கர்நாடக வனத்துறை துப்பாக்கி சூடு மூன்று தமிழர்கள் உயிர் இழப்பு...!கடந்து செல்லும் தமிழ்நாடு😌
கர்நாடக வனத்துறையினருக்கும் வேட்டைக்காரர்களுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை: மூன்று வேட்டைக்காரர்கள் உயிரிழப்பு,
ஒருவர் காயம்; வனத்துறை ஊழியர் ஒருவருக்கும் படுகாயம். - இப்படி ஒரு பொய்செய்தியை பரப்புகிறார்கள்
கர்நாடக மாநிலம்,, கொள்ளேலேகால் தலைமையிடமாகக் கொண்ட காவேரி வனவிலங்கு சரணாலய வனப் பகுதியை ஒட்டி அமைந்துள்ளது.
தோமையார்பாளையம், மரியமங்கலம் பகுதியை சேர்ந்த சில வேட்டைக்காரர்கள் காட்டுக்குள்
மான் வேட்டையாடச் சென்றதாக சாக்கியம் பகுதி வன அலுவலர்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது.
இதைத் தொடர்ந்து இன்று அதிகாலை ஆறு மணிக்கு, தோமையார் பாளையம் மற்றும் சாக்கியம் குறுவட்ட வன அலுவலர்கள் அந்தப் பகுதிக்கு ரோந்து சென்றுள்ளனர்.
அப்போது மரியமங்கலம் ஊரை அடுத்துள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில், சிலர் துப்பாக்கியுடன் மான் வேட்டையில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து வனத்துறையினர் அவர்களை சுற்றி வளைத்து பிடிக்க முயற்சி செய்யும்போது, இரு தரப்புக்கும் துப்பாக்கிச் சூடு நடந்ததாகவும், இதில் வனத்துறை ஊழியர் ஒருவர் காயமடைந்ததாகவும், வனத்துறையினர் திருப்பிச் சுட்டதில், மான் வேட்டையில் ஈடுபட்டிருந்த ஜகன்னாததொட்டி என்ற இடத்தை சேர்ந்த பெரியநாயகம் என்பவரின் மகன் அந்தோணிசாமி (வயது-50), மரியமங்கலத்தை சேர்ந்த யாகூப் என்பவரின் மகன் ஜான்ரோஸ் பீட்டர் (வயது-42), லாசர் தொட்டி என்ற இடத்தை சேர்ந்த சவேரியப்பன் என்பவரின் மகன் குமார் (33), ஆகிய மூவரும் உயிரிழந்துள்ளனர் என கொலைகார கரநாடக வனத்துறை கதை சொல்லி இருக்கிறது
இச்சம்பவத்தில் மரியமங்கலத்தைச் சேர்ந்த பெஞ்சமின் என்பவரின் மகன் மகிமைதாஸ் (வயது-48) என்பவர் படு காயமடைந்துள்ளார். உயிரிழந்த மூவர் மற்றும் படுகாயமடைந்த மகிமைதாஸ் என நால்வரையும் கொள்ளேகால் அரசு மருத்துவமனைக்கு கொண்டுவந்துள்ளனர்.
முதலுதவிக்குப் பிறகு மகிமைதாஸ், மேல் சிகிச்சைக்காக மைசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். பாதுகாப்பு காரணங்களுக்காக உயிரிழந்த மூவரின் உடல்களும் மைசூர் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும்,இதுகுறித்து ஹனூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளதாக கொள்ளேகால் மாவட்ட வனஅலுவலரும், காவிரி வன உயிரியல் சரணாலய துணை வனப்பாதுகாவலர் (DCF-பொறுப்பு) மரியசுவாமி தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து அறிந்ததும், வனத்துறை மற்றும் சாம்ராஜ் நகர் மாவட்ட காவல்துறையைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
இதற்கிடையே ஹனூர் நகரில் உள்ள வனத்துறை அலுவலக நுழைவாயில் அருகே காவல் துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.உயிரிழந்த மூவரும் தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்டவர்கள் என்பதால்,ஹனூர் சுற்றுப்பகுதியை சேர்ந்த பல கிராமங்களில் உள்ள தமிழ் பேசும் மக்களும் ஹனூர் வனத்துறை அலுவலகம் முன்பாக திரண்டுள்ளனர்.
ஹனூர் காவல் நிலையம், வனத்துறை அலுவலகம், பேருந்து நிலையம் அமைந்துள்ள அம்பேத்கர் சர்க்கிள் பகுதியில் மைசூரில் இருந்து வரவழைக்கபட்டுள்ள KSRP போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். இதனால், கொள்ளேகால்-மாதேஸ்வரன்மலை சாலையில் போக்குவரத்து தடைபட்டுள்ளது.
இந்த சம்பவம் எத்தனை மணிக்கு நடந்தது, ரோந்து சென்ற வனத்துறை அலுவலர்கள் யார்? காயம் பட்டவரின் பெயர் என்ன ? என்பது போன்ற தகவல்களை வனத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் தெளிவு படுத்தவில்லை.
இதற்கிடையில் காயம் பட்டுள்ள மகிமைதாஸ் அவரது உறவினர்களிடம் பேசும் போது, ஊரை ஒட்டிய வனப்பகுதியில் உள்ள காட்டுக்கு மாடுகள் மேச்சலுக்காக சென்றன.
மாலை 6 மணி வரை மாடுகள் திரும்ப வராததால், இரவு 7 மணிக்கு நாங்கள் நான்கு பேரும் மாடுகளை தேடிக்கொண்டு காட்டுக்குள் சென்றோம்.
இரவு 12 மணி வரை தேடியும் மாடுகளை கண்டுபிடிக்க முடியவில்லை.இரவு ஒரு பாறை மீது படுத்திருந்து விட்டு காலையில் எழுந்து மீண்டும் மாடுகளை தேடலாம் என்று படுத்திருந்தோம்.
அதிகாலை நேரத்தில் யாரோ நடந்து வருவது போன்ற சத்தம் கேட்டது.
நான் எழுந்து பாறை மீது இருந்து கீழே குதித்தேன்.
உடனே வனத்துறையினர்
எங்கள் மீது துப்பாக்கியால் சுட
நான் தப்பி ஓடி வந்து விட்டேன்.எனக்கு வயிற்றிலும் உடலின் பல இடங்களிலும் துப்பாக்கிக் குண்டு காயங்கள் ஏற்பட்டுள்ளன.
படுத்திருந்த மூன்று பேரையும் வனத்துறை அதிகாரிகள் சுட்டுக் கொன்று விட்டனர் என்று தெரிவித்துள்ளார்.
இப்படி ஒரு சம்பவம் தமிழ்நாட்டில் கன்னடர்களுக்கோ ஆந்திரர்களுக்கோ மலையாளிகளுக்கோ நடந்திருந்தால் அந்த ஒட்டுமொத்த மாநிலமும் கொதித்து வீதிக்கு இறங்கி போராடி இருப்பார்கள் நாதியத்த தமிழினம் நடிகர்களின் பின்னால் சுற்றிக்கொண்டு இருக்கிறோம். ஊடகங்களும் see more...
- சுப்ரமணியன்
விளவங்கோடு காங்கிரஸ் MLA T.T.பிரவீன்.
#மலையாள கிறித்தவர்.
திருவனந்தபுர கிறித்தவ அமைப்பின்,CSI south kerala செயலாளர்.
தமிழ்நாட்டில் உள்ள பிறமொழியாளர்களைத் தாண்டி,நேரடி பிறமாநில மக்களின் குப்பைக்கூடமாக தமிழ்நாடு.
தேனி மாவட்டம் மேகமலை, வருசநாடு பகுதி வன கிராம மக்களை அவர்களின் வாழ்விடங்களிலிருந்து வெளியேற்றும் முடிவை கைவிட வேண்டும்!
@CMOTamilnadu@TVKVijayHQ
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டத்துக்குட்பட்ட தும்மக்குண்டு, மேகமலை உள்ளிட்ட 98 மலை கிராமங்களில் பல தலைமுறையாக வசித்து வரும் 5000க்கும் அதிகமான மக்களை அவர்களின் வாழ்விடங்களிலிருந்து வெளியேற்ற முயல்வது மிகுந்த வேதனை அளிக்கிறது. கடந்த ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக தமிழ்ப் பழங்குடி மக்கள் மேகமலை, வருசநாடு பகுதி வன கிராம பகுதியில் உள்ள நிலங்களில் இலவம், முந்திரி, மிளகு, ஏலம் உள்ளிட்ட பயிர்களை விளைவித்து வருகின்றனர். வன உயிரினங்கள் பெருமளவு அழிந்துவிட்ட தற்காலச் சூழலில் இயற்கை சமநிலைப் பேணுவதில், மனிதர்களால் வளர்க்கப்படும் கால்நடைகள் பெருமளவு பங்கு வகிக்கிறது என்பதே எதார்த்த உண்மையாகும்.
மலைவாழ் மற்றும் பழங்குடியின மக்கள் காலங்காலமாக மலைகளுக்கும், காடுகளுக்கும் அவற்றில் வாழும் உயிரினங்களுக்கும் பாதுகாவலனாய் வாழ்ந்து வருகின்றனர். பன்மடங்கு அறிவியல் வளர்ச்சி ஏற்பட்டுள்ள நவீன உலகத்தின் அத்தனை வசதி வாய்ப்புகளையும் புறக்கணித்துவிட்டு, இன்றளவும் இயற்கையோடு இயற்கையாக வாழ்கின்ற அப்பெருங்குடி மக்கள் போற்றுதலுக்குரியவர்கள். அவர்களின் வாழ்வாதாரம் முழுக்க முழுக்கக் காடுகளையும், மலைகளையும் சார்ந்தே இருப்பினும், இத்தனை ஆயிரம் ஆண்டுகளில் அவர்களின் செயல்பாடுகள் ஒருபோதும் இயற்கையை அழிப்பதாகவோ, சிதைப்பதாகவோ இருந்ததில்லை. அந்த அளவுக்கு இயற்கையோடு இயைந்த வாழ்வியலை மலைவாழ் மக்கள் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் அம்மக்களை வெளியேற்ற வழிவகுக்கும் தீர்ப்பானது இயற்கைக்கு பாதிப்பை ஏற்படுத்துமே தவிர எவ்வகையிலும் பாதுகாப்பதாய் அமையாது.
உண்மையில் அரசு மற்றும் தனியார் பெருமுதலாளிகள் வணிக நோக்குடன் அமைக்கும் தொழிற்சாலைகள், தொலைத்தொடர்பு கம்பிவடம் பதித்தல், மின் மற்றும் தொலைத்தொடர்பு கோபுரங்கள், ஆய்வுக்கூடங்கள் உள்ளிட்டவற்றால் மட்டுமே மலைகளும், காடுகளும், நீர்நிலைகளும் அவற்றை நம்பி வாழும் வன உயிரினங்களும் பேரழிவைச் சந்தித்து வருகின்றன. அவற்றையெல்லாம் அனுமதித்துவிட்டு, பல்லாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்துவரும் பழங்குடியின மக்களையும், மலைவாழ் மக்களையும் அவர்களின் வாழ்விடங்களிலிருந்து அப்புறப்படுத்துவது, தனியார் முதலாளிகள் அந்நிலங்களை ஆக்கிரமித்து இயற்கையை மென்மேலும் சீரழிக்கவே வழிவகுக்கும்.
அதுமட்டுமின்றி, மலைக்காடுகளையும், வன உயிரினங்களையும் பாதுகாக்க வேண்டுமென்ற உண்மையான அக்கறை இருக்குமாயின், ஒவ்வொரு நாளும் காடுகளில் முறைகேடாக மரங்கள் வெட்டப்பட்டு டன் கணக்கில் கடத்தப்படுவதையும், சொகுசு விடுதிகள், அடுக்குமாடி கட்டிடங்கள், தண்டவாளங்கள், சாலைகள், தொழிற்சாலைகள், தொலைத்தொடர்பு கருவிகள், அறிவியல் ஆய்வகங்கள் ஆகியவை அமைப்பதற்காக, வன விலங்குகளின் வாழ்விடங்களும், வழித்தடங்களும் சுருக்கப்படுவதையும் தடுத்து நிறுத்த தீவிர நடவடிக்கை எடுப்பதே சரியானதாக இருக்கும்.
ஆகவே, தமிழ்நாடு அரசு கடந்த 2006ஆம் ஆண்டு வன உரிமைச் சட்டத்தின்படி தேனி மாவட்டம் மேகமலை, வருசநாடு பகுதி வன கிராம மக்களுக்கு உடனடியாக வீட்டுமனை பட்டா வழங்குவதோடு, மலைக் கிராமங்களை விட்டு மக்களை வெளியேற்றும் முடிவைக் கைவிட வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
என் உயிரோடும், உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!
காவிரியில் நமக்கு தர வேண்டியது உபரி நீர் அல்ல; உரிமை நீர்! உரிய நீர்! என்பதை வலியுறுத்தியும்,
மேகதாட்டுவில் அணைக்கட்டியே தீர்வோம் என்ற கர்நாடக அரசினுடைய முடிவைக் கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களின் தலைமையில் இந்த போராட்டம் நடக்கவிருக்கிறது.
நாள் 07-08-2026 வெள்ளிக்கிழமை நேரம் சரியாக பிற்பகல் 2:30 மணிக்கு
இடம்: சென்னை - எழும்பூர் இராஜரத்தினம் விளையாட்டு திடல் அருகில்
இனம் ஒன்றாவோம்! இலக்கை வென்றாவோம்!
வணக்கம்!
"பெரும் வெள்ளத்தைக்கூட தாங்கிவிடலாம்.. வறட்சியை எப்படி தாங்குவது..? நம்ம நிலக்கரி, மீத்தேன் எல்லாருக்கும், அணு உலை மின்சாரம் எல்லாருக்கும்.. ஆனால் அவர்களின் நீர்வளம் மட்டும் அவர்களுக்கே.." மேகதாது குறித்து சீமான் கருத்து
#Seeman | #Megadhatu | #Karnataka | #NTK
தேர்தல் நெருக்கத்தில் தவெக நண்பர்கள் வாக்கு சேகரிக்க வந்த போது எனது வீட்டிற்கும் வந்திருந்தனர். அவர்களை வீட்டினுள் அழைத்து அமர வைத்து பேசினேன். காரணம் அதில் எனது அருமை நண்பர் ஒருவரும் இருந்தார். அரசியல் தவிர்த்து அனைத்தையும் பேசினோம். இறுதியில் "நான் நாம் தமிழர் கட்சிகாரன். என் வாக்கு எப்போதுமே அண்ணன் சீமானுக்குதான்" என புன்முறுவலுடனே சொன்னேன். என் நண்பன் "அது எனக்கு தெரியும்" என அன்போடு விடைபெற்றுச் சென்றான்.
தவெக வெல்லுமென நான் நினைத்திருக்கவில்லை. அதே போல நாதக வாக்கு விழுக்காடு பகுதியாக குறையுமென கனவிலும் நம்பியிருக்கவில்லை. இரண்டுமே விபத்துதான். மழைக்காலத்தில் வரும் வெக்கை போல எதிர்பாரா இன்னல் இன்னமும் நெஞ்சைக்குடைகிறதுதான்.
ஆனாலும் எனது எதிர்பார்ப்பு மங்கிவிடவில்லை. 360 கிராம் எடை கொண்ட வைரத்தை பேப்பர் வெயிட்டாக பயன்படுத்திய ஹைதராபாத் நிஜாமின் செல்வம் இப்போது எங்கே உள்ளது? சாம்ராஜ்யங்களின் சரிவு கண்ணுக்கெட்டிய தூரம் வரை வரலாற்றுப் பாலபாடமாக விரிந்துக்கிடக்கின்றன.
மக்களை ஏமாற்றாத, மக்களுக்கு வஞ்சகம் விளைவிக்கும் கவர்ச்சி வார்த்தைகள் சொல்லாத ஒரு கட்சி தோற்றாலும் கூட அதுதான் நமக்கு உகந்த சக்திதான். நேர்மையாக தோற்பதில் கூட பெருமைதான்.
4 விழுக்காடே ஆனாலும் அண்ணன் இந்த தன்மையிலிருந்து தடம் இடரிவிடக்கூடாது. மாட்டார் என்பதில் நம்பிக்கை உண்டு.
அன்றொரு நாள் தொலைக்காட்சி செய்தியில் "நாதகவிலிருந்து களஞ்சியம் விலகினார்" என்கிற செய்தி வந்தது.
"களஞ்சியம் தனியொரு அமைப்பாக இயங்கியவர். அதனை நாதக'வோடு இணைத்து தன்னையும் இணைத்துக்கொண்டவர். அந்த செய்தி எல்லாம் லோக்கல் சேனலில் கூட ஒளிபரப்பானதில்லை. ஆனால் இது...
இந்த ஊடகங்களை அப்படி என்னதான் செய்துவிட்டார் சீமான்? ஏன் இவர்களுக்கு சீமான் அண்ணனின் மீது இத்தனை வன்மம்? விளங்கவே இல்லை!
வாக்கு சேகரிக்க வந்திருந்த எனது நண்பனை அண்மையில் பார்த்தேன். நட்பு குன்றாமல் பேசிக்கொண்டிருந்த போது, "இன்னும் நாம் தமிழர் கட்சியிலதான் இருக்கியா மக்கா?" என்றான் அவன்.
"என் வீடு மலை உச்சியில இருக்குது. ஏறுறதுக்கு கஷ்டமா இருக்குதுங்குறதுக்காக அடிவாரத்துல இருக்குற அடுத்தவன் வீட்டுக்குள்ள நுழைய முடியாது" என பதிலளித்தேன்.
உண்மையில் எவரெஸ்ட் சிகரத்தையெல்லாம் மனிதன் என்றோ அடைந்துவிட்டான்.
அடைவோம் நாமும் அற்புத விடுதலையை!
#நாம்தமிழர்கட்சி
#சீமான்
#NTK
#Seeman
நீ சிரி..
அவமானம் செய்..
கேலி பேசு..
ஆனால் எப்படிப்பட்ட தலைவனை இழந்து நிற்கிறாய் தெரியுதா??
இன்று இந்தியாவில் நடைபெறும் 10 முக்கிய போராட்டங்களுக்கு விதை போட்டவன் சீமான்💥💥
இன்று (28.07.2026) நாம் தமிழர் கட்சி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம் பார்த்தம்பள்ளி கிராமத்தில் நீண்ட நாளா தூர்வாராத கிணற்றை தூர்வாரி மக்கள் பயன்பாட்டிற்கு கொடுத்துள்ளது.
#ntk#seeman#ntkitwing#tamilnationalism
அண்ணன் சீமானை AI மூலமாக எடிட் செய்தும் அவதூறு பரப்பி வந்த கோகுல் தமிழன் மீது சட்டப்படி காவல்துறை நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது...
பல வருடங்களாக வழக்கறிஞர் பாசறையிடம் இதைத்தான் கேட்டோம் இப்போ ஒத்த ஆளாக செய்திருக்கிறார் 👏👏
ரொம்ப சந்தோசம்ன்னே 😊
பாண்டிச்சேரி தவிர்த்த வெளி மாநிலங்களுக்கு கனிம வளம் கொண்டு செல்ல 3 மாத இடைக்காலத் தடைக்கே கடிதம் எழுதிட்டாங்க கேரளம்.
அப்படினா எவ்வளவு மலைகளை இங்க இருந்து உடைச்சி கொண்டுப்போய் இருப்பானுங்க ......
கேரளாவில் மலை இல்லையா...
தமிழர்கள் இளிச்சவாயர்கள்...