இறுகப் பற்றும் எதுவும் கரங்களை சிவக்க வைத்து ரணப்படுத்துவதை தவிர வேறொன்றும் பெரிதாக செய்துவிடாது அதனால அவங்கள போக விட்ருங்க அவங்க கரமாவது மென்மையாகவே இருக்கட்டும் அதுதான் அன்பு!!!
நிரூபித்தலிலேயே வாழ்க்கை முடிந்துவிடுகிறது அதனால் நான் எல்லோரையும் நம்பி விடுவேன் பெருசா என்னாகிவிடப் போகிறது கொஞ்சம் ஏமாந்துப்போவேன் அவ்வளவுதானே அது எனக்கு நன்கு பழக்கப்பட்டதுதான்…
அவர்களாவது அவர்களின் வாழ்க்கையை வாழ்ந்துக்கொள்ளட்டும்!!!
எப்போது தன்னை மற்றவர்களிடம் இருந்து விடுவித்துக்கொண்டு…
தனக்குத்தானே ஆறுதல் சொல்லிக்க தன்னைத்தானே தேற்றிக்கொள்ள தனக்குள்ளேயே புலம்பிக்கொள்ள தனக்குள்ளேயே அழுதுக்கொள்ள
தன் கண்ணீரை தானே துடைத்துக்கொள்ள பழக்கப்படுத்திக் கொள்கிறோமோ அப்போதுதான் தனக்கென வாழ ஆரம்பிக்கிறோம்!!!
விலகுவதென்றானப்பின் வார்த்தைகளையோ செயல்களையோ நேர்த்தியாக கையாளுவதற்கு அதீத துணிச்சலும் அசாத்திய தெளிவான மனநிலையும் வேண்டும் அது இல்லாதவர்கள் யார் மனதையும் நோகடித்துக்கொள்ளாமல் அமைதியாக விலகிக்கொள்வது உத்தமம்!!!
நஞ்சினை பரிமாறுகிறார்களென தெரிந்தும் பிரியாணி உண்பதனை போல ஏன் ருசித்துக் கொண்டிருக்கிறாய்…
எனக்கு வேண்டியது சுவையோ உணவோ அல்ல பரிமாறும் ஒரு கரம் அவ்வளவுதான்!
எதுவும் இல்லாத வெறுமையில் ஏதேனும் இருந்துவிட்டுத்தான் போகட்டுமே…
யாரும் நம்மள ஏமாற்றவில்லை அவர்கள் மீதான நம்ம நம்பிக்கை பொய்த்துவிட்டது அவ்வளவுதான்!
ஒருத்தவங்களுக்கான பிம்பத்தை நாம உருவாக்கிக்கொள்ளாம இருந்துக்கிட்டோம்னாலே போதும் அவர்கள் அவர்களாகவும் நாம நாமாகவும் இருக்காலம்!
இருவருகளுக்கிடையேயான உறவும் அப்படியே இருக்கும்!!!