அம்மா என நான் அழைத்து,
அடுத்த நொடியே நீ பதில் உரைத்து, 21 ஆண்டுகள் கடந்துவிட்டது.
அம்மா...என..
இப்போதும் அழைக்கிறேன் உன்னை...
நீ தான் மறந்துவிட்டாய்
என்னை..
அன்பின் உருவாய் வாழும் அம்மாக்கள் அனைவருக்கும்
அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்🙏
என் திரைத்துறை பயணத்தில் முதல் அங்கீகாரத்தை வழங்கி இன்றுவரை என்மேல் பேரன்பை பொழியும் அன்பு அண்ணன் இயக்குனர் சேரன் அவர்களுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்🙏
என்றென்றும் காலத்தின் குரலுக்கு ஆதாரமான கவித் தீக்கு சொந்தமானவன் பாரதி.
இந்த மகா கவியின் பிறந்தநாளில் அவன் பிறந்த மண்ணில் நாமும் பிறந்திருக்கிறோம் என பெருமை கொள்வோம்.🙏
இன்று திரைக்கு வருகிறது ஜெயில் படம்.
இது சென்னையை பூர்வீகமாக கொண்ட மக்களின் சொல்லப்படாத வாழ்க்கையை பேசுகிறது.
இதில் என் பாடல்களும் இடம்பெற்று இருப்பது மகிழ்ச்சி.
இயக்குனர் வசந்தபாலனின் கடுமையான உழைப்பும், GVபிரகாஷின் நேர்த்தியான நடிப்பும் படத்தின் பலம்.
வெற்றிபெற வாழ்த்துக்கள்💐
முப்படை தலைமை தளபதி மற்றும் அவரோடு பயணித்த ராணுவ அதிகாரிகளின் விபத்து மரணம் பெரும் அதிர்ச்சியையும், துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
எவ்வளவுதான் மனிதன் பாதுக்காப்போடு வாழந்தாலும் இயற்கையின் கணக்கு புரிவதே இல்லை🙏