துணை குடியரசுத் தலைவருக்கு பாதுகாப்பு என்ற பெயரில் ,
DYFI தலைவர் மீது அதிகார அத்துமீறல்..!
திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு பட்டங்களை வழங்க வந்த து.குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு பாதுகாப்பு தருகிறோம் என்ற பெயரில், அந்த பல்கலைக்கழகத்தில் பயின்று பட்டம் பெற சக மாணவர்களுடன் அமர்ந்திருந்த, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட தலைவர் தோழர் ஆனந்த் அவர்களுக்கு அருகிலேயே சீருடை இல்லா காவலரை அமர வைத்து கண்காணிப்பு என்ற பெயரில் ஏதோ ஒரு தீவிரவாதியை நடத்துவது போன்று அத்துமீறி அவரது சுயமரியாதைக்கு களங்கம் ஏற்படுத்தியிருக்கிறது
காவல்துறை ...!
மேலு���்,கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக தோழர் ஆனந்த் அவர்களுக்கு தொலைபேசி வாயிலாகவும் நேரடியாகவும் விசாரணை என்ற பெயரில் கடுமையான நெருக்கடி அளிக்கப்பட்டிருக்கிறது.
முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் இருக்கும் தமிழ்நாடு காவல்துறை,தொடர்ந்து தமிழ்நாட்டிற்கும் தமிழுக்கும் எதிராக செயல்படக்கூடிய பாஜகவின் தலைவர்களுக்கு பாதுகாப்பு தருகிறோம்..!
என்று சங்க நிர்வாகிகளை அச்சுறுத்துவது தான் ��ாவல்துறையின் கடமையா...?
யாரை குளிர்விக்க இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது தமிழக காவல்துறை..!
#அண்ணனுக்கும்#ஆலோசகருக்கும்#இடையே#நடக்கும்#ஓர்கற்பனை#உரையாடல்:
#அண்ணன் : ஏம்பா ஆட்சியில பங்கு தருவோம் என்று நீங்க தான் பேச சொன்னீங்க, இப்ப ஒரு கட்சியும் திரும்பிப் பார்க்கல்ல. இந்த லட்சணத்துல எனக்கு தான் மக���கள் ஆதரவுன்னு பேச சொல்றீங்க மக்கள் நம்புவார்களா ?
#ஆலோசகர் :கவலைப்படாதீங்க அண்ணே! ; மக்களை நம்ப வைக்கிறதுக்கு நம்ம கிட்ட ஒரு அய்டியா இருக்கு.
#அண்ணன்: என்ன அய்டியா ?
#ஆலோசகர்: அப்படி கேளுங்க.. "எனக்கும் ஸ்டாலினுக்கும் தான் போட்டி" அப்படின்னு அடிச்சு பேசுங்க எட்டு கட்டையில ஓங்கி பேசணும்.
#அண்ணன்: இப்படி பேசினா மக்கள் நம்புவாங்களா? இப்படி பேசினதுக்கு அப்புறம் தான் எடப்பாடியை எதிர்க்க வச்சிட்டீங்க; "அதோ பார் விஜய் கொடி பறக்குது" அப்படின்ன�� புல்லரிக்க பேசினவர், இப்போ நடிகர்களை நம்பாதீங்கன்னு பேச ஆரம்பிச்சுட்டாரு. இதுதான் மிச்சம்!
#அண்ணன்: அத விடுங்க அண்ணே... அவர் எதிர்த்தால் என்ன? பாஜக நம்மை எதிர்க்கக் கூடாது; அதுதான் முக்கியம். ஸ்டாலின் மாதிரி பாஜகவுக்கும் நமக்கும் தான் போட்டி என்று பேசக்கூடாது. அதுதான் நமக்கு ஆபத்து!
#அண்ணன்: சரி; நான் அப்படியே ஒத்துக்குறேன். இப்ப தேர்தல் ஆணையத்திடம் தான் அதிகாரம் இருக்கு. அந்��� ஆணையம் சட்ட விதிகளைக் காட்டி நமக்கு நெருக்கடி கொடுக்குது. இந்த ஆணையத்தை கண்டித்தால் பாஜகவுக்கு கோபம் வந்துடும். அதுக்காக திமுக தான் ப���ிவாங்குதுன்னு பேச சொல்றீங்க. மக்கள் நம்புவாங்களா?
#ஆலோசகர்: மக்கள் நம்பறதா இப்ப முக்கியம்? நமக்கு ஓட்டு போடுற ரசிகர்கள் நம்பினால் போதும். நிச்சயமா நம்புவாங்க அண்ணே...
இப்ப சங்கீதா விவாகரத்து கேட்டதுக்கு அப்புறமும், பெண்கள் பாதுகாப்பு பற்றி நீங்க பேசுறீங்க இல்ல அதை நல்லா நம்புறாங்களே! இதுக்கு என்ன சொல்றீங்க ?
#அண்ணன் :சரிதான் ; நீங்க சொல்றத நான் அப்படியே நம்புறேன். இப்ப இரண்டு தொகுதியில போட்டியிட வச்சுட்டீங்க; ஒரு தொகுதி பிரச்சாரத்திலேயே மூச்சு வாங்குது; பாதியிலேயே நிறுத்தியாச்சு. இதுல ரெண்டு தொகுதிக்கு எப்படி பிரச்சாரம் செய்யறது? இதுதான் சந்தர்ப்பம்! இனிமே என்ன நேரா பார்க்க முடியாதுன்னு மக்கள் வேடிக்கை பார்க்க கூடுறாங்க.
அப்படியே தப்பித் தவறி எம்.எல்.ஏ ஆயிட்டேன்னா ,உங்களை எப்படி நேரில் சந்திப்பதுன்னு மக்கள் கேக்குறாங்க. அதுக்கு என்ன பதில் சொல���றது ?
#ஆலோசகர் :இருக்கவே இருக்கு நமது பனையூர் பங்களா .அங்க மக்கள வர சொல்லிடுவோம்!
#அண்ணன்: இந்த யோசனை எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு! பனையூர் பங்களாவையே மக்கள் தொடர்பு மய்யமாக மாத்திடலாம்.
ஆனா இன்ன���ரு கேள்வியை கேப்பாங்களே. அந்த பங்களாவுக்குள்ளேயே குடும்பத் தொடர்பே இல்லாத நீங்க எப்படி மக்கள் தொடர்பை உருவாக்கப் போறீங்க? அப்படின்னு கேட்டா என்ன சொல்றது? இதுதான் நெஞ்ச பதற வைக்குது!
#அண்ணன்: இதெல்லாம் ஒரு பிரச்சனையா? விடுங்க அண்ணே..
முதல்ல ஆட்சியை பிடிக்கணும் அதுதான் முக்கியம்.
#அண்ணன்: நம்ம கட்சியில போட்டியிடுவதற்கே உங்களால் ஆட்களை பிடிக்க முடியல; படாத பாடுபட்டோம் ஆட்சியைப் பிடிப்பத பத்தி பேச கிளம்பிட்டீங்க. மத்த கட்சியில இடம் கிடைக்காதவங்க தான் வேற வழி இல்லாம கடைசி நேரத்துல நம்ம கிட்ட வந்தாங்க.
சுமார் 100 பேர அப்படியே அமுக்கி புடிச்சு வேட்பாளரா அறிவிச்சிட்டோம்; இதுல எப்பட ஆட்சியை பிடிப்போம்னு நம்ப சொல்றீங்க ?
#ஆலோசகர் :இதெல்லாம் ஒரு மேட்டரே இல்லை. ஒரே ஒரு டயலாக் இருக்கு. அத சொல்லுங்க போதும்; "எல்லாத்தையும் விட்டுட்டு உங்களை நம்பித்தான் வந்து ��ருக்கேன்னு" ஒரு வார்த்தை சொல்லுங்க. அப்படியே மக்கள் வாக்குகளை குவிச்சுடுவாங்க
#அண்ணன்: 624 கோடி ரூபாய் சொத்து இருக்குன்னு தேர்தல் ஆணையத்திடம் தெரிவிச்சி இருக்கேன். கடைசி 5 வருடத்தில் கிடைச்ச வருமானம் மட்டும் 234 கோடிரூபாய்.
இது வருமான வரித்துறையிடம் காட்டிய கணக்கு. தேர்தல் ஆணையத்திடம் மறைக்க முடியாது. உண்மையிலேயே உழைச்சி சம்பாதிச்சா இவ்வளவு கோடி கிடைக்குமான்னுமக்கள் கேட்பாங்கல்ல?
நம்ம கட்சி மட்டும் ஊழலை ஒழிக்கப் போற தனித்துவமான கட்சியின் னுஎப்படி சொல்றது?
#ஆலோசகர்: விடுங்க அண்ணே.. கவலைப்படாமல் போய் தூங்குங்க "அரசியலில் இதெல்லாம் சாதாரணம்"
@KanimozhiDMK
@Udhaystalin@DMKITwing
@TVKVijayHQ
@TeamTVKTrends
அதிமுக பாஜக கூட்டணியை அமித் ஷா தான்அறிவித்தா��் ; இப்போது கூட்டணிக்கான தொகுதி பங்கீடுகளை எடப்பாடி பழனி��்சாமி தனது கட்சி அலுவலகத்தில் அறிவித்திருக்கிறார்.
இதன் மூலம் கூட்டணிக்கான தலைமை தனது கட்சிதான் என்றும் பாஜக அல்ல என்றும் மக்களுக்கு சூசகமாக கூறுகிறார். பாஜக என்ற அடையாளத்தை முன்னிறுத்தினால் தமிழ்நாட்டு மக்கள் அதை ஒருபோதும் ஏற்க மாட்டார்கள்; இந்த உண்மை கட்டாயத்தின் பேரில் கூட்டணியில் இணைக்கப்பட்ட எடப்பாடிக்கு நன்றாகவே புரிந்திருக்கிறது.
இதன் காரணமாகவே கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக அணியில் சேர மறுத்தார்; இதன் காரணமாகவே இந்த தேர்தல் களம் திமுகவுக்கும் அதிமுகவுக்கும் போட்டி என்று சித்தரிக்க விரும்புகிறார் எடப்பாடி.
விருப்பமில்லாமல் பாஜக என்ற லக்கேஜை சுமக்க வேண்டி இருக்கிறது என்ற குமுறல்களின் வெளிப்பாடு இது! இந்த தேர்தலில் வெற்றி பெறப்போவது திமுக அணி தான் என்று அமித் ஷாவே தன்னிடம் ஒப்புக்கொண்டதை ஓபிஎஸ் பொதுவெளியில் போட்டு உடைத்து வி���்டார். இதற்கு அமித் ஷாவிடமிருந்து எந்த மறுப்பும் வரவில்லை.
இப்போது தனி மெஜாரிட்டியுடன் அதிமுகவே ஆட்சி அமைக்கும் என்று எடப்பாடி கூறுவதன் வழியாக அமைச்சரவையில் பாஜக இடம்பெறாது என்ற ��றுதியையும் மக்களுக்கு மறைமுகமாக வழங்குகிறார். இந்தத் திரைக்கதைகளை மக்கள் நம்புவார்களா?
முதலமைச்சராக இருந்து இவர் நடத்திய ஆட்சியை
இயக்கியதே ஒன்றிய பாஜக ஆட்சி தான். முத்தலாக் சட்டம்; குடியுரிமை சட்டம்; விவசாய சட்டம்; காஷ்மீர் சிறப்பு சட்டம் ரத்து; டெல்லி மாநில உரிமைப் பறிப்பு சட்டம் என்று அனைத்து மாநில உரிமை பறிப்பு மற்றும் மதவாத சட்டங்களுக்கு ஒப்புதல் அளித்தது எடப்பாடி ஆட��சி.
ஜெயலலிதா கையெழுத்திட மறுத்த உதய் மின் திட்டம் மற்றும் உணவு பாதுகாப்பு மசோதாவுக்கும் பச்சைக்கொடி காட்டினார்கள்.
நீட் விலக்கு கோரி எடப்பாடி அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானத்தை குடியரசு தலைவர் ஏற்க மறுத்து எழுதிய கடிதத்தை மக்களிடம் வெளிப்படுத்தாமல் ரகசியமாக பாதுகாத்தது எடப்பாடி ஆட்சி.
தமிழ்நாட்டில் மத கலவரத்தை தூண்டும் பாஜகவின் அத்தனை முயற்சிகளுக்கும் துணை போனவர் எ��ப்பாடி.
ஆர்.எஸ்.எஸ் மாநாட்டுக்கும் இந்து முன்னணி மாநாட்டுக்கும் தனது கட்சியின் சார்பில் தூதுவர்களை அனுப்பினார்.
திருப்பரங்குன்றத்தில் மதக் கலவரத்தை ��ருவாக்க பாஜக மேற்கொண்ட முயற்சிகளுக்கு ஆதரவுக் கரம் நீட்டினார்; எல்லைக்கல்லில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற நீதிமன்ற தீர்ப்பை திமுக அமல்படுத்தவில்லை என்று கன்னடம் தெரிவித்தார்.
என்.டி.ஏ மாநாட்டின் முகப்பில் இடம்பெற்ற பெரியார் படத்தை பாஜக நீக்கிய போதும் வாய் திறக்கவில்லை.
மாநில உரிமைகளை பறிக்க முயன்ற ஆளுநர் ஆர்என்.ரவியின் அடாவடிகளுக்கும் துணை போனார்.
இப்படி நீண்ட பட்டியலிட ���ுடியும்.
பாஜகவின் நிழல் ஆட்சியை தமிழ்நாட்டில் நடத்திக் காட்டியவர் எடப்பாடி பழனிச்சாமி.
இப்போது தனது தலைமையிலான கூட்டணியில் தான் பாஜக இருக்கிறது என்று படம் காட்டுவதை மக்கள் ஒருபோதும் நம்ப மாட்டார்கள்.
மாப்பிள்ளை அவர்தான்; ஆனால் சட்டை என்னுடையது என்ற டயலாக் தான் நினைவுக்கு வருகிறது!
இந்தியாவில் 3600 அய்.ஏ.எஸ் அதிகாரிகளில் 2750 பேர் பார்ப்பனர்கள் ; திட்டமிட்டு தேர்ச்சி பெற்ற பிற்படுத்தப்பட்ட அய்.ஏ.எஸ் அதிகாரிகளை பதவி ஏற்க விடாமல் குறுக்கு வழியில் சதி செய்து தடுத்து நிறுத்தி வைத்திருந்தது மோடி ஆட்சி.
இந்த முறைகேடான சதியை எதிர்த்து 10-ஆண்டு காலமாக சட்டப் போராட்டம் நடத்தி உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வழியாக கடந்த மார்ச் 12 தங்களுக்கான நீதியை பெற்றிருக்கிறார்கள் 60 பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்கள்.
உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் பி.எஸ் நரசிம்மா மற்றும் ஆர்.மகாதேவன் அடங்கிய அமர்வு ஒன்றிய ஆட்சியின் சமூக நீதி துரோகத்தை தகர்த்து. இந்த மாணவர்களின் வாழ்க்கையில் ஒளியேற்றியிருக்கிறது.
அதிர்ச்சியூட்டுகிறது மோடி ஆட்சியின் இந்த துரோகம்.
1992-���ம் ஆண்டு இந்திரா சஹானி என்ற வழக்கில் உச்சநீதிமன்றம் பிற்படுத்தப்பட்டோரை கிரிமி லேயர் என்ற பொருளாதார வரம்புக்குள் கொண்டு வந்து இட ஒதுக்கீட்டு உரிமைகளை முடக்கியது.
இதன் காரணமாக அரசு ஊழியர்களை பெற்றோர்களாகக் கொண்ட பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் இட ஒதுக்கீட்டில் இருந்து ஒதுக்கப்பட்டார்கள். பெற்றோர்கள் பெரும் அரசு ஊதியத்தை ஆண்டு வருமானத்தில் இணைத்து ரூ 8 லட்சத்திற்கு மேல் வருவாய் வருகிறது என்று ���ாரணம் கூறி பணி நியமனங்கள் மறுக்கப்பட்டன.
உண்மையில் 1993-ஆம் ஆண்டிலேயே காங்கிரஸ் ஆட்சியில் கிரீமிலேயருக்கு அரசு ஆணை மூலம் ஒரு விளக்கம் தரப்பட்டது; அதாவது பெற்றோர்கள் பெரும் மாத ஊதியமும் விவசாயத்தில் வரும் வருமானமும் பொருளாதார வரம்புக்குள் கொண்டுவரக் கூடாது என்று தெளிவாகக் கூறியது அந்த அரசாணை.
அந்த அரசாணையை குப்பைத் தொட்டியில் வீசிவிட்டு பெற்றோர்கள் வருமானத்தையும் முறைக��டாக சேர்த்துக் கொண்டது மோடி ஆட்சி.
இந்த முறைக்கேட்டை எதிர்த்து பாதிக்கப்பட்ட 60 பேரும் அரசு தீர்ப்பாயம் மற்றும் தமிழ்நாடு, டெல்லி, கேரளா உயர் நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்தார்கள்.
தீர்ப்புகள் மாணவர்களுக்கு சாதகமாகவும் ஒன்றிய ஆட்சிக்கு எதிராகவும் வந்தன. ஆனாலும் ஒன்றிய ஆட்சியின் பிடிவாதம் தளரவில்லை; உச்ச நீதிமன்றத்திற்கு மேல் முறையீடு செய்தது.
மோடி ஆட்சியின் சமூக நீதி அமைச்சகம் பெற்றோர்கள் ஊதியத்தையும் கட்டாயம் சேர்க்க வேண்டும்; இந்த மாணவர்களுக்கு பணி நியமனம் செய்யவே கூடாது என்று மனுதர்ம பார்வையில் பிடிவாதம் பிடித்தது.
இப்போது உச்ச நீதிமன்றம் மோடி ஆட்சியின் பார்ப்பனிய மனுதர்மத்தின் மண்டையில் அடித்து இந்த மாணவர்களுக்கு பெற்றோர்கள் வருமானத்திலிருந���து விதிவிலக்கு தந்து பணி நியமனம் செய்ய வேண்டும் என்று தீர்ப்பளித்து இருக்கிறது.
நீதிமன்றம் தனது தீர்ப்பில் ஒரு அதிர்ச்சியான தகவலை பதிவு செய்திருக்கிறது. 2004 ஆம் ஆண்டு வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது ஒன்றிய அரசின் சார்பில் கடிதம் ஒன்று வெளிவந்தது. அந்த கடிதம் ஏற்கனவே அரசியல் சட்டப்படி வெளியிட்ட அரசு ஆணைக்கு எதிராக பெற்றோர்கள் வருமானத்தையும் சேர்க்க வேண்டும் என்று கூறியது.
அ���சு ஆணையை குப்பைத் தொட்டியில் வீசியது இந்த கடிதம். கடிதத்தை யார் எழுதியது என்ற கேள்விக்கு விடை கிடைக்கவில்லை ; எந்தத் துறையில் இருந்து வந்தது என்பது தெரியவில்லை.
ஏதோ ஒரு உயர்மட்ட "மனு தர்ம புத்திரன் "கடிதத்தை வெளியிட்டு அதன் வழியாக ஏராளமான பிற்படுத்தப்பட்ட மக்களின் வேலை வாய்ப்புகளை 20 ஆண்டுகளுக்கு மேலாக தடுத்து நிறுத்தி வைத்திருக்கிறான்.
மோடி ஆட்சி இந்த சதிக்கு உடந்தையாக ந���ன்று பிற்படுத்தப்பட்ட மக்களின் முதுகில் குத்தி வந்திருக்கிறது.
இதே போல் தான் இட ஒதுக்கீடு கொள்��ையால் தனக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை என்று 1951 நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த செண்பகம் துரைராஜ் என்ற பார்ப்பன மாணவி மருத்துவக் கல்லூரிக்கு மனுவே போடவில்லை என்ற உண்மை உச்ச நீதிமன்றத்தில் அம்பலமானது.
சமூக நீதியை குழி தோண்டி புதைத்து விட்டு தமிழ்நாட்டில் அதிகாரத்தை கைப்பற்ற வருகிறது மோடியின் பாஜக.
அதே நேரத்தில் தமிழ்நாட்டில் அய்.ஏ.எஸ் அதிகாரிகள் தேர்வு கு��ைந்து வருவதை கவனத்தில் கொண்டு "நான் முதல்வன்" திட்டத்தின் வழியாக நிதிஉதவி; உண்டு உறைவிடம் வாய்ப்புகளை வழங்கி இந்த ஆண்டு தமிழ்நாட்டைச் சேர்ந்த 56 ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்த மாணவர்களை திராவிட மாடல் ஆட்சி அய்.ஏ.எஸ் அதிகாரிகளாக பதவியில் அமர வைத்திருக்கிறது.
எனவேதான் இந்த தேர்தல் டெல்லிக்கும் தமிழ்நாட்டுக்கும் நடக்கும் உரிமைப் போராட்ட களம் என்கிறார் தமிழ்நாடு முதல்வர் ம���.க ஸ்டாலின்.
விடுதலை இராசேந்திரன்
16.03.2026
@arivalayam
@DMKITwing@KanimozhiDMK
@Udhaystalin
@Manothangaraj
திருச்சியிலிருந்து டெல்லிக்கு போர் முரசு கொட்டி இருக்கிறார் தமிழ்நாட்டின் முதல்வர் மு க ஸ்டாலின்
லட்சக்கணக்கான தொண்டர்களிலேயே ஒரு பேராசிரியராக வகுப்பு வகுப்பு எடுத்தார்
வரலாறுகளை நினைவூட்டினார்
தொண்டர்களுக்காகவே நான் வாழ்கிறேன் என்று உள்ளம் திறந்து உணர்வுகளை கடத்தினார்
அதிமுக முகமூடியோடு பாஜக தமிழ் தமிழ்நாட்டில் காலூன்ற முயற்சிக்கும் இந்த தேர்த��் களத்தில் உண்மையான எதிரி டெல்லி தான் என்பதை மீண்டும் உறுதிப்படுத்தி இருக்கிறார்
மக்கள் மீதும் சாதனைகள் மீதும் அவர் வைத்திருக்கும் அசைக்க முடியாத ஆழமான நம்பிக்கைகளின் வெளிப்பாடுகள் அவரது உரையிலும் தெரிந்தது ;உடல் மொழியிலும்தெரிந்ததது
தமிழ்நாட்டு ம��்களின் உரிமைகளையும் அடையாளங்களையும் பண்பாடுகளையும் சிதைக்க த் துடிப்பவர்களே தமிழ்நாட்டு மக்களின் உண்மையான எதிரிகள் ஒரு அடையாளம் காட்டிய முதல்வர் நீங்கள் வெற்றி பெற ப்போவது இல்லை என்பதையும் திட்டவட்டமாக தெரிவித்தார்
மக்களை வழிநடத்திச் செல்லும் ஒரு தளபதி அதற்கேற்ப தனது தொண்டர்களை பக்குவப்படுத்தி தயார்படுத்தும் ஆற்றலையும் சக்தியையும் தந்திருக்கிறது முதல்வரின் திருச்���ி பேருரை
இந்தியாவில் எந்த ஒரு மாநிலத்தில் இருந்தும் ஒரு முதலமைச்சர் இப்படி டெல்லி ஆதிக்கத்தை எதிர்த்து போர்க் குரல் எழுப்பிய வரலாறு இல்லை
பீகாரில் நிதிஷ்குமாரை முதல்வர் ஆக்கிய பாஜக, இப்போது அவருடைய பதவியை பறித்துக் கொண்டு அவரது மகன் நி த்திஷை துணை முதல்வர் ஆக்க முடிவு செய்துள்ளது
50 வயது உள்ள நித்திஷ் பொது வாழ்க்கைக்கு தொடர்பேஇல்லாதவர்
சொந்த தந்தையின் கட்சியிலே கூட அவர் உறுப்பினராக இல்லை ;
கடந்த ஞாயிற்றுக்கிழமை தான் அவர் உறுப்பினராக சேர்ந்திருக்கிறார்
உடனே துணை முதலமைச்சர் பதவி லாட்டரி கிடைத்திருக்கிறது தமிழ்நாட்டில் வாரிசு அரசியலுக்கு எதிராக கொந்தளித்து வருகிறார் எடப்பாடி
இதற்குப் பிறகுவாரிசு அரசியலுக்கு எதிராக வாய் திறப்பாரா?
ஏற்கனவே எடப்பாடி யாரின் கட்சியில் அடையாளமாக வைத்திருந்த பெரியார் படம்; மாநில உரிமைகள்; மென்மையான மதவாத எதிர்ப்பு; என்று ஒவ்வொன்றாக பறித்து
எடப்பாடி வாயை அடைத்து விட்டார் அமித்ஷா
இப்போது வாரிசு எதிர்ப்பு பேச்சுக்கும் கடிவாளம் வந்துவிட்டது
எடப்பாடி தக்க வைத்துக் கொண்டுள்ள ஒரே பேச்சுரிமை இதுதான்.
"எந்த க்கொம்பனாலும் எங்களை அசைக்க முடியாது"
என்��� ஒற்றை டயலாக்கு தான்
கல்வி இடை நிற்றல் இல்லா தமிழ்நாடு! 🎒
ஒவ்வொரு குழந்தைக்கும் தடையின்றி கல்வி கிடைக்க மீண்டும் வேண்டும் திராவிட மாடல் அரசு! 🖤❤️
#DVKstandwithMKStalin#வராது#வந்த#மாமணி#ஸ்டாலின்!
விரிவாக படிக்க
https://t.co/6u4s32eQAG
சென்னை மாவட்டக் கழகம் நடத்திய "தொடரட்டும் தமிழ்நாட்டில் சாதனைகள்..
திமுக ஆட்சியை உறுதி செய்வோம்! தேர்தல் பரப்புரை 7வது நாள் கூட்டத்தில் தோழர்களுடன்.
🔥மீண்டும் வேண்டும் திராவிட மாடல் 2.0! 🖤❤
#DVKstandwithMKstalin
🖤❤தலைவர் கொளத்தூர் மணி அவர்களின் வழிகாட்டுதலில் மாநிலம் முழுவதும் 1000 தெருமுனைக் கூட்டங்கள் ஏற��பாடு! 🔥தொடரட்டும் திராவிட மாடல்! 💪 #DVKstandwithMKstalin
https://t.co/l95dgnXvgp
🖤❤தலைவர் கொளத்தூர் மணி அவர்களின் வழிகாட்டுதலில் மாநிலம் முழுவதும் 1000 தெருமுனைக் கூட்டங்க��் ஏற்பாடு! 🔥தொடரட்டும் திராவிட மாடல்! 💪 #DVKstandwithMKstalin
7 நாளில் திருப்பூர், சென்னை, சேலம்,கோவை ஆகிய மாவட்டங்களில் சேர்த்து இது வரை 90 கூட்டங்களை நடத்தி முடித்துள்ளது கழகம்.
த.வெ.க தலைவர் விஜய்க்கு பேச்சு எழுதித் தரும் அவரது ஆலோசகர்கள் அவரது திரைப்பட பிம்பத்தையே உடைத்து விடுவார்கள் போலிருக்கிறது!
மக்களோடு மக்களாக நான் நிற்பவன் என்று அவரது பேசுவதைக் கேட்டு மக்கள் அதிர்ச்சி அடைந்து நிற்கிறார்கள்.
கொரோனாவின் போதும்; வெள்ளம் சூழ்ந்த போதும்; மக்களோடு மக்களாக இவர் எங்கே மறைந்து இருந்தார் என்பது மக்களுக்கே தெரியவில்லை!
அவரது ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் அவரது ரசிகர்கள் பொது சொத்துக்களை சேதப்படுத்துகிறார்கள், நீதிமன்றம் கண்டிக்கிறது; சேதமடைந்த பொருட்களுக்கு அந்தக் கட்சி அபராதம் கட்டிக் கொண்டிருக்கிறது.
இதன் காரணம��கவே நீதிமன்ற உத்தரவின் படி காவல்துறை நிபந்தனைகளை விதிக்கிறது. இதற்கு முதலமைச்சர் சதி செய்வது போல் சவால் விடுவது நல்ல நகைச்சுவை.
திருச்சி பொதுக் கூட்டத்தில் அவர்களே ஏற்பாடு செய்த ஒலிபெருக்கி செயல்படாமல் போனதற்கும் முதலமைச்சர் தான் செய்தாராம்; ஒலிபெருக்கி அமைப்பாளர் இடம் ரகசியமாக தொடர்பு கொண்டு முதலமைச்சர் பேசினாரா?
பகல் நேரத்தில் உச்சி வெயில் கொளுத்தும் நேரத்தில் இவர் நடத்தும் பொதுக் கூட்டத்திற்கு திமுக ஆட்சி திட்டமிட்டு மின்சாரம் தடைச் செய்து விட்டதாக
கூறுகி��ார்.
இது என்ன பகலில் ஒரு இரவு சினிமா காட்சியா?
விடுதலை இராசேந்திரன்
பொதுச் செயலாளர் திவிக
20.09.2025
உடற் கொடையில் தமிழ்நாடு முதலிடம்!
கல்வியில் சிறந்த தமிழ்நாட்டை ஜாதிவெறியை அசைத்து பார்க்கிறது. ஜாதி வெறியை தக்க வைக்க ஆணவப் படுகொலைகள் நிகழ்கிறது.
ஜாதி அவமானம் !
மனிதம் நமது அடையாளம்!
மருத்துவத்திற்கு உறுப்புகளை கொடையாக வழங்குவதில் தமிழ்நாடு இந்தியாவிலேயே முதல் மாநிலமாக திகழ்கிறது.
ஒன்றிய மருத்துவத்துறை அமைச்சகம் இதற்காக தமிழ்நாடு அரசை பா���ாட்டியிருக்கிறது.
மூளைச் சாவு அடைந்தவர்கள், உறுப்புக் கொடை தர முன் வரும்போது, அவர்களுக்கு அரசு மரியாதை தரும் தமிழ்நாடு அரசு திட்டத்தின் காரணமாகத்தான் இந்த அளவிற்கு உறுப்புக் கொடை வழங்குவது அதிகரித்து இருக்கிறது என்று ஒன்றிய அமைச்சகம் விளக்கம் அளித்து இருக்கிறது.
இறப்புக்குப் பிறகு "ஆன்மா" அழியாமல் வேறு உலகத்திற்கு பயணிக்கிறது என்ற மத நம்பிக்கை இதில் புறக்கணிக்கப்படுகிறது.
ஒரு ஜாதியின் உடல் ��றுப்பு மற்றொரு ஜாதிக்கு மாற்றப்படுகிறது என்பதால் ஜாதியப் பார்வையும் இதில் புறக்கணிக்கப்படுகிறது.
தமிழ்நாடு இதில் முன்னணியில் இருப்பது தமிழ்நாட்டிற்கு பெருமை.
அதே நேரத்தில் ஜாதி ஆணவப் படுகொலைகள் தமிழ்நாட்டில் தான் அதிகம் நடக்கிறது என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது. இதற்கு என்ன காரணம்? வடமாநிலங்களில் ஜாதி அமைப்புகளை சமூகம் ஏற்றுக்கொண்டு ஜாதிவெறிக் கட்டளைகளுக்கு அடிபணிந்து வாழ்கிறது. ஜாதியக் கட்டுப்பாடுகளை மீறுவதற்கு தயாராக இல்லை. எனவே ஆணவப் படுகொலைகளுக்கு வாய்ப்புகள் இல்லை.
தமிழ்நாட்டிலும் சென்ற நூற்றாண்டில் ஆணவப் படுகொலைகள் அவ்வளவாக நடந்ததில்லை. காரணம் சமூகம் ஜாதி அமைப்பை ஏற்றுக் கொண்டு வாழ்ந்தது. தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சி இப்போது ஜாதி சமூக அமைப்பை அசைக்கத் தொடங்கியிருக்கிறது ஜாதி மறுப்பு காதல் அதிகரிக்கிறது. அதன் எதிர்வினை���ளாக ஆணவப் படுகொலைகள் நடக்கின்றன.
தமிழ்நாட்டில் தான் ஜாதி ஆணவப் படுகொலைக்கு எதிராக போராட்டங்கள் நடக்கின்றன. ஆணவப் படுகொலை தடுப்புசட்டம் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கையும் வலுப்பெறுகிறது. வேறு எந்த மாநிலத்திலும் இத்தகைய ஜாதி எதிர்ப்புகள் இல்லை. ஜாதி மறுப்பு திருமணங்களும் அரிதிலும் அரிது. உ.பி, பீகாரில் ஜாதி மறுப்பு திருமணம் பற்றி கனவு கூட காண முடியாது.
இந்த சமூகப் பார்வையோடு ஆதிக்க ஜாதி வெறியை எதிர்த்து நமது போராட்டக் களத்தை தீவிரமாக்க வேண்டும். இதை கட்சி அரசியலாக மாற்றுவது சரியல்ல!
விடுதலை இராசேந்திரன்
பொதுச் செயலாளர் திவிக
05.08.2025
அமைப்பு தொடங்கிய நாளான ஆகஸ்ட் 12-ல் திராவிடர் விடுதலைக் கழகம் சென்னை மாவட்டக் கழகம்
"மனிதம் நமது அடையாளம்
ஜாதி அவமானம்! " என்ற தலைப்பில் ஜாதி ஆணவ���்தை அடக்குவோம் ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான சமத்துவப் பரப்புரை கூட்டங்களை நடத்த உள்ளது.
முதற்கட்டமாக சென்னை திருவல்லிக்கேணி, ஜஸ்ஹவுஸ் பகுதிகளில் பிரச்சாரம் கூட்டம் நடைபெறும்.
தடை ச்சட்டம் என்று ஒன்று இல்லாத காரணத்தினால் தான், ஆணவப் படுகொலைகள் நடக்கிறதா?
வன்கொடுமை தடுப்புச் சட்டம் இருந்தும் கூட சாதியக் கொடுமைகள் நின்று விட்டதா?
சட்டங்களும் வரட்டும்! ஆனால் ஆணவப்படுகொலைகளுக்கு ஊற்று எது ? ஜாதிய கட்டமைப்புதான்! ஜாதிய கட்டமைப்பை மீறக் கூடாது என்று ஏதாவது சட்டம் இருக்கிறதா? இல்லை.
* சமையலறை பெண்களுக்கே உரிமையானது என்று ஏதாவது சட்டம் இருக்கிறதா? இல்லை.
���ட்டங்கள் ஏதும் இல்லாமலே, இவைகள் கண்டிப்பாக வாழ்க்கையின்
ச���்டங்களானது எப்படி ?
ஆணவக் கொலையில் முதல் குற்றவாளியாக கூண்டில் ஏற்ற வேண்டியது ஜாதியையும் ஜாதி வெறியையும் தான்!!
பிறப்பின் அடிப்படையில் விலையில்லாமல் கிடைக்கிறது ஜாதி. அந்த விலையில்லா பொருளுக்கு மதத்தின் முதலீடுகள் இருக்கின்றன.இவை புரிந்துணர்வு ஒப்பந்தம் இல்லாமலே கிடைக்கின்ற முதலீடுகள்!
மனுதர்மம்; பகவத்கீதை ; சாஸ்திரம்; ஆகமம்; வேதம்; ராமாயணம்; இதிகாசங்கள்; சம்பிரதாயங்���ளில் இருந்து இந்த முதலீடுகள் வருகின்றன!
பிறப்பின் அடிப்படையில் விலையில்லாமல் கிடைக்கும் ஜாதியை இந்த முதலீடுகளே இயக்கிக் கொண்டிருக்கின்றன. ஜாதிய படிநிலைகளை கட்டமைக்கின்றன.
சமூகத்தைச் சீரழிக்கும் இந்த முதலீடுகளின் அதிகாரங்களை பறிமுதல் செய்ய வேண்டும் என்று பெரியாரும் அம்பேத்கரும் போராடினார்கள்.
ஜாதி அடையாளம் இல்லாத ஒரு இந்து கூட இங்கே பிறப்பதில்லை.
மக்களை ஜாதி என்ற ��ிறைக்குள் இந்து மதம் அடைத்து வைத்திருக்கிறது. இதிலிருந்து மக்களை விடுதலை செய்ய வேண்டும் என்பதுதான் இப்போதுள்ள வழக்கு,
இதில் முதல் குற்றவாளிகள் ஜாதியும் மதமும்தான்.
ஜாதியையும் தீண்டாமையையும் மதத்திலிருந்து விலக்கப்பட வேண்டும் என்பதே நமது கோரிக்கை!
இந்த வழக்கை மக்கள் மன்ற��்தின் முன் வைப்போம்! நியாயம் கேட்போம்!
விடுதலை இராசேந்திரன்
பொதுச் செயலாளர் திவிக
31.07.2025
தலித் மக்கள் மீது வெறுப்பைக் கக்கும் ஜாதிய வெறி காட்டுமிராண்டித்தனமானது.
திருச்செந்தூர் அருகே தலித் இளைஞர் மென்பொறியாளர் கவின் ஜாதி வெறிக்கு பலியாகி உள்ளார்.
தனது தங்கையை காதலித்ததற்காக மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த 22 வயது இளைஞர் இந்த கொலையை ஜாதி வெறியோடு செய்திருக்கிறார். இத��்கு அவர்கள் பெற்றோரும் உடந்தையாக இருந்திருக்கிறார்கள்.
பெற்றோர்கள் இருவரும் காவல்துறையில் பணியாற்றுகிறார்கள்.
இளைஞர்களிடமும் படித்தவர்களிடமும் ஜாதி வெறி புரையோடி கிடப்பது மிக, மிக ஆபத்தானது.
கொலைக் குற்றம்
சாட்டப்பட்ட இளைஞர் மற்றும் அவரது காவல்துறையில் பணியாற்றும் பெற்றோர்கள் மீது வ���்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் கைது செய்யப்பட வேண்டும்.
"ஜாதி ஆணவப் படுகொலைக்கு தனிச் சட்டம் தேவை என்று அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்துவதில் நியாயம் இருக்கிறது. ஆனாலும் கூட சட்டங்களால் மட்டுமே இந்த ஜாதி வெறி போக்கை தடுத்து விட முடியுமா? என்று சிந்திக்க வேண்டி இருக்கிறது".
ஜாதி எதிர்ப்பு கருத்துகளை எந்த அரசியல் கட்சிகளும் பே��� முன்வரவில்லை. கட்சிகளின் செயல் திட்டங்களில் ஜாதி எதிர்ப்பு கொள்கைகள் இடம்பெறவில்லை.
பெரியார், அம்பேத்கர் மற்றும் இடதுசாரி இயக்கங்கள் மட்டுமே இது குறித்து பேசிக் கொண்டிருக்கின்றன. ஜாதி கட்டமைப்புகளை தன்னுடன் இணைத்துக் கொண்டே ஜனநாயக தேர்தல் அரசியலும் இயங்கிக் கொண்டிருக்கிறது.
ஜாதிகளை புனிதப்படுத்தும் மதக் கோட்பாடுகளையும் சடங்குகளையும் விமர்சிப்பதற்குக் கூட யாரும் ���யாராக இல்லை. ஜாதிய உளவியலை கட்டமைப்பதில் இவை பெரும்பங்காற்றுகின்றன என்பதுதான் உண்மை.
இந்துக்களின் மத ஒற்றுமையை வாய் கிழிய பேசும் பாஜக, சங் பரிவாரங்கள் 'கள்ள மவுனம்' சாதிக்கின்றன.
"ஜாதி பெருமையானதல்ல; இழிவானது என்ற உளவியலை மக்களிடம் உருவாக்க வேண்டிய தேவையையும் அவசியத்தையும் இந்த படுகொலைகள் உணர்த்திக் கொண்டிருக்கின்றன" .
விடுதலை இராசேந்திரன்
பொதுச்செயலாளர்
திராவிடர் விடுதலைக் கழகம்
30.07.2025.
கேரள மாநிலம் காலடியில் நான்கு நாள் கல்வி மாநா���ு ஒன்றை ஜுலை 25 முதல் 28 வரை. ஆர்.எஸ். எஸ் தலைவர் மோகன் பகவத் கூட்டி இருக்கிறார்.
தேசிய கல்விக் கொள்கையை தீவிரமாக அமல்படுத்துவது குறித்தும், வேத இதிகாச பெருமைகளை பேசும் பாரம்பரிய கல்வி முறையை பரப்புவது குறித்தும் இந்த மாநாடு ஆராயப் போகிறதாம்.
இந்தியா முழுவதும் துணைவேந்தர்கள் "பல்கலை நிதிக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய அரசின் கல்வி சார் அதிகாரிகள்" இவர்களோடு ஆன்மீகவாதிகளும் இந்த மாநாட்டில் பங்கேற்க இருக்கிறார்களாம்.
பாஜக ஆளும் மாநிலங்களின் கல்வி அமைச்சர்களும் இதில் பங்கேற்கிறார்கள்.
பாட நூல்களில் இஸ்லாமிய வெறுப்பையும் இதிகாச பெருமைகளையும் திணித்துக் கொண்டிருக்கும் மோடியின் ஆட்சி, கல்வித் துறையை ஆர்.எஸ்.எஸ் அமைப்பிடம் ஒப்படைத்து விட்டது.
75 வயதுக்கு மேற்பட்டோர் அரசியலில் ஈடுபடக்கூடாது என்று மோடிக்கு ஆர்.எஸ்.எஸ் 'செக்' வைத்திருக்கிறது.
பிரதமர் பதவியிலிருந்து ���ாட்டின் கல்விக் கொள்கைவரை முடிவெடுக்கும் அதிகாரம்
ஆர்.எஸ்.எஸ் பிடிக்குள் வந்துவிட்டது.
அண்மையில் தலைநகர் டெல்லியில் பல நூறு கோடி ரூபாய் செலவில் பெரும் மாளிகையை கட்டி முடித்துள்ள ஆர்.எஸ்.எஸ், சட்டப்படி இன்னும் பதிவு செய்யப்படாத ஒரு அமைப்பு.
இப்போது வெளிவந்துள்ள 'கேரவன்' பத்திரிக்கை இது குறித்து விரிவான ஆய்வு கட்டுரை ஒன்றை எழுதி இருக்கிறது.
நான்கு முறை தடை செய்யப்பட்ட அம���ப்பு; அமைப்புக்குள் பெண்களை 'இன ஒதுக்கல்' செய்துள்ள ஒரு அமைப்பு; இந்தியாவின் ஆட்சி அதிகாரத்தை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது.
தமிழ்நாட்டுக்குள் இந்த சக்திகளை இழுத்துக் கொண்டு
வர துடிப்பவர்களை மக்கள் புறக்கணிப்பார்கள்.
விடுதலை இராசேந்திரன்
பொதுச்செயலாளர் திவ���க
19.07.2025
"கோயில்க���ுக்கு வருபவர்களுக்கு ஆளுக்கு ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் வீதம் வரி வசூல் செய்து தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இலவசக் கல்லூரிப் படிப்பு கொடுத்தால் எந்த சாமி கோபித்துக் கொள்ளும்? எந்த பக்தன் நாசமாய்ப் போய் விடுவான்?" - பெரியார் ("விடுதலை" - 1962)
@EPSTamilNadu