அடப்பாவிகளா :
2025 ஆம் ஆண்டு Tamil Nadu Power Distribution Corporation Limited (TNPDCL) ஸ்மார்ட் மீட்டர் சார்ந்து அதானி Adani Energy Solutions நிறுவனத்திடம் நடத்திய பேச்சு வார்த்தையில் விலை அதிகம் என்பதால் - சுமார் 19,000 கோடி திட்டம் கேன்சல் செய்யப்பட்டது..
இதை இப்போது செய்தது விஜய் எனவும் - கேட்டா கார்ப்பரேட் எதிர்ப்பு எனவும் உருட்டிடு இருக்கானுங்க. செய்தியும் தெரியவில்லை அட ஏன் ரத்தானது என அறிவும் இல்லை. ஆனால் விளம்பரம் போலியான விளம்பரம் ரீல்ஸ் மட்டும் குறைவு இல்லை.
சிவகாசி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக இன்று 16.06.206 , ஆனையூர் பஞ்சாயத்து நான்கு ஊர்கள் காந்தி நகர்,அய்யம்பட்டி, ஆவாரம்பட்டி (லட்சுமியாபுரம்),ஆனையூர் பகுதிகளில் கழிப்பறை வசதி மற்றும் மின்விளக்கு வசதி, பேருந்து வசதி மற்றும் அடிப்படை வசதிகள் கோரி நடத்தப்பட்ட கையெழுத்து இயக்கத்தில் பெற்ற கையெழுத்துகள் அடங்கிய மனுவினை பஞ்சாயத்து செயலாளர் பாலசுப்பிரமணி அவர்களிடம்
கொடுக்கப்பட்டது.
தமிழ் நாடு அரசு பேருந்து நிலையத்தின் அருகில் இருக்கும் அனைத்து அரசு மதுபான கடைகள் மூடப்படும் என்று அரசனை வெளியிட்டு இருக்கிறது ஆனால் ஈரோடு மாவட்டம் கடம்பூர் பஸ்நிலையத்தையொட்டி செயல்படும் அரசு மதுபான கடை மூடப்படாமல் இருப்பதை சுட்டிக்காட்டி மதுபிரியர்கள் சார்பில் முதல்வர் அவர்களுக்கும் பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினருக்கும் பாராட்டு விழா எடுக்கப்படும் என்று நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி காணொளி வெளியீடு. @Nandhakumar29_
மானாமதுரை இளைஞன் ஆகாஷைப் படுகொலை செய்தது திமுக அரசின் கீழிருந்த காவல்துறையினர். மூன்று மாதங்களாகியும் இப்போதுவரை ஆகாஷின் உடலை வாங்க மறுத்து, நீதிகேட்டுப் போராடி வருகிறார்கள் ஆகாஷின் குடும்பத்தினர்.
ஆட்சி மாறிவிட்டது. முதல்வராகிவிட்டார் விஜய். அஜித்குமாரின் காவல் மரணத்துக்கு எதிராகப் பேசிய விஜய், திமுகவின் ஆட்சியில் நடந்தேறிய ஆகாஷின் மரணத்துக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?
நாம் தமிழர் கட்சி சார்பாக விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட தி கொளத்தூர் ஊராட்சியில் உள்ள ஒட்டனந்தல் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் சுற்றுச்சுவர் கட்டுவதற்கு 2021 ஆம் ஆண்டு பணி ஆணை அளிக்கப்பட்டது. அதில் 98000/- ரூபாயை எடுக்கப்பட்டு எந்த பணியும் இதுவரை செய்யப்படாமல் இருந்தது அதனால் நேரடியாக மாவட்ட ஆட்சியருக்கு மனு அளிக்கப்பட்டு இன்று மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பள்ளியை நேரடியாக கள ஆய்வு செய்து வேலை செய்யப்படாமல் இருந்ததால் அந்த 98000/- ரூபாயை திருப்பி செலுத்த உத்தரவிட்டுள்ளார்
கும்மிடிப்பூண்டியில் வடமாநில தொழிலாளியால்
3 வயது பச்சிளம் குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுப் படுகொலை!
என்ன செய்து கொண்டிருக்கிறது தவெக அரசின் சிங்கப்பெண்கள் படை?
இன்னமும் திரைப்பாடலுக்கு இசை வாசித்துக் கொண்டிருக்கிறதா தமிழ்நாடு காவல்துறை?
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர் | நாம் தமிழர் கட்சி
தமிழ்நாடு பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் சிறிதும் பாதுகாப்பற்ற மாநிலமாக உருவெடுத்திருப்பது வேதனையின் உச்சம். என்ன செய்து கொண்டிருக்கிறது தவெக அரசு? தமிழ்நாட்டில் அரசு என்ற ஒன்று இருக்கிறதா? ஆட்சி என்ற ஒன்று நடக்கிறதா?
தமிழ்நாடு முழுவதும் மாறுவேடத்தில் செல்லும் முதல்வர் தடுத்த குற்றங்கள் எத்தனை? எடுத்த நடவடிக்கைகள் எத்தனை? என்ன செய்து கொண்டிருக்கிறது தவெக அரசின் சிங்கப்பெண்கள் படை? இன்னமும் திரைப்பாடலுக்கு இசை வாசித்துக் கொண்டிருக்கிறதா தமிழ்நாடு காவல்துறை?
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
யார் தவறு செய்தாலும் பொறுத்துக் கொள்ள மாட்டேனென யாரோ எழுதிக் கொடுத்ததை உணர்ச்சிப்பொங்க மேடையில் ஒப்பிக்கும் முதல்வர் விஜய் அவர்களே! தனது கட்சிப்பெண்ணை வன்கொடுமை செய்த வழக்கில் தொடர்புடைய சட்டமன்ற உறுப்பினரைக் காப்பாற்றத் துணைபோவதேன்?
தவெகவின் ஆட்சியில் பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் ஒருபுறமென்றால், தவெகவினராலே நிகழ்த்தப்படும் பாலியல் வன்முறைகள் மறுபுறம்! தமிழ்நாட்டுப் பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்வேனென மேடையில் வீரவசனம் பேசி, தேர்தல் வாக்குறுதி கொடுத்து, ஆட்சியதிகாரத்திற்கு வந்த முதல்வர் விஜய் அவர்கள் இன்றைக்கு சொந்தக் கட்சியினரிடமிருந்து பெண்களைக் காக்க இயலாத கையறு நிலையிலிருப்பது வெட்கக்கேடானது.
சென்னை, ஆலந்தூரில் கணவனை இழந்தப் பெண்ணின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து தவெக நிர்வாகி வேம்புலி பாலியல் தொல்லை கொடுத்ததும், சேலத்தில் தவெக நிர்வாகி மணிகண்டன் ஐம்பதுக்கும் மேற்பட்டப் பெண்களைப் பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கி, ஆபாசக் காணொளிகளை எடுத்து அலைபேசியில் வைத்துக் கொண்டு அவர்களை மிரட்டியதும், திருவைகுண்டத்தில் வேலைகேட்டு வந்த பெண்ணுக்குக் குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து தவெக நிர்வாகிகளே கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்ததுமான கொடுஞ்செய்திகள் தவெகவினரால் நிகழும் சமூக அவலங்களுக்கான சரிநிகர் சான்றுகளாகும். இரண்டு பெண் தலைவர்களைக் கொள்கைத் தலைவர்களாகக் கொண்டிருக்கிறோமென மேடைதோறும் சுயதம்பட்டம் அடித்தக் கட்சியின் உண்மையான முகம் இதுதான். பெண்களின் வாக்குகளைப் பெருவாரியாகப் பெற்று, அதிகாரத்திற்கு வந்த தவெகவாலேயே இன்றைக்குப் பெண்களின் பாதுகாப்புக் கேள்விக்குறியாகி இருப்பது மிக மோசமான இழிநிலையாகும்.
திருவைகுண்டத்தில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட பெண்ணை உடனடியாகக் கட்சியைவிட்டு நீக்கிய தவெக, அதில் தொடர்புடைய தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் விஜி சரவணன் மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? யார் தவறு செய்தாலும் பொறுத்துக் கொள்ள மாட்டேனென யாரோ எழுதிக் கொடுத்ததை உணர்ச்சிப்பொங்க மேடையில் ஒப்பிக்கும் முதல்வர் விஜய் அவர்கள், தனது கட்சிப்பெண்ணை வன்கொடுமை செய்த வழக்கில் தொடர்புடைய சட்டமன்ற உறுப்பினரைக் காப்பாற்றத் துணைபோவதேன்? நீங்கள் திரையில் செய்த வீரப்பராக்கிரமங்களைத் தரையிலும் செய்வீர்களென்று நம்பி, உங்களை அண்ணனென்றும், தம்பியென்றும் விளித்து உங்களுக்கு வாக்குச் செலுத்திய பெண்களுக்கு நீங்கள் செய்கிற நன்றிக்கடன் இதுதானா? அதிமுகவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களைப் பதவி விலகச் செய்து, கட்சியைவிட்டு வெளியே வரச் செய்த நீங்கள், குற்றமிழைத்த உங்களது கட்சியின் சட்டமன்ற உறுப்பினரைப் பதவிவிலகச் செய்து, கட்சியைவிட்டு வெளியேற்ற மட்டும் ஏன் தயங்குகிறீர்கள்? எல்லாவற்றையும்விட ஆட்சியைத் தக்க வைப்பதற்கான ‘பெரும்பான்மை’ கணக்குதான் உங்களுக்குப் பெரிதாகத் தெரிகிறதா? ‘எல்லாம் மேலிடத்துக்குத் தெரியும்’ எனக் குற்றவாளிகள் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் அதிகாரத்திமிரில் பேசியிருக்கிறார்களே, யார் அந்த மேலிடம் முதல்வரே? நீங்கள்தான் அந்த மேலிடமா? இல்லை! உங்களுக்கு மேலேயும் ஒரு மேலிடம் இருக்கிறதா? என்னப் பதில் வைத்திருக்கிறீர்கள்?
வழக்கம்போல, ‘பழி போடுகிறார்கள்’ எனப் பொதுமேடையில் ஒப்பாரி வைத்துப் பொறுப்பைத் தட்டிக் கழிக்கப் போகிறீர்களா? இல்லை! ‘சிங்கப்பெண் படை’ எனும் பல்லில்லா படையை வைத்துக் காலங்கடத்தப் போகிறீர்களா? குற்றவாளிகளைக் கைதுசெய்யும் அதிகாரமோ, குற்றத்தின் பின்புலத்தைப் புலனாய்வு செய்யும் அதிகாரமோ, விசாரணை செய்யும் அதிகாரமோ என எவ்வித அதிகாரமுமற்று வெறும் ரோந்துப்பணி செய்வதற்கு மட்டும் எதற்கு ஒரு தனிப்படை? 4 கோடி பெண்களின் தொகையைக் கொண்டுள்ள மாநிலத்தில் 5,000 பேரைக் கொண்ட சிங்கப்பெண் படை வெறும் ரோந்துப் பணிகளின் மூலமே பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமென்பது ஏமாற்று வாதமில்லையா? ஏற்கனவே, காவல்துறை வைத்திருந்த ‘பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்’ என்பதற்கும், ‘சிங்கப்பெண்’ படைக்கும் என்ன பெரிய மாறுபாடு? சட்டவிரோதப் போதைப்பொருட்களின் புழக்கத்தைத் தடுக்கவோ, மதுக்கடைகளை முற்றாக மூடவோ, போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தவோ என எந்த முயற்சியும் எடுக்காதுவிட்டுவிட்டு, சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவேன்; பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்வேன் என மேடையில் வாய்ச்சவடால் விடுவது எதற்கு முதல்வரே? குற்றமிழைக்கும் குற்றவாளிகள் எவராயினும் பாரபட்சமின்றி சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டியது ஒரு பொறுப்புள்ள அரசின் தலையாயக் கடமை. அதனை இனியாவது உணர்வீர்களா?
இன்றைக்கு ஒரே நாளில் மட்டும் நான்குக்கும் மேற்பட்ட குழந்தைகள் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட செய்தி வெளியாகியிருக்கிறது.
தன்னுடைய திரைத்துறை நண்பர்களைச் சந்திப்பதில் அதீத ஆர்வம்காட்டும் முதல்வர் விஜய் ஆட்சியின் தலைவர் எனும் அடிப்படையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தாரா? இரங்கல் கூறினாரா?
யார் தவறு செய்தாலும் பொறுத்துக் கொள்ள மாட்டேனென யாரோ எழுதிக் கொடுத்ததை உணர்ச்சிப்பொங்க மேடையில் ஒப்பிக்கும் முதல்வர் விஜய் அவர்களே!
தனது கட்சிப்பெண்ணை வன்கொடுமை செய்த வழக்கில் தொடர்புடைய சட்டமன்ற உறுப்பினரைக் காப்பாற்றத் துணைபோவதேன்?
யார் தவறு செய்தாலும் பொறுத்துக் கொள்ள மாட்டேனென யாரோ எழுதிக் கொடுத்ததை உணர்ச்சிப்பொங்க மேடையில் ஒப்பிக்கும் முதல்வர் விஜய் அவர்களே! தனது கட்சிப்பெண்ணை வன்கொடுமை செய்த வழக்கில் தொடர்புடைய சட்டமன்ற உறுப்பினரைக் காப்பாற்றத் துணைபோவதேன்?
தவெகவின் ஆட்சியில் பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் ஒருபுறமென்றால், தவெகவினராலே நிகழ்த்தப்படும் பாலியல் வன்முறைகள் மறுபுறம்! தமிழ்நாட்டுப் பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்வேனென மேடையில் வீரவசனம் பேசி, தேர்தல் வாக்குறுதி கொடுத்து, ஆட்சியதிகாரத்திற்கு வந்த முதல்வர் விஜய் அவர்கள் இன்றைக்கு சொந்தக் கட்சியினரிடமிருந்து பெண்களைக் காக்க இயலாத கையறு நிலையிலிருப்பது வெட்கக்கேடானது.
சென்னை, ஆலந்தூரில் கணவனை இழந்தப் பெண்ணின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து தவெக நிர்வாகி வேம்புலி பாலியல் தொல்லை கொடுத்ததும், சேலத்தில் தவெக நிர்வாகி மணிகண்டன் ஐம்பதுக்கும் மேற்பட்டப் பெண்களைப் பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கி, ஆபாசக் காணொளிகளை எடுத்து அலைபேசியில் வைத்துக் கொண்டு அவர்களை மிரட்டியதும், திருவைகுண்டத்தில் வேலைகேட்டு வந்த பெண்ணுக்குக் குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து தவெக நிர்வாகிகளே கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்ததுமான கொடுஞ்செய்திகள் தவெகவினரால் நிகழும் சமூக அவலங்களுக்கான சரிநிகர் சான்றுகளாகும். இரண்டு பெண் தலைவர்களைக் கொள்கைத் தலைவர்களாகக் கொண்டிருக்கிறோமென மேடைதோறும் சுயதம்பட்டம் அடித்தக் கட்சியின் உண்மையான முகம் இதுதான். பெண்களின் வாக்குகளைப் பெருவாரியாகப் பெற்று, அதிகாரத்திற்கு வந்த தவெகவாலேயே இன்றைக்குப் பெண்களின் பாதுகாப்புக் கேள்விக்குறியாகி இருப்பது மிக மோசமான இழிநிலையாகும்.
திருவைகுண்டத்தில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட பெண்ணை உடனடியாகக் கட்சியைவிட்டு நீக்கிய தவெக, அதில் தொடர்புடைய தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் விஜி சரவணன் மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? யார் தவறு செய்தாலும் பொறுத்துக் கொள்ள மாட்டேனென யாரோ எழுதிக் கொடுத்ததை உணர்ச்சிப்பொங்க மேடையில் ஒப்பிக்கும் முதல்வர் விஜய் அவர்கள், தனது கட்சிப்பெண்ணை வன்கொடுமை செய்த வழக்கில் தொடர்புடைய சட்டமன்ற உறுப்பினரைக் காப்பாற்றத் துணைபோவதேன்? நீங்கள் திரையில் செய்த வீரப்பராக்கிரமங்களைத் தரையிலும் செய்வீர்களென்று நம்பி, உங்களை அண்ணனென்றும், தம்பியென்றும் விளித்து உங்களுக்கு வாக்குச் செலுத்திய பெண்களுக்கு நீங்கள் செய்கிற நன்றிக்கடன் இதுதானா? அதிமுகவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களைப் பதவி விலகச் செய்து, கட்சியைவிட்டு வெளியே வரச் செய்த நீங்கள், குற்றமிழைத்த உங்களது கட்சியின் சட்டமன்ற உறுப்பினரைப் பதவிவிலகச் செய்து, கட்சியைவிட்டு வெளியேற்ற மட்டும் ஏன் தயங்குகிறீர்கள்? எல்லாவற்றையும்விட ஆட்சியைத் தக்க வைப்பதற்கான ‘பெரும்பான்மை’ கணக்குதான் உங்களுக்குப் பெரிதாகத் தெரிகிறதா? ‘எல்லாம் மேலிடத்துக்குத் தெரியும்’ எனக் குற்றவாளிகள் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் அதிகாரத்திமிரில் பேசியிருக்கிறார்களே, யார் அந்த மேலிடம் முதல்வரே? நீங்கள்தான் அந்த மேலிடமா? இல்லை! உங்களுக்கு மேலேயும் ஒரு மேலிடம் இருக்கிறதா? என்னப் பதில் வைத்திருக்கிறீர்கள்?
வழக்கம்போல, ‘பழி போடுகிறார்கள்’ எனப் பொதுமேடையில் ஒப்பாரி வைத்துப் பொறுப்பைத் தட்டிக் கழிக்கப் போகிறீர்களா? இல்லை! ‘சிங்கப்பெண் படை’ எனும் பல்லில்லா படையை வைத்துக் காலங்கடத்தப் போகிறீர்களா? குற்றவாளிகளைக் கைதுசெய்யும் அதிகாரமோ, குற்றத்தின் பின்புலத்தைப் புலனாய்வு செய்யும் அதிகாரமோ, விசாரணை செய்யும் அதிகாரமோ என எவ்வித அதிகாரமுமற்று வெறும் ரோந்துப்பணி செய்வதற்கு மட்டும் எதற்கு ஒரு தனிப்படை? 4 கோடி பெண்களின் தொகையைக் கொண்டுள்ள மாநிலத்தில் 5,000 பேரைக் கொண்ட சிங்கப்பெண் படை வெறும் ரோந்துப் பணிகளின் மூலமே பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமென்பது ஏமாற்று வாதமில்லையா? ஏற்கனவே, காவல்துறை வைத்திருந்த ‘பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்’ என்பதற்கும், ‘சிங்கப்பெண்’ படைக்கும் என்ன பெரிய மாறுபாடு? சட்டவிரோதப் போதைப்பொருட்களின் புழக்கத்தைத் தடுக்கவோ, மதுக்கடைகளை முற்றாக மூடவோ, போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தவோ என எந்த முயற்சியும் எடுக்காதுவிட்டுவிட்டு, சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவேன்; பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்வேன் என மேடையில் வாய்ச்சவடால் விடுவது எதற்கு முதல்வரே? குற்றமிழைக்கும் குற்றவாளிகள் எவராயினும் பாரபட்சமின்றி சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டியது ஒரு பொறுப்புள்ள அரசின் தலையாயக் கடமை. அதனை இனியாவது உணர்வீர்களா?
லாட்டரியை 1975ஆம் திமுகதான் தடை செய்தது எனப் பேசியிருக்கிறார் சுப.வீ.
அதற்கான தரவுகள் ஏதேனும் இருக்கிறதா? இல்லை! சும்மா அடித்து விட்டீர்களா ஐயா? @Suba_Vee