Appointment & Postings of Deputy Collector - District Revenue Officer Cadre Officials issued on 28th Oct' 2026 by Tamilnadu Public Department..
#DRO
Rural Development & Panchayat Raj Department, #TamilNadu - Appointment of Special Officer for all Village Panchayats, Panchayat Unions & District Panchayats except newly formed 93 VP's & 09 PU's for the period from 20th Oct' 2026 to 19th April 2027 to excercise Powers
(1/4)
புறம்போக்கில் வீடா? இனி இருட்டு இல்லை! 250 சதுர அடி வீட்டுக்கு NOC இல்லாமல் EB கனெக்ஷன்! தமிழக அரசின் வரலாற்று சிறப்புமிக்க உத்தரவு
புறம்போக்கு நிலத்தில் குடிசை போட்டு, சின்ன வீடு கட்டி வாழும் ஏழை, எளிய, நடுத்தர மக்களின் பல ஆண்டு கனவு நிறைவேறுகிறது. புறம்போக்கில் வீடு இருந்தால் EB கனெக்ஷன் கொடுக்க மாட்டார்கள் என்ற நிலை இனி இல்லை. தமிழக அரசு அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
தமிழ்நாடு மின்வாரிய இயக்குநர் மண்டல தலைமை பொறியாளர்களுக்கும் அதிகாரப்பூர்வ உத்தரவை அனுப்பியுள்ளார்.
திட்டம் என்ன?
புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்ட, 250 சதுர அடிக்கு மிகாமல் (Not Exceeding 250 http://Sq.ft)* உள்ள வீடுகளுக்கு மட்டும், அரசு அதிகாரிகளிடம் இருந்து *No Objection Certificate (NOC) வாங்காமலேயே வீட்டு மின் இணைப்பு வழங்கப்படும்.
இதற்காகவே புதிய தனி கேட்டகிரி உருவாக்கப்பட்டுள்ளது.
புதிய பிரிவின் பெயர்: Low Tension Tariff IA(3) - Poromboke
மின் கட்டணம் சாதாரண வீட்டு கட்டணமான LT IA-Domestic கட்டணமே வசூலிக்கப்படும். இதற்காக LT Billing Software-ல் தனியாக வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
யாருக்கெல்லாம் கிடைக்காது? - 7 வகை நிலங்கள் கட்!
எல்லா புறம்போக்கும் இல்லை. அரசின் 'தமிழ் நிலம்' (Tamil Nilam) இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கீழ்கண்ட புறம்போக்கு நிலங்களில் உள்ள வீடுகளுக்கு இந்த சலுகை கிடையாது.
1. நீர் நிலை புறம்போக்கு - குளம், குட்டை, ஏரி, ஆறு
2. மேய்க்கால் புறம்போக்கு
3. மந்தைவெளி / மெய்ச்சல் தரை / மயான தரை புறம்போக்கு
4. வனத்துறை நிலங்கள் - Reserve Forest இல்லாத Forest Poromboke கூட
5. கன்டோன்மென்ட் பகுதிகள்
6. ரயில்வே நிலங்கள், மத்திய அரசுக்கு சொந்தமான நிலங்கள்
7. கோயில், தேவாலயம், மசூதி உள்ளிட்ட அனைத்து மத நிறுவனங்கள் பெயரில் உள்ள பட்டா மற்றும் கோயில் புறம்போக்கு நிலங்கள்
இவை தவிர உள்ள மற்ற புறம்போக்கு நிலங்களில் உள்ள வீடுகளுக்கு மட்டுமே இது பொருந்தும்.
மின் இணைப்பு பெற என்ன செய்ய வேண்டும்? முழு நடைமுறை:
Step 1: TNEB-யில் உள்ள FORM-I விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.
Step 2: நான்-ஜுடிசியல் முத்திரைத்தாளில் 3 உறுதிமொழிகளை எழுதி கொடுக்க வேண்டும்:
- அரசு நிலம் தேவை என்று கேட்டால் எப்போது வேண்டுமானாலும் காலி செய்து விடுவேன், மின் இணைப்பை துண்டிக்க சம்மதம்.
- இந்த மின் இணைப்பு கொடுப்பதால் எனக்கு நிலத்தின் மீது எந்த உரிமையும், பட்டாவும் வந்துவிடாது என்பதை அறிவேன்.
- எனது வீடு மேலே தடை செய்யப்பட்ட 7 வகை புறம்போக்கில் இல்லை என்று உறுதி அளிக்கிறேன்.
Step 3: Tamil Nadu Electricity Distribution Code-ன் Appendix III-ல் உள்ள *FORM-6 Indemnity Bond கொடுக்க வேண்டும்.
Step 4: சாதாரண வீட்டுக்கு கட்டும் Security Deposit-ஐ விட இரண்டு மடங்கு (Twice the normal rate) டெபாசிட் கட்ட வேண்டும். மற்ற அனைத்து கட்டணங்களும் வழக்கம் போல் வசூலிக்கப்படும்.
Step 5: அதிகாரிகள் என்ன செய்வார்கள்?
விண்ணப்பம் வந்ததும் Section Officer, சம்பந்தப்பட்ட VAO / வருவாய் அதிகாரியிடம் இருந்து 'தமிழ் நிலம்' போர்ட்டல் மூலம் அந்த நிலம் தடை செய்யப்பட்ட வகையா இல்லையா என்பதை உறுதி செய்வார். இதற்காக TNPDCL போர்ட்டலும், தமிழ் நிலம் போர்ட்டலும் API மூலம் இணைக்கும் பணி நடந்து வருகிறது. அது முடியும் வரை மேனுவலாக சரிபார்த்து கனெக்ஷன் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அறிக்கை தாக்கல்:
இந்த திட்டத்தில் எத்தனை விண்ணப்பம் வந்தது, எத்தனைக்கு கனெக்ஷன் கொடுக்கப்பட்டது, எத்தனை நிலுவையில் உள்ளது என்ற விவரத்தை அனைத்து மண்டல தலைமை பொறியாளர்களும் *3 மாதத்திற்கு ஒருமுறை (Quarterly), ஒவ்வொரு காலாண்டின் 5-ம் தேதிக்குள்* Chief Engineer / Commercial அவர்களுக்கு அனுப்ப வேண்டும்.
ஏழைகளின் வீடுகளுக்கு வெளிச்சம் தரும் இந்த திட்டம் தமிழகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
Commercial Taxes & Registration Dept, #TamilNadu introduced Paperless Registration for Settlement Deeds, Release Deeds, Partition Deeds : Revocation of Settlement Deeds relating to Family Arrangements - Parties to appear before Sub-Registrar for Authentication from 02nd Nov 2026
உள்ளாட்சிகளுக்கு கட்டிட அனுமதி அதிகாரம் அதிகரிப்பு - தமிழக அரசு அரசாணை!
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை G.O.(Ms) No.180, நாள்: 8.10.2026*-ன் படி,
குடியிருப்பு கட்டிடங்களுக்கு வழங்கப்படும் திட்ட அனுமதி அதிகாரம் 10,000 சதுர அடியிலிருந்து 16,140 சதுர அடியாக (1,500 சதுர மீட்டர்) உயர்த்தப்பட்டுள்ளது.
*விவரம்:*
- *மாநகராட்சி, நகராட்சிகள்:* 1,500 ச.மீ / 16,140 ச.அடி, 16 குடியிருப்புகள்
- *பேரூராட்சி, ஊராட்சிகள்:* 1,200 ச.மீ / 12,912 ச.அடி, 12 குடியிருப்புகள்
- *வணிக கட்டிடங்கள் (அனைத்து உள்ளாட்சிகளும்):* 2,000 ச.அடியிலிருந்து *5,380 ச.அடி (500 ச.மீ)* ஆக உயர்வு
இதன் மூலம் சிறு குடியிருப்பு மற்றும் சிறு வணிகர்கள் DTCP, CMDA அலுவலகங்களுக்கு செல்லாமல் உள்ளாட்சியிலேயே விரைவாக அனுமதி பெறலாம் என அமைச்சர் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புறம்போக்கு நிலங்களில் கட்டப்பட்ட வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்குவது தொடர்பான முக்கிய அறிவிப்பு.
06.07.2026 அன்று எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் நடத்திய ஆலோசனையில், பொதுமக்களிடம் இருந்து ஏராளமான மனுக்கள் வந்ததை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
புறம்போக்கு நிலத்தில் 250 ச.அடிக்குள் கட்டப்பட்ட வீடுகளுக்கு NOC இன்றி வீட்டு மின் இணைப்பு வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. நீர்நிலை, மேய்க்கால், வனம், ரயில்வே, கோயில் புறம்போக்கு நிலங்களுக்கு இது பொருந்தாது. புதிய LT Tariff IA(3) பிரிவின் கீழ் இணைப்பு வழங்கப்படும்.
குடும்ப சொத்து பத்திரங்கள் இனி காகிதமில்லாமல் பதிவு - தமிழக அரசாணை
தமிழகத்தில் குடும்ப உறுப்பினர்களுக்கு இடையேயான சொத்து பத்திர பதிவுகள் இனி காகிதமற்ற முறையில் (Paperless Registration) நடைபெறும் என பதிவுத்துறை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக வணிக வரி மற்றும் பதிவுத்துறை வெளியிட்டுள்ள G.O (Ms) No.149 (நாள்: 07.10.2026)-ன்படி,
2.11.2026 முதல் கீழ்கண்ட 4 வகை பத்திரங்களுக்கு காகிதமற்ற பதிவு கட்டாயம்:
1. குடும்ப செட்டில்மெண்ட் பத்திரம்
2. விடுதலைப் பத்திரம்
3. குடும்ப பாகப்பிரிவினை பத்திரம்
4. செட்டில்மெண்ட் ரத்து பத்திரம்
பொதுமக்கள் பத்திரத்தை ஆன்லைனில் தயார் செய்து பதிவேற்றினால் போதும். பதிவுக்கு காகித பத்திரம் கொண்டு வர தேவையில்லை. ஆதார் சரிபார்ப்புக்கு மட்டும் சார்-பதிவாளர் அலுவலகத்தில் நேரில் ஆஜரானால் போதும்.
STAR 3.0 திட்டத்தின் இரண்டாம் கட்டமான இந்த திட்டம் மூலம் வெளிப்படைத்தன்மை அதிகரிக்கும் என அரசு தெரிவித்துள்ளது.
இனி சனிக்கிழமை சார்பதிவாளர் அலுவலகங்கள் செயல்படாது தமிழ்நாடு முழுவதும் 100 சார் பதிவாளர் அலுவலகங்கள் சனிக்கிழமை தோறும் செயல்பட்டு வந்த நிலையில் அதற்கான அரசாணையை ரத்து செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.
👉CBDT has extended the ITR filing due date for AY 2026-27 for taxpayers whose accounts are subject to tax audit.
👉The original due date of 31 October 2026 has been extended to 21 November 2026.
👉CBDT has extended the tax audit report due date from 30 September 2026 to 21 October 2026.
👉The extension applies to persons covered under Explanation 2 to Section 139(1) of the Income-tax Act, 1961.
👉CBDT has stated that a formal order/notification will be issued separately
@IncomeTaxIndia@TheNewsconomy@theicai@icsi_cs@ICMAICMA