வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் செயல்படும் சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலமாக (22.08.2026) அன்று சென்னை அசோக் நகர் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர் வளத்துறை அமைச்சர் திரு.என்.ஆனந்த் மற்றும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு.ஜா.முகமது பர்வேஸ் ஆகியோர்களின் தலைமையில் நடைபெற்றது.
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ |
@imrajmohan | @BussyAnand | @Farvace_Offl |
மாண்புமிகு தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் திரு.ஜே.சி.டி.பிரபாகர், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.ப.வெங்கடரமணன், மாண்புமிகு பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் திரு.ராஜ்மோகன், மாண்புமிகு செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் குமார்.ரா ஆகியோர் இன்று (22.08.2026) சென்னை தேனாம்பேட்டையிலுள்ள மறைந்த மறைந்த பழம்பெரும் திரைப்பட நடிகை திருமதி சௌகார் ஜானகி அவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று, தமிழ்நாடு அரசின் சார்பில் அவரது உடலுக்கு மலர்மாலை வைத்து, அஞ்சலி செலுத்தினர்.
#TNDIPR
இன்று (22.08.2026) சென்னை, கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், 387-வது மெட்ராஸ் தினத்தை முன்னிட்டு “சென்னை டு மெட்ராஸ்“ என்ற தலைப்பில் புகைப்பட கண்காட்சியை மாண்புமிகு பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் திரு.ராஜ்மோகன், மாண்புமிகு சுற்றுலாத் துறை அமைச்சர் திரு.செ.ராஜேஷ்குமார் ஆகியோர் தொடங்கி வைத்து புகைப்படங்களை பார்வையிட்டனர்.
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ |
@imrajmohan |
சென்னை நாளை முன்னிட்டு வாழ்த்துத் தெரிவித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ |
@imrajmohan |
மாண்புமிகு செயற்கை நுண்ணறிவு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் அவர்கள் முன்னிலையில் பன்னாட்டுத் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் கார்ப்பரேட் (CSR) நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டது.
@CMOTamilnadu@TVKVijayHQ@imrajmohan
#CMJosephVijay #TNOfficialUpdates #TNDIPR #TNGovt #CMForThePeople
தேசிய நல்லாசிரியர் விருதிற்கு தெரிவுசெய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆசிரியப் பெருமக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ |
@imrajmohan |