற, தாங்களே நடவடிக்கை எடுக்கும் நிலைக்கு, பொதுமக்களைத் தள்ள வேண்டாம் என்று எச்சரிக்கிறேன்.