தமிழ்நாட்டு முதல்வராகப் பொறுப்பேற்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்களுக்கும், அவரது அமைச்சரவையினருக்கும் உளப்பூர்வமான வாழ்த்துகள்!
திமுக-அதிமுக அல்லாத ஒரு கட்சி பல்லாண்டுகள் கழித்து தமிழகத்தை ஆளவிருப்பதில் மகிழ்கிறேன்.
@TVKVijayHQ
உலகத்தொழிலாளர் நாளில்
உழைக்கும் மக்களின் உரிமைகளை வென்றெடுக்க உறுதியேற்போம்!
”காலுக்குச் செருப்ப��மில்லை
கால் வயிற்றுக் கூழுமில்லை
பாழுக்கு உழைத்தோமடா – என் தோழனே
பசையற்றுப் போனோமடா”
எனப் பாடிய பொதுவுடைமைப் போராளி பெருந்தமிழர் நமது ஐயா ஜீவானந்தம் அவர்களின் பாடலைப்போல் எந்தக் காலத்திலும் யாராலும் ஏறெடுத்துப் பார்க்க கதியற்ற, எவராலும் திரும்பிப் பார்க்கப்படாத யாருமற்றவர்களாகவே உலகெங்கும் தொழிலாளர் பெருமக்கள் இன்றளவும் இருக்கிறார்கள்.
19 ஆம் நூற்றாண்டில் ஏற்பட்டத��� தொழிற்புரட்சியின் காரணமாக எவ்வித விதிமுறைகளும், சட்டத்திட்டங்களும் இல்லாமல் இலாபம் சம்பாதிப்பதையே நோக்கமாகக் கொண்ட முதலாளிகளால் தொழிலாளர்கள் அடிமைகள் போல நடத்தப்பட்டனர். இதனை��் கண்டித்து 1886 ஆம் ஆண்டு மே 1 அன்று 8 மணி நேர வேலை, 8 மணி நேர உறக்கம், 8 மணி நேர ஓய்வு, என்கின்ற அடிப்படை உரிமைகளை நிறைவேற்றக் கோரியும், உழைப்புக்கேற்ற ஊதியம் என்பதை வலியுறுத்தியும் அமெரிக்கத் தொழிலாளர் கூட்டமைப்பு மிகப்பெரிய போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தது. மே - 4 அன்று அமெரிக்காவின் சிகாகோ ஹேமார்க்கெட் சதுக்கத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்களில் பணிபுரிந்த சுமார் 3 இலட���சத்து 50 ஆயிரம் தொழிலாளர்கள் வீதியில் இறங்கிப் போராடினார்கள். அவர்களின் போராட்டத்தை அமெரிக்க வல்லாதிக்க அரசு அடக்கி ஒடுக்க நினைத்து ஏராளமானத் தொழிலாளர்களைக் கொன்று குவித்தது. எனினும் தொழிலாளர்களின் எழுச்சிமிகுந்தப் புரட்சிக்கு அடிபணிந்த அமெரிக்க வல்லாதிக்க அரசு இறுதியில் 8 மணி நேர வேலை, உழைப்புக்கேற்ற அடிப்படை ஊதியம் என்கின்ற கோரிக்கைகளுக்கு ஒத்துக்கொண்டது. அந்த வரலாற்று வெற்றியை நினைவுகூறும் வகையில், பாரீசில் நடந்த சர்வதேச தொழிலாளர் கூட்டத்தில், 1890 ஆம் ஆண்டு மே 1 முதல் உலகளாவிய தொழிலாளர் தினமாக கொண்டாட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்தியப் பெருநிலத்திலேயே தமிழரின் தாயகமான தமிழ்நாட்டில் சென்னை கடற்கரையில் 1923 ஆம் ஆண்டு மே 1 அன்று பெரும்புகழ் கொண்ட நம்முடைய பாட்டன், பொதுவுடமை போராளி ஐயா சிங்காரவேலர் தலைமையில் உழைப்பாளர் நாள் முதன்முறையாக கொண்டாடப்பட்டது. அதனடிப்படையில் இந்தியப் பெருநிலம் எங்கும் மே 1 அன்று உழைப்பாளர்கள் நாள் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.
அன்று தொடங���கி இன்றுவரை தொழிலாளர் நாள்தான் கொண்டாடப்படுகின்றதே தவிர தொழிலாளர்களை உலகம் கொண்டாடவில்லை. கொண்டாட்டத்துக்கு உரியவர்களாக தொழிலாளர்களை நடத்தவும் இல்லை என்பதுதான் வரலாற்றுப்பெருந்துயரமாகும்.
விவசாயம் முதலாக வாழ்வியலுக்கான அத்தனைப் பணிகளிலும் தங்களை உளப்பூர்வமாக ஒப்புவித்துக்கொண்டு பணியாற்றும் உழைப்பாளர்களைச் சுரண்டி பன்னாட்டு பெருமுதலாளிகளுக்கு சேவை புரியும் தரகு நிறுவனங்களாகவே ஆளும் அரசுகள் செயல்படுகின்றன. அடக்குமுறைகள் மூலம் தொழிலாளர் உரிமைகளைத் தட்டிப்பறித்து முதலாளித்துவக் கைகூலிகளாக செயல்படும் அரசுகளுக்கு எதிராக, தங்களுக்குள் ஒற்றுமை பெருக்கி, தீயதை எதிர்த்து போராட��ம் துணிவும் – வலிமையும் பெற்ற பேராற்றலாகவும், முன்னேற்றப்பாதையில் நடைபோடும் பேராளுமையாகவும் தொழிலாளர் வர்க்கம் மேம்பட வேண்டும். ஆளும் அரசுகள் தொழிலாளர் உழைப்பினைச் சுரண்டி, உரிமைகளைப் பறிக்க முயன்றால், அத்தகைய கொடுங்கோன்மை அரசுகளைத் தூக்கி எறியவும் சிறிதும் அச்சமின்றி தொழிலாளர் வர்க்கம் துணை நின்றுள்ளனர் என்பதே கடந்தகால வரலாறாகும்.
ஆட்சி, அதிகாரத்தின் துணைகொண்டு உலகமயம், தாராளமயம் என முதலாளித்துவம் நம்மை அச்சுறுத்தும் அனைத்து அடக்குமுறைகளுக்கும் எதிராக உழைப்பாளர் உரிமைபெற்ற 'மே நாளில்' உழைப்புச் சுரண்டலுக்கெதிராக நாம் அனைவரும் ஒன்றுபட்டு தொழிலாளர் உரிமைகளை வென்றெடுக்க உறுதியேற்போம்!
இனியும் வெறும் நாளினை மட்டுமே கொண்டாடாமல், உழைக்கும் மக்களை ஒவ்வொரு நாளும் கொண்டாடுவோம்!
– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
அடக்குமுறை எல்லாவற்றையும் கடந்து இந்த தலைமுறையையும் போராட்டத்தில் ஈடுபடுத்தியவர்; 100 ஆண்டு கால வரலாறு, ஒரு தலைவனின் எளிமை, நேர்மை, தூய்மைக்கு சான்று ஐயா நல்லகண்ணு! #nallakannu#நல்லகண்ணு
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணாப்பாளர்
முதல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தைத் தொடங்கிய ஈழத்துச் சிவானந்த அடிகளார் (1965) எழுதிய 40 பக்கம் கொண்ட நூ���ை 2 மணி நேரத்தில் படித்து முடித்தேன் இன்று. பெரும் தெளிவு பெற்றேன்🙏🏽
இதோ நூல் 👇🏼
https://t.co/vxKewn1O7J
#மொழிப்போர்
#தமிழ்_வாழ்க
#இந்தி_எதிர்ப்பு
உலகம் முழுவதும் பரவி வாழும் தமிழர்களுக்குத் தமிழ்நாடு நாள் நல்வாழ்த்துகள்!
சாதியொழித்து, தமிழ்ப் பகைகளான ஆரிய, திராவிடத்தை அகற்றி,கொள்கை-சமய-மதத்தைக் கடந்து,ஒரு தூய தமிழ்த் தேசியச் சிந்தனையை நிறுவ இந்நாளில் உறுதி ஏற்போம்!#தமிழ்நாடுநாள்_நவம்பர்1#தமிழ்நாடு_நாள்#நாம்தமிழர்#தமிழ்
முன்னதாகவே சாதி ஒழிப்பு, தீண்டாமை, ஆலய நுழைவு, மது ஒழ���ப்பு போன்ற குமுகாயச் சிக்கல்களுக்குப் போராடிய பெருமகனாரின் வரலாற்றை அறிவோம். இவரை மறைத்து, சிலர் திணித்த மாய கருத்தை உடைப்போம்.
#இரட்டைமலை_சீனிவாசன் #தமிழினத்_தாத்தா #போராளி
மாநிலக் கட்சியாக அங்கீகரிக்கப்பட்ட நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னத்தை இந்தியத் தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்து 10-05-25 அன்று அறிவித்துள்ளது.
#திரும்ப_வந்துட்டேன்னு_சொல்லு