ஒரே நாளில் 11 படுகொலைகள்! குறைகளைத் தெரிவிக்க வந்தவரைத் தாக்கிய துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ரவிசங்கர்! சட்டம் ஒழுங்குக்கும், பொது அமைதிக்கும் விடுமுறைவிட்டு விட்டாரா விஜய்?
@CMOTamilnadu@TVKVijayHQ
தீபாவளி பண்டிகைக் கொண்டாடப்பட்ட நேற்றைய தினம் மட்டும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் 11 பேர் கொல்லப்பட்டதாக வெளியாகியுள்ள செய்தி பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. அவர்களை இ��ந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
ஒரு பண்டிகை நாளைக்கூட பாதுகாப்பாகக் கொண்டாட முடியாத அளவுக்கு தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு மிக மோசமாகச் சீரழிந்திருந்திருப்பது கையாலாகா தவெக ஆட்சியாளர்களின் மோசமான ஆட்சிக்கான சாட்சியாகும். தேனி, சமதர்மபுரத்தில் பொதுச்சாலையை மறித்துப் பட்டாசு வெடித்தவர்களைத் தட்டிக்கேட்டதற்காகக் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் செந்தில்குமார் கடுமையாகத் தாக்கப்பட்டு உயிரிழந்திருக்கிறார். சாலையில் செல்லும் மக்களுக்கு இடையூறு ஏற்படுவதைத் தட்டிக்கேட்ட ஒரு காவல்துறை அதிகாரிக்கே இந்நிலையென்றால், பொதுமக்கள் யாரை நம்பி வீதிக்கு வருவார்கள்? மக்களைக் காக்கும் காவல்துறையினருக்கே பாதுகாப்பில்லை எனுமளவுக்குத் தமிழ்நாட்டுச்சூழல் தள்ளப்பட்டிருப்பது பொதுஅமைதி ம���ற்றிலும் குலைந்ததற்கான அறிகுறியாகும்.
வார இறுதியில் தலைமைச்செயலகத்துக்கு விடுமுறை விடுவதுபோல, சட்டம் ஒழுங்குக்கும், பொது அமைதிக்கும் விடுமுறை விட்டுவிட்டாரா முதலமைச்சர் விஜய்? இத்தனைக் கொலைகளுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்? ஒரு பண்டிகை நாளன்றுகூட மக்கள் பயத்தோடும், பதற்றத்தோடும்தான் இருக்க வேண்டுமென்றால், நடப்பதற்குப் பெயர் ஆட்சியா? குற்றங்களை நிகழவிட்டுவிட்டு, கு��்றவாளிகளைப் பிடித்துச் சிறைலடைப்பது காவல்துறையின் வேலை இல்லை; குற்றங்களே நிகழாதவணக்கம் அமைதியான, பாதுகாப்பான சமூகத்தைப் படைப்பதே காவல்துறையின் முதன்மை நோக்கமாக இருக்க முடியும். சிறைவாசிகள் சர்வசாதாரணமாகச் சிறையிலிருந்து தப்பித்து ஓடுவது ஒருபுறமென்றால், போதைப்பொருட்களின் மிதமிஞ்சியப் புழக்கம் மறுபுறம்! தவெகவின் நிர்வாகிகளே போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஒன்றிய அரசின் படையாலும், கேரள அரசின் காவல்துறையாலும் கைதுசெய்யப்படுகின்றனர். அதனைக் கண்டுகொள்ளாத காவல்துறை, மதுக்கடைக்கு எதிராகப் போராடியவரின் கடையில் போதைப்பொருள��� வைத்து, பொய் வழக்குத் தொடுக்க முனைகிறதென்றால், இந்த அவலத்தை என்னவென்று கூறுவது?
தொகுதிசார்ந்த குறையை நேரில்கூறச் சென்ற ஒருவரை துறையூர் சட்டமன்ற உறுப்பினரும், துணை சபாநாயகருமான ரவிசங்கர் தாக்கும் காணொளிக்காட்சிகள் தவெக ஆட்சியின் அதிகாரத் திமிருக்கும், அடாவடித்தனத்துக்குமான சான்றாகும். தேர்தல் வழக்குக்காக என்னுடைய தங்கை கார்த்திகா, தம்பி இசை மதிவாணன் உள்ளிட்டவர்களைத் ��ேடிப்பிடித்துக் கைதுசெய்து சிறைப்படுத்திய தவெக அரசு, இப்போது என்ன செய்யப் போகிறது? பாதிக்கப்பட்ட நபரை ம��ரட்டி அச்சுறுத்தி, ஒன்றுமே நடக்கவில்லை எனப் பக்கத்தில் அமர வைத்துப் பேச வைப்பதெல்லாம் கேவலம் இல்லையா?
தவறுகளுக்குப் பொறுப்பேற்பு, பிழைகளை ஏற்றுக்கொண்டு திருத்திக் கொள்ளுதல், குற்றமிழைத்தவர் எவராயினும் நடவடிக்கை எடுத்தல் என்பதெல்லாம் தலைமைப்பண்புக்கான அடிப்படைக் குணநலன்கள். இதுவெல்லாம் என்னவென்று முதல்வர் விஜய்க்கு ஒருபோதும் தெரியப் போவதில்லை. எல்லாவற்றிற்கும் அவரி��ம் இருக்கும் ஒற்றைத்தீர்வு, Road Show எனும் பெயரில் நடக்கும் கேலிக்கூத்து, மக்களைத் திசைதிருப்ப நடக்கும் மலினமான நாடகங்கள், போலியானக் கட்டுக்கதைகள், பொய்யானக் கருத்துருவாக்கங்கள்! இதுவெல்லாம் பிரச்சினைகளிலிருந்து மக்களின் கவனத்தை மடைமாற்றுமே ஒழிய, ஒருபோதும் பிரச்சினைகளுக்குத் தீர்வைப் பெற்றுத் தராது. இனியாவது உணர்வாரா முதல்வர் விஜய்?
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பா���ர்
நாம் தமிழர் கட்சி
'கள்ளமில்லா சிரிப்பாலும், வெள்ளந்திப் பேச்சாலும் அனைவரையும் கவர்ந்த மாண்புமிகு அமைச்சர் புஸ்ஸி ஆனந்த்' எனும் பின்னணிக்குரல் ஒலிக்க, புஸ்ஸி ஆனந்தின் பேட்டி குறித்தான நியூஸ் தமிழ் தொலைக்காட்சியின் முன்னோட்டம் ஒளிபரப்பாகிறது.
காவிரிப்படுகையில் குறுவை, சம்பா என இரண்டு பருவங்களிலும் இந்தாண்டு சாகுபடி���் பொய்த்துப் போனது. இதற்குப் பொறுப்பேற்றுப் பதில் சொல்ல வேண்டியவர் நீர்வளத்துறை அமைச்சர் புஸ்ஸி ஆனந்த். இதுவரை அவர் பதில் சொல்லவில்லை. அதனைவிட, புஸ்ஸி ஆனந்துக்கு குறுவை, சம்பா பருவங்கள் குறித்தெல்லாம் முதலில் தெரியுமா? என்பதே மில்லியன் டாலர் கேள்வி.
அப்படிப்பட்ட ஒரு தற்குறி அமைச்சரை பேட்டி எனும் பெயரில் உட்கார வைத்துக் கொண்டு அரசியலற்ற கேள்விகள் மூலம் அவரை Glorify செய்வது எல்��ாம் படு அபத்தம்!
Shame On You News Tamil!
சீமான் அண்ணன் ���வர்கள் படிக்கச் சொல்லி பரிந்துரை செய்த புத்தகங்கள்
1. பிரிட்டிஷ் உளவாளின் ஒப்புதல் வாக்குமூலம் - ஆலிவர் கேம்பர்
2. பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் (2 பாகங்கள்) - ஜான் பெர்கின்ஸ்
3. எனது போராட்டம் - Main kamf - ஹிட்லர்
4. தமிழ், தமிழர், தமிழ்நாட்டு வரலாறு - பாவணார், சதாசிவ பண்டாரத்தார், மயிலை வேங்கட சீனிவாசன்
5. தமிழனின் ஏன் அடிமை ஆனான் - க.ப. அறவாணன்
6. ம.செ. விக்டர் அவர்களின் புத்த��� தொகுப்பு - 26 நூல்கள்
இறையன்பு அவர்களின் தொகுப்பு
7. போர்த்தொழில் பழகு
8. வையத் தலைமைகொள்
9. உலகை உலுக்கிய வாசங்கள்
10. சிம்மாசன சீக்கிரட்
11. இனியவை இனியவை
-------
12. உணவு யுத்தம் - எஸ். ராமகிருஷ்னண்
ஐயா நம்மாழ்வார் புத்தகங்கள்
13. இனி விதைகளே பேராயுதம்
14. இயற்கை வேளாண்மை
15. எந்நாடுடைய இயற்கையே போற்றி
16. நோயினை கொண்டாவோம்
17. களை எடு
18. வயிற்றுக்கு சோறிடல் வேண்டும்
19. உழவுக்கு உண்டு வரலாறு
----
20 விதை அரசியல் - பாமயன்
21. வேளாண் இறையாண்மை புத்தகம் - பாமயன்
22. நீர் எழுத்து - நக்கீரன்
23. காடோடி - நக்கீரன்
24. கண்ணுக்கு தெரியாமல் களவு போகும் மறை நீர் - நக்கீரன்
25. பாரதிதாசன் கவிதை தொகுப்புகள்
26. கனிச்சாறு, கொய்யா கனி - பாவலரேறு பெருஞ்சித்திரனார்
27. எரிமலை - புதுவை இரத்தின துரைசாமி
28. காசி ஆனந்தன் கவிதைகள்
சோதனைப்பணியில் ஈடுபட்டிருந்த ஊர்க்காவல் படைவீரர் தம்பி வெங்கடேசன் போதைக் குற்றவாளிகளால் படுகொலை செய்யப்பட்டிருப்பது சட்டம் ஒழுங்கு சீரழிவின் உச்சம்!
@CMOTamilnadu@TVKVijayHQ
அரியலூர் மாவட்��ம், செந்துறை அருகே தளவாய் கிராமத்தில் நள்ளிரவில் சோதனைப் பணியில் ஈடுபட்டிருந்த ஊர்க்காவல் படைவீரர் தம்பி வெங்கடேசனை போதைக்குற்றவாளிகள் தலையில் கல்லால் தாக்க�� படுகொலை செய்துள்ள செய்தியறிந்து அதிர்ச்சியும், மனவேதனையும் அடைந்தேன். தமிழ்நாட்டில் பொதுமக்களின் உயிரையும் உடைமைகளையும் பாதுகாக்க வேண்டிய பாதுகாவல் படையினருக்கே பாதுகாப்பில்லாத கொடுஞ்சூழல் உருவாகியிருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.
ஊர்க்காவல் படைவீரர் தம்பி வெங்கடேசனின் குழந்தைகளான தமிழ்ச்செல்வன், அர்ச்சனா இருவரும் ஏற்கனவே தாயை இழந்துவிட்ட நிலையில் தற்போது த��்தையையும் இழந்து தவித்து நிற்பது மிகுந்த மனத்துயரை அளிக்கிறது. தவெக அரசின் அலட்சியத்தால் நடைபெறும் போதைப்பொருள் விற்பனை, ஒரு குடும்பத்தையே முற்று முழுதாகச் சிதைத்துவிட்டதுதான் பெருங்கொடுமை. போதைப்பொருள் விற்பனையைக் கட்டுப்படுத்த தவறி, இன்னும் எத்தனை குடும்பங்களைச் சிதைக்கத் தவெக அரசு நினைக்கிறது?
ஊர்க்காவல்படை காவலர்களுக்கே பாதுகாப்பில்லாத நிலை உருவாகியிருப்பது, தவ���க ஆட்சியில் சட்டம் ஒழுங்கு எந்த நிலையில் இருக்கிறது என்பதற்கான கேள்வியை எழுப்புகிறது. இரவு பகலாக மக்களின் பாதுகாப்பிற்காகப் பணியாற்றும் காவலர்களைத் தாக்கும் அளவிற்குக் குற்றவாளிகளுக்குத் துணிச்சல் வந்தது எப்படி? அந்த அளவிற்கு தவெக ஆட்சியில் போதைப்பொருள் விற்பனை கட்டுக்கடங்காமல் அதிகரித்துள்ளதே இப்படுகொலை நிகழ முதன்மைக் காரணமாகும். போதைப்பொருள் பயன்பாட்டையும், போதை ஆசாமிகளின் அட்டூழியங்களையும் கட்டுப்படுத்த வேண்டிய காவல்துறை என்ன செய்துகொண்டிருக்கிறது? காவலர்களுக்கே பாதுகாப்பு வழங்க முடியாத அரசு, பொதுமக்களின் பாதுகாப்பை எப்படி உறுதிப்படுத்தும்? பொதுமக்கள் மற்றும் காவலர்களின் பாதுகாப்பில் தவெக அரசு அலட்சியம் காட்டுவதை ஒருப���தும் ஏற்கமுடியாது.
ஆகவே, ஊர்க்காவல் படைவீரர் தம்பி வெங்கடேசனை படுகொலை செய்த போதை குற்றவாளிகள் அனைவரையும் உடனடியாகக் கைது செய்து, சட்டப்படி கடுமையான தண்டனை கிடைப்பதை உறுதிசெய்வதோடு, போதைப்பொருள் புழக்கத்தையும், போதையால் நிகழும் குற்றங்களையும் தடுக்க தமிழ்நாடு அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
உயிரிழந்த ஊர்க்காவல் படைவீரர் தம்பி வெங்கடேசன் குடும்பத்திற்கு வெறும் 5 இலட்ச ரூபாய் இழப்பீடு வழங்குவதாக தவெக அறிவித்துள்ளது ஏற்புடையதல்ல; தாயையும் இழந்து, அரசின் அலட்சியத்தால் தந்தையையும் இழந்து தவிக்கும் குழந்தைகளின் கல்வியையும், எதிர்காலத்தையும் கருத்திற்கொண்டு, ஒரு கோடி ரூபாய் துயர்துடைப்பு நிதியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
இனி சாலை உயரத்தை ஏற்ற கூடாது.சென்னை மாநகராட்சி ஆணை !
சென்னை மாநகராட்சியில் சாலை உயராமல் சாலை போடுவதற்கான வழிகாட்டுதல் சுற்றறிக்கை வெளியீடு. இது நம் தொடர் பிரச்சாரம் மற்றும் போராட்டத்திற்கு கிடைக்கும் முதல் படி முன்னேற்றம். சுற்றறிக்கை என்ன சொல்கிறது? என்ன சொல்ல தவறியது ? அரசு என்ன செய்ய வேண்டும். தமிழ்நாடு மக்களாகிய நாம் இந்த பிரச்சாரத்தில் பங்கு கொண்டு ந���் பகுதியில் மாற்றத்தை கொண்டு வருவது எப்படி ?
@CMOTamilnadu @chennaicorp
இராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே உள்ள மணிமுத்தாறு நீர்நிலைப் பகுதிகளில் சுற்றுச்சூழல் சீர்கேடுகளை ���ற்படுத்தும் விதமாக கொட்டப்பட்டுள்ள நெகிழி மற்றும் திடக்கழிவுகளை அகற்றுவதற்கு, நாம் தமிழர் கட்சி சார்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வின் அனுமதி பெற்று, இன்று ஐப்பசி 10ஆம் நாள் 27-10-2026 தூர்வாரும் பணிகளைத் தொடங்கி வைத்தபோது,
அரிசி வாங்கவே மக்கள் அல்லல்படும்போது தவெக அரசு வானூர்தி எரிபொருளுக்கு வரிச்சலுகை அளிப்பது ஏன்? இந்த ஆட்சியும், அதிகாரமும் மக்களு��்கானதா? அல்லது தனியார் முதலாளிகளுக்கானதா?
@CMOTamilnadu
@TVKVijayHQ
அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தால் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் அன்றாட வாழ்க்கையை நடத்தவே போராடிக்கொண்டிருக்கும் நிலையில், வானூர்தி எரிபொருள் மீதான வரியைக் குறைப்பதற்கு தமிழ்நாடு அரசு முன்னுரிமை அளித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
தவெக அரசு ஆட்சிக்கு வந்த 5 மாதங்களில், மிக மோசமான நிர்வாகத்தா��் அத்தியாவசியப் பொருட்களின் விலை பன்மடங்கு உயர்ந்து தமிழ்நாட்டு மக்கள் கடுமையான நிதிச்சுமைக்கு ஆளாகியுள்ளனர். குறிப்பாக அரிசி விலை மட்டும் மூட்டைக்கு 500 ரூபாய் அளவிற்கு உயர்ந்துள்ளது. பருப்பு முதல் எண்ணெய் பொருட்கள் வரை அனைத்தின விலையும் கடுமையாக உயர்ந்து மக்கள் அல்லல்பட்டு வருகின்றனர். அதையெல்லாம் சரி செய்ய திறனற்ற தவெக அரசு, சென்னை வானூர்தி நிலையத்தில் வானூர்தி எரிபொர���ள் மீதான வரியை 29 விழுக்காட்டில���ருந்து 16 விழுக்காடாகவும், பிற வானூர்தி நிலையங்களில் குறிப்பிட்ட வானூர்தி சேவைகளுக்கான வரியை 29 விழுக்காட்டிலிருந்து ஒரு விழுக்காடாகவும் குறைத்திருக்கிறது. வானூர்தி நிறுவனங்களின் செலவைக் குறைக்க இவ்வளவு வேகம் காட்டும் முதல்வர் விஜய் அவர்கள், மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்களின் விலையை குறைக்கு என்ன நடவடிக்கை எடுத்துள்ளார்? அமுதம் மற்றும் கூட்டுறவு அங்காடிகளில் சன்னரக அரிசி கிலோ ரூ.30-க்கு விற்பனை செய்யப்படுவதாக தவெக அறிவித்தது. ஆனால், குறைந்த விலை என்றுகூறி சிறிதும் தரமற்ற அரிசியை தருவதாக மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். உழைக்கும் மக்கள் வாங்கும் விலையில் தரமான அரிசி கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டிய அரசு, அவர்களின் உணவுத் தேவையை நிறைவுசெய்வதில் அலட்சியமாய் இருப்பது ஏன்? முதலமைச்சரின் கோட் சூட் உடை மாற்றத்தை தவிர தவெக அரசால் தமிழ்நாட்டில் நிகழ்ந்துள்ள மாற்றம்தான் என்ன? அரிசி வாங்குவதற்கே மக்கள் அல்லல்படும் அவலநிலைக்கு ஆளானதா? அல்லது தவெக நிர்வாகிகளே பாலியல் வன்கொடுமை செய்வதும், போதைப்பொருள் விற்பதும்தான் மாற்றமா?
அரிசி, பருப்பு, எண்ணெய் வாங்க முடியாமல் மக்கள் தவிக்கும்போது, வானூர்தி பயணச் செலவைக் குறைப்பதுதான் அரசின் முதன்மையான பணியா? அப்படியென்றால் இந்த அரசு யாருக்கானது? இந்த ஆட்சி யாருக்கானது? அன்றாடம் உழைத்து வாழும் கோடிக்கணக்கான மக்களுக்கானதா? பல்லாயிரம் கோடி முதலீட்டில் வானூர்தி நிறுவனங்களை நடத்தும் தனியார் முதலாளிகளுக்கானதா?
வானூர்தி போக்குவரத்தை மேம்படுத்துவதாகக் கூறும் அரசு, மக்களின் அடிப்படை உணவுத் தேவையை நிறைவுசெய்வதற்கும் அதே அக்கறையைக் காட்ட வேண்டாமா? பொருளாதார வளர்ச்சி என்பது தமிழ்நாட்டில் ஒரு நாளைக்கு எத்தனை வானூர்திகள் பறக்கிறது என்பதில் இல்லை; தமிழ்நாட்டில் எத்தனை குடும்பங்கள் கடன் வாங்காமல் ஒரு நாளைக்கு மூன்று வேளையும் நல்ல உணவருந்த முடிகிறது? என்பதில்தான் உள்ளது. மக்களின் வயிற்றுப்பசியைவிட வானூர்தி நிறுவனங்களின் வரிச்சுமை பெரிதாகிவிட்டதா தவெக அரசுக்கு? மக்களுக்கு வழங்கப்படும் உணவு மானியத்தைச் செலவாகவும், நிறுவனங்களுக்கு வழங்கப்படும் வரிச்ச���ுகையை வளர்ச்சிக்கான முதலீடாகவும் அரசு பார்ப்பது வெட்கக்கேடானது. மக்களின் பசியைப் போக்குவதும், அவர்களின் வாங்கும் திறனைப் பாதுகாப்பதும்தான் அரசின் முதற்கடமை.
ஆகவே, தமிழ்நாடு அரசு ஏழை எளிய மக்களை காக்க, அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை விரைந்து எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
வானில் பறப்பவர்களின் பயணச் செலவைக் குறைப்பதில் காட்டும் ��க்கறையை, மண்ணில் உழைப்பவர்களின் உணவுச் செலவைக் குறைப்பதிலும் காட்டுங்கள்!
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
சாலை உயர்த்துவதில் 98 கோடி ஊழலா ??
அறப்போர் ஏன் ��ாலை உயர பிரச்சனையை இப்பொழுது கையில் எடுத்துள்ளது என்று கேட்பவர்கள் இதில் கடந்த 10 வருடத்தில் நடந்த ஊழல் குறித்தும் அதன் மீதான நம் தொடர் விழிப்புணர்வு மற்றும் போராட்டங்கள் குறித்தும் போராட்ட களத்தில் விளக்கும் அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் ! இந்த போராட்டம் தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் சாலைகள் உயர்த்தாமல் போட���்படும் வரை தொடரும் ! இந்த மக்கள் இயக்கத்தில் நீங்களும் இணையுங்கள்! உங்கள் பகுதி அரசு ஊழியர்களுக்கு இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டறிக்கை கொடுக்க விரும்பினால் 7200020099 எண்ணுக்கு வாட்ஸப் செய்யுங்கள் அல்லது அழையுங்கள்! உங்களுக்கு துண்டறிக்கை அனுப்பப்படும்!
சட்ட நடவடிக்கையா?
திட்டமிட்ட பழிவாங்கலா?
தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் தங்கை கார்த்திகா அவர்களை, இ���்று கோவையில் வைத்து தாராபுரம் காவல்துறையினர் கைது செய்திருப்பது கண்டனத்திற்குரியது.
தேர்தல் ப��ரச்சாரத்தின் இறுதிக்கட்டத்தில், தங்கை கார்த்திகா அவர்களும் நாம் தமிழர் கட்சியினரும் தங்களது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்வதற்கு பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டதாகவும், அவற்றுக்கு எதிராக அவர்கள் போராடியதாகவும் அன்றைய சம்பவங்கள் தெரிவிக்கின்றன.
அக்டோபர் 2 அன்று தாராபுரத்தில் நாம் தமிழர் கட்சியின் தேர்தல் பணிமனை அருகே வைக்கப்பட்டிருந்த பேனர் அகற்றப்பட்ட விவகாரத்தில் கட்சி��ினர் காவல் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதற்கு அடுத்த நாள், தேர்தல் களத்தில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கப்படுவதாகக் குற்றம்சாட்டி, தங்கை கார்த்திகா அவர்கள் தேர்தல் அலுவலரிடம் புகார் அளித்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. தேர்தல் அதிகாரிகள் பாரபட்சமாக செயல்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டியிருந்தார்.
மேலும், அக்டோபர் 4 அன்று முதலமைச���சர் விஜய் ரோடு ஷோ மேற்கொள்ளவிருந்த பகுதியில் தங்கை கார்த்திகா அவர்களும் நாம் தமிழர் கட்சியினரும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது, அந்தப் பகுதியில் பிரச்சாரம் செய்ய காவல்துறையினர் அனுமதி மறுத்ததாகவும், இதனால் ஏற்பட்ட பிரச்சினையைத் தொடர்ந்து தங்கை கார்த்திகா அவர்களுடன் மேலும் 5க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின.
ஒரு வேட்பாளர் தனத�� த��குதியில் மக்களை நேரடியாகச் சந்தித்து வாக்கு கேட்பதற்கான வாய்ப்பை முழுமையாகப் பெற வேண்டும். ஆனால், தங்கை கார்த்திகா அவர்களின் பிரச்சாரத்திற்கு தொடர்ந்து தடைகள் ஏற்பட்டதாகவும், அந்தத் தடைகள் குறித்து தேர்தல் அதிகாரிகளிடம் புகார்கள் அளிக்கப்பட்டும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அவர்களது தரப்பில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
ஒரு வேட்பாளரின் பிரச்சாரத்திற்கு தடைகள் ஏற்பட்டதாக புகார் அளிக்கும்போது அதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டிய தேர்தல் நிர்வாகம், அந்தப் புகார்களில் போதிய நடவடிக்கை எடுக்காமல் இருந்ததா? அனைத்து வேட்பாளர்களுக்கும் சமமான தேர்தல் வாய்ப்பு உறுதி செய்யப்பட்டதா? என்ற கேள்விகளுக்கு தேர்தல் ஆணையம் வெளிப்படையான பதிலை அளிக்க வேண்டும்.
எனவே, இந்தக் கைது நடவடிக்கை வழக்கமான சட்ட நடவடிக்கையா? அல்லது தேர்தல் கால���்தில் எழுந்த அரசியல் மோதலின் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் பழிவாங்கும் நடவடிக்கையா? என்பதை தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும். பொதுவாக தேர்தல் காலங்களில் வழக்குகள் பதியப்பட்டால் முறையாக நீதிமன்றத்தின் மூலம் வழக்கு பதியப்பட்டு சம்மன் அனுப்பப்பட்டு நீதிமன்ற நடவடிக்கைகள் முன்னெடுப்பது வழக்கம். அதுபோல இந்த கைதில் எதுவும் நடந்திருக்கிறதா என்பதை தமிழ்நாடு அரசு தெளிவுபடுத்த வேண்டும்.
சட்ட��்படி விசாரணை நடத்துவதற்கு எங்களுக்கு எந்த எதிர்ப்பும் இல்லை. ஆனால், சட்டம் அனைவருக்கும் சமமாகவும், பாரபட்சமின்றியும் செயல்பட வேண்டும். அரசியல் எதிர்ப்புக் குரலை ஒடுக்குவதற்கான கருவியாக காவல்துறை அல்லது தேர்தல் நிர்வாகம் பயன்படுத்தப்படக்கூடாது.
நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் தங்கை கார்த்திகா அவர்களின் கைது நடவடிக்கையைக் கண்டிப்பதுடன், அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்���ும் எனத் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறேன்.
தி. வேல்முருகன்,
தலைவர்,
தமிழக வாழ்வுரிமைக் கட்சி
#கார்த்திகாவை_விடுதலை_செய் #தேர்தல்_நீதி
#ReleaseKarthika #tamil #ElectionJustice
அரசியல் பழிவாங்கும் நோக்கோடு பொய் வழக்குப் புனைந்து தங்கை கார்த்திகா உள்ளிட்ட நாம் தமிழர் உறவுகளைக் கைதுசெய்திருப்பது தவெக அரசின் கீழ்த்தரமான அரசியல்! அதிகாரம் நிலையானதல்ல எந்த ஆட்சியும் நிரந்தரமானதல்ல! இந்த ஆட்சியும், அதிகாரமும் வீழும் நாள் வெகுதொலைவில் இல்லை!
@CMOTamilnadu@TVKVijayHQ
தாராபுரம் இடைத்தேர்தலில் போட்டியிட்ட தங்கை கார்த்திகாவையும், அவரது கணவர் முருகசந்திரகுமார் உள்ளிட்ட 7 நாம் தமிழர் உறவுகளை பொய் வழக்கில் அரசியல் பழிவாங்கும் நோக்கோடு கைதுசெய்திருக்கும் தவெக அரசின் செயலை மிகக் கடுமையாகக் கண்டிக்கிறேன். தேர்தல் கால வழக்குக்குக் கைது நடவடிக்கை மேற்கொண்டு சிறைப்படுத்துவது பாசிசத்தின் உச்சம்.
தாராபுரம் இடைத்தேர்தலின் கடைசிநாள் பரப்புரைக்கு நாம் தமிழர் கட்சிக்கு அனும��ி மறுக்கப்பட்டதனால் விஜய் சாலைவலம் சென்ற வழியில், தங்கை கார்த்திகா நாம் தமிழர் உறவுகளோடு போராட்டம் நடத்தினார் என்கிற காரணத்திற்காகக் குறிவைத்து, இப்போது கைதுசெய்து பழிவாங்கத் துடிப்பது கீழ்த்தரமான அரசியல் இல்லையா? இந்த இழிவான அரசியலைச் செய்வதற்குத்தான் தூய சக்தி என மேடைதோறும் சுயதம்பட்டம் அடித்தீர்களா முதல்வர் விஜய் அவர்களே?
மாநிலம் முழுமைக்கும் சட்டம் ஒழுங்கும், பொது அமைதியும் மொத்தமாகச் சீர்குலைந்துப் போயிருக்கும் தற்காலச் சூழலில், அவற்றைச் சரிசெய்ய காவல்துறையைப் பயன்படுத்தத் துப்பில்லாத முதல்வர் விஜய், அரசியல் பழிவாங்கலுக்காகப் பொய்யாக ��ழக்கைப் புனைந்து தங்கை கார்த்திகாவைக் கைதுசெய்வதெல்லாம் மிகக் கேவலமான அரசியல் இல்லையா?
நாகையில் சொந்தக்கட்சி நிர்வாகி 100 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் போருளைக் கடத்த முற்பட்டபோது, அதனை முன்கூட்டியே கண்டறிந்து கைதுசெய்ய வக்கில்லாத தவெக அரசின் காவல்துறை, ஆளுங்கட்சியின் ஏவல் படையாகச் செயல்பட்டு அரசியல் பழிவாங்கலுக்குத் துணைநிற்குமென்றால், இதுதான் மாற்று அரசியலா? கட்சியி���் பெண் நிர்வாகியிடம் பாலியல் தொந்தரவு செய்த இராணிப்பேட்டை மாவட்டச் செயலாளர் விஜய் மோகன் மீது பாயாத கைதுநடவடிக்கை, செய்தியாளர்களைத் தாக்கிய சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் கபில் மீது பாயாத கைது நடவடிக்கை, ��ிருவைகுண்டத்தில் பெண்ணைக் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்வதற்குச் சூத்திரதாரியாகச் செயல்பட்ட சட்டமன்ற உறுப்பினர் சரவணன் மீது பாயாத கைதுநடவடிக்கை, அறவழியில் போராடிய தங்கை கார்த்திகா உள்ளிட்ட நாம் தமிழர் உறவுகள் ஏழு பேர் மீது பாயுமென்றால், நடப்பது மக்களுக்கான ஆட்சியா?
திராவிடக்கட்சிகள் முந்தைய ஆட்சிக்காலங்களில் செய்த அதே தவறுகளைத்தான் தவெக அரசும் செய்யுமென்றால், இது நல்லாட்சியா? கேடுகெட்ட காட்டாட்சி! அதிகாரத்திமிரிலும், பதவி தரும் மமதையிலும், புகழ்போதையிலும் முதல்வர் விஜய் இன்றைக்கு மனம்போன போக்கில் ஆட்டம் போடுவாரென்றால், இதேபோல ஆட்டம்போட்ட ஆட்சியாளர்கள் எல்லாம் என்ன ஆனார்கள்? எனக் கொஞ்சம் வரலாற்றைப் பின்னோக்கிப் பார்த்துத் தெரிந்துக் கொள்ளட்டும். ‘நிரந்தர முதல்வரே!’ என உங்கள் கட்சியினர் புகழ்கிறார்கள் என்பதற்காக, இந்த ஆட்சியும், அதி��ாரமும் நிலையானது எனும் முடிவுக்கு வந்துவிட்டீர்களா முதல்வர் விஜய் அவர்களே!
உங்கள் அடக்குமுறைக்கும், ஒடுக்குமுறைக்கும் என்னுடைய தம்பி, தங்கைகள் பயந்து ஒதுங்கிவிடுவார்கள் என நினைத்தீர்களா? ஐயா கருணாநிதிக்கும், அம்மையார் ஜெயலலிதாவுக்கும் நீங்கள் பயந்து நடுங்கிய காலத்தில��யே எதிர்த்து நின்று அரசியல் செய்து, சண்டையிட்டவர்கள் நாங்கள். வழக்கு இல்லையென்றால், விடியாது கிழக்கு என்று சொல்லித்தான் என்னுடைய பிள்ளைகளை நாளும் வளர்த்திருக்கிறேன். கரூர் பேரவலத்தின்போது ஒரு மாத காலம் வழக்குக்கும், கைதுக்கும் பயந்துகொண்டு நீங்களும், உங்கள் கட்சியின் மொத்த நிர்வாகிகளும் ஓடி ஒளிந்து கொண்டீர்களே, அப்படி எந்நாளும் என்னுடைய தம்பி, தங்கைகள் ஓடி ஒளிந்தது இல்லை. உங்கள் அடக்குமுறைகளால் எங்கள் மனவலிமையை அணுவளவுகூட அசைத்துப் பார்த்திட முடியாது. ஐந்து மாதகால ஆட்சியிலேயே ஆயிரத்தெட்டு நிர்வாகச்சீர்கேடுகளும், குளறுபடிகளும், குழப்பங்களும் தலைவிரித்தாடி, ஆட்சி நிர்வாகம் தறிகெட்டுப்போய், சகித்துக் கொள்ள இயலாது மக்கள் வீதிக்கு வந்துப் போராடுகையில், அவற்றைச் சரிசெய்ய முயற்சி எடுக்காத தரங்கெட்ட தவெக அரசு, அரசியல் பழிவாங்கலுக்காகத் தன்னு��ைய கவனத்தைச் செலுத்துமென்றால், இந்த ஆட்சியும், அதிகாரமும் வீழும் நாள் வெகுதொலைவில் இல்லை.
பொய் வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ள தங்கை கார்த்திகா, அவருடைய கணவர் முருக சந்திரகுமார் உள்ளிட்ட நாம் தமிழர் உறவுகள் அனைவரையும் உடனடியாக விடுவிக்க வேண்டுமென தவெக அரசை வலியுறுத்துகிறேன். இல்லையெனில், அதற்கான எதிர்விளைவுகளை உறுதியாகச் சந்திக்க நேரிடுமென எச்சரிக்கிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
மக்களின் உயிரை விட தன் விளம்பரமே முக்கியம் என்று நினைக்கும் எந்த கட்சியும் மக்களுக்காக வேலை செய்கிறோம் என்று சொல்லிக் கொள்வதில் எந்த விதமான அர்த்தமும் இல்லை.
மீடியன்களில் கொடிக்கம்பம் வைப்பது சட்டவிரோதமானது என்று தெரிந்தும் தைரியமாக வைக்கிறார்கள். அந்த சாய்ந்த கொடிக்கம்பம் யார் உயிரை பறிக்க போகிறது என்று அருகில் இருக்கும் டிராபிக் போலீஸ் இந்த கொடிக்கம்பங்களுக்கு செக்யூரிட்டி வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்.
காவல்துறை சென்னை மாநகராட்சி அதிகாரிகளும் வெட்கி தலைகுனிய வேண்டும்
தமிழக வெற்றி கழக கட்சி���்கு எப்பொழுது அறிவு வரும்? சொல்லுங்க TVK Vijay
இடம்: Kodambakkam high road, near gemini
'தாய் மாமன்', 'அண்ணன்' என்றெல்லாம் மேடையில் உதார்விட்டுத் திரியும் மானங்கெட்ட முதல்வரே! @TVKVijayHQ
போராடும் செவிலியர்கள் எல்லாம் உங்களுக்குத் தங்கைகள் இல்லையா?
தமிழ்நாடு முழுவதும் ஏறக்குறைய 7,500 செவிலியர்கள் தற்காலிகப் பணியாளர்களாகப் பணிபுரிந்து வருகின்றனர். தற்காலிகப்பணியாளர்களுக்கும், நிரந்தரப் பணியாளர��களுக்கும் ஒரே மாதிரி வேலைதான் கொடுக்கப்படுகிறது. ஆனால், ஊதியம்தான் பெருமளவில் மாறுபடுகிறது.
தற்காலிகப்பணி செய்யும் செவிலியர் ஊதியம் - 18,000 ரூபாய்
நிரந்தரப்பணி செய்யும் செவிலியர் ஊதியம் - 54,000 ரூபாய்
2025ஆம் ஆண்டு தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் தற்காலிகப் பணியாளர்களாகச் செயல்பட்டு வரும் செவிலியர்களை நிரந்தரப் பணியாளர்களை மாற்றக் கோரியது. செவிலியர்களுக்குச் சம ஊதியம் கொடுக்கச் சொல்லி உயர் நீதிமன்றமும் வலியுறுத்தியிருக்கிறது.
தாய் மாமன் தங்க மோதிரத் திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் 43 விழுக்காட்டிலேயே 7,500 பேருக்கான ஊதிய வேறுபாட்டைக் களைந்துவிட முடியும்.
செய்வாரா முதல்வரா விஜய்?
திருவைகுண்டம் தொகுதியில் சொந்தக் கட்சிப் பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளைத் தப்பிக்க விட்டுவிட்டு, எப்படிடா வெட்கம் இல்லாம இப்படி பேச முடியுது?
ஆட்சிக்கு வந்த முதல்நாளே நிரந்தர பணி கொடுப்போம் என்று செவிலியர��களுக்கு வாக்கு கொடுத்த அமைச்சர் ஆதவ் அவர்களே ?@AadhavArjuna
இப்போது 5 மாதமாகியும் வாக்குறுதியை நிறைவேற்றாமல் போராடும் செவிலியர்களை இரவோடு இரவாக கைது செய்வது பச்சைத்துரோகம் இல்லையா ?
#tvkfails
ஆட்சிக்கு வருவதற்கு முன்பு செவிலியர்களின் போராட்டத்தில் கலந்துகொண்டு, “நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் உடனடியாக கோரிக்கையை நிறைவேற்றுவோம்” என்று நாடகமாடிவிட்டு, ஆட்சிக்கு வந்த பிற��ு காவல்துறையைக் கொண்டு போராட்டத்தைத் தடுத்து, அடக்குமுறையைக் கையாள்வது நியாயமா?
@CMOTamilnadu @TVKVijay
#tvkfails
கமுதி அருகே அரசு குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில், அதிகாரிகளின் அலட்சியத்தால் ஏற்பட்ட மின்கசிவில் சிக்கி பலியான 2 குழந்தைகளின் குடும்பத்துக்கு உரிய துயர் துடைப்பு உதவிகளை வழங்க வேண்டும்!
@CMOTamilnadu@TVKVijayHQ
இராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம் அச்சங்குளம் கிராமத்தில் தம்பி மோகன் - லதா இணையரின் 11 வயதான நிறைமதி என்ற பெண் குழந்தையும், 6 வயது பால பிரவீன் என்ற ஆண் குழந்தையும் கடந்த (30.09.2026) அன்று காலை 8 மணி அ��வில் அந்தப் பகுதியில் உள்ள அரசு குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் (RO Plant) ஏற்பட்ட மின்கசிவால் மின்சாரம் தாக்கி உயிரிழந்த துயரச் செய்தியறிந்து வேதனையுற்றேன்.
உயிருக்கும் மேலாக நேசித்து வளர்த்த இரண்டு பிஞ்சு குழந்தைகளையும் பறிகொடுத்து விட்டு ஆற்றமுடியாத பெருந்துயரத்தில் வாடும் பெற்றோருக்கும் குடும்பத்தினருக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து துயரத்தில் பங்கெடுக்கிறேன���.
இந்த விபத்துக்கு காரணமான, அந்த RO Plant-க்கு அரசு மின் இணைப்பு இல்லாமல் திருட்டுத்தனமாக மின்சாரம் எடுத்த ஊராட்சி செயலர், வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் கடந்த 8 ஆண்டு காலமாக மின்சாரத் திருட்டை ஆதரித்த மின்வாரிய அலுவலர் மீதும் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.
குறிப்பாக, செயல்படாமல் இருந்த RO Plant -ல் கடந்த 6 மாதங்களுக்கு முன்பே ஏற்பட்டுள்ள மின்கசிவைச் சரிசெய்யக்கோரி அந்த கிராம இளைஞர்கள் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் கொடுத்துள்ளனர்.
அப்போதே நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த இரண்டு பச்சிளம் குழந்தைகளின் உயிர் பறிபோய் இருக்காது.
புகார் அளி��்தும் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாகச் செயற்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலரும், தொடர்புடைய மின்வாரிய ஊழியர்களுமே இந்த இரண்டு பிஞ்சுகளின் உயிரிழப்புக்கு முதன்மை காரணமானவர்கள்.
இதனால் தமிழக அரசு உயிரிழந்த குழந்தைகளுக்கு ரூபாய் 25 லட்சம் வீதம் 2 குழந்தைகளுக்கும் சேர்த்து ரூபாய் 50 லட்சத்தைத் துயர் துடைப்பு நிதியாக வழங்க வேண்டும் எனவும்,
புகார் அளித்தும் கவனக்குறைவாகச் செயற்ப���்ட அரசு அலுவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உரிய துயர் துடைப்பு உதவிகளைச் செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி