*மேடை நாகரிகத்தைக் குழிதோண்டிப் புதைத்த திமுக!!!*
மாநிலத்தின் மாண்புமிகு முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களைப் பொதுக்கூட்ட மேடையிலேயே அருவருக்கத்தக்க, தரம் தாழ்ந்த சொற்களால் ஒரு பெண் பேச்சாளர் வசைபாடியதும், அதை மேடையில் இருந்தபடியே சென்னை மேயர் சிரித்து ரசித்ததும், எம்பி கனிமொழி தடுக்காமல் கள்ள மௌனம் காத்ததும் ஒட்டுமொத்தத் தமிழக அரசியலையே தலைகுனிய வைத்துள்ளது!
பொதுவெளியில் நாகரிகம், பெண்ணியம், சமூக நீதி எனப் பாடம் எடுக்கும் திமுகவின் உண்மை முகம் இந்த மேடையில் அம்பலமாகியுள்ளது. மேடைகளில் பெண்களையும் இப்படிப்பட்ட கீழ்த்தரமான சாக்கடை அரசியலுக்குப் பழக்கப்படுத்துவதுதான் திமுகவின் ‘முற்போக்கு’ கலாச்சாரமா?
மாநிலத்தின் முதலமைச்சரை இவ்வளவு கொச்சையாகப் பேசும்போது, தடுத்துக் கண்டிக்க வேண்டிய மேயர் அதை வெட்கமின்றி ரசிப்பதும், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கைகட்டி வேடிக்கை பார்த்துவிட்டு பின்னர் லேசான கண்டிப்பை மட்டுமே காட்டுவதும் இவர்கள் அந்த இழிவான அவதூறுக்கு முழு உடந்தை என்பதையே காட்டுகிறது.
4 மாத கால தவெக மக்கள் அரசின் ஊழலற்ற நிர்வாகத்தையும், இடைத்தேர்தல் படுதோல்விகளையும் தாங்கிக்கொள்ள முடியாத அரசியல் விரக்தியே திமுகவை இந்த எல்லைக்குத் தள்ளியுள்ளது. கொள்கை ரீதியாக மோத வக்கற்ற கோழைகள்தான் தனிநபர் வசவுகளைக் கையில் எடுப்பார்கள்.
முதலமைச்சரை அநாகரிகமாகப் பேசியவரை உடனடியாகக் கட்சியிலிருந்து நீக்குவதோடு, அதை மேடையில் ரசித்து வேடிக்கை பார்த்த மேயர் பிரியாவும், எம்பி கனிமொழியும் தமிழக மக்களிடம் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்!
பொறுமையைப் பலவீனம் என எண்ணி எல்லை மீறும் திமுகவின் இந்த மலிவான அரசியலுக்குத் தமிழ்நாட்டு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்!!
மேலும் கருத்துச் சுதந்திரத்தின் எல்லை மீறி அவதூறு பரப்புபவர்கள் மீது, சட்டம் தனக்கான பாதையில் பாரபட்சமின்றித் தன் கடமையைச் செய்யும்!!
@TVKVijayHQ | @TVKPartyHQ | @TVKHQITWingOffl | @BussyAnand
#தமிழகவெற்றிக்கழகம் #TVK
நம் வாழ்வின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் உறுதுணையாக இருக்கும் கருவிகள், வாகனங்கள் மற்றும் நாம் செய்யும் தொழில் என அனைத்தையும் இறைவனாகப் போற்றி, உழைப்பின் உயர்வையும், தொழிலின் மேன்மையையும் போற்றும் ஆயுத பூஜை நன்னாளையும், கல்வி, கலை, தொழில் என புதிதாகத் தொடங்கும் அனைத்து முயற்சிகளையும் சிறக்கச் செய்யும் வெற்றித் திருநாளாம் விஜயதசமி நன்னாளையும் கொண்டாடும் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இத்திருநாட்கள், அனைவரின் வாழ்விலும் புதிய நம்பிக்கையையும், வளத்தையும் கொண்டு சேர்க்கட்டும்! நன்மைதரும் புதிய முயற்சிகளை முன்னெடுத்து, கல்வியிலும், தொழில் வளர்ச்சியிலும் மேன்மையுற்று, வெற்றித் தமிழகத்தைப் படைத்திடுவோம்!
ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி கிடைக்கட்டும்! அனைவரது வாழ்விலும் நலமும், வளமும் பெருகட்டும்!
#CMJosephVijay
Yesterday evening to late night, i witnessed One of most brutal rain fall in recent times in Chennai 💥
But the beauty is today morning the water seems to be drained in places ver i usually used to see water over the past few years. Credit to previous dmk government.
Your govt detained me for 3 days without informing my family. The arrest itself was illegal. And then you slapped preventive detention on me which was once again deemed illegal by the high court and you don’t have an iota of shame questioning others.
பெரியார் அறிவுலகமும்
தி.மு.க தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின்
பொறாமைப் புலம்பல்களும்....
மக்களின் தேவைகளில் இருந்துதான் திட்டங்கள் உருவாகின்றன. ஒரு திட்டம் என்பதையோ... அதை நிறைவேற்றும் நடவடிக்கையோ ஒரு தனி மனிதரின் சிந்தனையும் உழைப்பும் கிடையாது. அதுவும் அரசு நிர்வாகத்தைப் பொறுத்தவரையில், மக்களின் தேவைகளைத் தீர்ப்பதற்காக, மக்களின் வரிப்பணத்தில், அப்போது ஆட்சியில் இருக்கும் ஒரு அரசு, திட்டங்களை அறிமுகப்படுத்தி, அதை நடைமுறைக்கு கொண்டுவருகிறது. இடையில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டாலும், அடுத்து வரும் அரசு அந்தத் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தி நடைமுறைக்கு கொண்டுவருவதில் என்ன பிழை இருக்க முடியும்? புதிதாகப் பொறுப்பேற்ற அரசு, முந்தைய அரசு கொண்டுவந்தது என்பதற்காகவே, ஒரு திட்டத்தையோ... கட்டுமானத்தையோ நிறுத்தினால்தான் அதில் குற்றம் சொல்ல முடியும். மக்கள் நலனை மட்டும் கருத்தில்கொண்டு, முந்தைய அரசு கொண்டு வந்த திட்டங்கள் என்றாலும், அதை காழ்ப்புணர்ச்சி இல்லாமல் தொடரும் ஒரு அரசாங்கத்தை யார் குறை சொல்ல முடியும்? என்ன குற்றம் காண முடியும்? அப்படிச் செய்வதற்கு யாருக்கு என்ன தார்மீக உரிமை இருக்கிறது?
2016-2021 காலகட்டத்தில் அ.தி.மு.க தலைமையிலான ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்டு - ஏறத்தாழ முடியும் நிலையில் இருந்த பல திட்டங்களை, அதன்பிறகு வந்த தி.மு.க தலைமையிலான அரசின் முதலமைச்சராக இருந்த திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார்; சில திட்டங்களை அன்றைக்கு துணை முதலமைச்சராக இருந்த உதயநிதி அவர்களும் தொடங்கி வைத்தார். மற்ற தி.மு.க அமைச்சர்களும் தொடங்கி வைத்துள்ளனர். அதைத் தாங்களே சிந்தித்து செயல்படுத்தியதைப் போல, கோடிக்கணக்கில் அரசு பணத்தை - மக்கள் பணத்தை விரயமாக்கி விளம்பரமும் செய்து கொண்டனர்.
அதற்கு உதாரணமாக ஒன்றல்ல... இரண்டல்ல... ஏராளமான திட்டங்களைப் பட்டியல் போட முடியும். குறிப்பாக, கொங்கு மண்டல மக்களின் பல்லாண்டு கால கனவாக இருந்த அத்திக்கடவு - அவிநாசி குடிநீர் திட்டத்திற்கு முந்தைய அ.தி.மு.க ஆட்சியில் 2019-ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. 80 சதவிகிதப் பணிகள் முடிக்கப்பட்டன. கொரோனா தொற்று பிரச்சனையால் 20 சதவிகித வேலைகள் முடியாமல் இருந்த நேரத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அப்படி முடிக்கப்பட்டிருந்த வேலைகளை 2022-ல் முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் 2024 - ஆம் ஆண்டு தொடங்கி வைத்தார். அதற்காக கோடிக்கணக்கில் செலவழித்து விளம்பரம் செய்து கொண்டார்.
அதுபோல, ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல், நாமக்கல், திருப்பூர், நீலகிரி, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், அரியலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 11 நகரங்களில் அமைந்த அரசு மருத்துவக் கல்லூரிகள் 2020-ஆம் ஆண்டு, முந்தைய அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் அடிக்கல் நாட்டி வேலைகள் தொடங்கப்பட்டன. 90 சதவிகித வேலைகள் முடிந்த நிலையில், 2022 ஆம் ஆண்டு தி.மு.க ஆட்சியில் முதலமைச்சராக இருந்த திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் காணொலிக் காட்சி மூலம் அந்த 11 மருத்துவக் கல்லூரிகளையும் திறந்து வைத்தார். அப்போது, "கல்வியிற் சிறந்த தமிழ்நாடு" என்று மு.க.ஸ்டாலின் அவர்கள் விளம்பரம் செய்து கொண்டார்.
கோவை மருத்துவக் கல்லூரியில் நவீன உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் JICA (Japan International Corporation Agency) பன்னோக்கு சிறப்புப் பிரிவு கட்டிடத்திற்கான வேலைகள், அந்தக் கல்லூரியின் எம்.பி.பி.எஸ் (MBBS) இடங்களை 150-லிருந்து 250 ஆக உயர்த்துவதற்காக 80 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய கல்வித் தொகுதி, விடுதிகள் மற்றும் நூலகக் கட்டிடங்களுக்கான அடிக்கல் நாட்டுவிழா, முந்தைய அ.தி.மு.க ஆட்சிக் காலத்திலேயே தொடங்கியதுதான். அவற்றில் மீதம் இருக்கும் வேலைகளை முடித்துவிட்டு, மார்ச் 2024-இல் அன்றைய முதலமைச்சர் திரு.மு. க. ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்து, அதைத் தனது ஆட்சியின் சாதனையாக சொல்லிக் கொண்டிருந்தார்.
இதே கதைதான் திருச்சி சாலை மேம்பாலம், உக்கடம் - ஆத்துப்பாலம் மேம்பாலம், கவுண்டம்பாளையம் மேம்பாலங்கள் எல்லாம் அ.தி.மு.க ஆட்சியில் திட்டமிடப்பட்டு வேலைகள் தொடங்கப்பட்டவை. அவற்றுக்கான திறப்பு விழாக்களை எல்லாம் தி.மு.க ஆட்சியில் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் செய்தார்கள். அதுபோலவே, ஊட்டி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் பழங்குடியின மக்களுக்கான சிறப்பு சிகிச்சைப் பிரிவுகளுக்கான அடித்தளம் போடப்பட்டது அ.தி.மு.க ஆட்சியில்தான். அதைத்தான் ஜனவரி 2022 அன்று அன்றைய முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அவசர அவரசமாகத் திறந்து வைத்தார். மேலும், அ.தி.மு.க ஆட்சியில் தொடங்கப்பட்ட பழங்குடியினருக்கான சிறப்பு வார்டு உள்ளிட்ட அதிநவீன வசதிகள் கொண்ட புதிய 700 படுக்கை மல்டி-ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை வளாகத்தை 6 ஏப்ரல் 2025 திரு. மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். இப்படி ஒரு அரசாங்கம் தொடங்கிய வேலைகளைத் தொடர்ந்து செய்து அதை திறந்து வைப்பது வழக்கமாக நடைபெற்றதுதான். அது சரியும்கூட. காரணம், திட்டங்களும், அதன் பயன்களும் "மக்கள் நன்மைக்காக..." மட்டுமே.
அந்த அடிப்படையில் தமிழ்நாட்டு மக்களின் புதிய நம்பிக்கையாக அமைந்துள்ள தமிழக வெற்றிக் கழக அரசு முந்தைய அரசுகள் கொண்டு வந்த திட்டங்களில், மக்கள் நலனுக்கானவை என்பனவற்றை அப்படியே தொடர்கிறது; குறைபாடுள்ள திட்டங்களை மேம்படுத்தி செயல்படுத்துகிறது; பாதியில் நிற்கும் திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்துகிறது. அ.தி.மு.க ஆட்சியில் கொண்டுவரப்பட்ட அம்மா உணவகம், தி.மு.க ஆட்சியில் கொண்டுவரப்பட்ட காலை உணவுத் திட்டம் போன்றவை, "மக்கள் நலனே முக்கியம்" என்ற அடிப்படையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் திரு.சி.ஜோசப் விஜய் அவர்களின் தமையிலான த.வெ.க அரசும் செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. மக்களுக்காக... மக்களின் வரிப்பணத்தில் தொடங்கப்பட்ட திட்டங்கள் அவை. அந்த அடிப்படையில்தான், கோவை காந்திபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள, 'பெரியார் அறிவுலகம்' நூலகத்தையும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் திரு.சி.ஜோசப் விஜய் அவர்கள் திறந்து வைத்துள்ளார். கோவை மக்களுக்கு மட்டுமல்ல... ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் மாணவர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் கல்வியாளர்களுக்கும் காலம் கடந்து 'பெரியார் அறிவுலகம்' பயன் அளிக்கும். அதை கோவை மக்கள் உள்பட அனைவரும் பயன்படுத்தி பயன்பெற வேண்டும் என்ற நல்லெண்ணத்தில், குறுகிய மனப்பான்மைக்கு இடம்கொடுக்காமல், எந்தவித தம்பட்டமும் அடித்துக்கொள்ளாமல் இன்று 'பெரியார் அறிவுலகம்' திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதில் தம்பட்டம் அடித்தோ... தன்னை முன்னிறுத்தியோ மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் திரு.சி.ஜோசப் விஜய் அவர்கள் புகழும் பெருமையும் பெற வேண்டிய அவசியமும் இல்லை. அவருடைய புகழும் பெருமையும் உலகம் முழுதும் தமிழர்கள் வாழும் அத்தனை நாடுகளிலும் ஏற்கெனவே நிலைபெற்றுவிட்ட ஒன்று!
ஆனால், ஜனநாயக நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசுகள் எப்படி செயல்படுகின்றன என்ற அடிப்படைப் புரிதல் இல்லாதவரைப்போல், முன்னாள் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையிலான அரசு செயல்படுத்தும் திட்டங்களை, தானே சிந்தித்து... தான் ஒருவரை வடிவமைத்து, கட்டமைத்துச் செயல்படுத்தியதைப் போல "காலையில் ஒரு அறிக்கை... மாலையில் ஒரு அறிக்கை" என்று காழ்ப்புணர்வில் வெளியிட்டு தன் ஆற்றாமையை வெளிப்படுத்திக் கொண்டு இருக்கிறார்; பொறாமையில் துடித்துக் கொண்டிருக்கிறார்.
இத்தனை திட்டங்களை நீங்களே கொண்டுவந்தீர்கள் என்று மக்கள் உணர்ந்திருந்தால் உங்களை மீண்டும் தேர்ந்தெடுத்திருப்பார்களே... பெயரளவுக்கு திட்டங்களை அறிவித்துவிட்டு, அவற்றின் உருவாக்கத்தில் நீங்கள் செய்த ஊழல்கள், தேர்தல் நேரத்தில் வெற்று விளம்பரத்திற்காக செய்யப்பட்ட அறிவிப்புகளால் வெறுத்துப் போனதால்தானே, கொளத்தூர் மக்களே உங்களை தோல்வியடையச் செய்தார்கள். தமிழ்நாட்டு மக்கள் உங்கள் கட்சி வேட்பாளர்களில் பெரும்பாலானவர்களை தோற்கடித்து வீட்டிற்கு அனுப்பினர். அதன்பிறகும், உண்மையை உணராமல், "என் திட்டம்... என் திட்டம்..." என்று இன்றும் பெருமைபேசி இப்போதும் சமூக வலைத்தளங்களில் பொறாமையில் பொங்கித் தவிக்கும் உங்களை மக்கள் இனிமேல் எந்தக் காலத்திலும் நம்பமாட்டார்கள்.
அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார்
வழுக்காயும் கேடீன் பது
என்ற வள்ளுவரின் குறளுக்குப் பொருள்,
"பொறாமை கொண்டவரைக் கெடுப்பதற்கு வேறு எந்தப் பகையும் வேண்டாம். அவர்களின் பொறாமையே அவர்களை அழித்துவிடும்" என்பதுதான்.
அதுபோல், இப்போது பொறாமையால் பொங்கிப் பொருமிக் கொண்டிருக்கும் உங்களை உங்கள் பொறாமையே அழித்துவிடும் என்பதை எப்போது உணரப்போகிறீர்கள்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையிலான ஆட்சி, மக்களுக்கான திட்டங்களைத் தீட்டி, மக்கள் நன்மைக்கான செயல்பாடுகளை முன்னெடுத்து தமிழ்நாட்டு மக்களின் உள்ளத்தில் என்றும் நிலைத்து நிற்கும்; தமிழ்நாட்டு அரசியல் களத்தில் தொடர்ந்து வெற்றி நடைபோடும்!
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், வெற்றித் தலைவர் அவர்களை, அவரது இல்லத்தில், மாண்புமிகு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல்காந்தி அவர்கள் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்தார்.
25 ஏக்கர் 51 லட்சம் ரூபாய்க்கு அண்ணன் @SeemanOfficial வாங்கி உள்ளார் !
அதுவும் 2025 இல் !
இப்படி ஒரு நேர்மையாளர் நமக்கு கிடைத்ததற்கு , நாம் புண்ணியம் செய்து இருக்க வேண்டும் !!
இப்போது முக்கிய நிர்வாகிகள் 25 பேருக்கு , ஒவ்வொரு ஏக்கர் , அண்ணன் பிரித்து கொடுப்பார் !!