மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்களை இன்று (31.07.2026) தலைமைச் செயலகத்தில், மாத்ருபூமி பிரிண்டிங் & பப்ளிஷிங் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும் மாநிலங்களவை முன்னாள் உறுப்பினருமான திரு.எம்.வி. ஷ்ரேயாம்ஸ் குமார், டிஜிட்டல் வர்த்தக இயக்குநர் செல்வி எம்.எஸ். மயூரா, செயல்பாடுகள் இயக்குநர் செல்வி எம்.எஸ். தேவிகா, மக்கள் தொடர்பு பொது மேலாளர் திரு. கே.ஆர். பிரமோத், பிரிவு மேலாளர் செல்வி ஐஸ்வர்யா தாஸ் ஆகியோர் சந்தித்துப் பேசினர்.
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ |
@imrajmohan |
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்களை இன்று (31.07.2026) தலைமைச் செயலகத்தில், மலையாள மனோரமா குழுமத்தின் நிர்வாக ஆசிரியர் திரு. ஜேக்கப் மேத்யூ, மலையாள மனோரமா குழுமம் மற்றும் மலையாள மனோரமா தொலைக்காட்சியின் செயல் ஆசிரியரும், இயக்குநருமான திரு.ஜெயந்த் மாமென் மேத்யூ, தி வீக் வார இதழின் தலைமை இணை ஆசிரியரும் இயக்குநருமான திரு. ரியாத் மேத்யூ, மலையாள மனோரமா குழுமத்தின் ஆசிரியரும் இயக்குநருமான திரு. ஹர்ஷா மேத்யூ ஆகியோர் சந்தித்துப் பேசினார்கள்.
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ |
@imrajmohan |
இன்று (30.07.2026) புதுதில்லியில் 54-வது காவிரிநீர் மேலாண்மை ஆணையத்தின் அவசரக் கூட்டம் திரு.எஸ்.கே.ஹல்தார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ |
@imrajmohan |
இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குநரகம்
2026 – 2027 ஆம் கல்வியாண்டிற்கான சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி & யோகா மற்றும் இயற்கை மருத்துவம் – மருத்துவ பட்டப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை
இணையவழி விண்ணப்பப் பதிவு செய்யும் கடைசி தேதி நீட்டிப்பு அறிவிக்கை
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ |
@imrajmohan |
1/2
தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) மற்றும் EDII அகமதாபாத் இணைந்து "தொழில்முனைவோர் மற்றும் புத்தாக்கம்" என்ற சான்றிதழ் (Certificate Course on Entrepreneurship and Innovation) படிப்பைத் தொடங்கவுள்ளது.
Entrepreneurship Development and Innovation Institute (EDII-TN) with EDII Ahmedabad will launch a Certificate on Course on Entrepreneurship and Innovation.
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ |
@imrajmohan |
தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் - தமிழ்நாடு
மூன்று நாள் “செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் டிஜிட்டல் சந்தைப்படுத்தலின் (Digital Marketing)” பயிற்சி
Entrepreneurship Development and Innovation Institute
Three days “Foundations of AI and Digital Marketing” Training Programme
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ |
@imrajmohan |
மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.செ.ராஜேஷ்குமார் அவர்கள் இன்று (30.07.2026) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் நிறுவப்பட்டுள்ள “குயிக் பைட்ஸ்"( Quick Bites ) என்ற சிற்றுண்டி துரித உணவகத்தை திறந்து வைத்து பார்வையிட்டார்.
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ |
@imrajmohan | @RajeshKumarSMLA |
எல் நினோ (El Nino) எனும் காலநிலை மாற்ற நிகழ்வு - பேரிடர் மேலாண்மைக்கான நிபுணர் ஆலோசனைக் குழுவை அமைத்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு.
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ |
@imrajmohan |
Join us for an interactive workshop designed to help startups and entrepreneurs navigate the fundraising journey, identify relevant funding opportunities, and build stronger grant and funding proposals.
@CMOTamilnadu@TVKVijayHQ@imrajmohan#CMJosephVijay#TNOfficialUpdates #TNDIPR #TamilNadu #TNGovt #CMForThePeople
இன்று (30.07.2026) தலைமைச் செயலகத்தில், மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் திரு.ஜா.முகமது பர்வேஸ் அவர்கள் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் பயிற்றுநர்களுக்கு கலந்தாய்வு முறையில் பதவி உயர்வு ஆணைகளை வழங்கினார்.
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ |
@imrajmohan | @Farvace_Offl |
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று (30.07.2026) தலைமைச் செயலகத்தில், துபாய் நாட்டிற்கான இந்திய துணைத் தூதராக நியமிக்கப்பட்டுள்ள டாக்டர் விஷ்ணு வர்தன் ரெட்டி, I.F.S. அவர்கள் சந்தித்துப் பேசினார்.
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ |
@imrajmohan |
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று (30.07.2026) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு டாக்டர் ஜெ ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் எஸ்.சௌமியா அவர்கள் சந்தித்துப் பேசினார்.
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ |
@imrajmohan |
மாண்புமிகு பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு.ஆதவ்அர்ஜுனா அவர்கள் இன்று (30.07.2026) தலைமைச் செயலகத்தில், 6 பயிற்றுநர்களுக்கான பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ | @AadhavArjuna | @imrajmohan |
மாண்புமிகு பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு.ஆதவ்அர்ஜுனா அவர்கள் இன்று (30.07.2026) தலைமைச் செயலகத்தில், பொருளாதாரத்தில் நலிந்த நிலையிலுள்ள 13 முன்னாள் விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதிய ஆணைகளையும், 3 நபர்களுக்கு குடும்ப ஓய்வூதிய ஆணைகளையும், ஓய்வூதிய நிலுவைத் தொகையினையும், வழங்கினார்.
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ | @AadhavArjuna | @imrajmohan |