🚗 ரோட்டார் வாகன பதிவு எண்கள் ✨
தமிழ்நாடு RTO மாவட்ட குறியீடுகள் 📍
TN1–10 சென்னை
TN11 தாம்பரம்
TN12 பூந்தமல்லி
TN13 அம்பத்தூர்
TN14 சோழிங்கநல்லூர்
TN15 உருண்டார்பேட்டை
TN16 திண்டிவனம்
TN18 செங்குன்றம்
TN19 செங்கல்பட்டு
TN20 திருவள்ளூர்
TN21 காஞ்சிபுரம்
TN22 மீனம்பாக்கம்
TN23 வேலூர்
TN24 கிருஷ்ணகிரி
TN25 திருவண்ணாமலை
TN28 நாமக்கல்
TN29 தர்மபுரி
TN30 சேலம் மேற்கு
TN31 கடலூர்
TN32 விழுப்புரம்
TN33 ஈரோடு கிழக்கு
TN34 திருச்செங்கோடு
TN35 திருக்கோவிலூர்
TN36 கோபிச்செட்டிபாளையம்
TN37 கோயம்புத்தூர் தெற்கு
TN38 கோயம்புத்தூர் வடக்கு
TN39 திருப்பூர் வடக்கு
TN40 மேட்டுப்பாளையம்
TN41 பொள்ளாச்சி
TN42 ஊட்டி
TN45–77
TN45 திருச்சி மேற்கு
TN46 பெரம்பலூர்
TN47 கரூர்
TN48 ஸ்ரீரங்கம்
TN49 தஞ்சாவூர்
TN50 திருவாரூர்
TN51 நாகப்பட்டினம்
TN52 சங்ககிரி
TN54 சேலம் கிழக்கு
TN55 புதுக்கோட்டை
TN56 பெருந்துறை
TN57 திண்டுக்கல்
TN58 மதுரை தெற்கு
TN59 மதுரை வடக்கு
TN60 தேனி
TN61 அரியலூர்
TN63 சிவகங்கை
TN64 மதிய மதுரை
TN65 இராமநாதபுரம்
TN66 மதிய கோவை
TN67 விருதுநகர்
TN68 கும்பகோணம்
TN69 தூத்துக்குடி
TN70 ஓசூர்
TN72 திருநெல்வேலி
TN73 இராணிப்பேட்டை
TN74 நாகர்கோவில்
TN75 மார்த்தாண்டம்
TN76 தென்காசி
TN77 ஆத்தூர்
TN78–99
TN78 தராபுரம்
TN79 சங்ககோவில்
TN81 திருச்சி கிழக்கு
TN82 மயிலாடுதுறை
TN83 வாணியம்பாடி
TN84 ஸ்ரீவில்லிபுத்தூர்
TN85 குன்னத்தூர்
TN86 ஈரோடு மேற்கு
TN87 ஸ்ரீபெரும்புதூர்
TN88 நாமக்கல் தெற்கு
TN90 சேலம் தெற்கு
TN91 சிதம்பரம்
TN92 திருச்செந்தூர்
TN93 மேட்டூர்
TN94 படலி
TN95 சிவகாசி
TN96 கோவில்பட்டி
TN97 ஆரணி
TN99 கோயம்புத்தூர் மேற்கு
EC, Patta, Chitta: மூணுமே முக்கியம்... ஆனா மூணுமே Owner-ஆக்காது!
சொத்து வாங்கும்போது "EC Clear-ஆ இருக்கு, Patta என் பேர்ல இருக்கு, அப்போ Safe தானே?"னு பல பேர் நினைப்பாங்க. இது தான் 1000 பேர்ல 900 பேர் பண்ற மிகப்பெரிய தப்பு.
ஏன்னா இந்த 3 Document-ம் வெவ்வேறு Purpose-க்கு. ஒன்னு இருந்தா மத்தது தேவையில்லைனு அர்த்தம் இல்லை.
1. Encumbrance Certificate / EC - சுமை சான்றிதழ்
- எதுக்கு?:
இந்த சொத்து மேல Loan, Mortgage, Sale Agreement, Court Case எதுவும் இருக்கா-னு Check பண்ண.
யார் கொடுப்பாங்க?: Sub-Registrar Office.
முக்கியம்: EC-ல "Nil Encumbrance"னு இருந்தா மட்டும் போதாது. Sale Deed-ம் Check பண்ணனும். EC வெறும் Transaction History மட்டும் தான் காட்டும். Ownership Prove பண்ணாது.
2. Patta / பட்டா-எதுக்கு?: Revenue Department-க்கு Tax கட்ட யார் பொறுப்புனு Record வச்சுக்க.
யார் கொடுப்பாங்க?: VAO / Tahsildar Office.
முக்கியம்: Patta இருந்தா நீங்க Owner-னு அர்த்தம் இல்லை. Madras HC தெளிவா சொல்லியிருக்கு - "Patta is not a document of title. It is only for fiscal purpose".
Sale Deed இல்லாம Patta மட்டும் வச்சு Court-ல Claim பண்ண முடியாது.
3. Chitta / சிட்டா- எதுக்கு?: அந்த Survey Number-ல எவ்ளோ நிலம், என்ன வகை நிலம், யார் பேர்ல இருக்குனு Land Record.
யார் கொடுப்பாங்க?: VAO Office.
முக்கியம்: Chitta-வும் Patta மாதிரி தான். Revenue Record. Title-ஐ Prove பண்ணாது.
4. அப்போ எது தான் Final Proof?
Registered Sale Deed தான்.
Sale Deed Register ஆனதுக்கு அப்புறம் தான் நீங்க Legal Owner. அதை வச்சு தான் Patta, Chitta-வை உங்க பேருக்கு மாத்த முடியும்.
Simple Formula:
Sale Deed = Owner ஆக்கும்
EC = சொத்து சுத்தமா இருக்கானு Check பண்ணும்
Patta/Chitta = Tax கட்ட யார்-னு காட்டும்
சொத்து வாங்கும்போது 3 Step Follow பண்ணுங்க:
1. EC 30 வருஷம் வாங்கி Encumbrance இல்லனு Check பண்ணுங்க.
2. Sale Deed Register பண்ணுங்க.
3. அதுக்கு அப்புறம் Patta, Chitta Transfer பண்ணுங்க.
இந்த Order மாறினா பிரச்சனை தான்.
இவை வெறும் அரசு ஆவணங்கள் மற்றும் பரிவர்த்தனை சான்றுகள் மட்டுமே.
இந்த ஆவணங்கள் எதற்காகத் தேவை, ஒருவரை முழு உரிமையாளராக்குவது எது என்பது பற்றிய முழு விவரம் கீழே:
சொத்து ஆவணங்களின் பங்குபட்டா (Patta):
நிலத்தின் வரி செலுத்துபவர் யார் என்பதை அரசு ஆவணம் மூலம் உறுதி செய்கிறது.
வருவாய்த்துறை (Revenue Dept.) பதிவேடுகளில் இது இருக்கும்.
இது ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு மாறுபடும் (Patta Transfer).
சிட்டா (Chitta):
இது பட்டாவின் ஒரு பகுதி. நிலத்தின் வகைப்பாடு (நன்செய், புன்செய்) மற்றும் அதன் பரப்பளவு (Extent) போன்ற தகவல்கள் இருக்கும்.
வில்லங்க சான்று (EC - Encumbrance Certificate):
குறிப்பிட்ட நிலத்திற்கு யார் யாருக்கெல்லாம் கடன், அடமானம் அல்லது முந்தைய பரிவர்த்தனை உள்ளது என்ற விவரங்களைக் காட்டும் சான்று.
உரிமையாளர் யார்? (Ownership)
உங்களை நிலத்தின் சட்டப்பூர்வமான முழு உரிமையாளர் (Legal Owner) ஆக்குவது கிரயப் பத்திரம் (Sale Deed) அல்லது விற்பனை பத்திரம் மட்டுமே.
அரசு சார்பாக சார்பதிவாளர் அலுவலகத்தில் (Sub-Registrar Office) முறையாகப் பதிவு செய்யப்பட்ட Sale Deed மட்டுமே நீங்கள் வாங்கிய சொத்துக்கான உண்மையான உரிமைச் சான்று (Title deed).
கூடுதல் எச்சரிக்கைகள்தாய்ப் பத்திரம் (Parent Document):
முந்தைய உரிமையாளர்களின் மூலப் பத்திரங்கள் (Mother Documents) சரியாக உள்ளதா என சரிபார்க்க வேண்டும்.
டபுள் டாக்குமெண்ட் (Double Document):
பழைய பட்டாவை மட்டும் வைத்துக்கொண்டு, முறையான கிரயப் பத்திரம் இல்லாமல் ஏமாற்ற வாய்ப்புள்ளது.
நீங்கள் இப்போது ஏதேனும் ஒரு சொத்து அல்லது நிலத்தை வாங்க திட்டமிடுகிறீர்களா?
அந்த நிலத்தின் கிரயப் பத்திரம் (Sale Deed) மற்றும் தாய் பத்திரம் உங்கள் கைவசம் உள்ளதா?
பட்டா மாறுதல் (Patta Transfer) தற்போது உங்கள் பெயரில் உள்ளதா அல்லது முந்தைய உரிமையாளர் பெயரிலா?
சொத்து அமைந்துள்ள மாவட்டம் அல்லது வட்டம் (Taluk) என்ன?
சொத்துப் பத்திரங்களின் உண்மைத் தன்மையைச் சரிபார்க்க, நீங்கள் Tamil Nadu e-Services of Land Records மற்றும் TNREGINET ஆகிய அதிகாரப்பூர்வ இணையதளங்களைப் பயன்படுத்தலாம்.
#இன்றையதகவல் #தெரிந்துகொள்வோம் #பயனுள்ளதகவல் #EC #Patta #Chitta
திருவாரூர் 2026 — DMK எப்படி ஜெயித்தது என்பதை விட, அடுத்த முறை எப்படி தோற்கும் என்பதை சொல்லும் data இது. 327 பூத். 24 cluster. ECI Form-20. ஒரு வரியும் தப்பவில்லை. 🧵 Thread படியுங்கள். DMK தலைமையும் புரிந்து கொள்ளட்டும் .
@DMKTiruvarur@mkstalin@DMKITwing@arivalayam
1/16
திருச்சி கிழக்கு (AC 141) — 2021-ல் DMK பலமான தொகுதி. 2026-ல் TVK வென்றது எப்படி?
562 பூத், 41 கிளஸ்டர்கள் — ECI official data-வை வைத்து முழு பகுப்பாய்வு.
jus data talks. DMK நண்பர்களுக்கு முக்கியம். @DMKITwing@Udhaystalin@arivalayam@DMKThiruchy@KanimozhiDMK@mkstalin 1/20
X தன்னோட Algorithm-ஐ Public-ஆ Release பண்ணிட்டாங்க! 🔥
இதுவரை யாருக்கும் தெரியாம இருந்த உண்மை இப்போ வெளியே வந்துடுச்சு.
GitHub-ல போட்டாங்க — Source Code முழுக்க திறந்து வச்சிருக்காங்க.
நான் படிச்சேன். உங்களுக்கு சொல்றேன்.
Algorithm என்ன பண்றது?
உங்களுக்கு For You Feed-ல என்ன காட்டணும்னு decide பண்ண ஒரு AI model உபயோகிக்குது. அந்த model உங்க engagement history பாத்து — நீங்க என்ன like பண்ணீங்க, என்ன reply பண்ணீங்க, என்ன repost பண்ணீங்க — அதை வச்சு next-ஆ என்ன காட்டணும்னு predict பண்றது.
Viral ஆக என்ன பண்ணணும்?
1. Reply வாங்குங்க 💬Reply என்பது மிக மிக powerful signal. Post-ல கேள்வி கேளுங்க. Opinion கேளுங்க. Argument start பண்ணுங்க. Reply வந்தா reach தானா போகும்.
2. Dwell Time முக்கியம் ⏱️ஒருத்தர் உங்க post-ல நின்னு படிச்சா — அது algorithm-க்கு தெரியும். முதல் line-ஐ strong-ஆ எழுதுங்க. படிக்க வச்சீங்களா? Score போகும்.
3. Quote Repost கேளுங்க 🔁"இதை quote பண்ணி உங்க answer சொல்லுங்க" — இப்படி கேட்டா உங்க post இரண்டு audience-க்கும் போகும். Reach double ஆகும்.
4. Video-ல 1 Second-ல Hook வேணும் 🎬Algorithm P(video_view) track பண்றது. First frame-லயே attention பிடிக்கலன்னா — போச்சு.
5. Niche-ல மட்டும் இரு 🎯AI உங்களை ஒரு topic-ஓட associate பண்ணும். Scattered-ஆ எல்லாத்தையும் post பண்ணினா — உங்களை யாருக்கு காட்டணும்னு தெரியாம போயிடும். Consistent niche = Out-of-network reach.
6. Followers Active ஆ இருக்கும்போது Post பண்ணு ⏰Post போட்ட முதல் 30 minutes-ல engagement வந்தா — algorithm அதை pick up பண்ணும். தப்பான time-ல போட்டா எந்த effort-உம் waste.
இதை பண்ணாதீங்க ❌
"Not Interested" கிளிக் ஆனா உங்க score minus ஆகும். Block, Mute, Report — இதெல்லாம் negative signals. Filler content, clickbait, copy-paste post — இதெல்லாம் உங்க account-ஐ slowly kill பண்ணும்.
Bottom Line:
X Algorithm-ஐ trick பண்ண முடியாது. Real engagement மட்டும்தான் work ஆகும். Good content போடுங்க, right time-ல போடுங்க, niche-ல இருங்க — reach தானா வரும்.
இந்த post useful-ஆ இருந்துச்சா? Repost பண்ணுங்க — உங்க followers-க்கும் தெரியட்டும் 🔁
+2 முடித்துள்ள குழந்தைகள் எல்லோரும் விண்ணப்பிக்க வேண்டிய Online Applications & Last Dates👇
1. TNGASA BA Bsc Bcom BBA 29.05.2026 125000 seats https://t.co/1HlGGQK7Bv
2. TNDALU BA LLB 05.06.2026 1500 seats https://t.co/9JwdxHNmo8
3. TNDALU SOEL BA LLB (HONS.) BBA LLB (HONS) BCA LLB (HONS) BCOM LLB (HONS) 05.06.2026 600 seats https://t.co/9JwdxHNmo8
4. TNEA BE 02.06.2026 170000 seats https://t.co/ijjJi6T483
5. TNAU AGRI Degree and Diploma Agri Tamil Medium 08.06.2026 5000 seats https://t.co/wlC5SCEwmd
5. TNEA B. Arch 20.06.2026 120 seats https://t.co/ijjJi6T483
6. TANUVAS BVSC and https://t.co/II0at2mU0G 580 seats https://t.co/6DgfQiLmFK
7. TNJFU BFSc and https://t.co/II0at2mU0G 600 seats https://t.co/auGaaxfsa3
8. BNYS 120 seats
9. https://t.co/MHzxDtcv17 Para Medical Degree Diploma and Certificate courses B.Pharm BSc Nursing BPT BOT Diploma Nursing D.Pharm 19000 seats
10. MBBS BDS BSMS BHMS BUMS BAMS With NEET Marks 11000 seats
11. https://t.co/P3bYc9MOo1 Government polytechnic colleges 19000 seats
12. Government ITI Tamil Medium PSTM QUOTA மூலம் எளிதில் அரசுப்பணிக்கு செல்ல முடியும். ஒரு வருட Fees just Rs. 250 only மாதம் ரூ 1750 உதவித்தொகை பெற்றுக் கொண்டே படிக்கலாம். உங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள அரசு ITI க்கு நேரில் செல்லவும்
மேலும் தகவல்கள் அறிந்து கொள்ள கீழ்காண் அரசு உதவி எண்களை அழைக்கவும்
14417 அல்லது 14416
2026 தேர்தல் முடிவு
ரீமேக் செய்யப்பட்ட ஒரு சூஃபி கதை. ஓர் ஊரிலுள்ள மக்கள் உலகிலேயே சிறந்த குளம் ஒன்றை வெட்டி ஊரை வளப்படுத்தவே எப்போதும் விரும்பினார்கள். அந்த ஊரிலிருந்த பால் வியாபாரி ஒருவர் வந்து நான் இந்த குளத்தை தினமும் பாலால் நிரப்பும் பொறுப்பை எடுத்துக் கொள்கிறேன்,
உளமார என்ற சொல்லின் வரலாறு –க்கு தெரியுமா ?
தமிழக அரசியலில் சில சொற்கள் வெறும் வார்த்தைகள் அல்ல; அவை ஒரு வரலாறு, ஒரு கருத்தியல், ஒரு போராட்டத்தின் நினைவுச்சின்னங்கள். அப்படிப்பட்ட சொல் தான் “உளமார”
இன்று நடைபெற்ற தமிழ்நாடு முதல்வர் அவர்களின் பதவியேற்பு விழாவில், “உளமார” என்பதற்குப் பதிலாக “ஆண்டவன் பெயரால்” என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டது பலரிடமும் விவாதத்தையும் விமர்சனத்தையும் உருவாக்கியுள்ளது.
ஏனெனில், தமிழ்நாட்டில் “உளமார” என்பது வெறும் மொழிச் சொல் அல்ல; அது பகுத்தறிவின் அரசியல் அடையாளம்.
இந்த வரலாற்றின் தொடக்கம் சார்லஸ் பிராட்லா என்ற பிரிட்டிஷ் அரசியல்வாதியிடம் இருந்து ஆரம்பிக்கிறது. 19ஆம் நூற்றாண்டில் தீவிர நாத்திகராகவும் சமூக சீர்திருத்தவாதியாகவும் அறியப்பட்ட அவர், 1880-ல் பிரிட்டன் நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டபோது, “கடவுளின் பெயரால்” உறுதிமொழி எடுக்க மறுத்தார்.
“இல்லாத கடவுளை நான் சாட்சிக்கு அழைக்க முடியாது” என்று அவர் வாதிட்டார். இதனால் அவரை நாடாளுமன்றம் ஏற்க மறுத்தது. ஆனால் பிராட்லா தளரவில்லை. மீண்டும் தேர்தல் நடந்தது; மீண்டும் வென்றார். மறுபடியும் மறுக்கப்பட்டார். இப்படியே மூன்றுமுறை மக்கள் அவரைத் தேர்ந்தெடுத்தும், அதிகார அமைப்பு அவரைத் தடுத்தது.
அப்போது அவர் கூறிய ஒரு கருத்து ஜனநாயக வரலாற்றில் முக்கியமானதாக மாறியது:
“என்னைத் தேர்ந்தெடுத்த மக்களின் உரிமையை நீங்கள் அவமதிக்கிறீர்கள்.”
இறுதியில் அவரது இடைவிடாத போராட்டத்தால், 1886-ல் “கடவுளின் பெயரால்” என்பதற்குப் பதிலாக “உளமார” அல்லது “மனசாட்சிப்படி” உறுதிமொழி எடுக்க அனுமதி கிடைத்தது. பின்னர் அது சட்டமாகவும் மாறியது.
அதாவது “உளமாற” என்பது ஒரு சொல் அல்ல; மத அதிகாரத்துக்கு எதிராக மனசாட்சியின் வெற்றி.
பிரிட்டனில் தொடங்கிய இந்த சிந்தனைக்கு தமிழ்நாட்டில் அரசியல் உயிர் கொடுத்தவர் பேரறிஞர் அண்ணா
1967-ல் திராவிட இயக்கத்தின் வெற்றிக்குப் பிறகு, அவர் தலைமையிலான அமைச்சரவை முதன்முறையாக “இறைவன் பெயரால்” என்ற முறையை நிராகரித்து “உளமார” என்று உறுதிமொழி எடுத்தது. அது வெறும் நடைமுறை மாற்றமல்ல; இந்திய அரசியலிலேயே பகுத்தறிவை அரசின் மொழியாக்கிய தருணம்.
அண்ணா அதற்குக் கொடுத்த விளக்கம் இன்னும் நினைவில் நிற்கிறது:
“கடவுளிடம் பரிகாரம் செய்து சமரசம் செய்யலாம்; மனசாட்சியிடம் முடியாது.”
இந்த ஒரு வரியிலேயே “உளமார ” என்பதின் முழு அரசியல் தத்துவம் அடங்கியுள்ளது.
அதன்பிறகு கலைஞர் அவர்களும் எம்.ஜி.ஆர் அவர்களும் அந்த மரபைத் தொடர்ந்து “உளமாற” என்றே பதவியேற்றனர்.
பின்னர் வந்த ஜெயலலிதா “ஆண்டவன் மீது ஆணையிட்டு” என்று கூறி அந்த மரபை மாற்றினார். அதன் பின் அதிமுக ஆட்சிகள் அந்த வழியிலேயே சென்றன. மீண்டும் மு.க.ஸ்டாலின் அவர்கள் 2021-ல் “உளமார” என்று முழங்கியபோது, அது ஒரு அரசியல் வார்த்தையாக மட்டுமல்லாமல் திராவிட மரபின் மீள் அறிவிப்பாகவும் பார்க்கப்பட்டது.
இப்போது கேள்வி என்னவென்றால் — இன்று விஜய் தமிழ்த்தாய் வாழ்த்தை மூன்றாவது இடத்திற்கு தள்ளியதோடு மட்டுமில்லாமல் “உளமார ” என்பதற்கு பதிலாக “ஆண்டவன் பெயரால்” உறுதி ஏற்றது அவர் கடவுள் நம்பிக்கை கொண்டிருப்பதற்காக அல்ல.
ஒரு ஜனநாயகத்தில் ஒருவர் நம்பிக்கை கொண்டிருப்பதும் இல்லாதிருப்பதும் அவரின் உரிமை. ஆனால் தமிழக அரசியலில் “உளமார ” என்பது ஒரு வரலாற்று அரசியல் அடையாளமாக மாறிவிட்ட நிலையில், அதைத் தவிர்த்து “ஆண்டவன் பெயரால்” என்பதைத் தேர்ந்தெடுப்பது இயல்பாகவே ஒரு அரசியல் செய்தியாகப் பார்க்கப்படுகிறது.
குறிப்பாக, தன்னை மாற்று அரசியலின் பிரதிநிதியாகவும், திராவிட கொள்கைகளின் தொடர் அரசியல் கட்சியாக காட்டிக்கொள்ளும் ஒருவர், அண்ணா தொடங்கி வந்த பகுத்தறிவுச் சின்னத்தைத் தவிர்க்கும்போது, விமர்சனங்கள் எழுப்புவது தவிர்க்க முடியாததே.
ஏனெனில் “உளமார” என்பது வெறும் நாத்திகர்களின் சொல் அல்ல;
அது மனசாட்சிக்குப் பொறுப்பேற்கும் அரசியலின் மொழி.
“ஆண்டவன் பெயரால்” என்று சொன்னால் பொறுப்பு மேலுலகிற்கு செல்கிறது;
“உளமார ” என்று சொன்னால் பொறுப்பு நேராக தன்மனசாட்சிக்கே வந்து நிற்கிறது.
இன்று பலருக்கு “உளமார ” என்பது ஒரு சாதாரண நடைமுறை போலத் தோன்றலாம். ஆனால் அதன் பின்னால் சார்லஸ் பிராட்லா போன்றோரின் சிறை, போராட்டம், தேர்தல் தோல்விகள், மீண்டும் எழுச்சிகள் இருக்கின்றன. தமிழ்நாட்டில் தந்தை பெரியார் பேரறிஞர் அண்ணா போன்றோரின் பகுத்தறிவுப் புரட்சி இருக்கிறது.
அதனால் தான், ஒரு அரசியல்வாதி எந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறார் என்பதும் முக்கியமாகிறது.
சில நேரங்களில் ஒரு சொல், ஒரு முழு கருத்தியலை வெளிப்படுத்திவிடும். தமிழக அரசியலில் “உளமாற” அப்படிப்பட்ட ஒரு சொல்.
அதிகாரத்தின் 48 விதிகள்! (The 48 Laws of Power)
1. தலைவரை விட மேலாக ஜொலிக்காதீர்கள்: உங்களுக்கு மேலே உள்ளவர்களைப் பாதுகாப்பாக உணரச் செய்யுங்கள்.
2. நண்பர்களை அதிகம் நம்பாதீர்கள், எதிரிகளைப் பயன்படுத்தக் கற்றுக்கொள்ளுங்கள்: நண்பர்கள் துரோகம் செய்யலாம்; எதிரிகள் தங்களை நிரூபிக்க உண்மையாக இருக்கலாம்.
3. உங்கள் நோக்கங்களை மறைத்து வையுங்கள்: உங்கள் திட்டங்களை ரகசியமாக வைத்திருங்கள்.
4. தேவைக்கு குறைவாகவே பேசுங்கள்: மௌனம் அதிகாரத்தை உருவாக்குகிறது.
5. உங்கள் நற்பெயரைப் பாதுகாக்கவும்: உங்கள் பிம்பமே (Image) உங்களுக்கு எல்லாம்.
6. எல்லா விலையிலும் கவனத்தை ஈர்க்கவும்: உங்கள் மீதான பார்வை அதிகாரத்திற்கு வழிவகுக்கும்.
7. மற்றவர்களை வேலை செய்ய வைத்து அதன் பலனை நீங்கள் அடையுங்கள்: மற்றவர்களின் உழைப்பை உங்கள் நலனுக்காகப் பயன்படுத்துங்கள்.
8. மக்களை உங்களை நோக்கி வரச் செய்யுங்கள்: கட்டுப்பாட்டைத் தக்கவைக்க மக்களை உங்களை நோக்கி ஈர்க்கவும்.
9. செயல்கள் மூலம் வெற்றி பெறுங்கள், வார்த்தைகளால் அல்ல: வார்த்தைகளை விட உங்கள் செயல்கள் சத்தமாகப் பேசட்டும்.
10. துரதிர்ஷ்டசாலிகளையும் சோகமாக இருப்பவர்களையும் தவிர்க்கவும்: எதிர்மறை எண்ணங்கள் தொற்றும் தன்மை கொண்டவை.
11. மக்களை உங்களைச் சார்ந்திருக்கச் செய்யுங்கள்: நீங்கள் இன்றியமையாதவர் ஆகுங்கள்.
12. தேர்ந்தெடுக்கப்பட்ட நேர்மை மற்றும் தாராள குணத்தைப் பயன்படுத்துங்கள்: சிறிய உண்மைகள் நம்பிக்கையை வளர்க்கும்.
13. மக்களின் சுயநலத்திற்கு முக்கியத்துவம் கொடுங்கள்: மக்களுக்குப் பயன் கிடைக்கும்போது மட்டுமே அவர்கள் உங்களுக்கு உதவுவார்கள்.
14. நண்பனைப் போல நடித்து ஒற்றனைப் போல வேலை செய்யுங்கள்: நெருங்கிப் பழகுவதன் மூலம் ரகசியத் தகவல்களைச் சேகரிக்கவும்.
15. எதிரியை முற்றிலுமாக நசுக்குங்கள்: அவர்கள் மீண்டும் பதிலடி கொடுக்க வாய்ப்பு அளிக்காதீர்கள்.
16. மரியாதையை அதிகரிக்க உங்கள் வருகையைக் குறைத்துக் கொள்ளுங்கள்: இடைவெளி மதிப்பை உருவாக்குகிறது.
17. கணிக்க முடியாதவராக இருங்கள்: மற்றவர்களை உங்கள் அடுத்த நகர்வை அறிய முடியாமல் குழப்பத்தில் வைத்திருங்கள்.
18. தனிமைப்படுத்தப்படுவதைத் தவிர்க்கவும்: பாதுகாப்பு மற்றும் அதிகாரத்திற்காகத் தொடர்பில் இருங்கள்.
19. யாரிடம் பழகுகிறீர்கள் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்: மற்றவர்களின் பலம் மற்றும் பலவீனங்களைப் புரிந்து கொள்ளுங்கள்.
20. யாருக்கும் முழுமையாகக் கட்டுப்படாதீர்கள்: நெகிழ்வுத்தன்மையுடனும் சுதந்திரமாகவும் இருங்கள்.
21. முட்டாளைப் பிடிக்க முட்டாள் போல நடியுங்கள்: மற்றவர்களை வெல்ல உங்கள் பலத்தை வெளிக்காட்டாமல் இருங்கள்.
22. அதிகாரத்தைப் பெற சரணடைதலைப் பயன்படுத்துங்கள்: நேரத்தையும் கட்டுப்பாட்டையும் பெற தற்காலிகமாகக் அடிபணியுங்கள்.
23. உங்கள் சக்திகளை ஒருமுகப்படுத்துங்கள்: உங்கள் ஆற்றலை ஒரு முக்கிய இலக்கில் செலுத்துங்கள்.
24. சிறந்த அரண்மனை ஊழியராக இருங்கள்: செல்வாக்கைப் பெற மற்றவர்களைக் கவர்ந்து புகழுங்கள்.
25. உங்களை நீங்களே புதுப்பித்துக் கொள்ளுங்கள்: பொருத்தமாக இருக்கத் தொடர்ந்து பரிணாமம் அடையுங்கள்.
26. உங்கள் கைகளைச் சுத்தமாக வைத்திருங்கள்: பழியை மற்றவர்கள் ஏற்கட்டும்.
27. உங்களைப் பின்பற்றும் ஒரு கூட்டத்தை உருவாக்குங்கள்: பொதுவான நம்பிக்கையின் மூலம் விசுவாசத்தைத் தூண்டுங்கள்.
28. துணிச்சலாக இருங்கள்: தன்னம்பிக்கை வெற்றியை ஈர்க்கும் மற்றும் மரியாதையைத் தரும்.
29. முடிவு வரை திட்டமிடுங்கள்: எப்போதும் உங்கள் அடுத்த நகர்வை எதிர்பார்த்துத் தயாராக இருங்கள்.
30. வெற்றியைச் சுலபமாகத் தெரியப்படுத்துங்கள்: அதற்குப் பின்னால் உள்ள கடின உழைப்பை மறைத்து வையுங்கள்.
31. விருப்பங்களைக் கட்டுப்படுத்துங்கள்: உங்கள் இலக்குகளுக்குச் சாதகமாக மற்றவர்களின் தேர்வுகளைக் கட்டுப்படுத்துங்கள்.
32. கற்பனைகளுடன் விளையாடுங்கள்: கடினமான யதார்த்தத்தை விட மக்களுக்குக் கனவுகளை வழங்குங்கள்.
33. அவர்களின் பலவீனத்தைக் கண்டறியுங்கள்: மற்றவர்களின் பலவீனங்களை அடையாளம் கண்டு பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
34. மன்னரைப் போல நடந்து கொள்ளுங்கள்: சுயமரியாதையைக் காட்டுவதன் மூலம் மற்றவர்களிடமிருந்து மரியாதையைப் பெறுங்கள்.
35. நேரத்தைத் துல்லியமாகக் கணிக்கும் கலையில் தேர்ச்சி பெறுங்கள்: அதிக தாக்கத்தை ஏற்படுத்தச் சரியான நேரத்தில் செயல்படுங்கள்.
36. உங்களால் அடைய முடியாததைப் புறக்கணியுங்கள்: அலட்சியத்தைக் காட்டுவதன் மூலம் அதிகாரத்தைப் பெறுங்கள்.
37. ஈர்க்கக்கூடிய காட்சிகளை உருவாக்குங்கள்: கவனத்தை ஈர்க்கக் காட்சிகளைப் பயன்படுத்துங்கள்.
38. விருப்பப்படி சிந்தியுங்கள், ஆனால் மற்றவர்களைப் போலவே நடந்து கொள்ளுங்கள்: மற்றவர்களைப் புண்படுத்தாமல் இருக்க அவர்களுடன் ஒத்துப்போங்கள்.
39. மீனைப் பிடிக்க நீரைத் தூர்வாருங்கள்: உங்கள் எதிரிகளை நிலைகுலையச் செய்யக் கோபத்தைத் தூண்டுங்கள்.
40. இலவசமாக வருவதை நிராகரியுங்கள்: விலைமதிப்பற்ற எதுவும் இலவசமாக வருவதில்லை.
41. பெரியவர்களின் காலடித் தடத்தைத் தவிர்க்கவும்: உங்கள் சொந்த அடையாளத்தை உருவாக்குங்கள்.
42. மேய்ப்பனைத் தாக்குங்கள், அப்போது ஆடுகள் சிதறிவிடும்: பிரச்சனையின் மூல காரணத்தை அல்லது தலைவரைத் தாக்குங்கள்.
43. இதயங்களையும் மனங்களையும் வெல்லுங்கள்: விசுவாசத்தைப் பெற உணர்ச்சிகளைப் பயன்படுத்துங்கள்.
44. பிரதிபலிப்பு விளைவைப் (Mirror Effect) பயன்படுத்துங்கள்: மற்றவர்களை நிலைகுலையச் செய்ய அவர்களின் நடத்தையையே அவர்களுக்குக் காட்டுங்கள்.
45. மாற்றத்தை மெதுவாகப் பிரசங்கியுங்கள்: தீவிரமான சீர்திருத்தங்களைத் தவிர்க்கவும்; மக்களை மெதுவாக மாற்றத்திற்குப் பழக்கப்படுத்தவும்.
46. மிகவும் கச்சிதமானவராகத் (Perfect) தெரியாதீர்கள்: பொறாமையைத் தவிர்க்க உங்கள் குறைகளையும் அவ்வப்போது காட்டுங்கள்.
47. எப்போது நிறுத்த வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்: வெற்றி என்பது எப்போதும் முன்னோக்கிச் செல்வது மட்டுமல்ல.
48. வடிவமற்றவராக இருங்கள்: மாறும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப நெகிழ்வுத்தன்மையுடன் இருங்கள்.
CP From FB
#இன்றையதகவல் #தெரிந்துகொள்வோம் #பயனுள்ளதகவல்