தந்தை பெரியாரின் வழியில் மானமிகு சுயமரியாதை போராளியாய், பேரறிஞர் அண்ணா வழியில் மொழியுரிமை, மாநில உரிமைகள் காத்த தமிழினத் தலைவராய் வாழ்ந்த முத்தமிழறிஞர் கலைஞர் புகழ் போற்றுவோம்!
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளில் கழகத்தலைவர் @mkstalin அவர்கள் வழியில் மக்கள் பணி, கழகப் பணி தொடர உறுதியேற்போம்.
#Kalaignar103 #KalaignarForever
தமிழ்நாட்டின் புதிய அரசுக்கும் - முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள திரு.@actorvijay அவர்களுக்கும் என் வாழ்த்துகள்.
இந்த நேரத்தில், 17-ஆவது தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவரா பணியாற்றும் பெரிய பொறுப்பை எனக்கு வழங்கியிருக்க கழகத்தலைவர் எங்க உயிரான @mkstalin அவர்களுக்கும், கழகப் பொதுச்செயலாளர் மற்றும் கழகச் சட்டமன்ற உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள், தலைவர் கலைஞரின் உடன்பிறப்புகள், எல்லாத்துக்கும் மேல தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் என்னோட அன்பான நன்றி!
கழகத்தலைவர் அவர்களின் வழிகாட்டுதலின்படி,
சட்டமன்றத்திலும் - மக்கள் மன்றத்திலும் - சமூக ஊடகங்களிலும் ஆற்றல்மிகு எதிர்க்கட்சியா மக்களின் குரலை நாங்க எதிரொலிப்போம்.
ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை முன்வைப்போம்.
எங்க தலைவர் சொன்ன மாதிரி, எதிரிக்கட்சியா இல்லாம, ஒரு நல்ல எதிர்க்கட்சியா செயல்படுவோம்.
மக்களுக்கும் - அரசுக்கும் இடையிலான ஊடகமா நாங்க தான் இனி இருப்போம்.
என் மேல நம்பிக்கை வச்சு மக்கள் கொடுத்திருக்க இந்தப் பொறுப்புக்கு நான் 100% உண்மையா இருப்பேன்.
கடுமையாக உழைப்பேன்!
தி.மு.கழகத்தின் முதன்மை அணியான @dmk_youthwing-க்கு, தமிழ்நாடு முழுவதும் ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிளைகளிலும், நகர-பகுதி-பேரூர்களில் உள்ள வார்டுகளிலும் மற்றும் அனைத்து பாகங்களிலும் 5 லட்சம் நிர்வாகிகளை நியமித்து, மிகப் பெரிய கட்டமைப்பை உருவாக்கியுள்ளோம்.
சட்டமன்றத் தேர்தலில், கழக கூட்டணியின் வெற்றியை உறுதி செய்யும் வகையில், கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் ஆலோசனையின் பேரில், தலைமைக் கழக ஒப்புதலுடன், இளைஞர் அணியின் 5 லட்சம் நிர்வாகிகளைக் கொண்டு '#களத்தில்_இளைஞர்_அணி' எனும் மாபெரும் தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுக்கிறோம்.
ஒவ்வொரு பாகத்திற்கும் உட்பட்ட இளைஞர் அணி நிர்வாகிகளுடன் சேர்த்து, அந்த பாகத்தில் கழகத்தின் மீது ஆர்வமும் பற்றும் கொண்ட 10 இளைஞர்கள், பாக வாரியாக இளம் வாக்காளர்களை நேரில் சந்தித்து, கழகத் தலைவர் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிப்பார்கள். தேர்தல் நாளான 23.04.2026-க்குள் இரண்டு முறை வாக்காளர்களை சந்தித்து தேர்தல் பரப்புரையை மேற்கொள்வார்கள்.
அமைதிப் பூங்காவான தமிழ்நாட்டில் மதவாத சக்திகளுக்கு இடமில்லை என்ற உறுதியுடன் நம் மாநிலத்தின் உரிமைகளை, டெல்லிக்கு அடகு வைக்கத் துடிக்கும் அடிமைகளின் எண்ணத்தை மக்களிடம் எடுத்துரைப்போம், அரசின் ஐந்தாண்டு கால சாதனைகளை இல்லந்தோறும் கொண்டு சேர்ப்போம்! கழகத் தலைவர் தலைமையில் #திராவிடமாடல் 2.0 ஆட்சி அமைய அயராது உழைப்போம்!
#DMK4TN #VoteForDMK #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும்
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டை முன்னிட்டு, கழகத் தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin உத்தரவின் பேரில், கழக இளைஞர் அணி சார்பாக சட்டப்பேரவைத் தொகுதிதோறும் ‘கலைஞர் நூலகம்’ திறக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட, மதுராந்தகம் சட்டப்பேரவைத் தொகுதிக்கான கலைஞர் நூலகத்தை, மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான
@ksundarmla அவர்கள் திறந்துவைத்தார்.
இந்நிகழ்வில், மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் @Dmkmalik1, மாவட்ட அமைப்பாளர் @YAnbalagan, மாவட்ட துணை அமைப்பாளர்கள் மற்றும் இளைஞர் அணியினர் உள்ளிட்ட கழகத்தினர் கலந்துகொண்டனர்.
தொகுதிவாசிகள் நூலகத்தைச் சென்றடைய :
https://t.co/YrssJ5H0kg
4 நாட்களில் 8 மாவட்டங்களில் மக்கள் சந்திப்பு - அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டங்கள் - நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாக்கள், கழக நிர்வாகிகளுடனான சந்திப்புகள்!
இன்று திருப்பத்தூரில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா & கழக சார்பு அணி நிர்வாகிகளுடனான சந்திப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டோம்.
செல்லும் இடமெல்லாம் மக்கள் அளித்த வரவேற்பும் - அன்பும் - ஆதரவும், மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் மீதும், திராவிட மாடல் அரசின் திட்டங்கள் மீதும் அவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை உணர்த்தியது.
தொடர்ந்து மக்களிடம் செல்வோம்! மக்கள் நலம் பெற, மாநிலம் வளம் பெற 2026-ல் மீண்டும் கழக அரசு அமைய அயராது உழைப்போம்!
#ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும்
அனைத்துத் தரப்பினருக்குமான வளர்ச்சி, அனைத்து மாவட்டங்களுக்குமான வளர்ச்சி எனும் திராவிட மாடல் கொள்கையின் படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தின் வளர்ச்சிக்கு, தோட்டக்கலைக் கல்லூரி, ஜுஜுவாடி தொழிற்கூட வளாகம், நாலெட்ஜ் காரிடார், நகர்ப்புறப் பூங்கா திட்டம், பாதாளச் சாக்கடைத் திட்டம், விவசாயிகளுக்கு கட்டணமில்லா மின் இணைப்புகள்… என பல நவீன வளர்ச்சித்திட்டங்களை வழங்கியிருக்கிறார் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள்.
அடுத்து அமையவிருக்கும் #DravidianModel 2.0-விலும் இத்தகைய வளர்ச்சித்திட்டங்கள் தொடரும். கிருஷ்ணகிரி மென்மேலும் வளரும்.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் மகளிர் சுய உதவிக்குழுக்கள் தொடங்கப்பட்ட தருமபுரி மண்ணில், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா & கழக சார்பு அணிகளின் நிர்வாகிகளுடனான சந்திப்பு ஆகிய நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டோம்.
ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டம், நான்கு வழிச்சாலை, சர்க்கரை ஆலைகளில் மின் இணை உற்பத்தி நிலையங்கள், முதலமைச்சரின் சிறு விளையாட்டு அரங்கம், சமூகநீதி கல்லூரி மாணவியர் விடுதி… என எண்ணிடலங்கா நலத்திட்டங்களை, நம் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தருமபுரிக்கு வழங்கியிருக்கிறார்.
மேலும் பல வளர்ச்சித் திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்த, மீண்டும் #திராவிடமாடல் அரசு அமைய, அயராது உழைப்போம்!
#ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும்
கட்சி - ஆட்சி என நாள்தோறும் களத்தில் மக்களோடு மக்களாக நிற்கிறோம். 2026-ல் மீண்டும் வெல்வோம்! மக்கள் பணியைத் தொய்வின்றித் தொடர்வோம்!
#ஸ்டாலின்_தொடரட்டும்#தமிழ்நாடு_வெல்லட்டும்
தமிழ்நாட்டின் அடுத்த கட்ட வளர்ச்சியை உறுதிசெய்யும், மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் #TamilNadu2030Vision ஒவ்வொன்றும் நனவாக, மீண்டும் #திராவிடமாடல் அரசு அமைய, அயராது உழைப்போம்!
ஒன்றிய பா.ஜ.க. அரசு எத்தனை வழிகளில் இடையூறு ஏற்படுத்தினாலும், அத்தனையையும் முறியடித்து, தமிழ்நாட்டின் சாதனைப்பயணம், அடுத்து அமையவிருக்கும் திராவிட மாடல் 2.o-விலும் தொடரும்.
#ஸ்டாலின்_தொடரட்டும்! #தமிழ்நாடு_வெல்லட்டும்!
கட்சி - ஆட்சி என நம் களப்பணிகளின் மூலம் என்றும் மக்களோடு நிற்கிறோம். மக்கள் என்றும் நம் பக்கம் நிற்கிறார்கள். 2026-ல் ஒன்றாக வெல்வோம். தமிழ்நாட்டை மென்மேலும் உயர்த்துவோம்!
#ஸ்டாலின்_தொடரட்டும்! #தமிழ்நாடு_வெல்லட்டும்!
மதவெறி - பொய்கள் - அவதூறுகள் துணைகொண்டு தேர்தல் களம் காணும் ஆதிக்கவாதிகளையும், அவர்களின் அடிமைகளையும், திராவிட மாடல் அரசின் 5 ஆண்டுக்கால நலத்திட்டப் பணிகள் - அவற்றின் மூலம் பயன்பெற்ற மக்களின் துணைகொண்டு வெல்வோம்! 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வென்று, மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தலைமையில், மீண்டும் #திராவிடமாடல் ஆட்சி அமைய அயராது உழைப்போம்!
உலகத் தரத்திலான விளையாட்டு உட்கட்டமைப்புகள் - பயிற்சிகள், உதவித்தொகை, ஊக்கத்தொகை, அரசுப் பணி என கடந்த 5 ஆண்டுகளில் எண்ணற்ற பல சாம்பியன்களை உருவாக்கி, தமிழ்நாட்டை இந்திய ஒன்றியத்தின் விளையாட்டுத் தலைநகரம் எனும் நிலைக்கு உயர்த்தியிருக்கிறது, நம் திராவிட மாடல் அரசு. அடுத்து அமையவிருக்கும் #திராவிடமாடல் 2.o-விலும் சாம்பியன் மாநிலத்தின் சாதனைகள் தொடரும்!
@SportsTN_