அம்பையில் த.வெ.க-வினர் அராஜகம் – பள்ளிக் குழந்தைகள் கண்முன்னே தந்தை மீது கொடூரத் தாக்குதல்!
த.வெ.க கொடியுடன் சென்ற காரை முந்திச் சென்றதாகக் கூறி, இருசக்கர வாகனத்தில் குழந்தைகளைப் பள்ளிக்கு அழைத்துச் சென்ற தந்தையைத் தாக்கியதாகப் புகார். குழந்தைகளின் கண்முன்னே நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது!
#Ambasamudram #TVKArrogance #TVKViolence #குழந்தைகள்_பாதுகாப்பு #TVKFailsTN
சொல்லில் உறுதி, செயலில் வேகம், மக்களிடம் அன்பு என திராவிட நாயகரின் வழியில் வெற்றி நடைபோடும் மாண்புமிகு எதிர்க்கட்சி தலைவர், கழக இளைஞரணிச் செயலாளர் திரு. @Udhaystalin அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
#HBDUdhay
TVK மாஜி பிரமுகர் பூபாலனுக்கு முதலீடு செய்தது யார்?
பாகிஸ்தானுடன் எப்படி தொடர்பு கிடைத்தது?
நைஜீரியா குழு உடன் நடந்த பேச்சு வார்த்தை என்ன?
ஏன் ஊடகங்கள் இதை விவாதிக்கவில்லை?
தமிழ்நாட்டில் மாவட்ட ஆட்சியருக்கே பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவுகிறது.
விஜய் ஆட்சியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்குப் பாதுகாப்பு இல்லாத இந்த சூழலில், தற்போது த.வெ.க. MLA-வால் மாவட்ட ஆட்சியருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை உருவாகியுள்ளது.
மாவட்ட ஆட்சியருக்கே த.வெ.க. MLA ஆபாசச் செய்தி அனுப்பி மது போதையில் வீட்டிற்கு சென்றார் என்றும் செய்திகள் வருகின்றன. இதுதான் விஜய் பெண்களுக்குக் கொடுக்கும் பாதுகாப்பா? அல்லது யாருக்கு என்ன ஆனாலும் பரவாயில்லை, தன் பதவி தான் முக்கியம் என்று 'டம்மி முதலமைச்சர்' நாற்காலியில் அமர்ந்திருப்பாரா?
இடைத்தேர்தல் பிரச்சாரம் மற்றும் தேர்தல் முடிவுக்கு (அக்டோபர் 9) பிறகு தவெக தலைவர், டம்மி முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் இருந்து வந்திருக்கும் பதிவு ‘அடடே இந்த பொம்மை பேசுமா?’ என ஆச்சரியமளிக்கிறது.
விலைவாசி உயர்வு குறித்து பதிவு இல்லை..கொலைகள் குறித்து கவலையில்லை…காணாமல் போன சிறுமி குறித்து விசாரிப்புகள் இல்லை…மின்வெட்டு, மின் கட்டணம் குறித்தெல்லாம் எந்த வாக்குறுதியும் இல்லை..அவ்வளவு ஏன் அரசின் அசமஞ்சத்தால் கடலில் இறந்து மிதந்த மீனவர்கள் குறித்து கூட பதிவு இல்லை.
ஆனால் திமுக தலைவர் கோவை பெரியார் அறிவுலகம் சென்றதும் அவருக்கு கிடைத்த பாராட்டும் பேசு பொருளானதும், புத்தக கொள்முதலில் ஊழல் என்று ஓடி வந்திருக்கிறார் தவெக தலைவர்.
பெரியார் அறிவுலகத்தில் அகல் விளக்கு மற்றும் பீனிக்ஸ் பதிப்பகத்தின் போலியான நூல்களில் மட்டும் ஜூன் மாதம் என்று முத்திரை இடப்பட்டுள்ளது என்று அங்கிருக்கும் தோழர்கள் தெரிவிக்கிறார்கள். அந்த தேதி கூட dummy CMன் பிறந்தநாள் தான்.
அதே பெரியார் அறிவுலகத்தில் உள்ள வால்காவிலிருந்து கங்கை வரை போன்ற புகழ்பெற்ற மற்ற பதிப்பக நூல்கள் திமுக ஆட்சியின் மார்ச் மாத முத்திரையோடு உள்ளன. அப்படியென்றால் போலி பதிப்பக புத்தகங்கள் எப்பொழுது வாங்கப்பட்டன? யார் முடிவு எடுத்தது? தவெக ஆட்சியில் யாருக்கு கமிஷன் போனது?
கடந்த ஆட்சியில் நூலகங்களுக்கு புத்தகங்கள் வாங்குவதில் எந்தவிதமான ஒளிவு மறைவுமின்றி வெளிப்படையான முறையில் புத்தகங்களை கொள்முதல் செய்யப்பட்டது என்பதை பதிப்பாளர்களே அறிவர்.
திமுக ஆட்சியில் புத்தகத் தேர்வுக்குழுவில் இருந்த எழுத்தாளர் ஒருவர் தவெக ஆட்சியமைந்த ஆறு மாதங்களுக்குப் பிறகு நூலகத்தில் உள்ள புத்தகங்களின் பெயர்களையும், திரிஷா விஜய், விஜய் பாலு, விஜய் செல்வம், விஜய் ஆதித்தன், சுமேகா விஜய் என்ற ‘எழுத்தாளர்களின்’ பெயர்களையும் பார்த்து பதறிய பிறகுதான் அரசுக்குத் தெரிந்ததா?
அல்லது எந்த விவரமும் தெரியாமல் தான் dummy cm அறிக்கை விட்டு இருக்கிறாரா?
டம்மி சிஎம்க்கு முட்டு கொடுக்கும் தரங்கெட்ட தவெக ஐடி விங்
“24/7, தூக்கத்திலும் கூட உங்கள் நினைவு” என்று எழுதிவிட்டு திமுக தலைவரின் ஒவ்வொரு பேச்சையும் அசைவையும் பத்திப் பத்தியாக ஆய்வு செய்து அறிக்கை எழுதுவது யார்? நேற்று திமுக தலைவர் பேசிய பேச்சு, சோப்ளாங்கியின் இரவு தூக்கத்தை கெடுத்துவிட்டதா? இரவு முழுவதும் உட்கார்ந்து இந்த குப்பையைதான் எழுதி கொண்டிருந்தார்களா? கரூரில் இருந்து ஓட்டம் எடுத்த ஓடுகாலிக்கு ஒத்தடம் கொடுக்க ஓடி வந்திருக்கிறது தவெக ஐடி விங்க்!
தவெக ஆட்சியில் ஊழல் இல்லை என்று மக்கள் பகிர்கிறார்களாம்! Reels-ல் வரும் பாராட்டே, தணிக்கை அறிக்கை என்றால், CAG-க்கு இனி வேலையே இருக்காது! ஆட்சியின் தரத்தை Like-களை வைத்து அளப்பதுதான் அரைவேக்காடுகளின் அரசியல் அறிவு போல! ரீல்ஸில் ஒரு லட்சம் காகங்கள் ஒன்று சேர்ந்து கத்துவதால், காகா என்றைக்காவது கர்நாடக சங்கீதமாக ஆகிவிடுமா?
அரசு வழக்கறிஞர்கள் நியமனம் முதல் சிவகங்கை எம்.எல்.ஏ அரசு ஒப்பந்தப் பணிகளை ஒதுக்கீடு செய்ய கமிஷன் கேட்டது வரையில் சாக்கடை நாற்றமடிக்கிறது. ஊழல் கழிவை உடல் முழுவதும் பூசிக் கொண்டு, சந்தனம் மனம் கமழ்கிறது என சொல்லும் தரங்கெட்டவர் யாரோ எழுதி கொடுத்ததா இது?
அரசியல் நாகரீகம் என்ற எதுவுமே இல்லாத தற்குறிகளுடன் மல்லு கட்டிக் கொண்டிருக்கிறோம்.
ஊழல் உலகத்துல இருந்துகிட்டு, லஞ்சமே இல்லைன்னு போஸ்டர் வேறயா? தியேட்டர்ல படம் ஓடுறதுக்கு முன்னாடியே 'பிளாக்பஸ்டர் ஹிட்'னு போர்டு மாட்டிகிற பைத்தியகாரன்களை இந்த நாடு இப்பதான் பார்க்கிறது. Comedy Track-ஐ நீங்களே தனியாக ஓட்டினால் எதிர்க் கட்சிகளுக்கு என்ன வேலை இருக்க போகிறது?
’திமுக’ என்ற தவெகவின் Excuse Folder-ஐ வைத்துதான் ஆட்சியை ஐந்தாண்டு காலமும் ஓட்டப் போகிறார்கள். மக்களுக்கு என்ன செய்ய போகிறார்கள்??
பெரியாரைப் பத்தி பேசுறதுக்கு முன்னாடி, கொள்கைன்னா என்னன்னு டம்மி சிஎம் விஜய்க்கு தெரியுமா? பிரியாணியையும் தயிர் சாதத்தை சேர்த்து ’தயிர் பிரியாணி’ மாதிரி எல்லா கொள்கையையும் மிக்ஸியில போட்டு அரைச்சு வச்சிட்டு, பெரியார் சிலையை பத்தி பேசுற வெங்காயங்களின் மூளையை எவ்வளவு உரித்தாலும் அதில் ஒன்றுமே இருக்காது!
பெரியார் சிலை எங்கே இருக்கிறது? என்று கேட்பதற்கு முன்பு, பெரியாரின் கொள்கைகள் உங்கள் கட்சியின் செயல்பாடுகளில் எங்கே இருக்கின்றன? என தேடி பார்க்கவும். சிலை வைப்பது எளிது; சிலையின் கொள்கைகளை வாழ்வில் கடைப்பிடிப்பதுதான் கடினம்! பெரியார் பேரைச் சொன்னா பாஜகவுக்கு கோபம் வந்து, பெரியார் தடி தாக்கும்னு பயந்து பம்மும் பயந்தாகொள்ளிகள் பெரியாரை துணைக்கு அழைத்து கொள்வது எல்லாம் அபத்தம்.
தனது 14-ஆவது வயதில் அரசியல் பயணத்தைத் தொடங்கிய மு.க.ஸ்டாலினின் பொது வாழ்க்கைக்கு இப்போது 59 வயது. தொட்ட பெட்ட ரோட்டு மேல முட்டை பரோட்டா போட்டுக் கொண்டிருந்துவிட்டு, மூனு வருஷம் முன்னாடி அரசியலுக்கு வந்த ஸ்டாண்ட் அப் காமெடின் யாரு?
வருஷத்துக்கு 365 நாளும் மக்களோட இருப்பவர் மு.க.ஸ்டாலின். கொஞ்ச நாளைக்கு முன்னாடி வரை கட்-அவுட்ல மட்டும் வந்துட்டு, ஸ்கீரின்ல மட்டுமே வாழ்ந்துகிட்டிருந்த பொம்மை யாரு?
ரீல்ஸ் போட்டு அரசியல் செய்யும் கூட்டமெல்லாம், ரியல் பாலிடிக்ஸ் பேச வந்தா இப்படித்தான் 'அரைவேக்காடு' தனமா ட்வீட் போடத் தோணும். அடுத்த அறிக்கையிலாவது வசனங்களுக்குப் பதிலாக விவரங்களைக் கொண்டு வாருங்கள். அரசியல் என்பது Reels எடுப்பதல்ல; மக்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்வது!
இந்தியாவிலே விலைவாசி உயர்வில் தமிழ்நாடு முதலிடம், மிக அதிகபட்சமாக 41 ரூபாய் கொடுத்து ஒரு யூனிட் மின்சாரம் கொள்முதல் கொள்ளை, டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம், கைதிகள் தப்பி ஓட்டம், பொருளாதார நிபுணர் கலையரசன் கைது, நொய்யல் ஆற்றில் சோப்பு நுரை என சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ராஜீவின் கண்டுபிடிப்பு, மாணவர்களுக்கு மொட்டை அடிக்க சொன்ன அமைச்சர் ஜெகதீஷ்வரியின் கட்டளை, பட்டிணம்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்ட மும்முரம், ஆந்திராவிற்கு சென்ற 1,614 கோடி ரூபாய் தொழில் முதலீடு, தப்பி ஓடிய கைதிகளை பிடிக்காமல் லட்டுகளை கைப்பற்றும் போலீஸின் கேலிக்கூத்து, போதை ஆசாமியால் உயிர் பறிக்கப்பட்ட ஊர்க்காவல் படை வீரர், முதல்வர் விஜயுடன் நெருக்கமான பி.எல்.எம் நிறுவனர் பிரேம்குமார் 5 ஆயிரம் கோடி ரூபாய் நிதி மோசடியில் கைது போன்ற விஷயங்கள் எல்லாம் சோசியல் மீடியாவில் போஸ்ட் மார்ட்டம் செய்வது எல்லாம் தெரியாத தனி உலகத்தில் வாழ்கிறார்கள் தவெகவினர்.
5 ஆயிரம் கோடி ரூபாய் மக்கள் பணத்தைக் கொள்ளை அடித்த BLM பிரேம்குமாருக்கும் தூய சக்தி முதலமைச்சருக்கும் என்ன தொடர்பு?
தனியார் கூட்டுறவு நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி மக்கள் முதலீடு செய்த பணத்தை தன்னுடைய சொந்தக் கணக்கிற்கு வரவு வைத்துக் கொண்டதாக பிரேம்குமார் என்பவரை கேரள காவல்துறை கைது செய்துள்ளது.
இந்த பிரேம்குமார் கடந்த ஜூலை மாதம் தான் இங்கிருக்கும் Dummy CM-ஐ சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கிறார். மேலும், த.வெ.க-வின் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு பிரேம்குமாருக்கு சொந்தமான பேருந்துகள் தான் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன.
முக்கியமாக சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்து, நம்பிக்கை வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்பாக ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் பிரேம்குமாரின் பேருந்துகளிலேயே அழைத்து வரப்பட்டனர்.
பிரேம்குமாருக்கும் முதலமைச்சருக்கும் இருக்கும் நெருக்கத்தைப் பார்க்கும் போது, அந்த நபருக்கும் - ஆளுங்கட்சிக்கும் இடையே இருக்கும் தொடர்பு என்ன?
அப்படி எந்த “விவகாரமான”தொடர்பும் இல்லை எனில், ஏன் அவசர அவசரமாக, முதலமைச்சரும் - கைது செய்யப்பட்டுள்ள நபரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தமிழ்நாடு காவல்துறை உதவியோடு சமூக வலைத்தள பக்கத்தில் இருந்து அகற்ற வேண்டும்?
MLA-க்களை Purchase செய்வது, Sofa அனுப்புவது, இடைத்தேர்தல்களில் வாரி இறைத்தது என்று த.வெ.க.வின் முறைகேடான அரசியல் செயல்பாடுகளுக்கும் இவருக்கும் தொடர்பு இருக்கிறதா?
இதையெல்லாம் CBI, SFIO, ED போன்ற ஒன்றிய அரசின் தன்னாட்சி அதிகாரம் கொண்ட விசாரணை அமைப்புகள் தலையிட்டு விசாரிக்க வேண்டும் - கைதான பிரேம்குமாருக்கும், த.வெ.க தலைமை முதல் முக்கிய நிர்வாகிகள் வரைக்கும் இருக்கும் தொடர்பை கண்டறிய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.