வேலைவாய்ப்பு மோசடி: செந்தில் பாலாஜி மீதான வழக்கை நடத்த அமலாக்கத்துறைக்கு
தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும்!
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் வேலை வழங்குவதாகக் கூறி அப்பாவி இளைஞர்களிடம் மோசடியாக வசூலித்த கோடிக்கணக்கான பணத்தை சட்டவிரோதமான பரிமாற்றம் செய்தது தொடர்பாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது தொடரப்பட்டுள்ள வழக்கில் விசாரணையைத் தொடங்குவதற்கு தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று அமலாக்கத்துறை கோரிக்கை விடுத்திருக்கிறது. அரசு நிர்வாகத்தில் தூய்மையை ஏற்படுத்தும் நோக்குடன் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது.
திமுகவைச் சேர்ந்த தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினர் செந்தில் பாலாஜி 2011-15 காலத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராக பணியாற்றிய காலத்தில், அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் ஓட்டுனர், நடத்துனர், தொழில்நுட்பப் பணியாளர்கள், பொறியாளர்கள் உள்ளிட்ட பணிகளை வழங்குவதாக கூறி பல்லாயிரக்கணக்கானோரிடம் கோடிக்கணக்கில் பணம் வசூலித்து ஏமாற்றியதாக சென்னை மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது, இந்த வழக்கின் விசாரணை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கை அடிப்படையாகக் கொண்டு, வேலைவாய்ப்பு மோசடி மூலம் கிடைத்த பணத்தை சட்டவிரோத பரிமாற்றம் செய்ததாக செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் உள்ளிட்டோர் மீது அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்து, அந்த வழக்கு சென்னையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் தான் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு 410 நாள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். ஆனாலும், முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்குத் தொடர அரசின் அனுமதி அவசியம் என்பதாலும், செந்தில் பாலாஜி மீது வழக்குத் தொடர முந்தைய திமுக ஆட்சியில் அனுமதி அளிக்கப்படவில்லை என்பதாலும் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் இன்னும் நீதிமன்ற விசாரணையைத் தொடங்க முடியவில்லை.
செந்தில் பாலாஜி மீதான வழக்கின் விசாரணைக்கு அனுமதி கோரி கடந்த ஆண்டு மே 14-ஆம் தேதி அப்போதைய ஆளுனர் ஆர்.என். இரவி அவர்களிடம் அமலாக்கத்துறை கோரிக்கை விடுத்தது. ஆனால், முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்குத் தொடர அனுமதி கோரி அரசிடம் தான் நேரடியாக விண்ணப்பிக்க வேண்டும் என்று கூறி அமலாக்கத்துறையின் கோரிக்கையை முந்தைய அரசு நிராகரித்து விட்டது. அதைத் தொடர்ந்து தான் இப்போது அமலாக்கத்துறை தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு உரிய ஆதாரங்களுடன் கடிதம் அனுப்பியுள்ளது.
போக்குவரத்துக் கழகங்களில் வேலை வழங்குவதாகக் கூறி ஆயிரக்கணக்கானோரிடம் பணம் வாங்கியதை செந்தில் பாலாஜியே ஒப்புக் கொண்டிருக்கிறார். அவ்வாறு பாதிக்கப்பட்ட பலருக்கு நேரடியாக பணத்தை திருப்பிக் கொடுத்ததாகவும் உயர்நீதிமன்றத்தில் அவர் தெரிவித்துள்ளார். இந்த மோசடி மூலம் கிடைத்த பணத்தை செந்தில் பாலாஜி சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்ததற்கு ஆதாரங்கள் உள்ளன. இத்தகைய குற்றங்களைச் செய்த ஒருவர், திமுக அரசால் உருவாக்கித் தரப்பட்ட பாதுகாப்புப் போர்வையை பயன்படுத்திக் கொண்டு தப்பிப்பதை அனுமதிக்கக் கூடாது.
முதலமைச்சர் விஜய் அவர்கள் தலைமையிலான தமிழக அரசின் நிலைப்பாடும் இத்தகையதாகவே உள்ளது. லஞ்சத்திற்கு எதிராக ஜீரோ சகிப்புத் தன்மையுடன் த.வெ.க. அரசு செயல்படும் என்று அக்கட்சியின் தேர்தல் அறிக்கையில் 87-ஆம் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு செயல்வடிவம் தரும் வகையில் செந்தில் பாலாஜி மீதான சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் நீதிமன்ற விசாரணையைத் தொடங்குவதற்கு தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu
Tamilnadu Tasmac Shops Closed | 513 டாஸ்மாக் கடைகள் மூடல்
தவெக ஆட்சி அமைந்தவுடன் தமிழ்நாட்டில் முதற்கட்டமாக வழிபாட்டு தலங்கள், கல்வி நிலையங்கள், பேருந்து நிறுத்தங்கள் அருகே உள்ள 717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டிருந்தார் முதலமைச்சர் விஜய்
அவரது உத்தரவை அடுத்து கடந்த ஒரு வாரத்தில் மட்டும் மாநிலம் முழுவதும் இதுவரை 513 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன
CM Vijay | Tasmac
#CMVijay | #Tasmac | #Tamilnadu | #TamilNews | #NewsTamil24x7
முதல்வர் விஜய் அவர்களிடம் நம்மால் நேரடியாக புகார் அளிக்க முடியும்
https://t.co/SjkxQ30KYd
உங்களின் தொலைபேசி எண் கொண்டு உள் நுழைந்து பின்
துறை வாரியாக உள்ளன
எந்த துறையோ அதை தேர்வு செய்து உங்களின் புகார்களை பதிவு செய்யலாம் 👍
நல்லதே நடக்கும் வெற்றி நிச்சயம் 🙏
@CMOTamilnadu
போதையில்லா தமிழகம் என்ற நோக்கில் தமிழக அரசின் முக்கிய உத்தரவுகள்‼️
🔹பள்ளி, கல்லூரி பகுதிகளில் திடீர் சோதனைகள்.
🔹Tasmac & bars-இல் surprise inspection.
🔹21 வயதிற்குட்பட்டவர்களுக்கு மது விற்கத் தடை.
🔹கள்ளச்சாரயம், போதைப்பொருள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை.
🔹விழிப்புணர்வு & de-addiction திட்டங்களை தீவிரப்படுத்துதல்.
பாதுகாப்பான சமூகத்திற்காக அவசியமான நடவடிக்கைகள். @CMOTamilnadu 👏
"வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்"
"தமிழ்நாட்டில் மிகப்பெரிய மாற்றங்கள் நிகழும். கனிமவள கொள்ளையை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
முதலமைச்சர் துறை சார்ந்த உயர் அதிகாரியுடன் ஆய்வு செய்து வருகிறார். துறை வாரியாக ஆய்வு செய்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும். பட்ஜெட் தாக்கலுக்கு பிறகே புதிய திட்டங்களை செயல்படுத்த முடியும்“
மதுரையில் அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி
#Madurai #MinisterNirmalKumar #CMVijay #TVK #Thanthitv
இன்று கவுண்டம்பாளையம் தொகுதி மக்களின் பாதுகாப்பு, நலன் மற்றும் வளர்ச்சி தொடர்பான முக்கிய அம்சங்கள் குறித்து Coimbatore City Additional Deputy Superintendent of Police (ADSP- Soundararajan) அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து கலந்துரையாடினேன்.
சட்டம் மற்றும் ஒழுங்கை வலுப்படுத்துதல், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்தல் மற்றும் தொகுதியின் முன்னேற்றத்திற்காக இணைந்து செயல்படுவது குறித்து முக்கிய ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது.
மகளிர் உரிமை தொகை 1000 ரூபாய் வரவு வைக்கப்பட்டது. விரைவில் வரவு வைக்கப்படும் என்று நேற்று மாண்புமிகு முதல்வர் விஜய் அறிவித்து இருந்த நிலையில் இன்று காலை வரவு வைக்கப்பட்டது.
@CMOTamilnadu | @TVKVijayHQ
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 வங்கி கணக்கில் வரவு வைப்பு @CMOTamilnadu 🔥
2011 & 2016 அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட
1.இரு சக்கர வாகன உதவித்தொகை
2.குழந்தை பாதுகாப்பு பொருட்கள்
3. அம்மா மருந்தகம்
4. பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி
5. அம்மா மினி கிளினிக்
6. தாலிக்கு தங்கம்
7. அம்மா உணவகம்
இவை எல்லாம் 2021 ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்ததும் நிறுத்தி வைக்கப்பட்டது
ஆட்சி தொடக்கத்தில் அம்மா உணவகத்தை அடித்து நொறுக்கியது திமுக அரசு பிறகு கொஞ்சம் கொஞ்சமா அம்மா உணவகத்தை கிடப்பில் போட்டுவிட்டது காரணம் அவற்றால் ஜெ வுக்கு பெயர் கிடைக்கிறது என்ற காழ்ப்புணர்ச்சி
அதே போல் ஆட்சி முடிவில் கல்லூரி மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு மட்டும் மடிக்கணினி வழங்கி வாக்கரசியல் செய்தது திமுக
ஆனால் 2026ல் தவெக ஆட்சிக்கு அதிமுக திட்டமோ திமுக திட்டமோ மக்களுக்கு பயன் திட்டம் எதுவாக இருந்தாலும் அவற்றை தொடர்ந்து செய்வோம் திமுகவை போல் எச்சை மற்றும் இழி புத்தி கொண்ட அரசு அல்ல தவெக அரசு 🫡
தலைமைச் செயலகத்திற்கு காலை 9 மணிக்கே வந்து, ஒரு சாதாரண அரசு ஊழியரைப்போல கடமையாற்றும் முதல்வரின் செயல், கடந்த கால ஆட்சியாளர்களின் மெத்தனப்போக்கிற்கு ஒரு சரியான பதிலடி. அதிகாரம் என்பது ஓய்வெடுக்க அல்ல, உழைக்கவே என்பதை தற்போதைய முதல்வர் நம் @TVKVijayHQ அவர்கள் நிரூபித்துள்ளார். பழைய வாரிசு அரசியலின் மந்தநிலையை மாற்றி, சுறுசுறுப்பான புதிய தமிழகத்தை நோக்கி @CMOTamilnadu யின் பயணம் தொடரட்டும்.
#தமிழகவெற்றிக்கழகம்
எந்த அரசு அலுவலகத்திலும் இவனுங்க இத்தனை வருஷம் வழக்கமா வாங்கிட்டு இருந்த வசூல், லஞ்சம் எல்லாமே நிறுத்தியாச்சு. இது எவ்ளோ பெரிய விஷயம். ஆனா இதை எல்லாம் யாரும் பேச மாட்டாய்ங்க. ஒன்னுமில்லாததை பிடிச்சிட்டு விமர்சனம் பண்ண வந்துருவானுங்க.
ஒரு தலைவன் சரியா இருந்தா போதும். மற்ற எல்லாமே சரியா இருக்கும்ன்னு தெரிஞ்சிக்கோங்க @mkstalin