மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் - DMK IT WING, TamilNadu-Periyar- Anna- kalignarist- தளபதி. Dravidian politician - Dravidian stock - Atheist 🖤♥️
ஆட்சி அமைக்க ஆதரவு அளித்த கட்சிகளின் மீது நம்பிக்கையின்றி, நிறுத்தாமல் MLA-க்கள் purchase-ஐ தொடருவது, மக்களுக்கு இழைக்கின்ற மாபெரும் துரோகம்!
- மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் திரு @Udhaystalin அவர்கள்
#DismissPowderMinister
#WATCH | “நீக்கிடு.. நீக்கிடு.. போதை அமைச்சரை நீக்கிடு”
அமைச்சர் சரத்குமாருக்கு எதிராக சென்னை புரசைவாக்கத்தில் திமுகவினர் ஆர்ப்பாட்டம்
#SunNews | #DMKProtest | #GhilliSarath
50 நாட்களில் செய்த ஒரே சாதனை குட்கா வழக்கு முதல் சொத்து குவிப்பு வழக்கு வரை உள்ள 6 அதிமுக அடிமைகளை கழுதை பேரம் மூலம் வாங்கி தனது அடிமையாக மாற்றிக்கொண்டது தான்!
#DismissPowderMinister
#WATCH | போராடிய தி.மு.க-வினர் கைது!
சென்னை, எழும்பூரில் த.வெ.க அமைச்சர் சரத்குமார் பதவி விலக வலியுறுத்தி தி.மு.க முன்னாள் அமைச்சர் மா. சுப்பிரமணியன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்து காவல்துறையினர்.
#DMKProtest | #MaSubramanian | #Sarathkumar | #TVKFailed | #KalaignarSeithigal
தவெக அரசை விமர்சிக்கும் எதிர்க்கட்சிகளை மிரட்டியும், ஊடகங்களுக்கு பதில் அளிக்காமலும் கட்டமைக்கப்பட்ட, தன் போலி பிம்பத்தைக் காப்பாற்றிக் கொள்ளும் முதலமைச்சரின் எண்ணம் நீண்டகாலம் நீடிக்காது!
- கழகத் தலைவர் திரு @mkstalin அவர்கள்
#DismissPowderMinister
திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகியதற்கு திமுகவினர் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். யாருக்கும் எந்த வருத்தமும் இல்லை. தவெகவுடன் கைகோர்த்துள்ள மதிமுகவினர் Whistle அடிங்க, Vibe பண்ணுங்க, Dance ஆடுங்க. தேவையில்லாம தி.மு.கழகத்தை விமர்சனம் பண்ணாதிங்க.
- முன்னாள் அமைச்சர் திரு @sivasankar1ss MLA அவர்கள்
#DMK
மற்றொரு நாள். மற்றுமொரு ராஜினாமா.
இந்த Sofa Model ஆட்சி அமைந்த பிறகு, அ.தி.மு.க.வின் எம்.ஆர்.விஜயபாஸ்கர் 6-ஆவது எம்.எல்.ஏ.வாக இன்று பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.
ஆளுங்கட்சியின் ஆள் பிடிக்கும் அரசியல் எந்த அளவுக்கு extreme ஆகியுள்ளது என்பதையே இது காட்டுகிறது.
ஆட்சி அமைக்க ஆதரவு அளித்த கட்சிகளின் மீது நம்பிக்கையின்றி, நிறுத்தாமல் MLA-க்கள் purchase-ஐ தொடருவது, மக்களுக்கு இழைக்கின்ற மாபெரும் துரோகம்.
“தொட மாட்டேன் - தொட்டா விட மாட்டேன்” என்று script-படி பொங்கிய முதலமைச்சர், அடுத்த scene-ல், சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கியவரை தன் கட்சியில் சேர்க்க முயல்வது ஏன்?
#SofaModel அரசின் இந்த Washing Machine அரசியலை தமிழ்நாடு பார்த்துக் கொண்டு தான் இருக்கிறது.
திணிக்கப்படும் இடைத்தேர்தல்கள் மூலம் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.
தலைமைக் கழக அறிவிப்பு
தி.மு.க. மாணவர் அணி சார்பில் பொது இடத்தில் போதைப் பொருள் பயன்படுத்தியது போல் வீடியோ வெளியிட்ட த.வெ.க. அமைச்சர் திரு. சரத்குமார் அவர்களைப் பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி மாபெரும் ஆர்ப்பாட்டம்
இளைஞர்களையும் சமுதாயத்தையும் சீரழிக்கும் போதைப் பொருட்கள் பயன்பாட்டைத் தடுத்து நிறுத்துவதோடு, அதற்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது சமூகப் பொறுப்புள்ள ஒவ்வொருவரின் கடமை. ஆனால், ஆளும் த.வெ.க. அரசில் இடம்பெற்றுள்ள மாண்புமிகு அமைச்சர்களின் செயல்பாடுகள் அவ்வாறானதாக இல்லை. குறிப்பாக, மனிதவள மேலாண்மைத் (Human Resources Management) துறை அமைச்சர் திரு. டி.சரத்குமார் அவர்கள், போதைப் பொருளைப் பயன்படுத்துவது போன்ற வீடியோ ஒன்று, போதைப்பொருள் ஒழிப்பு நாளன்று வெளியாகி சர்ச்சையை உருவாக்கியுள்ளது. அமைச்சரும் அதற்கு விளக்கமளிக்கிறேன் பேர்வழி என்று, த.வெ.க.வின் பாரம்பரியப்படி, குழந்தைக்குப் பின்னால் ஒளிந்துகொண்டு அரசியல் செய்வதாகவே தோன்றுகிறது. அவர் போதைப் பொருள் பயன்படுத்தினரா இல்லையா என்று அவரைக் காக்க பட்டிமன்றம் நடத்துவதைவிட, பொதுவெளியில் போதைப் பொருட்களைப் பயன்படுத்துவது போல் வீடியோ எடுத்து, அதனை “Thug Life Moment” என்று Reels-ஆக வெளியிட்டு தவறான செயலைச் செய்ய இளைஞர்களை ஊக்குவிக்கும் அவரது செயல் கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.
எனவே, இத்தகைய ஒருவர் அமைச்சரவையில் தொடர்வது, எவ்விதத்திலும் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு நன்மை தரக்கூடியது அல்ல என்பதால், மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் திரு.டி.சரத்குமார் அவர்களை உடனடியாகப் பதவிநீக்கம் செய்ய வலியுறுத்தி, தி.மு.க. மாணவர் அணிச் சார்பில் 29-06-2026 (திங்கட்கிழமை) அன்று கழக மாவட்டத் தலைநகரங்களில் “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்” நடைபெறும்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட - ஒன்றிய - நகர - பேரூர் கழக மாணவரணி நிர்வாகிகள் மற்றும் மாணவர்கள் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும், “பூமியில் இருக்குது மூனு பங்கு தண்ணிடா, தண்ணிய அடிப்பத்தில் தப்பு ஒன்னும் இல்லடா” - “பத்தாது பாட்டில் நான் குடிக்க, அண்டால கொண்டா சியர்ஸ் அடிக்க” போன்ற தத்துவப் பாடல்கள் மூலம் ரசிகக் கூட்டத்தை உருவாக்கிய முதலமைச்சர் அவர்களின் அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள், இன்னுமும் ரசிக மனநிலையிலேயே இருக்கின்றனர். அதிலும் அமைச்சர் ஜெகதீஸ்வரி அவர்களது கையில் முதலமைச்சர் விஜய் புகைப்பிடிப்பது போன்ற “டாட்டூ”-வைப் போட்டுக்கொண்டு, அவரது தத்துவப் பாடல்களை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்கும் பணியைச் செய்து கொண்டிருக்கிறார். இதனையெல்லாம் கண்டிக்க வேண்டிய முதலமைச்சரோ, இதையெல்லாம் ரசிக்கின்ற மனநிலையில் தேங்கி நிற்கிறார் என்பதை வேதனையோடு பதிவு செய்து, அமைச்சர்களின் இத்தகைய மாண்பற்ற போக்குகளை முதலமைச்சர் கண்டித்து இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என தி.மு.க. மாணவரணி வலியுறுத்துகிறது.
- தி.மு.க. மாணவர் அணி
நம்ம ஆட்சி மேல இருந்த நம்பிக்கையிலதான் தமிழ்நாட்டை நோக்கி, பல்வேறு மாநிலங்களிலிருந்து, பல்வேறு நாடுகளிலிருந்து, உலகளவிலே மிகப்பெரிய நிறுவனங்கள் எல்லாம் வந்துச்சு நமக்கு. வந்து சேர்ந்துச்சு, தொழில் தொடங்கினாங்க.
ஆனா இப்போ, ஆட்சி மாற்றம் நடந்திருக்கு. இந்த ஆட்சி மாற்றம் வந்து, ஒரு மாசத்திலேயே தமிழ்நாடு இன்றைக்கு அதல பாதாளத்திற்குப் போகக்கூடிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டிருக்கு.
கழகத் தலைவர் திரு @mkstalin அவர்கள்
போதைப் பொருள் பயன்படுத்தியது போல், “Thug Life” Story போட்ட அமைச்சருக்கு எதிராகப் போராட்டம் செய்த தி.மு.க.வினர் கைது!
த.வெ.க. ஆட்சியை விமர்சிப்பதால், முன்னாள் அமைச்சர் சிவசங்கர் அவர்கள் மீது வழக்கு!
முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு அவர்களது வீட்டில் ரெய்டு!
- இப்படி விமர்சிக்கும் எதிர்க்கட்சிகளை மிரட்டியும், ஊடகங்களுக்கு பதில் அளிக்காமலும் கட்டமைக்கப்பட்ட, தன் போலி பிம்பத்தைக் காப்பாற்றிக் கொள்ளும் முதலமைச்சரின் எண்ணம்
நீண்டகாலம் நீடிக்காது!
அதிகாரத்தை வைத்து ஆட்டம் போடுபவர்களின் அகங்காரம் அடங்கும்!
“டேக் டைவர்ஷன்… டேக் டைவர்ஷன்” என ஓடும் இந்த ரீல்ஸ் ஆட்சிக்கு, மக்களே பாடம் புகட்டுவார்கள்!
திராவிடக் கொள்கை நிலைபெற வேண்டும்; தமிழ்நாடு வளம்பெற வேண்டும்! - அதற்கு திராவிட முன்னேற்றக் கழகம் பலம் பெற வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் திரு. பென்ஜமின் தலைமையில் கழகத்தில் இணைந்த ஐயாயிரத்துக்கும் மேற்பட்டோரை வரவேற்றோம்!
#DMK4TN
தி.மு.க.வை யாராலும் அடக்க முடியாது!
அடிக்கின்ற மழையில் கரைந்து போகின்ற மண்ணாங்கட்டிக் கூட்டமல்ல, அடிக்கின்ற தூசிக் காற்றால் பறந்து போகும் பேப்பர் அல்ல. கொள்கையால் உயர்ந்து நிற்கின்ற கூட்டம் தி.மு.க கூட்டம். இந்த இயக்கத்தைத் தொட்டுப் பார்க்கவோ, அசைத்துப் பார்க்கவோ முடியாது என்பதை இன்றைய போராட்டம் உணர்த்தியிருக்கும்.
- தி.மு.க முன்னாள் அமைச்சர் சேகர் பாபு பேட்டி!
#SekarBabu #DMK #TamilNadu #KalaignarSeithigal
#WATCH | "ஸ்ரீவைகுண்டம் சம்பவத்தில் தவெக எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை இல்லை. மாறாக பாதிக்கப்பட்ட பெண்ணை கட்சியில் இருந்து நீக்கி இருக்கிறார்கள்.. இதுவரை முதலமைச்சர் வாய் திறக்கவில்லை.."
தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளதை கண்டித்து மாநிலம் முழுவதும் மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.
#SunNews | #TVK | #Vijay
கழகத்தின் #GenZ இளைஞர்களை ஒருங்கிணைத்துக் கூட்டங்கள் நடத்தி வந்த தம்பி அன்பானந்தன் அரியப்பனை, கிருஷ்ணகிரி ராயக்கோட்டையில் அவரது வீட்டுக்குள் நள்ளிரவில் அத்துமீறி நுழைந்து காவல்துறையினர் கைது செய்ய முயற்சி செய்ததை வன்மையாக கண்டிக்கிறேன்.
இதே போல சமீபத்தில், Gen Z கூட்டத்தில் பேசிய கனி எனும் தம்பி மீது த.வெ.க. ரவுடிகள் சைதாப்பேட்டையில் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
தம்பி கனியை தாக்கிய குற்றவாளிகள் மீது இதுவரை எந்த வழக்கும் பதிவு செய்யாத காவல்துறை, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த தம்பி கனியை மிரட்டி டிஸ்சார்ஜ் செய்ய வைத்தது.
கழக இளைஞர்கள் ஆளுங்கட்சியையும் - அரசையும் எதிர்த்து பேசினால் காவல்துறையை அனுப்புவது, அதுவே, தாக்கியவர்கள் த.வெ.க.வினர் என்றால் வேடிக்கைப் பார்ப்பது… இது தான் மாற்றமா?
நிர்வாகத்திறனற்ற #SofaModel அரசின் போலி பிம்பம், இளைஞர்கள் மத்தியில் சுக்குநூறாக நொறுங்கி வருவதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் இந்த ஆட்சியாளர்கள் அடக்குமுறையை கையில் எடுத்து இருக்கிறார்கள்.
கழக இளைஞர்களை காவல் துறையை ஏவி அச்சுறுத்தலாம் என்று ஆளும் அரசு நினைத்தால், கழகம் அதனை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்காது என்று எச்சரிக்கிறேன்.