சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு பதிலுரை என்ற பெயரில் scripted அவதூறுகளை அள்ளிவீசி acting performance காட்டி இருக்கிறார் முதலமைச்சர்.
பேரவையின் live Camera-வை, சினிமா camera என்று நினைத்துக் கொண்டு அவர் பேச, அதனை எதிர்க்கட்சிகளின் குறுக்கீடுகள் இன்றி single take-இல் shoot செய்ய வேண்டும் என்று பேரவைத்தலைவர் மெனக்கெட்டது ஏற்புடையது அல்ல.
முதலமைச்சரின் பதிலுரையில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளும் - பஞ்ச் டயலாக்கும் மட���டும் தான் இருந்ததே தவிர,
மின்வெட்டு - விவசாயிகள் பிரச்சினை - மோசமாகி இருக்கும் சட்டம் ஒழுங்கு - வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான திட்டங்கள் பற்றி எந்த பதிலும் இல்லை.
எதிர்க்கட்சிகள் தூண்டுதலில் விவசாயிகள் போராடுவதாக விவசாயிகளை அவர் கொச்சை செய்ததுக் கண்டிக்கத்தக்கது.
குட்டிக்கதை சொல்கிறேன் என்ற அவரது உளறல் அவை மாண்புக்கு முற்றிலும் எதிரான���ு.
செங்கல்பட்டு கோர்ட்டில் கணவனை தேடும் மனைவி கதை எல்லாம் தமிழ்நாட்டுக்கே தெரியும்.
ஆகவே, @actorvijay என்பதை மறந்து, இனியாவது @CMOTamilnadu-வாக முதலமைச்சர் நடந்து கொள்ள வேண்டும்.
வம்சம் படத்துல கிஷோர்க்கு ஏன் விஷம் வைச்சேன்னு வில்லன் சொல்றப்ப எனக்கும் அவனுக்கும் எந்த பகையும் இல்ல,இந்த வம்சத்துல இவன் மட்டும் உயிரோட இருக்கானே இவன் செத்துட்டா இந்த வம்சம் அழிஞ்சுரும்னு நினைச்சு தான் கொண்ணேன்னு சொல்லுவான் அதே மனநிலை தான் இங்க பெருவாரியான மக்கள் மனசுல திமுக பத்தி இருக்கு.
வாரிசுகள் மூனு பேருக்கு அப்பன் ரெண்டு சென்ட் இடத்தை விட்டுட்டு போனா யாராவது ஒருத்தன் முழுசா அனுபவிக்கட்டும்னு விட்டு குடுக்காம ஆளுக்கு 200சதுரடியா பிரிச்சு அதுல வீட்டையும் கட்டி காலைல கோலம் போடுறதுல இருந்து நைட் பைக் நிப்பாட்ற வரைக்கும் பங்காளிகளோட சண்டை சச்சரவுனு நிம்மதி இல்லாம ஓடுற பெருவாரியான மக்களுக்கு வாழையடி வாழையா அதிகாரத்தையும் கட்சியையும் அது சார்ந்த சொத்துக்களையும் வாரிசுகளுக்கு எந்த இடையூறும் இல்லாம கை மாற்றி விட்டு செழிப்பா இருக்க கலைஞர் ஐயா குடும்பத்தை பாக்குறவனுக்கு இயல்பாவே ஆழ்மனசுல ஒரு வெருப்பு உருவாகும்.அதை வளர்த்து எடுத்து அணையாம பாத��துக்குறதுக்கு ஊடகங்களும் உயர்சாதி ஏழைகளும் தங்கள் வாழ்க்கையையே தியாகம் பண்ண தயார இருக்காங்க.
எம்ஜிஆர்க்கு இத்தனை மனைவிகள் இருந்தும் வாரிசு இல்லாதது திமுகவோட தப்பு கிடையாது.ஆனால் அவர் வாரிசு அரசியலை ஊக்குவிக்கலைனு வித்தியாசமா வருவாங்க, ஜெயலலிதா திருமணம் செய்யாததும் விஜய் மனைவிய விரட்டி விட்டு தனியா இருக்கதும் 45+ ஆண்ட்டிகளுக்கு யாருமே இல்லாம தனியா நிக்குறாங்க,இவங்க பாரு கொப்பும் குலையுமா குடும்பமா நின்னு ஒடுக்க பாக்குறாங்கனு ஒரு அனுதாபம் அவங்க மேலயும் காரணமே இல்லாத வெருப்பு திமுக மேலயும் தன்னால தோன்றும்.
உயர்சாதியினருக்கு தன் பக்கத்துல சூத்திரனை உக்கார வைச்சது பிரட்சனை,சூத்திரனுக்கு தனக்கு சமமா தலித்களை உக்கார வைச்சது பிரச்சனை,தலித்துக்கு தன்னை மாதிரியே பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவன் மீட்பராய் இருக்கது பிரட்சனை. எடப்���ாடி இன்னும் பத்து தேர்தல்ல தோற்றாலும் அவரோட MLA என்னிக்கை 30க்கு கீழ போகாது.அந்த மாதிரி அரசியல் புரிதல் இல்லாத பிளைன்ட் ஓட்டர்ஸ் திமுகவுக்கு கிடையாது.
ஆணுக்கு பெண் சமம்னா ஆணுக்கு ஈகோ பிரட்சனை, அம்மா வீட்டு சொத்துரிமைய விட தன் குழந்தைகளுக்கு தாய்மாமன் சீர் உரிமையை பெருசா நினைக்குறதும் தன் கணவர் வழி இழக்கும் சொத்துக்களின் மதிப்பும் பெண்களுக்கு வெருப்பை விதைக்குது.
தமிழ்நாட்���ுல ஆன்மீகத்துக்கு அடுத்தபடியாவோ அதைவிட ஒருபடி மேலயோ கொண்டாடுற சினிமால க��ட காட்டுற கெட்ட அரசியல்வாதிகள் எல்லாரும் திமுகவையே பிரதிபளிப்பாங்க.அதையும் பிரிவியூ ஷோ போய் பார்த்து நல்லா இருக்குனு பாராட்டுற திமுகவோட நாகரீக அரசியலும் கூட வெருப்புக்கு ஒரு காரணம் தான்.
பத்துருபா பிட்ச்சை போடுறப்ப கூட வாங்குறவனுக்கு ரெண்டு காலும் இல்லாம இருக்கனும்னு எதிர்பாக்குற பொது புத்தில தன்கிட்ட ஓட்டு வாங்கி அதிகாரத்துக்கு வர்றவன் எதாவது ஒருவகைல ஊனப்பட்டு நம்ம கிட்ட இறைஞ்சி கெஞ்சுற நிலைல இருக்கனும்ங்குற எதிர்பார்ப்பு மனநிலை இருக்கவனுக்கு திமுககாரனோட சுயமரியாதை கோட்பாடு பாக்க திமிராவும் ரவுடிதனம் மாதிரியும் தெரியிறதும் ஒரு காரணம்...
கடலூரில் 25 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளது மிகுந்த அதிர்ச்சியை எற���படுத்துகிறது.
இப்படி தொடர்ச்சியா நடக்குற குற்றச்சம்பவங்களை பார்க்கும் போது, தமிழ்நாட்டுல சட்டம் ஒழுங்குன்ற ஒன்னு இருக்கா இல்லையான்னு மக்களுக்கு சந்தேகம் வருது.
இந்த #SofaModelஅரசு அமைஞ்சது முதல், கொலை - கொள்ளை - பாலியல் வன்கொடுமைன்னு இப்படி குற்றங்கள் நடக்காத நாளே இல்ல.
தேர்தல் பிரச்சாரத்துல பக்கம் பக்கமா பேப்பர் வச்சு, சட்டம் ஒழுங்கு பத்தி வாய்கிழிய Punch டயலாக் பேசினவர், முதலமை��்சர் ஆனதும் Deep Sleep Mode-க்கு போய்ட்டாரு.
பெண்கள் பாதுகாப்புக்காக நீங்க அறிவிச்ச சிங்கப்பெண்கள் ப��ையோட தொடக்க விழாவை, கடைசி நேரத்துல ரத்து செஞ்சு இருக்கீங்க.
நிகழ்ச்சியை தள்ளி வைச்சு இருக்கீங்களா, இல்ல அந்த முயற்சியையே தள்ளிவச்சுட்டீங்களானு மக்கள் கேட்கிறாங்க.
சிங்கப்பெண் படைனு பேரையும், Uniform-ஐயும் மாத்துறது தான் மாற்றமா? இல்ல, சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும் அவகாசம் வேணுமா?
நீங்க டைம் எடுத்து கத்துக்கிட்டு வந்து சட்டம் ஒழுங்கை காப்பாத்துற வரை தமிழ்நாடு தாங்காது CM Sir.
#LawAndOrder
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே,
மே மாசத்துக்கான கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை 15-ஆம் தேதி வரவு வைக்கணும்.
ஏற்கனவே உள்ள திட்டத்தைத் தொடர இப்ப எதுக்கு அவகாசம்? என்ன மறுசீரமைப்பு பண்ண போறீங்க?
திராவிட மாடல் அரசின் மக்கள் நலத் திட்டங்கள் தொடரும்னு நேத்துதான சட்டப்பேரவையிலயே சொன்னீங்க?
மாசம் 2,500 ர���பாய்னு சொல்லிட்டு, ஆயிரம் ரூபாய கூட தராம இழுத்தடிக்கிறதுதான் உங்க மாற்றமா?
பேரவையில் இருந்தபோது பதிலளிக்காமல், வீட்டுக்குச் சென்று அறிக்கை வெளியிட்டிருக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு…
நாங்கள் வாங்கிய வாக்கு விழுக்காடு எங்களுக்குத் தெரியும். அதனால்தான் மக்கள் தீர்ப்பை மதித்து, எதிர்க்கட்சி வரிசையில் அமர்��்திருக்கிறோம்.
பெரும்பான்மை இல்லாத நிலையிலும், பதவி வெறியோடு ஆளுநர் மாளிகைக்கு நாங்க Daily Attendance போட்டுட்டு இருக்கல!
நாங்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டோம்னு சொல்றீங்களே. அப்படி நிராகரிக்கப்பட்ட எங்களுக்கு விழுந்த வாக்குகளைக் காட்டித்தான் நீங்க முதலமைச்சராவே ஆகியிருக்கீங்க. அதை மறந்துட்டீங்களா CM Sir?
2006-ல அமைந்த தி.மு.க. ஆட்சிய பத்தி, Post பண்ணியிருக்கீங்களே,, அந்த சமயத்தில உங்களைப் போல எதிர்த்தரப்பு MLA-க்களைக் கடன் வாங்கியோ, குதிரை பேரத்துல விலைக்கு வாங்கியோ, எந்தக் கட்சியையும் பிளவுபடுத்தியோ, sofa set அனுப்பியோ அமை��்கப்பட்ட ஆட்சி அது இல்ல.
முழுக்க முழுக்க தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோட - மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிதான் அது. அதை உங்களுக்குச் சொல்ல மறந்துட்டாங்க போல!
திராவிட முன்னேற்றக் கழகம் 2026 தேர்தலில் தோற்றிருக்கலாம். ஆனால், திராவிட மாடல் ஆட்சியின், மக்கள் நலத் திட்டங்கள் தொடரும் என உங்கள் வாயாலேயே சொல்ல வைத்ததுதான் எதிர்கட்சியா எங்களோட வெற்றி!
#sofamodel
தமிழ்நாட்டு மக்களில் 65 சதவீத வாக்காளர்களால் நிராகரிக்கப்பட்ட தமிழக வெற்றிக் கழக அரசின் நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பின்போது எதிர்க்���ட்சியான திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தோம்.
தூய சக்தி என்று சொல்லி மக்களை ஏமாற்றிய ஆளுங்கட்சி குதிரை பேரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டு வருகிறது. மேலும், மக்களுக்கு அளித்த தேர்தல் வா��்குறுதிகளையும் நிறைவேற்ற முயற்சிக்காமல், பொறுப்பைத் தட்டிக் கழிக்கிறது.
இதனால், வாக்களித்த மக்களின் நம்பிக்கையையும் கூட இந்த புதிய அரசு இழந்து வருகிறது என்பது வெளிப்படை.
மக்கள் தீர்ப்பால் பதவி நாற்காலி கிடைக்காத காரணத்தால், 'sofa' அரசியலை அரங்கேற்றும் த.வெ.க. அரசின் மீது பெரும்பான்மை மக்களுக்கு நம்பிக்கை இல்லை என்ற உணர்வை சட்டப்பேரவையில் பிரதிபலித்து உரையாற்றினோம்.
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் மாண்புமிகு பேரவைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு. ஜே.சி.டி. பிரபாகர் அவர்களுக்கும், மாண்புமிகு பேரவை���் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு. ரவிசங்கர் அவர்களுக்கும் எனது வாழ்த்துகள்.
மிகப் பெரும் ஆளுமைகளால் பெருமை பெற்ற பொறுப்பில் அமர்ந்துள்ள இருவரும், அந்த மரபினையும், பேரவையின் மாண்புகளையும் காத்திட வேண்டும்.
ஆளும்கட்சியாக இருக்கும் கட்சியின் உறுப்பினர்களின் எண்ணிக்கையைவிட, சட்டமன்றத்தில் மற்ற கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கைதான் அதிகம். அதுதான் இந்த முறை மக்களின் தீர்ப்பு!
அதை மதித்து, எதிர்க்கட்சிகளின் குரல் சட்டமன்றத்தில் அதிகம் ஒலிப்பதை உறுதிசெய்யும் வகையில் மாண்புமிகு பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இருவரும் அவையை வழிநடத்துவார்கள் என நம்புகிறேன்.