மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
வெற்றித் தலைவர் அவர்களின் உத்தரவின்படி, கப்பலோட்டியத் தமிழர் வ.உ.சிதம்பரனார் அவர்களின் பிறந்தநாளையொட்டி
மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு.N. ஆனந்த் அவர்கள் தலைமையில் அமைச்சர்களுடன் சென்னை காந்தி மண்டபத்தில் அமைந்துள்ள செக்கிழுத்தச் செம்மல் தியாகி வ.உ.சிதம்பரனார் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
@CMOTamilnadu@TVKVijayHQ@TVKPartyHQ@TVKHQITWingOffl
#வஉசிதம்பரனார் #கப்பலோட்டியதமிழன்
#TamilagaVettriKazhagam
#SelfConfidence
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @CMOTamilnadu அவர்களின் உத்தரவின்படி,
இன்று (05.09.2026) சனிக்கிழமை,
மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு.N.@BussyAnand MLA அவர்கள், சென்னை காந்தி மண்டபத்தில் அமைந்துள்ள சுதந்திரப் போராட்டத் தியாகி வ.உ.சிதம்பரனார் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
மேலும், ஆங்கிலேயர்களுக்கு எதிராக சுதேசி கப்பல் நிறுவனத்தைத் தொடங்கி, நாட்டுப்பற்றின் அடையாளமாக திகழ்ந்த வ.உ.சிதம்பரனார் அவர்கள் இழுத்த செக்கிற்கும் மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, மாணவர்களின் சார்பில் நடைபெற்ற நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்து, மாணவர்களைப் பாராட்டி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
இந்நிகழ்வில், மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் K.G.அருண்ராஜ் அவர்கள், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.ப.வெங்கடரமணன் அவர்கள், மாண்புமிகு பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி (ம) விளம்பரத்துறை அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்கள், மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.செ.ராஜேஷ் குமார் அவர்கள், மாண்புமிகு சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் திரு.M.அருள் பிரகாசம் அவர்கள், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசுச் செயலாளர் திரு.வே.ராஜாராமன், இ.ஆ.ப. அவர்கள், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் திரு.மரு.அ.அருண் தம்புராஜ், இ.ஆ.ப. அவர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரும், தலைசிறந்த கல்வியாளருமான டாக்டர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாளை ஆசிரியர் தினமாகக் கொண்டாடும் இந்நன்னாளில், மாணவச் செல்வங்களின் வளமான எதிர்காலத்திற்காகத் தன்னலம் கருதாது பணியாற்றிவரும் ஆசிரியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்!
மாணவர்களின் மனங்களில் அறிவொளி ஏற்றி, ஒழுக்கம், மனிதநேயம், சகோதரத்துவம் மற்றும் சமூகப் பொறுப்பு உள்ளிட்ட உயரிய நற்பண்புகளை விதைத்து, அவர்களின் கனவுகளுக்குச் சிறகளித்து, திறமைகளுக்கு வழிகாட்டி, எதிர்கால வாழ்விற்கான அடித்தளத்தை அமைத்துத் தருவதோடு, நாட்டின் வளர்ச்சியோடு ஒட்டுமொத்த சமூக முன்னேற்றத்தையும் கட்டமைக்கும் உன்னதப் பணியை மேற்கொண்டுவரும் ஆசிரியப் பெருமக்களின் மகத்தான பணிகளைப் போற்றுவோம்!
ஆசிரியர்களின் தன்னலமற்ற அர்ப்பணிப்பும், சிறந்த வழிகாட்டுதலும் நமது மாணவச் செல்வங்களின் எதிர்காலத்தை மேலும் ஒளிமயமாக்கட்டும்!
#CMJosephVijay
#TeachersDay
அறிவூட்டி, நற்பண்புகளை விதைத்து, ஒரு தலைமுறையையே செதுக்கும் உன்னத சிற்பிகள் ஆசிரியர்கள்.
சமூகத்தின் அடித்தளமாய் விளங்கி, நாட்டின் எதிர்காலத்தை உருவாக்கும் அர்ப்பணிப்புமிக்க அனைத்து நல் ஆசிரியர்களுக்கும் எனது மனமார்ந்த ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்!
#TeachersDay
சென்னையில் நவீன வசதிகளுடன் கூடிய சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலகம் அடங்கிய புதிய கட்டிடம் 20 லட்சம் சதுரடி பரப்பளவில் ரூ.1200 கோடியில் அமைக்கப்படும் - தமிழ்நாடு முதலமைச்சர் வெற்றித் தலைவர் அவர்கள் விதி எண் 110-ன் கீழ் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் அறிவிப்பை வெளியிட்டார்.
சட்டமன்றத்தில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாத தேதிகளும் , முன்னாள் முதல்வரின் பதிலுரை தேதிகளும்.
பி.கு 2021ல் 3 நாட்கள் கழித்தே அவர் பதில் அளித்திருக்கிறார்.
நியாய விலை கடையில் குடும்ப அட்டைக்கு 1 கிலோ வெங்காயம் ரூபாய் 35 வழங்கப்படுகிறது.. மாண்புமிகு உணவுத்துறை அமைச்சர் அண்ணன் @AdvocateVenkatP அவர்களுக்கு மிக்க நன்றி 🙏
#TVK#vijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (3.9.2026) தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் விதி எண் 110-இன் கீழ், தமிழ்நாட்டில் உலகத்தரம் வாய்ந்த மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் (Motor Sports City) அமைப்பது தொடர்பாக வெளியிட்ட அறிவிப்பு.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (3.9.2026) தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் விதி எண் 110-இன் கீழ், சென்னையில் நவீன வசதிகளுடன்கூடிய சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலகம் அடங்கிய புதிய கட்டட வளாகம் அமைப்பது தொடர்பாக வெளியிட்ட அறிவிப்பு.
#CMJosephVijay
கண்ணாடி போடுங்கம்மா அழகா இருப்பீங்க நீங்க..! முதல்வர் விஜயை பார்த்த குஷியில் அவரது கண்ணத்தை கிள்ளி கொஞ்சி மகிழ்ந்த மூதாட்டி.. விஜய் கொடுத்த கியூட் ரியாக்ஷன்..
மேட்டூர் அணையை திறந்து வைத்த பின் விவசாயி வீட்டிற்கு சென்று அவர்களுக்கு புதிய துணிகளை வழங்கி மூதாட்டிக்கு கண்ணாடியை அணிவித்து மகிழ்ந்த முதல்வர் விஜய்..
#Salem | #CMVijay | #MetturDam | #Water | #Farmers | #PolimerNews
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (31.8.2026) தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், விதி எண் 110-ன் கீழ், பால் உற்பத்தியாளர்கள் பயனடையும் வகையில் பால் கொள்முதல் விலையை 44 ரூபாயாக உயர்த்தியும், எரிசக்தித் துறை சார்பில் புதிய மின்கட்டமைப்புகள் அமைப்பது தொடர்பாகவும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் செமிகண்டெக்டர் மற்றும் மின்னணுவியல் உற்பத்திப் பூங்கா, கோயம்புத்தூரில் டிஜிட்டல் நிதி மையம் மற்றும் திருச்சிராப்பள்ளி மண்டலத்தில் பல்முனை சரக்குப் போக்குவரத்து மையம் அமைப்பது தொடர்பாகவும் அறிவிப்புகளை வெளியிட்டார்.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (31.8.2026) தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், விதி எண் 110-ன் கீழ், பால் உற்பத்தியாளர்கள் பயனடையும் வகையில் பால் கொள்முதல் விலையை 44 ரூபாயாக உயர்த்தியும், எரிசக்தித் துறை சார்பில் புதிய மின்கட்டமைப்புகள் அமைப்பது தொடர்பாகவும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் செமிகண்டெக்டர் மற்றும் மின்னணுவியல் உற்பத்திப் பூங்கா, கோயம்புத்தூரில் டிஜிட்டல் நிதி மையம் மற்றும் திருச்சிராப்பள்ளி மண்டலத்தில் பல்முனை சரக்குப் போக்குவரத்து மையம் அமைப்பது தொடர்பாகவும் அறிவிப்புகளை வெளியிட்டார்.
#CMJosephVijay | #TNDIPR | #TNBudget2026_27 |
@TVKVijayHQ | @imrajmohan |
மயிலாப்பூர் தொகுதி மக்கள், மயிலாடுதுறை மாவட்ட மக்கள் அல்லது நியாய விலைக் கடை மற்றும் குடும்பஅட்டை தொடர்பாக ஏதேனும் புகார்கள் இருப்பின் இந்த க்யூ ஆர் குறியீடு அல்லது https://t.co/w5wMVWEg0e இணையதளத்தை பயன்படுத்தி உங்களுடைய குறைகளை விண்ணப்பமாக அளிக்கலாம்
@AdvocateVenkatP#tvkvijay
1 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்யும் பிரம்மாண்ட திட்டம் தொடக்கம்!
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களின் நல்வாழ்த்துகளுடனும் வழிகாட்டுதலுடனும் முதற்கட்டமாக, கலியனூர் ஏரிப் பகுதியில் 1 லட்சம் பனை விதைகள் நடவு செய்யும் பணியை மாண்புமிகு வனத்துறை அமைச்சர் அவர்கள் இன்று தொடங்கி வைத்தார்.
'விதைகள்' தன்னார்வ அமைப்பும் பொதுமக்களும் இணைந்து செயல்படுத்தும் இத்திட்டம், மாவட்டத்தின் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும் பசுமைப் போர்வையைப் பெருக்கவும் பெரும் பங்காற்றும்.
மண் காப்போம்! பசுமை காஞ்சி அமைப்போம்!
இந்திய ஹாக்கி அணியின் தலைசிறந்த வீரரும், உலகளவில் அபார சாதனை படைத்தவருமான மேஜர் தியான் சந்த் அவர்களின் பிறந்தநாளை தேசிய விளையாட்டு நாளாகக் கொண்டாடும் இந்நாளில், விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள்.
விளையாட்டு, பதக்கங்களை வெல்வதற்கு மட்டுமல்ல; ஒழுக்கம், விடாமுயற்சி, தன்னம்பிக்கை, தலைமைப் பண்பு, குழு உணர்வு, ஆகியவற்றை வளர்த்துக் கொள்வதற்கான சிறந்த களமாகவும் திகழ்கிறது. ஆரோக்கியமான, மகிழ்ச்சியான மற்றும் நிறைவான வாழ்க்கைக்கு உடல்தகுதி மிக அவசியம். இளம்தலைமுறையினர் விளையாட்டையும், உடற்பயிற்சியையும் அன்றாட வாழ்க்கையின் ஓர் அங்கமாக வளர்த்துக் கொள்ளவேண்டும்.
சர்வதேச மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தங்களது திறமைகளைச் சிறப்பாக வெளிப்படுத்தி, வெற்றிகளைக் குவித்து, இந்தியாவின் மூவர்ணக் கொடியை மேலும் உயரத்தில் பறக்கச் செய்திட இந்நாளில் வாழ்த்துகிறேன்.
விளையாட்டில் வளர்வோம் ! வெற்றியில் மிளிர்வோம் !
#NationalSportsDay
#CMJosephVijay