Never seen Chennai like this in recent past. Capital is tensed!
கருத்தியல் ரீதியாக அரசியல் மேற்கொள்ளும் தலைவர்களுக்கு பாதுகாப்பு வழங்கவேண்டியது அரசின் கடமையல்லவா?
ஒரு சமூக தலைவரான ஆம்ஸ்டராங் அவர்கள் உயிருக்கு ஆபத்து என்று தெரியாமல் உளவுத்துறை இருந்ததா?
அரசியல் கட்சி தலைவர்களே அசால்ட்டாக கொலை செய்யப்படலாம் என்பது இந்த அரசு இயந்திரம் மொத்தமாக செயலிழந்துவிட்டதன் அத்தாட்சி.
வருகின்ற செய்திகள் எல்லாம் இது ஒரு முழுக்க முன்திட்டமிடப்பட்ட படுகொலை என்ற விதத்திலேயே இருக்கிறது. குற்றவாளிகள் சரண் என்று செய்திகள் வரும் நிலையில், கைது செய்தோம் என்கிறது காவல்துறை.
வழக்கம் போல வெளிப்படைத்தன்மை இல்லாத சூழல். கள்ளக்குறிச்சியிலிருந்து எந்த பாடமும் கற்றதாகத் தெரியவில்லை!
உண்மைகளை மறைப்பதால் பிரச்சனைகள் வளரவே செய்யும். வெளிப்படைத்தன்மையோடு விசாரணை நடைபெறவேண்டும்!
“பதவி விலகு ! பதவி விலகு ! @mkstalin”
என்பது இன்று அனைத்து மூலை முடுக்கிலும் கேட்கும் கோஷங்களாயிருந்தாலும்,
தலைநகரில் கேட்கும் போராட்ட கோஷங்கள் பதட்டமளிக்கும் வகையில் இருக்கின்றன. கவனமாக கையாண்டு அமைதியான சூழல் பேண வேண்டியது அரசின் கடமை.
மக்கள் மீது அக்கறையில்லா அரசாங்கம், திமுகவினருக்கு ஆட்சி அதிகாரம் தான் முக்கியம்.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரத்தில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரை பார்த்து ஆறுதல் தெரிவித்த பின் மாண்புமிகு அண்ணன் "புரட்சித் தமிழர்" @EPSTamilNadu அவர்கள்
#Resign_Stalin
கடந்த 5 வருஷமா மக்களை பார்க்காம, மக்களோட நிற்காமல், இப்போ தேர்தல் பிரச்சாரத்திற்கு மட்டும் கொடிபிடித்து வரும் திமுக MPகளைக் கண்டதும் மக்கள் கேள்வி கேட்க ஆரம்பிச்சுட்டாங்க.
This is just the Beginning! மக்களே-ஏப்ரல்19 அன்று #ஒற்றைவிரலால்_ஓங்கிஅடிப்போம்!
கடலூர் மாவட்டம், விருத்தாசலம், திட்டக்குடி, வேப்பூர் ஆகிய தாலூகாக்களில் சுமார் 60 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த சோளம் முழுமையாகக் கருகி விவசாயிகள் பெரும் நஷ்டத்திற்குள்ளாகி உள்ளனர். பயிர் காப்பீடு செய்யப்படாத நிலையில், கடன் வாங்கி சோளம் பயிரிட்ட விவசாயிகள், வாங்கிய கடனை திருப்பிக் கட்ட முடியாத நிலையில், தாங்கள் பாடுபட்டு உழைத்த உழைப்பும் வீணாகிவிட்டதே என்ற கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
விடியா திமுக அரசின் வேளாண் துறை மந்திரி, உடனடியாக வேளாண்மைத் துறை மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகளை நேரில் அனுப்பி, பாதிக்கப்பட்ட நிலங்களை கணக்கெடுப்பு நடத்தி, சோளம் பயிரிட்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வலியுறுத்துகிறேன்.
சோளம் பயிரிட்டு பாதிப்படைந்த விவசாயிகளுக்கு, ஏக்கர் ஒன்றுக்கு குறைந்தபட்சம் 20,000/- ரூபாய் நிவாரணமாக வழங்க வேண்டும் என்று விடியா திமுக அரசின் முதலமைச்சரை வலியுறுத்துகிறேன்.@AIADMKOfficial