ஒன்னு சொல்றேன்...லைப்ல Delusional Optimism-அ வளர்த்துக்கோங்க.
அதாவது...என்னால எதுவா வேணாலும் ஆக முடியும். என்ன வேணாலும் சாதிக்க முடியும். எவ்வளவு பெரிய விஷயமா இருந்தாலும் ஜெயிக்க முடியும் ன்னு கொஞ்சம் கூட Practicality இல்லாத, Reality-க்கு அப்பாற்பட்ட, பைத்தியக்காரத்தனமான Mindset.
என்னடா இது? Reality-யும் Practical-ஆவும் யோசிக்காம எப்படி ஒரு முடிவு எடுக்க முடியும்?ன்னு கேக்கலாம். ஆமா... அதுல 20% உண்மை இருக்கு, ஆனா Reality-ய மட்டும் யோசிச்சிட்டு இருந்தா, நம்ம வாழ்க்கை முழுக்க குண்டுசட்டியில குதிரை ஓட்டிக்கிட்டுதான் இருக்கணும்.
ஒரு நிமிஷம் யோசிச்சு பாருங்க...
Practical-ஆ யோசிச்சிருந்தா ஒரு மீனவனோட மகன் Scientist ஆகிருக்க முடியுமா? ஒரு பஸ் கண்டக்டர் Super Star ஆகிருக்க முடியுமா? ஒரு டீ கிளாஸ் கழுவுறவர் Prime Minister ஆகிருக்க முடியுமா? Practical-ஆ யோசிச்சா சாதாரண குடும்பத்துல பிறந்த ஆயிரக்கணக்கான Athletes, Artists, Creators, Businessmen, Politicians இன்று இந்த அளவுக்கு வந்திருக்க முடியுமா? அவங்க எல்லாரும் ஒரு கட்டத்துல Reality-ய தூக்கி போட்டுட்டு,
என்னால இது கண்டிப்பா முடியும்... நான் ஆகியே தீருவேன்னு குருட்டுத்தனமா நம்பினாங்க. அதுதான் Delusional Optimism.
இன்னும் ஆழமா யோசிச்சு பாருங்க...
இந்த உலகத்துலயே Reality-ன்னு ஒன்னு இருக்கா? கோடிக்கணக்கான விந்தணுக்களை ஜெயிச்சுதான் நம்ம பிறந்திருக்கோம். இறந்த நட்சத்திரங்களோட அணுக்கள்தான் இன்று நம்ம உடம்புல இருக்கு.
மரங்கள் மண்ணுக்கடியில ஒன்றுக்கொன்று தகவல் பரிமாறிக்குது.
நம்ம மூளையில ஓடுற Electricity-தான் கனவுகளா, நினைவுகளா, காதலா, ஆசைகளா மாறுது. இதையெல்லாம் யோசிச்சு பார்த்தா...
இந்த பிரபஞ்சமே ஒரு Miracle. இந்த வாழ்க்கையே ஒரு Impossible Story.
அப்படியிருக்கும்போது...
நீங்க மட்டும் ஏன் உங்க கனவுகளுக்கு Limit வைக்கணும்?
அதனால...
பேராசைபடுங்க.
பெருசா கனவு காணுங்க.
பொருளை அடைய துடிங்க.
சாதிக்க வெறி பிடிங்க.
Logic & Reality ஐ உடைச்சு Faith & Belief தான் உங்கள ஜெயிக்க வைக்கும்.
நீங்க ஒரு Goal-ஐ நோக்கி முழு மனசோட ஓட ஆரம்பிச்சா...
வாய்ப்புகள், மனிதர்கள், அதிர்ஷ்டம், சூழ்நிலைகள் எல்லாம் சேர்ந்து உங்களை அந்த இடத்துக்கு தள்ள ஆரம்பிச்சிடும்.
அதனால...
"என்னால இதெல்லாம் பண்ண முடியாது..."
"நமக்கு அதெல்லாம் set ஆகாது"
"இதெல்லாம் கண்டிப்பா நடக்காது..."
"அதெல்லாம் கண்டிப்பா முடியாது..."
ன்னு சொல்ற எல்லா எண்ணங்களையும் தூக்கி எறிஞ்சிடுங்க.
அதுக்கு பதிலா...
"என்னால இங்க எதுவா வேணாலும் ஆக முடியும்." ன்னு ஒரு பைத்தியக்காரத்தனமான Confidence-ஓட ஓட ஆரம்பிங்க.
ஏன்னா...
வரலாறு படைத்தவங்க எல்லாரும் முதலில் மற்றவர்களுக்கு பைத்தியக்காரங்களாதான் தெரிஞ்சாங்க.
Dream like a madman. Work like a machine. Believe like it's already yours.
Delusional Optimism வளர்த்துக்கோங்க வெற்றி நிச்சயம். 💯
Try Karo 😉❤️
- From கரு பழனியப்பன் Facebook
"வெள்ளை அறிக்கைன்னு பேரு வச்சிருக்கீங்க... ஆனா அதுல வெள்ளையா உண்மை எங்கே இருக்கு?"
"ஒரு இடத்துல 5 வருட கணக்கு, இன்னொரு இடத்துல 4 வருட கணக்கு... இப்படித்தான் பொருளாதார ஆய்வு பண்ணுவாங்களா?"
"நான் நிதி அமைச்சராக இருந்த போது வருவாய் பற்றாக்குறையை குறைத்தோம், கடன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தோம். அது தானாக நடந்தது இல்ல... திட்டமிடலாலும் சரியான முடிவுகளாலும் நடந்தது."
"வெள்ளை அறிக்கையில் சொல்றதெல்லாம் சரின்னு நினைச்சா, ஒரு பொருளாதார நிபுணரை அனுப்புங்க... விவாதிக்க நான் தயாரா இருக்கேன்!"
"அதிகாரிகள் அரசியல் பண்ணக் கூடாது. நல்ல நிதி நிர்வாகம் இருந்தா தான் பொருளாதாரம் வளரும்."
— பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்
தந்தை தனது பூர்வீக கூட்டுக் குடும்பச் சொத்துகளை மகளுக்கு செட்டில்மென்ட் பத்திரமாக எழுதி கொடுத்தால், மகன் அதை பல ஆண்டுகள் கழித்து எதிர்த்து பாகப்பிரிவு கோர முடியுமா? மேலும், அந்தச் சொத்து பூர்வீகச் சொத்தா அல்லது தந்தையின் தனிச்சொத்தா?
இந்த தீர்ப்பு, பூர்வீக கூட்டுக் குடும்பச் சொத்தின் தன்மை, தந்தையின் செட்டில்மென்ட் அதிகார வரம்பு, காலவரம்புச் சட்டத்தின் பயன்பாடு, “விலக்கப்பட்ட கூட்டுரிமையாளர்” என்ற கொள்கை, மேலும் நீண்டகால மௌனத்தால் பங்குரிமை இழக்கப்படுமா என்பதைக் குறித்து மிக முக்கியமான சட்டக் கொள்கைகளை விளக்குகிறது.
இவ்வழக்கில், மனுதாரரும் முதல் பிரதிவாதியும் சகோதரன்–சகோதரி ஆவர். இவர்களின் தந்தை குள்ளன் @ சச்சிதானந்தம் என்பவருக்கு, 05.03.1977 அன்று நடைபெற்ற குடும்பப் பங்கீட்டின் மூலம் சொத்துகள் கிடைத்தன. அந்தப் பங்கீட்டு ஆவணத்தில், சொத்துகள் முதலில் பொன்னுசாமியின் பூர்வீகச் சொத்துகள் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
மனுதாரர் தரப்பு, இச்சொத்துகள் பூர்வீக கூட்டுக் குடும்பச் சொத்துகள்; எனவே தந்தை தனிப்பட்ட முறையில் முழுச் சொத்தையும் மகளுக்கு வழங்க முடியாது என்று வாதிட்டது. ஆனால், பிரதிவாதி தரப்பு, 1977 பங்கீட்டுக்குப் பிறகு தந்தைக்கு கிடைத்த சொத்துகள் அவரது தனிச்சொத்தாக மாறிவிட்டன; அதனால் அவர் மகளுக்கு செட்டில்மென்ட் செய்தது செல்லுபடியாகும் என்று கூறியது.
மேலும், 12.04.2002 அன்று தந்தை தனது மகளான முதல் பிரதிவாதிக்குச் செட்டில்மென்ட் பத்திரம் எழுதி கொடுத்தார். பின்னர், அந்த மகள் பலருக்கு விற்பனைப் பத்திரங்களும் செய்தார். இதனைத் தொடர்ந்து, மகன் பாகப்பிரிவு மற்றும் அந்த ஆவணங்கள் செல்லாது என அறிவிக்க கோரி வழக்கு தொடர்ந்தார்.
விசாரணை நீதிமன்றம், சொத்துகள் பூர்வீகச் சொத்துகள் என்பதால் மகனுக்கும் பாதிப் பங்கு உண்டு என்று தீர்ப்பளித்து, செட்டில்மென்ட் மற்றும் விற்பனைப் பத்திரங்களை செல்லாது என்று அறிவித்தது. ஆனால், அதற்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட்டது.
உயர்நீதிமன்றம் முதலில் சொத்தின் தன்மையை ஆய்வு செய்தது. 1977 பங்கீட்டு ஆவணத்தில், “பூர்வீகமாக வந்த சொத்து” என்று தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்ததை நீதிமன்றம் முக்கியமாக எடுத்துக் கொண்டது.
நீதிமன்றம் கூறியது: தந்தையின் தந்தை பொன்னுசாமி, இந்து வாரிசுச் சட்டம் அமலுக்கு வருவதற்கு முன்பே இறந்திருந்ததால், அந்தச் சொத்துகள் முதலில் கூட்டுரிமைச் சொத்தாகவே மகன்களுக்கு சென்றன. பின்னர் நடந்த பங்கீட்டினால் மட்டும் அந்தச் சொத்து தனிச்சொத்தாக மாறாது என்றும் கூறப்பட்டது.
இதற்காக, Shyam Narayan Prasad Vs Krishna Prasad, Arshnoor Singh Vs Harpal Kaur, Thamma Venkata Subbamma Vs Thamma Rattamma போன்ற உச்சநீதிமன்ற தீர்ப்புகள் மேற்கோள் காட்டப்பட்டன.
நீதிமன்றம் மேலும், “பூர்வீகச் சொத்தில் பிறந்தவுடனேயே மகனுக்கு உரிமை உருவாகிறது; பங்கீட்டுக்குப் பிறகும் அந்தப் பங்கு அவரது குழந்தைகளுக்குப் பூர்வீகச் சொத்தாகவே தொடரும்” என்று விளக்கியது.
இதனால், தந்தை குள்ளன் தனிப்பட்ட முறையில் முழுச் சொத்தையும் மகளுக்கு செட்டில்மென்ட் செய்ய முடியாது; அந்தச் செட்டில்மென்ட், அவரது பங்கிற்கு மட்டுமே செல்லுபடியாக இருக்க முடியும் என்று நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.
ஆனால், வழக்கின் முக்கிய திருப்பமாக காலவரம்பு கேள்வி அமைந்தது. பிரதிவாதிகள், மனுதாரருக்கு 2002-லேயே செட்டில்மென்ட் பற்றிய அறிவு இருந்தது; இருந்தும் 16 ஆண்டுகள் கழித்து தான் வழக்கு தொடரப்பட்டுள்ளது என்று வாதிட்டனர்.
இதில், நீதிமன்றம் காலவரம்புச் சட்டத்தின் 109 மற்றும் 110 ஆகிய பிரிவுகளை விரிவாக ஆய்வு செய்தது.
109-வது பிரிவு படி, தந்தை பூர்வீகச் சொத்தை மாற்றியமைத்ததை எதிர்த்து மகன் வழக்கு தொடர வேண்டுமெனில், சொத்தைப் பெற்றவர் உடைமையை எடுத்த நாளிலிருந்து 12 ஆண்டுகளுக்குள் வழக்கு தொடர வேண்டும் என்று கூறப்பட்டது.
110-வது பிரிவு படி, கூட்டுக் குடும்பச் சொத்தில் இருந்து ஒருவர் விலக்கப்பட்டிருப்பது தெரிந்த நாளிலிருந்து 12 ஆண்டுகளுக்குள் பங்குரிமை கோர வேண்டும் என்றும் நீதிமன்றம் விளக்கியது.
இந்த வழக்கில், மனுதாரருக்கு 2002-2003 காலத்திலேயே செட்டில்மென்ட் பற்றிய முழு அறிவு இருந்தது என்று ஆதாரங்கள் மூலம் நிரூபிக்கப்பட்டது. அதனால், அவர் “விலக்கப்பட்ட கூட்டுரிமையாளர்” ஆகிவிட்டார் என்று நீதிமன்றம் கூறியது.
மேலும், “2014-ல் தான் பட்டா பெயர் மாற்றம் செய்யப்பட்டது; அதனால் காலவரம்பு அப்போதுதான் தொடங்கும்” என்ற மனுதாரரின் வாதத்தையும் நீதிமன்றம் நிராகரித்தது. செட்டில்மென்ட் பதிவு செய்யப்பட்ட தருணத்திலேயே விலக்கு ஆரம்பமாகிவிடும்; பின்னர் பட்டா மாற்றம் நடந்தது காலவரம்பை நீட்டிக்காது என்று கூறப்பட்டது.
1/2
- தொடர்ச்சி 👇🏻
நாம் பகிர்வது தகவலுக்காக மட்டுமே.
Content: budding Lawers
EVM மோசடியைத் தடுக்க நண்பரின் இரண்டாம் யோசனை சிறப்பு.
“அடுத்த தேர்தலில் EVM - ல் தான் தேர்தல் நடக்கும். தேர்தலை புறக்கணிப்பதற்கு பதில் தன்னிச்சையாக ஒவ்வொரு தொகுதியிலும் குறைந்தது 100, 150 பேராவது 10,000 ரூபாய் கட்டி வேட்பு மனுதாக்கல் செய்ய வேண்டும்.
+
ரூட் மாஃபியா செயல்ப்படும் Strategy ;
திமுக தலைவர் @mkstalin அவர்களுக்கு, தவெக மாதிரி கட்சிகள் அரசியலுக்கு வந்ததும் இப்ப அது corporate strategy warஆ மாறிடுச்சு .. ஒரு உதாரணம் அவங்க அடுத்த Narrative plan.
கடந்த தேர்தலை Influencers marketing strategy யூஸ் பண்ணாங்க .. அதுக்கு அவங்க கையிலெடுத்தது முதற்கட்டமாக பெரிய Influencerகளை தொடர்ந்து ஆதரித்து விஜயை புகழ்ந்து மாற்றம் வேணும்னு வீடியோ போட வச்சது, அதை சின்ன influencerகள் கையிலெடுத்தாங்க , காரணம் எது Trendingல இருக்கோ அதுக்கு தான் அதிகமான ரீச் ..இதானல அவங்களுக்கு ரீச் அதிகமாச்சு followers algorithm மூலமா கிடைச்சது .. அது மேலும் விரிவடைய ஆரம்பிச்சு organic narrativeவா பதிய வைக்கப்பட்டது .. இதன் தொடர்ச்சி தான் mob mentalityல ஒரு shift over நடக்க ஆரம்பிச்சது . இதுக்கு அவங்க எடுத்துக்கிட்ட டைம் ரெண்டு வருஷம் அந்த பெரிய waveக்கான வேலையை தொடங்கி வச்சுட்டு அது அணையாம பாத்துக்கறது மட்டும் தான் அவங்க வேலை .. அதுக்கு தான் voice of common , tamilnews24x7 , சில மூத்த பத்திரிக்கையாளர்கள் அமர்த்தப்பட்டாங்க .. அவங்களுக்கான பணி அது மட்டும் தான் .. அதேபோல் விஜய் வெளிய வராமல் அவருக்கான Demand genarate பண்ணிட்டே இருந்தாங்க .. தொடர்ச்சியாக தான் விஜய்க்காக மட்டுமே உங்கள் வாக்கு .. மாற்றம் தான் அவர் முகம்னு மக்கள் மனசுல பதிய வச்சாங்க ( இடையில் வந்த எந்த தேர்தலிலும் அவர் நிற்கலை) . இந்த அலை தான் ஒரு சாரார் shift ஆனதற்கு அடிப்படை .
இப்ப தோல்வி அடைந்ததும் Instagramனால தான் அதுவும் வீடியோஸ்னால தான் நடந்ததுனு சொல்றது தவறு .. இது முழுக்க planned narrative building strategy மட்டும் தான் .
நிற்க இப்ப அடுத்த கட்ட narrative என்ன பண்ண போறாங்க ன்னு பாக்கலாம் ... இப்ப #routemafia அடுத்த குறி பாராளுமன்ற தேர்தல் .. அதுக்கு இன்னும் மூன்று வருஷம் இருக்கு அவங்களுக்கு தேவையான நேரம் இருக்கு (time , team, plan) . அதை எப்படி பண்ண போறாங்ன்னு பார்க்கலாம் .
எப்படியும் அடுத்த மூன்று வருட ஆட்சியில பல நிர்வாக கோளாறுகளும் அவப்பெயரும் வரும் .. அதை இதே சோஷியல் மீடியாவும் பலரும் கேள்வி கேட்க தொடங்குவார்கள் .. அதை off பண்ண பதில் வீடியோ போட மாட்டார்கள் அதுக்கு பதிலாக parallel narrative building strategy தான் கையிலெடுத்து இருக்காங்க . அது எப்படினா திரும்பவும் இங்கிருக்கும் influencer வச்சு செஞ்சா expose ஆயிடுவாங்க .. அடுத்த கட்டம் தான் national level narrative building . உதாரணமா ஒரு பெரிய influencer புடிச்சு 1 லட்சம் கொடுத்து வீடியோ போட்டு புகழ்ந்து பேச வைக்கிறதுக்கும் , அதே காசுல 5k, 10k க்குள்ள இருக்கற மற்ற மாநில, மற்ற நாடுகள்ல இருக்கற சின்ன ஐடிகள் 20 பேரை வைத்து இருபது வீடியோ போட முடியும் .. அவங்களுக்கு காசும் வருது REACH ம் கிடைக்கும் .. இப்ப இந்த parallel narrative எப்படி வொர்க் ஆகும்னா .. இங்க கேள்வி கேட்டு போடப்படும் வீடியோக்களுக்கு VOC மற்ற ஊதுகுழல் மீடியாக்கள் " இந்தியாவே தளபதி ஆட்சியை புகழ்கிறது" னு narrative set பண்ணப்பட்டு இருக்கும் .. இதை தற்குறிகள் பதிலாக அனைவரும் தூக்கிட்டு கொண்டு போய் சேர்ப்பாங்க .. நாம அப்ப கொள்கைகள் சொல்லியும் பிஜேபியின் அட்டூழியங்கள் சொல்லியும் ஓட்டு கேட்கும் போது அதை கேட்கும் மனநிலையில் வாக்காளர் இருக்க மாட்டாங்க ..
இது தான் corporate narrative building strategy #Routemafia செய்யும் விஷயம் .
இது தொடங்குனதுக்கான ஆதாரம் இணைச்சிருக்கேன் . அதுல மற்ற மாநிலங்கள் நாடுகளில் இருக்கும் சின்ன ஐடிகள் "India's most handsome CM "னு video போட்டு brand building ஸ்டார்ட் பண்ணிட்டாங்க . அதுல கடைசியில் வர விஜய் வீடியோ எல்லாமே ஒரே வீடியோ தான் . இதை அப்படியே இரண்டு வருடத்தில் TVK கட்சியை நாடாளுமன்ற தேர்தலுக்கு "இந்தியாவே புகழும்" முதல்வர்னு செட் பண்ணியிருப்பாங்க .
இதுக்கு ஒரு வழி வெறும் strategy building இல்ல counter narrative உருவாக்கனும் . அதுவும், ஆமா TVK எதிர்த்து தான் இனி அரசியல்னு ஒத்துக்கிட்டு இறங்கி செய்யனும் . கட்சியில் புது மாற்றம் வேணும் .. Digital space ல ஸ்ட்ராங் பண்ணனும் ..
ஒரு எளிய ஆதரவாளானான என்னுடைய கருத்து தலைவரே
நன்றிகளுடன்.
@DMKITwing@Udhaystalin@KanimozhiDMK@TRBRajaa@arivalayam
தமிழ்நாட்டில் திமுகவிற்கு எப்போதுமே 30 சதவீதத்திற்கும் கீழ் தான் ஆதரவு. இத்தனை வெற்றிகளை அக்கட்சி பெற்றதே அதிசயம் தான். திமுக முன்மொழியும் அரசியல் சிக்கலானது. திமுகவை ஆதரிப்பது எளிதல்ல. இடதுசாரியாகவோ, தமிழ்த்தேசியவாதியாகவோ அம்பேத்கரியவாதியாகவோ இருந்துவிடலாம். அக்கொள்கைகளுக்கெல்லாம் எல்லோருக்கும் புரிய வைக்கும் எளிமை இருக்கிறது. ஆனால் திமுகவின் கொள்கை அப்படியல்ல.
இந்தியாவிலேயே பார்ப்பனர் அல்லாதோர் அரசியல் நடத்தி வன்முறையைக் கையில் எடுக்காமல், அறவழியில், அறிவு வழியில். தேர்தலில் தொடர் வெற்றி கண்ட கட்சி திமுக மட்டும் தான். இந்தக்கொள்கையை எல்லோரும் எதிர்ப்பார்கள். ஏனெனில் இது எல்லாவற்றையும் மறுக்கிற கட்சி. புரட்டிப் போடுகிற கட்சி. அதை மிகவும் எளிதாக வெறுப்பரசியல் என்று சொல்லிவிடலாம். அது பயன்படுத்தும் 'நடைமுறைவாதத்தை' சமரசம் என்று எள்ளி நகையாடலாம். அதன் வெளிப்பாட்டுத் தன்மையை முரட்டுத்தனம் என்றோ, பண்ணையார்த்தனம் என்றோ சொல்லிவிடலாம். அதன் தன்னம்பிக்கையை, ஆணவம் என்று எல்லோரும் தவறாகக் குறிப்பிடுவர்.
திமுகவிற்கு நெருக்கடி எங்கிருந்தும் வரலாம். பார்ப்பனர் முதல் ஒடுக்கப்பட்டோர் வரை எல்லோருக்கும் திமுகவின் மீது விமர்சனம் இருக்கும். உயர்ஜாதியினர், திமுகவை தமது கட்சி என்று பார்ப்பதில்லை. சூத்திரர்கள் இதை தலித்துகளுக்கு ஆதரவான கட்சி என்பார்கள். தலித்துகள் இதை சூத்திரர்கள் கட்சி என்பார்கள். இந்துக்கள் திமுகவை சிறுபான்மையினர் கட்சி என்பார்கள். கடவுள் நம்பிக்கை கொண்டோர் நிந்திப்பார்கள். பெண்கள் இதை முரட்டு ஆண்களுக்கான கட்சி என்பார்கள். திமுகவை யாரும் வெளிப்படையாகச் சொந்தம் கொண்டாடுவதில்லை. ஒரு கள்ளக்காதலைப் போல இந்த உறவைப் பாவிப்பார்கள். இத்தனைக்கும் இது தடை செய்யப்பட்ட இயக்கம் அல்ல.
அதே போல திமுகவை ஆதரிப்போருக்குக் குழப்பம் வரலாம், தடுமாற்றம் வரலாம். முன் மாதிரிகள், உதாரணங்கள் இல்லாத அரசியலை இந்த இயக்கம் கடைபிடிக்கிறது. மாநில உரிமை பேசும் (ஆனால் பிரிவினை பேசாது), மொழி உரிமை பேசும் (ஆனால் மொழி வெறி இல்லை), பெண்ணுரிமை பேசும் (ஆனால் பெண்கள் ஆதரவு இருக்காது), ஒரு திட்டத்தை நடைமுறைப்படுத்தினால் அதை வெளியே சொல்ல முடியாது, ஏனெனில் யாராவது ஒருவர் நீதிமன்றத்திற்குப் போய் அதைத் தடுத்துவிடுவர்கள். நீதிமன்றம், ஊடகம், அதிகாரிகள், அரசியல் கட்சிகள், சிவில் சமூகம், கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள், படைப்பாளிகள் என எதிரிகளை எங்கும் கொண்டிருக்கும் கட்சி இது.
இந்தத்தோல்வி புதிதல்ல. இனியும் திமுக வெகுண்டெழும். அதற்கான தேவை இன்னும் இருக்கிறது.
திமுக தோற்றதற்கு வெளியே சொல்லப்படும் காரணங்கள் நிறைய இருக்கலாம். ஊழல், போதை, பெண் பாதுகாப்பு என்பன யாவும் ஆதாரமற்றவை என்று ஏற்கனவே பலர் நிரூபித்துவிட்டனர். இவை எல்லாம் நிர்வாகக் காரணங்கள். அவற்றை வெளியில் சொல்லிவிடலாம்.
வெளியில் சொல்லப்படாதது அரசியல் காரணங்கள் தான்.
கடந்த ஆட்சியில் நாம் பயன்படுத்திய திராவிட மாடல் என்ற சொல் அனைத்து எதிரிகளையும் ஒன்றிணைத்துவிட்டது. தமிழ்நாடு தவிர இந்த வார்த்தை இந்த அர்த்தத்தில் எங்கும் புழக்கத்தில் இல்லை. ஒரு எல்லை மாநிலம் இப்படியான ஒரு உறுதியான கொள்கையுடன் வளர்ச்சி பெறுவது இந்தி, இந்து, இந்தியா என்று பேசுவோரைப் பயமுறுத்திவிட்டது.
பெண்களுக்குக் கொடுக்கப்பட்ட சலுகைகள் அனைவரையும் சங்கடப்படுத்திவிட்டது. குடும்ப அமைப்பே கேள்விக்குள்ளாகும் என்ற கிலி (paranoia) ஆண்களையும் ஆணாதிக்கத்தை உள்வாங்கிய பெண்களையும் உலுக்கிவிட்டது. பிற மாநிலங்களிலும் இத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டால் இந்தியக் குடும்பங்கள் என்னாகும்?
கல்விக்குக் கொடுக்கப்பட்ட கூடுதல் முக்கியத்துவம் படிப்பில் அக்கறை இல்லாதோருக்கும், முறையான கல்வியில் தோல்வி அடைந்தோருக்கும், படிப்பில் வெற்றி பெற்ற உயர்ஜாதியினருக்கும் சங்கடத்தைக் கொடுத்துவிட்டது. காலை உணவுத்திட்டம், எல்லோரையும் படிக்கவைத்துவிடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியது.
தமிழ்நாடு அடைந்திருக்கும் மிதமிஞ்சிய வளர்ச்சி எல்லோருக்கும் அச்சத்தைக் கொடுத்துவிட்டது. பத்து வருடங்களுக்கு முன்பு வரை தமிழர்கள் தான் வெளிமாநிலங்களுக்கு வேலைக்குப் போனார்கள். இப்போது வடமாநிலத்தவர் இங்கு பணிபுரிகின்றனர். கல்வியில், மருத்துவத்தில், தொழிலில், வேலைவாய்ப்பில், பொதுக்கட்டமைப்பில் நாம் அடைந்திருக்கும் பிரமாண்டமான வளர்ச்சி திராவிட மாடல் அரசியல் இந்தியா முழுக்கப் பரவிவிடுமோ என்ற பயமும் எல்லோரையும் தொற்றிக்கொண்டது. (1/2)
முழுக்க முழுக்க பக்கவா பிளான் போட்டு பொய்யையும்,புரட்டையும் பரப்பி,வெற்று கவர்ச்சித் திட்டங்களை அறிவித்தும் துணை நடிகர்களைக் கொண்டு...
Tvk itwing சூழ்ச்சிகளை செய்துதான் இந்தத் தேர்தலில் வெற்றிப் பெற்றிருக்கிறது என்பது பல தகவல்கள் வெளி வந்துக் கொண்டிருக்கு.
நடிகர் விஜய் அவர்கள் ஒரு படத்தில் கூறுவார் நான் கார்ப்ரேட் கிரிமினல் என்று அது உண்மை தான் போல...
😂😂😂😂😂
இனி திருப்பூரில் என்ன நடக்கப் போகுதோ தெரியல ஹிந்திக்காரன் ஹிந்திக்காரன்னு கம்பெனி ஓனர் எல்லாருமே சொல்லி அவர்களை தலை மேல தூக்கி வச்சு ஆடினதுக்கு இன்னைக்கு திருப்பூரில் என்ன பிரச்சனை நடக்க போகுதுன்னு தெரியல
எதையுமே பேசாம கடந்து போறதாலதான் பொய்கள் சிம்மாசனத்தில் உட்காருது.
கஜானா காலி என்று இன்ஸ்டா முதல்வர் சொல்வதை பார்த்துதான் நான் இதெல்லாம் தேடி பார்த்தேன்.. நான் தரவுகளை தேடி படிச்சு, புரிஞ்சதை இங்க போஸ்ட் பண்றேன். “கஜானா காலி”ன்னு ஒரே வரியில கதைய முடிச்சுடுறவர்களுக்காக இல்ல… நம்ம மக்கள் முழு படத்தையும் பார்க்கணும்னு தான்.
தொடருங்க…
2021-ல் அதிமுக ஆட்சி முடிவடைந்தபோது தமிழகத்தின் பொருளாதார நிலை எப்படி இருந்தது?
அந்த நேரத்தில், தமிழ்நாட்டின் GSDP (Gross State Domestic Product) சுமார் ₹19–20 லட்சம் கோடி. மாநிலத்தின் மொத்த நிலுவைக் கடன் சுமார் ₹4.85 லட்சம் கோடி. இதை வைத்து ஒரு விஷயம் புரிஞ்சிக்கணும் — கடன் இருந்தது உண்மை, ஆனா அதே நேரத்தில் மாநிலத்துக்கு பெரிய வருமான அடித்தளமும் இருந்தது. அதனால்தான் அந்த பொருளாதார சூழலை அடிப்படையா வைத்து தேர்தல் அறிக்கைகள் வடிவமைக்கப்பட்டன.
அதன் பின்னணியில்தான் திமுக 2021 தேர்தல் அறிக்கையில் பெண்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயணம், குடும்ப அட்டைதாரர்களுக்கு ₹4,000 கோவிட் நிவாரணம் மாதிரி உடனடி நலத்திட்டங்களை அறிவிச்சது. ஆட்சியேற்ற உடனேயே அந்த கோப்புகளில் கையெழுத்து போட்டது — இது வெறும் அரசியல் ஸ்டண்ட் இல்ல, “வருமானம் + செலவு முன்னுரிமை” அடிப்படையிலான நிர்வாக முடிவு.
இப்போ 2026-27 வரைக்கும் வந்துட்டோம்னா, இடைக்கால பட்ஜெட்டுப்படி தமிழகத்தின் மொத்த நிலுவைக் கடன் ₹10.71 லட்சம் கோடி.
இந்த எண்ணிக்கையை மட்டும் பிடிச்சுக்கிட்டு “அய்யய்யோ கடன்!”ன்னு கத்துறது சுலபம். ஆனா பொருளாதார ரீதியில் ஆழமா பார்த்தா தான் உண்மை தெரியும்.
ஏன்னா இதில்:
* முந்தைய கடன்களின் வட்டி சுமை
* பழைய கடன் திருப்பிச் செலுத்துதல்
* சென்னை மெட்ரோ போன்ற பெரிய உள்கட்டமைப்பு திட்டங்கள்
* மகளிர் உரிமைத்தொகை
* கல்வி
* சுகாதாரம்
* சமூக நலத்திட்டங்கள்
இவையெல்லாமே அடங்கும்.
அதுவும் பல முக்கிய திட்டங்கள் ஒன்றிய அரசின் முழு நிதி ஆதரவில்லாமலேயே மாநில வளங்களைக் கொண்டு முன்னேற்றப்பட்டன.
இங்கதான் முக்கியமான பொருளாதார அளவுகோல் வருது:
"Debt-to-GSDP Ratio = (மொத்த கடன் ÷ GSDP) × 100"
எளிமையா சொன்னா — “மாநிலத்தின் பொருளாதார சக்தியுடன் ஒப்பிடும்போது கடன் எவ்வளவு?”
உதாரணத்துக்கு:
தமிழ்நாடு கடன் = ₹10 லட்சம் கோடி
தமிழ்நாடு GSDP = ₹40 லட்சம் கோடி
அப்படின்னா ratio = 25%
அதாவது, மாநிலம் உருவாக்கும் பொருளாதார அளவோட ஒப்பிடும்போது கடன் manageable ஆ இருக்கா இல்லையா என்பதுதான் முக்கியம்; வெறும் கடன் தொகை மட்டும் இல்ல.
இன்னொரு முக்கியமான விஷயம்…
2025-26-க்கான தமிழக GSDP ₹35.67 லட்சம் கோடி அளவுக்கு போகும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
அதாவது 2021-இல் இருந்த ₹19 லட்சம் கோடி அளவிலிருந்து கிட்டத்தட்ட இரட்டிப்பு பொருளாதார வளர்ச்சி.
இதன் அர்த்தம் என்ன?
மாநில பொருளாதாரம் விரிவடைஞ்சிருக்கு. வருமான அடித்தளம் பெருசாயிருக்கு. அதனால் எதிர்காலத்தில் அதிக நலத்திட்டங்களையும் பொருளாதார ரீதியாக தாங்கும் திறன் உருவாகுது.
அதனால்தான் நலத்திட்டங்களை வெறும் “ஃப்ரீ”ன்னு dismiss பண்ணாம,"வருமான வளர்ச்சி + கடன் விகிதம் + முதலீட்டு தரம்" இந்த மூன்றையும் சேர்த்து பார்க்கணும்.
தரவுகளை தேடி படிச்சி புரிஞ்சிக்க பாருங்க.. இல்லைனா வழக்கம் போல இருக்கவே இருக்கு.. "கஜானா காலி ப்ரோ..!"