அஇஅதிமுக தொண்டன், ஆவடி மேற்கு பகுதி கழகம், ஆவடி மாநகரம், ஆவடி சட்டமன்றத் தொகுதி, திருவள்ளூர் தெற்கு மாவட்ட கழகம்!!!
“Likes/RTs Comments ≠ endorsements“
சமூகத்திற்குத் தனிமனித ஒழுக்கம் குறித்துப் பாடம் எடுப்பதற்கு முன்பு, உங்கள் கட்சியின் நிர்வாகிகளுக்கு அந்த அறிவுரையை முதலில் வழங்குங்கள் @CMOTamilNadu#பொய்க்கால்_குதிரை_அரசு
செய்தியாளர்களின் மைக்கைக் கண்டாலே எதோ கொரோனா வைரஸை பார்த்தது போல ஓட்டம் பிடிக்கும் ஆச்சரியக்குறி அமைச்சர்கள்….
#KarurRun, #VillupuramRun என்று ஓட்டம் பிடிப்பதில் தங்கள் தலைவர் வழியையே பின்பற்றுகிறார்களோ என்னவோ..?!!
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
புதிய ஆட்சி அமைந்த நாளில் இருந்து ஆளுங்கட்சி நிர்வாகிகளே கொடும் குற்றச் செயல்களில் ஈடுபடுவது அதிகரித்து உள்ளது.
சேலத்தில் தவெக நிர்வாகி மணிகண்டன் என்பவர் பல பெண்களை பாலியல் தொல்லைக்கு ஆளாக்கி, வீடியோ எடுத்து மிரட்டியதாக கைது செய்யப்பட்டுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
50-க்கும் மேற்பட்ட பெண்கள் ஆளுங்கட்சி தவெக நிர்வாகியால் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.
அதேபோல், சென்னை ஆலந்தூரில் தவெக நிர்வாகி வேம்புலி என்பவர் பாலியல் வழக்கில் தேடப்பட்டு வருவதாகவும், இன்னும் கைது செய்யப்படவில்லை எனவும் செய்திகள் வருகின்றன.
இன்றைய முதலமைச்சர் பதவி ஏற்கும் போது சொன்ன “எல்லாரும் நல்லா இருப்போம்” என்பது இது தானா?
தன் சொந்தக் கட்சி நிர்வாகிகளால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் இருக்கும் போது, எப்படி நல்லா இருக்க முடியும்?
உங்கள் ஆட்சியில் குற்றம் செய்யும் உங்கள் கட்சியினர் மட்டும் தான் நன்றாக இருப்பது போல் தெரிகிறது.
தன் கட்சித் தலைவர் முதலமைச்சராக இருப்பது பற்றியோ, அவர் கையில் இருக்கும் காவல்துறை மீதோ இவர்களுக்கு எந்த பயமும் வராமல் இருப்பது ஏன்?
மேற்கூறிய வழக்குகளில் எந்த வித ஒளிவு மறைவோ, அரசியல் குறுக்கீடோ இல்லாமல் நியாயமான விசாரணை நடைபெற்று, குற்றவாளி மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என என்றை பொய்க்கால் குதிரை அரசை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial
அதிமுக தனிநபருக்கு சொந்தமானதோ அல்லது ஒரு குடும்பத்திற்கு சொந்தமானதோ இல்லை.
புரட்சித் தலைவர் எம்ஜிஆர் ஆரம்பித்த அதிமுக என்றுமே தொண்டர்களின் சொத்து!!
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் இன்றைய முதலமைச்சரின் ரசிகையான பெண் ஒருவர் ஆளுங்கட்சி தவெக நிர்வாகிகளால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
ஸ்ரீவைகுண்டம் தவெக MLA சரவணன் ஆதரவில் ,இந்த கொடூரத்தை ஆளுங்கட்சியைச் சேர்ந்த இருவர் அரங்கேற்றியுள்ளதாக தெரிகிறது.
மேலும், இதனை மறைக்க, தவெக MLA சரவணனே அந்த பெண்ணிடம் “அமைச்சரிடம் பேசி வேலை வாங்கித் தருவதாக” சமரசம் பேசியதாக செய்திகள் வருகிறது.
சிங்கப்பெண் அதிரடிப் படைக்கான முதல் வழக்கே ஆளுங்கட்சி வழக்கா?
அதுவும், ஒரு ஆளுங்கட்சி MLA இப்படி கேடுகெட்டத்தனமான செயலுக்கு சமரசம் பேசுவதை இன்றைய முதல்வர் ஏற்றுக்கொள்கிறாரா?
உங்களை திரையில் ரசித்து வளர்ந்த பெண்ணுக்கு, உங்கள் ஆட்சியில்,
உங்கள் கட்சியினரால் நடைபெற்றுள்ள இந்த கொடுமைக்கு பதில் சொல்ல வேண்டிய கடமை உங்களுக்கு உள்ளதை உணர்கிறீர்களா?
“அமைச்சருக்கு தெரியும்; மேலிடத்திற்கு தெரியும்” என்றெல்லாம் தெனாவட்டு பேச்சுகள் வருகிறது என்றால், அப்படி என்ன மேலிடம்? யார் அது? முதல்வரா? அல்லது, முதல்வரைத் தாண்டிய ஏதேனும் Powercenter-ஆ?
சிங்கப்பெண் அதிரடிப் படை துவக்க விழாவில் Single Take-ல் பேசிய வசனங்களை எல்லாம் உங்கள் கட்சியினரைப் பார்த்து பேசுங்கள் @CMOTamilNadu!
பாலியல் வன்கொடுமைக்கு வக்காலத்து வாங்கி சமரசம் பேசி மறைக்க முயன்ற உங்கள் கட்சி MLA-வை பதவி ராஜினாமா செய்ய வைத்து கைது செய்ய இன்றைய முதல்வருக்கு தெம்பு, திராணி இருக்கிறதா?
மேலும், வேறொரு பெண்ணுக்கும் இக்கொடுமை நடந்துள்ளதாக பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளதாக செய்திகள் வருகின்றன.
அதனால், இந்த வழக்கை எந்த அரசியல் இடையூருக்கும் இடமின்றி விசாரித்து, குற்றம் இழைத்தவர்கள் மீதும், குற்றத்திற்கு துணை போனோர் அனைவர் மீதும், அது யாராக இருந்தாலும் சரி, எந்த MLA-வாக, அமைச்சராக இருந்தாலும் சரி, கைது செய்து கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என இன்றைய பொய்க்கால் குதிரை அரசை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial
அதிமுகவில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பின்பு, கையில் வைத்த மை காய்வதற்கு முன்பாகவே கழகத்திற்குத் துரோகம் இழைத்துவிட்டுச் சென்றவர்களுக்குத் தகுந்த பாடம் புகட்ட வேண்டும்.
அதிமுக தனிநபருக்கு சொந்தமானதோ அல்லது ஒரு குடும்பத்திற்கு சொந்தமானதோ இல்லை. புரட்சித் தலைவர் எம்ஜிஆர் ஆரம்பித்த அதிமுக என்றுமே தொண்டர்களின் சொத்து!!
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
எடப்பாடியார் @EPSTamilNadu ஆணைப்படி சென்னை புறநகர் மாவட்ட ஆலோசனைக்கூட்டம் மாவட்ட கழக செயலாளர் @KPKandanofl அவர்களின் தலைமையில் இன்று 11.06.2026 பள்ளிக்கரணையில் நடைபெற்றது. #என்றென்றும்_அதிமுக
வணக்கம் @tn_factcheck…
3 சேனல்கள் முடக்கப்பட்ட செய்தியை “தவறான செய்தி” என போட்டுள்ள நீங்கள், அதை தொழில்நுட்பக் கோளாறு என உருட்டியுள்ளதை கண்டோம்.
அது என்ன தொழில்நுட்பக் கோளாறு?
கடந்த 5 ஆண்டுகளாக எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் எழுந்தாலே நேரலை துண்டிப்பு ஆகுமே.. அந்த மாதிரி கோளாறா?
இந்த மூன்று சேனல்களை முடக்கியது போல சன் நியூஸ் சேனலை இந்த அரசால் முடக்க முடியவில்லை ? அப்படி செய்தால் சன் குழுமத்தின் அனைத்து சேனல்களும் தங்களை விட்டு போகும் என்ற பயத்தால் தானே?
அப்புறம், உங்கள் மீதான வழக்கை இன்றைய அமைச்சர் @CTR_Nirmalkumar வாபஸ் பெற்றுவிட்டாராமே… வாழ்த்துகள்.
அது எப்படி, 2023-ல் உங்களை Unconstitutional எனக் கூறி வழக்கு போட்டவர், 2026-ல் நீங்கள் Constitutional தான் என்று Compromise ஆனார்?
கட்சி மாறுவதால்,
ஆட்சி அதிகாரம் வருவதால்,
Constitutional Status மட்டும் மாறுமா?
“தகவல் சரிபார்ப்பகம்” என்பதை விட, “த.வெ.க. உருட்டகம்” என்ற பெயர் தான் உங்களுக்கு பொருத்தமாக உள்ளது!
#பொய்க்கால்_குதிரை_அரசு
அதிமுகவில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பின்பு, கையில் வைத்த மை காய்வதற்கு முன்பாகவே கழகத்திற்குத் துரோகம் இழைத்துவிட்டுச் சென்றவர்களுக்குத் தகுந்த பாடம் புகட்ட வேண்டும்
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
பாலியல் வன்கொடுமைக்கு வக்காலத்து வாங்கி சமரசம் பேசி மறைக்க முயன்ற உங்கள் கட்சி MLA-வை பதவி ராஜினாமா செய்ய வைத்து கைது செய்ய இன்றைய முதல்வருக்கு தெம்பு, திராணி இருக்கிறதா?
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
#பொய்க்கால்_குதிரை_அரசு
டாஸ்மாக்ல எத்தனை கடை இருக்குன்னு சொல்ல கூட முடியாத இன்றைய அரசு, எப்படி Transperency-ஆக இருக்கும் என மக்கள் நம்புவார்கள்?
டாஸ்மாக் நிறுவனம் பற்றிய உண்மை தகவல்களை மக்கள் தெரிந்துகொள்ள கூடாதா?
பாட்டிலுக்கு பத்து ரூபாய் என்று பாட்டெல்லாம் பாடி, அன்று 41 உயிர்கள் போனது எல்லாம் நினைவில் இல்லையா @actorvijay?
இப்போது உங்கள் ஆட்சியிலும் பாட்டிலுக்கு 20 ரூபாய் வாங்குவதாக வரும் குற்றச்சாட்டுக்கு எப்போது பதில் வரும்?
#பொய்க்கால்_குதிரை_அரசு