* திருத்தணியில் 34 வயதான வடநாட்டு இளைஞர் சூரஜ் என்பவரை 17 வயதுடைய நான்கு புள்ளீங்கோ பயல்கள் ஓடும் ரயிலில் அரிவாள் காட்டி மிரட்டி ரீல்ஸ் போட்டனர்.
* பிறகு அவர் அங்கிருந்து இறங்கி நடந்தபோது.. பின்தொடர்ந்தது.. தனியிடத்திற்கு கடத்தி சென்று கொடூரமாக வெட்டி வீழ்த்தி.. அதையும் வீடியோ எடுத்துள்ளனர்.
* இது தேசிய அளவில் செய்தியாக மாறியுள்ளது. பல கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
* 18 வயது கூட நிரம்பாத அரை டவுசர்கள் மனதில் இவ்வளவு வன்மவெறி ஏற..சமீபகாலமாக வரும் படங்களும் முக்கிய காரணம்.
* ரத்தம், துப்பாக்கி, கத்தி என படத்தின் போஸ்டர்களே ரத்தக்களறியாத்தான் இருக்கின்றன.
* படத்தில் போதை மருந்து கடத்தல், சாராய குத்துப்பாட்டு, ரத்தம் தெறிக்கும் வன்முறை, ஆபாச வார்த்தைகள் நிரம்பி வழிகின்றன.
* படம் முழுக்க இப்படியான காட்சிகளை வைத்துவிட்டு.. கடைசியில் drug free society, மயிரு free society என தத்துவம் பேசுவார்கள்.
* பல இயக்குனர்கள், ஹீரோக்கள் இப்படியான எழவெடுத்த குப்பைகளை வேண்டுமென்றே எடுக்கிறார்கள்.
* காரணம் கேட்டால் பழியை தூக்கி மக்கள் மீது போடுவார்கள். மக்கள் ரசிப்பதால் இப்படி எடுக்கிறார்களாம்.
* தக் லைஃப், கூலி போன்றவற்றை மக்கள் ஃப்ளாப் ஆக்கிவிட்டார்கள். ஆகவே இந்த genre ஐ நிறுத்தி விடுவீர்களா?
* வில்லன் செய்யும் அனைத்தையும் இப்போது ஹீரோ எனும் தடித்தாண்டவராயன்கள் செய்து வருகிறார்கள்.
* இந்த ரத்த மற்றும் கஞ்சா சாக்கடை படங்கள் எடுத்து Gen Z எனப்படும் தவிட்டு தற்குறிகளை.. வன்முறையை கொண்டாடும் கோமாளிகள் மற்றும் கொடூர அரக்கர்களாக மாற்றி வருகிறது தமிழ் மற்றும் இதர மாநில gangster படங்கள்.
* இதில் லோகேஷ் கனகராஜ் எனும் நபருக்கு முக்கிய பங்குண்டு.
* பல ஆண்டுகள் கழித்து ரஜினி படத்திற்கு A சான்றிதழ் வாங்க வைத்த பெருமை இவரையே சாரும். அதற்கு ரஜினியும் பொறுப்பு.
* தற்போது இந்த புண்ணியவான் ஹீரோவாக நடிக்கும் DC படத்தின் போஸ்டர் லட்சணத்தை பாருங்கள்.
* இயக்கம் அருண் மாதேஸ்வரனாம். ஒண்ணுக்கு ஒண்ணு சளைச்சது இல்ல.
* நீங்கள் கோடிகளில் சம்பாதிக்க இளைஞர்கள் மத்தியில் இப்படி கொடூர வன்முறை மற்றும் போதை கலாச்சார காட்சிகளை தொடர்ந்து உங்கள் இருவரின் படங்களிலும் வைப்பது கேவலமாக இல்லையா?
* உங்கள் வீட்டில் ஒருவரை இப்படி நான்கு மைனர் பயல்கள் வெட்டி சாய்த்தால் எப்படி இருக்கும்? அந்த வடமாநில இளைஞரின் குடும்பத்தார் மனநிலையை ஒருநிமிடம் யோசித்து பாருங்கள்.
* சில ஆயிரம் ரூபாய் சம்பளத்திற்கு பல ஆயிரம் கிலோ மீட்டர் பயணித்து.. அனாதையாக வெட்டுப்பட்டு கிடக்கிறார். இனி இவரது குடும்பத்தின் நிலையென்ன?
* இந்த பாவத்தில் ஒரு பங்கு உங்களுக்கும் உண்டு. அது உங்களையும் ஒருநாள் துரத்தும்.
* ரத்த வெறி, போதை வெறி, ஆயுத வெறி படங்களை எடுக்கும் சினிமாக்காரர்கள் மற்றும் அதை பார்த்து கொண்டாடும் ஒருதரப்பு மக்களின் மனநிலை மாறாவிட்டால்.. இப்படியான சம்பவங்கள் தொடராது என உத்திரவாதமில்லை.
* தற்போது 17 வயதில் இருந்து.. அடுத்து 10 வயது சிறார்கள் மனதிலும் இந்த வன்முறை எண்ணம் ஊடுருவதை தடுக்க வேண்டிய பொறுப்பு திரைத்துறைக்கும் உண்டு.
* திருந்தாத கோடம்பாக்க கோமாளிகள் இனியாவது திருந்த வேண்டும்.
* சென்சார் நடைமுறைகள் இன்னும் கடுமையாக வேண்டும்.