நம் உயிருக்கு நிகரான கலைஞர் அவர்கள் வாழ்ந்த கோபாலபுரம் மற்றும் சி.ஐ.டி. குடியிருப்பு இல்லங்களில், தலைவர் @mkstalin அவர்கள் மற்றும் கழக முன்னணியினருடன் சென்று கலைஞர் அவர்களின் பிறந்த நாளையொட்டி, அவர்களது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதைச் செலுத்தினோம்.
கலைஞர் அவர்களின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும்!
#KalaignarForever
சமத்துவத்தை பேசியவர்கள் பலர்,
சமத்துவத்தை சட்டமாக்கியவர்கள் சிலர்.
சமத்துவத்தை ஆணி அடித்தது போல்
தமிழ் நாட்டு மக்கள் மனங்களில் பதித்தவர்
முத்தமிழ் அறிஞர் திரு/Dr மு கருணாநிதி என்னும் கலைஞர் ❤️🖤
#கலைஞர்#Kalaignarforever#TheRealOGKalaignar
திராவிட குல சாமி பிறந்த நாள் இன்று. கழக அபிமானிகள் வீட்டு திருவிழா இன்று 🖤❤️
வாழ்க! வாழ்க! வாழ்கவே!
டாக்டர் கலைஞர் புகழ் வாழ்கவே!
திராவிடப் பெருஞ்சுவர் டாக்டர் கலைஞர் புகழ் ஓங்குகவே🖤❤️
எங்கோ ஓர் முதல் பட்டதாரி!
எங்கோ ஓர் கலைஞர் காப்பீடு பயனாளி!
எங்கோ ஓர் இலவச மின்சார விவசாயி!
எங்கோ ஒர் உழவர் சந்தை பயனாளி!
எங்கோ ஓர் கைம்பெண்!
எங்கோ ஓர் திருநங்கை!
எங்கோ ஓர் மாற்றுத்திறனாளி!
உன்னை வாழ்த்திக்கொண்டுதான் இருப்பார்கள்
#கலைஞர்103 🖤♥️🔥
இந்த மாதிரி திருப்பி அடிக்கணும்..
இந்த மாதிரியான பத்திரிக்கையாளர் சந்திப்பு அடிக்கடி நடத்தப்பட வேண்டும்
அதுவும் ஆ ராசா போன்றவர்களால் மட்டுமே நடத்தப்படுவது நல்லது
👌👌👌
இன்னும் நூறு வருடம் போனாலும், #Kalaignar200 னு அன்னைக்கும் கொண்டாடிட்டு இருப்போம் தமிழ்ச் சமூகம் அவரை நன்றியோடும் பெருமையோடும்..🥹
The Greatest CM India has ever Had..!!
Forever Grateful, THALAIVARE!
Love you So much..🖤❤️💙
#FatherOfModernTamilnadu 🙏
சமூகத்தில் நிலவிய அவலநிலையை போக்கிட அனுதினமும் செயலாற்றியவர், சமூகநீதி எனும் அருமருந்து கொண்டு அனைவரையும் காத்த ஈடு இணையற்ற தலைவர் கலைஞர் அவர்களின் பிறந்தநாள்!
#KalaignarForever
கலைஞர் கட்டிய கத்திப்பாரா....
ஸ்டாலினின் மெட்ரோ...
திமுகவின் ஆட்சியில் தமிழ்நாடு அடைந்த வளர்ச்சிக்கு சான்று இது தான்...
#கலைஞர்103#KalaignarForever#Kalaignar103
தமிழ்ச் சமூகத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட தம் பொதுவாழ்வில் எத்தனையோ ஏற்றத் தாழ்வுகள், வெற்றி - தோல்விகள், விமர்சனங்கள் என அனைத்தையும் கடந்து, அரை நூற்றாண்டுக்கும் மேலாக தமிழக அரசியலின் மையப் புள்ளியாகத் திகழ்ந்த மகத்தான ஆளுமை!
அரசியல் ரீதியாக ஏற்பட்ட அத்தனை எதிர்ப்புகளையும் -நெருக்கடிகளையும் முறியடித்து, பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள் தொடங்கிய நமது திராவிட முன்னேற்றக் கழகம், உயிரோட்டமுள்ள, வலிமையான மக்கள் இயக்கமாக என்றும் நிலைத்திருக்கும் வகையில் வழிநடத்திய தன்னிகரற்றத் தலைவர்!
சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக் குறியீடுகளில், இன்று இந்தியாவின் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு விளங்குவதற்கு வலுவான அடித்தளம் அமைத்திட்ட, தொலைநோக்கு பார்வை கொண்ட முதல்வர்!
இலக்கியம், நாடகம், திரைப்படம், பத்திரிகை எனப் படைப்புலகின் அனைத்துத் துறைகளிலும் தன் எழுத்துக்களால் அழியாத முத்திரை பதித்து, தலைமுறைகள் கடந்தும் நிலைத்திருக்கும் பங்களிப்புகளை வழங்கிய மாபெரும் கலைஞர்!
நீதிக்கட்சி மற்றும் சுயமரியாதை இயக்கம் வகுத்தளித்த சமூகநீதி, சமத்துவம், பகுத்தறிவு ஆகிய கொள்கைகளை இறுதிவரை உறுதியாக ஏந்தி நின்ற கொள்கை வீரர்!
தமிழினக் காவலர், முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளான இன்று, அவரதம் மகத்தான பொதுவாழ்வையும், பெரும்புகழையும் போற்றுவோம்.
வாழ்க கலைஞரின் புகழ்!