இந்தியாவில் உள்ள வணிக நிறுவன வகைகள் (Proprietorship, Partnership, LLP & Pvt Ltd) என்ன? யாருக்கு எது ஏற்றது.. அதன் சாதகம்/பாதகம் ?
நீங்கள் ஒரு தொழில் தொடங்கப் போகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அந்தத் தொழிலை உங்கள் பெயரில் நடத்தலாமா, நண்பருடன் சேர்ந்து நடத்தலாமா, அல்லது ஒரு நிறுவனமாகப் பதிவு செய்து நடத்தலாமா என்பதுதான் இங்கு முக்கியம்.
இதற்காக நான்கு வகைகள் உள்ளன.
1. Proprietorship — தனிநபர் நிறுவனம்
2. Partnership — கூட்டாண்மை நிறுவனம்
3. LLP — வரையறுக்கப்பட்ட பொறுப்புள்ள கூட்டாண்மை
4. Private Limited Company — தனியார் வரையறுக்கப்பட்ட நிறுவனம்
ஒவ்வொன்றையும் எளிமையாகப் பார்ப்போம்.
1. Proprietorship — தனிநபர் நிறுவனம்
நீங்கள் மட்டுமே முதலாளி; லாபமும் உங்களுக்கே, நஷ்டமும் உங்களுக்கே.
உதாரணமாக, நீங்கள் ஒரு மொத்த வியாபாரம் தொடங்குகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்.
நீங்கள் ₹10 லட்சம் முதலீடு செய்கிறீர்கள்.
வியாபாரத்தில் லாபம் வந்தால் அந்த லாபம் உங்களுக்கே. நஷ்டம் வந்தாலும் அதை நீங்கள்தான் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
இதன் நன்மைகள்:
* தொழில் தொடங்குவது எளிது.
* செலவு குறைவு.
* யாரிடமும் ஆலோசனை கேட்காமல் நீங்களே முடிவெடுக்கலாம்.
* லாபத்தை மற்றவர்களுடன் பகிர வேண்டியதில்லை.
* தொழிலை நிர்வகிப்பது எளிது.
இதில் உள்ள முக்கிய ஆபத்து:
உங்கள் தொழிலுக்கு ₹20 லட்சம் கடன் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு அந்தக் கடனைத் திருப்பிச் செலுத்த முடியவில்லை என்றால், சட்டத்திற்கு உட்பட்டு உங்கள் தனிப்பட்ட சொத்துகளிலிருந்தும் கடனைச் செலுத்த வேண்டிய நிலை ஏற்படலாம்.
அதாவது, உங்கள் வீடு, நிலம் அல்லது சேமிப்புப் பணம் பாதிக்கப்படலாம்.
யாருக்கு ஏற்றது?
சிறிய அளவில் தொழில் செய்பவர்களுக்கும், தனியாக வியாபாரம் நடத்த விரும்புபவர்களுக்கும் இது ஏற்றதாக இருக்கலாம்.
2. Partnership — (கூட்டு நிறுவனம்)
இரண்டு பேர் அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் சேர்ந்து தொழில் நடத்துவது.
உதாரணமாக, நீங்களும் உங்கள் நண்பரும் சேர்ந்து ஒரு மொத்த வியாபாரம் தொடங்குகிறீர்கள்.
நீங்கள் ₹5 லட்சமும், உங்கள் நண்பர் ₹5 லட்சமும் முதலீடு செய்கிறீர்கள்.
மொத்த முதலீடு ₹10 லட்சம்.
வியாபாரத்தில் ₹4 லட்சம் லாபம் வந்தால், நீங்கள் ஒப்புக்கொண்ட ஒப்பந்தத்தின்படி லாபத்தைப் பிரித்துக்கொள்ளலாம்.
50:50 என்ற ஒப்பந்தம் இருந்தால், தலா ₹2 லட்சம் கிடைக்கும்.
இதன் நன்மைகள்:
* இருவரும் சேர்ந்து முதலீடு செய்யலாம்.
* தொழிலின் பொறுப்புகளைப் பிரித்துக்கொள்ளலாம்.
* ஒருவரிடம் பணம் இருந்தும், மற்றவரிடம் அனுபவம் இருந்தும் இணைந்து தொழில் நடத்தலாம்.
* தனியாகத் தொழில் நடத்துவதைவிட அதிக முதலீட்டுடன் செயல்படலாம்.
இதில் உள்ள முக்கிய ஆபத்து:
சாதாரண Partnership-ல், தொழிலின் கடன்களுக்கு கூட்டாளிகளின் தனிப்பட்ட சொத்துகளும் பாதிக்கப்படலாம்.
மேலும், உங்கள் கூட்டாளர் தவறான வியாபார முடிவுகளை எடுத்தால், அதனால் உங்களுக்கும் நஷ்டம் ஏற்படலாம்.
யாருக்கு ஏற்றது?
நண்பர்கள், உறவினர்கள் அல்லது நம்பிக்கையான நபர்கள் சேர்ந்து தொழில் நடத்த விரும்பினால் இது பொருத்தமாக இருக்கலாம்.
ஆனால் தொழில் தொடங்குவதற்கு முன் யார் எவ்வளவு முதலீடு செய்கிறார்கள், லாபத்தை எப்படிப் பிரித்துக்கொள்வது, ஒருவர் விலகினால் என்ன செய்வது என்பவற்றை எழுத்துப்பூர்வமாக ஒப்பந்தம் செய்வது அவசியம்.
3. LLP — Limited Liability Partnership
இரண்டு பேர் சேர்ந்து தொழில் நடத்தலாம்; அதே நேரத்தில் தனிப்பட்ட சொத்துகளுக்குப் பொதுவாகச் சட்டப் பாதுகாப்பும் கிடைக்கும்.
இதை எளிமையாகப் புரிந்துகொள்வோம்.
நீங்களும் உங்கள் நண்பரும் சேர்ந்து ₹20 லட்சம் முதலீட்டில் ஒரு வியாபாரம் தொடங்குகிறீர்கள்.
இதனை சாதாரண Partnership ஆக நடத்துவதற்குப் பதிலாக LLP ஆகப் பதிவு செய்கிறீர்கள்.
இப்போது LLP என்பது உங்களிடமிருந்து தனியான சட்டப்பூர்வ நிறுவனமாக இருக்கும்.
தொழிலில் நஷ்டம் ஏற்பட்டால், பொதுவாக நிறுவனத்தின் சொத்துகளே அதன் கடன்களுக்குப் பொறுப்பாக இருக்கும்.
உங்கள் தனிப்பட்ட சொத்துகளுக்குப் பாதுகாப்பு கிடைக்கலாம்.
ஆனால் நீங்கள் தனிப்பட்ட உத்தரவாதம் கொடுத்திருந்தாலோ, மோசடி செய்திருந்தாலோ அல்லது சட்டப்படி தனிப்பட்ட பொறுப்பு ஏற்பட்டாலோ உங்கள் சொத்துகளும் பாதிக்கப்படலாம்.
இதன் நன்மைகள்:
* இரண்டு பேர் அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் சேர்ந்து தொழில் நடத்தலாம்.
* சாதாரண Partnership-ஐ விட தனிப்பட்ட சொத்துகளுக்குப் பொதுவாக அதிகப் பாதுகாப்பு கிடைக்கும்.
* நிறுவனத்தின் பெயரில் தொழில் நடத்தலாம்.
* ஒரு கூட்டாளர் விலகினாலும் LLP தொடர்ந்து இயங்க முடியும்.
* லாபப் பகிர்வை ஒப்பந்தத்தின் மூலம் தீர்மானிக்கலாம்.
இதில் உள்ள குறைபாடுகள்:
* நிறுவனத்தை முறையாகப் பதிவு செய்ய வேண்டும்.
* வருடாந்திர கணக்குகள் மற்றும் சட்ட நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
* அதற்கான கணக்காளர் மற்றும் பிற தொழில்முறைச் செலவுகள் ஏற்படலாம்.
யாருக்கு ஏற்றது?
இரண்டு பேர் சேர்ந்து தொழில் நடத்த வேண்டும், அதே நேரத்தில் தனிப்பட்ட சொத்துகளுக்குப் பாதுகாப்பும் வேண்டும் என்றால் LLP ஒரு நல்ல தேர்வாக இருக்கலாம்.
4. Private Limited Company — தனியார் வரையறுக்கப்பட்ட நிறுவனம்
உங்கள் தொழிலை ஒரு தனி நிறுவனமாக உருவாக்கி, அதன் உரிமையைப் பங்குகளாகப் பிரித்து நடத்துவது.
உதாரணமாக, நீங்கள் ஒரு பெரிய மொத்த வியாபாரம் அல்லது உற்பத்தி நிறுவனத்தைத் தொடங்க விரும்புகிறீர்கள்.
உங்கள் முதலீடு ₹20 லட்சம்.
உங்கள் நண்பரின் முதலீடு ₹10 லட்சம்.
இருவரும் சேர்ந்து ஒரு Private Limited Company தொடங்குகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்.
நிறுவனத்தின் பங்குகளை ஒப்பந்தப்படி பிரித்துக்கொள்ளலாம்.
நிறுவனத்தில் உங்கள் பங்கு அதிகமாக இருந்தால், நிறுவனத்தின் உரிமையிலும் அதற்கேற்ற பங்கு உங்களுக்கு இருக்கும்.
இதன் நன்மைகள்:
* நிறுவனத்திற்குத் தனியான சட்ட அடையாளம் இருக்கும்.
* பங்குதாரர்களுக்குப் பொதுவாக வரையறுக்கப்பட்ட பொறுப்புப் பாதுகாப்பு கிடைக்கும்.
* எதிர்காலத்தில் புதிய முதலீட்டாளர்களைச் சேர்க்க முடியும்.
* தொழிலைப் பெரிய அளவில் வளர்க்க உதவும்.
* நிறுவனத்தின் உரிமையைப் பங்குகளின் மூலம் வரையறுக்கலாம்.
* பெரிய நிறுவனங்களுடன் வியாபாரம் செய்யும்போது சில சூழ்நிலைகளில் சாதகமாக இருக்கலாம்.
இதில் உள்ள குறைபாடுகள்:
* தொடங்குவதற்கும் பராமரிப்பதற்கும் செலவு அதிகமாக இருக்கலாம்.
* கணக்குகளை முறையாகப் பராமரிக்க வேண்டும்.
* வருடாந்திர சட்ட நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
* சட்டப்படி கணக்குத் தணிக்கை பொதுவாகக் கட்டாயம்.
* நிறுவனத்தின் பணத்தை உங்கள் தனிப்பட்ட பணம்போல் நினைத்துப் பயன்படுத்த முடியாது.
யாருக்கு ஏற்றது?
பெரிய அளவில் வியாபாரம் செய்ய வேண்டும், அதிக முதலீடு பெற வேண்டும், எதிர்காலத்தில் நிறுவனத்தை விரிவுபடுத்த வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் Private Limited Company நல்ல தேர்வாக இருக்கலாம்.
இப்போது மிக முக்கியமான விஷயத்தைப் பார்ப்போம்!
1. எந்த முறையில் தனிப்பட்ட சொத்துகளுக்குப் பாதுகாப்பு கிடைக்கும்?
Proprietorship மற்றும் சாதாரண Partnership-ல் தனிப்பட்ட சொத்துகளுக்கு முழுமையான சட்டப் பாதுகாப்பு கிடையாது.
LLP மற்றும் Private Limited Company-ல் பொதுவாக வரையறுக்கப்பட்ட பொறுப்புப் பாதுகாப்பு கிடைக்கும்.
ஆனால் தனிப்பட்ட உத்தரவாதம், மோசடி போன்ற சூழ்நிலைகளில் இந்தப் பாதுகாப்பு பாதிக்கப்படலாம்.
2. எந்த முறையில் வரி குறைவாக இருக்கும்?
இது நீங்கள் சம்பாதிக்கும் லாபத்தைப் பொறுத்தது.
Proprietorship-ல் உங்கள் தனிநபர் வருமான வரி விதிகள் பொருந்தும்.
Partnership மற்றும் LLP-க்கு பொதுவாக 30% அடிப்படை வரி விகிதம் பொருந்தும்.
Private Limited Company-க்கு பொருந்தும் நிறுவன வரி முறையைப் பொறுத்து வரி மாறும்.
எனவே, எந்த முறையில் வரி குறையும் என்பதை உங்கள் ஆண்டு லாபத்தைக் கணக்கிட்டு முடிவு செய்வது நல்லது.
3. எந்த முறையில் வங்கிக் கடன் எளிதாகக் கிடைக்கும்?
எந்த ஒரு முறையைத் தேர்ந்தெடுத்தாலும் வங்கிக் கடனுக்கு விண்ணப்பிக்கலாம்.
ஆனால் கடன் கிடைப்பது நிறுவனத்தின் பெயரை மட்டும் பொறுத்தது அல்ல.
உங்கள் வியாபார வருமானம், வங்கிப் பரிவர்த்தனைகள், வருமான வரிக் கணக்குகள், கடன் வரலாறு மற்றும் கடனைத் திருப்பிச் செலுத்தும் திறன் ஆகியவை முக்கியம்.
Private Limited தொடங்கினால் மட்டும் அதிகக் கடன் கிடைக்கும் என்று நினைக்க வேண்டாம்.
4. எந்த முறையில் தொழில் நடத்துவது எளிது?
தனியாகச் சிறிய அளவில் தொழில் நடத்தினால் Proprietorship எளிமையானது.
இரண்டு பேர் சேர்ந்து தொழில் நடத்தினால் Partnership அல்லது LLP பரிசீலிக்கலாம்.
தனிப்பட்ட சொத்துகளுக்குப் பாதுகாப்பு முக்கியம் என்றால் LLP அல்லது Private Limited-ஐப் பரிசீலிக்கலாம்.
பெரிய நிறுவனமாக வளரவும் முதலீட்டாளர்களைச் சேர்க்கவும் விரும்பினால் Private Limited பொதுவாகப் பொருத்தமானது.
நீங்கள் தொழில் செய்துக்கொண்டிருக்கிறார்கள் உங்கள் Products -ஐ Domestic மற்றும் international அளவில் கொண்டு செல்ல https://t.co/RC7NU1vZIp இணையதளத்தில் பதிவு செய்து Products (listing) பட்டியலிடலாம்.
#Business #KHByte
📚🔥 **தமிழ்நாடு பற்றிய 24 முக்கியத் தகவல்கள்!** 💯👇
1️⃣ 🗺️ தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டம் – திண்டுக்கல்.
2️⃣ 🏙️ தமிழ்நாட்டின் மிகச்சிறிய மாவட்டம் – சென்னை.
3️⃣ 👥 அதிக மக்கள் தொகை கொண்ட மாவட்டம் – சென்னை.
4️⃣ 🏡 குறைந்த மக்கள் தொகை கொண்ட மாவட்டம் – பெரம்பலூர்.
5️⃣ 🚶 அதிக மக்கள் நெருக்கம் கொண்ட மாவட்டம் – சென்னை.
6️⃣ ⛰️ குறைந்த மக்கள் நெருக்கம் கொண்ட மாவட்டம் – நீலகிரி.
7️⃣ 🎓 அதிக எழுத்தறிவு விகிதம் கொண்ட மாவட்டம் – கன்னியாகுமரி.
8️⃣ 📖 குறைந்த எழுத்தறிவு விகிதம் கொண்ட மாவட்டம் – தர்மபுரி.
9️⃣ ⚖️ அதிக பாலின விகிதம் கொண்ட மாவட்டம் – நீலகிரி.
🔟 👨👩👧 குறைந்த பாலின விகிதம் கொண்ட மாவட்டம் – தர்மபுரி.
1️⃣1️⃣ 🗺️ தமிழ்நாட்டில் மொத்த மாவட்டங்கள் – 38.
1️⃣2️⃣ 🇮🇳 பரப்பளவில் இந்தியாவில் தமிழ்நாட்டின் இடம் – 10-வது.
1️⃣3️⃣ 👥 மக்கள் தொகையில் இந்தியாவில் தமிழ்நாட்டின் இடம் – 7-வது.
1️⃣4️⃣ 📚 எழுத்தறிவு விகிதத்தில் இந்தியாவில் தமிழ்நாட்டின் இடம் – 14-வது.
1️⃣5️⃣ 🏛️ தமிழ்நாட்டின் மாநில முழக்கம் – **வாய்மையே வெல்லும்.**
1️⃣6️⃣ 🌆 தமிழ்நாட்டின் தலைநகரம் – சென்னை.
1️⃣7️⃣ 🐐 தமிழ்நாட்டின் மாநில விலங்கு – நீலகிரி வரையாடு.
1️⃣8️⃣ 🌴 தமிழ்நாட்டின் மாநில மரம் – பனைமரம்.
1️⃣9️⃣ 🌺 தமிழ்நாட்டின் மாநில மலர் – செங்காந்தள் மலர்.
2️⃣0️⃣ 🐦 தமிழ்நாட்டின் மாநிலப் பறவை – மரகதப்புறா.
2️⃣1️⃣ 🍈 தமிழ்நாட்டின் மாநிலப் பழம் – பலாப்பழம்.
2️⃣2️⃣ 🛕 தமிழ்நாட்டின் மாநிலச் சின்னம் – ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் கோபுரம்.
2️⃣3️⃣ ⚓ தமிழ்நாட்டின் முக்கியத் துறைமுகங்களில் ஒன்று – தூத்துக்குடி துறைமுகம்.
2️⃣4️⃣ 📅 தமிழ்நாடு தினம் – ஜூலை 18.
💻 நல்ல Laptop தேர்வு செய்வது எப்படி?
நிறைய பேர் என்னிடம் கேட்கும் கேள்வி, “Bro, ஒரு நல்ல Laptop Suggest பண்ணுங்க!” 😃
ஆனா ஒரு விஷயம் புரிஞ்சுக்கோங்க… ஒருத்தருக்கு Best Laptop-ஆ இருக்கிறது, இன்னொருத்தருக்கு சுத்தமா செட் ஆகாது!
என்னோட ASUS Gaming Laptop கிட்டத்தட்ட ₹2 லட்சம். இதோட Performance நல்லா இருக்கும் ஆனா Battery Backup ரொம்ப கம்மி. அதனால என் மனைவிக்கு இந்த Laptop சுத்தமா பிடிக்காது. 😅
அதனால Laptop வாங்கும்போது முதலில் பார்க்க வேண்டியது உங்கள் Profession, Usage & Budget!
🔹 Core i3 – Basic Usage
Browsing, MS Office, Online Classes, YouTube, Emails போன்ற சாதாரண வேலைகளுக்கு போதுமானது.
🔹 Core i5 – Balanced Performance
Office Work, Programming, Multitasking, Photo Editing போன்ற வேலைகளுக்கு நல்ல தேர்வு. பெரும்பாலான Users-க்கு இது ஒரு நல்ல Balance!
🔹 Core i7 – High Performance
Video Editing, Advanced Programming, Design Work, Heavy Multitasking போன்ற வேலைகளுக்கு ஏற்றதாக இருக்கலாம்.
🔹 Core i9 – Power Users
3D Rendering, High-end Gaming, Heavy Professional Workloads போன்ற வேலைகளுக்கு பயன்படும். சாதாரண Usage-க்கு இதை வாங்க வேண்டிய அவசியம் இல்லை.
⚠️ முக்கியமான விஷயம்:
Core i7 என்றாலே அது Core i5-ஐ விட எல்லா நேரத்திலும் சிறந்தது என்று சொல்ல முடியாது!
Processor Generation, Exact Model, Power Limit, Cooling மற்றும் உங்கள் தேவைகளையும் பார்க்க வேண்டும்.
உதாரணமாக:
• Intel Core i5-8250U – 8th Gen
• Intel Core i7-1165G7 – 11th Gen
• Intel Core i5-1235U – 12th Gen
• Intel Core i7-13700H – 13th Gen
அதேபோல Processor பெயரின் கடைசியில் வரும் U, P, H, HX போன்ற Suffix-களும் முக்கியம்.
📌 U – பொதுவாக Power Efficiency-க்கு முக்கியத்துவம் கொடுக்கும் Processors.
📌 P – சில Intel Laptop Generations-ல் Performance மற்றும் Power Efficiency-க்கு இடையிலான Balance.
📌 H – High Performance Laptop Processors.
📌 HX – High-performance, அதிக Power தேவையுள்ள Laptop Processors.
இந்த Suffix-களின் அர்த்தம் Brand மற்றும் Generation-ஐப் பொறுத்து மாறலாம்.
இன்னொரு முக்கியமான விஷயம்: முடிந்தவரை SSD Storage உள்ள Laptop தேர்வு செய்யுங்க. HDD-ஐ விட Laptop வேகமாக Boot ஆகவும், Apps சீக்கிரம் Open ஆகவும் உதவும்.
💡 என்னோட Suggestion:
Laptop வாங்குவதற்கு முன்பு இந்த 3 விஷயங்களை முடிவு செய்யுங்க:
1. உங்க Profession என்ன?
2. என்னென்ன வேலைகளுக்குப் பயன்படுத்தப் போறீங்க?
3. Budget எவ்வளவு?
தேவையில்லாமல் அதிக பணம் செலவு செய்து Powerful Laptop வாங்க வேண்டாம். அதே நேரத்தில், உங்க வேலைக்கு Performance தேவைப்பட்டால் ரொம்ப Basic Laptop வாங்கியும் சிரமப்படவும் வேண்டாம்.
இந்த Post-ஐ Bookmark பண்ணி வெச்சுக்கோங்க! 📌நீங்க Laptop வாங்கும்போதும், உங்க நண்பர்கள் வாங்கும்போதும் Useful-ஆ இருக்கும்.
Laptop Suggestion கேட்கும்போது இனிமேல் உங்க Profession + Budget-ஐயும் சொல்லுங்க. சரியான Laptop தேர்வு செய்ய உதவுறேன், Bro! ❤️
#Laptop #TechTips #Arivom_Tech
🌺 பிரம்மிக்க வைக்கும் திருப்பதி அதிசியங்கள்..!!!!
திருப்பதி ஸ்ரீ ஏழுமலையான் திருவுருவச்சிலையில் சிலிர்க்க வைக்கும் ரகசியங்கள் உள்ளன
அவைகளில் சில.........
1. திருப்பதி ஆலயத்திலிருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் "சிலாதோரணம்" என்ற அபூர்வ பாறைகள் உள்ளன. உலகத்திலேயே இந்த பாறைகள் இங்கு மட்டும் தான் உள்ளன.இந்த பாறைகளின் வயது 250 கோடி வருடம். ஏழுமலையானின் திருமேனியும், இந்த பாறைகளும் ஒரே விதமானவை.
2. ஏழுமலையான் திருவுருவச்சிலைக்கு பச்சைக்கற்பூரம் சார்த்துகிறார்கள். இந்த பச்சைக்கற்பூரம் ஒரு இரசாயனம். அரிப்பைக் கொடுக்கும் ஒருவகை அமிலம். இந்த இரசாயனத்தை சாதாரணக்கருங்கல்லில் தடவினால் கருங்கல் வெடித்துவிடும். ஆனால், சிலாதாரணத்தில் உள்ள பாறைகளில் இதைத் தடவினால் அந்தப்பறைகள் பெடிப்பதில்லை. ஏழுமலையாக் திருவுருவச்சிலைக்கு 365 நாளும் பச்சைக்கற்பூரம் தடவுகிறார்கள். ஆனாலும்வெடிப்புஏற்படுவதில்லை.
3. எந்தக் கருங்கல் சிலையானாலும் எங்காவது ஒர் இடத்தில் சிற்பியின் உளிபட்டிருக்கும் இடம் தெரியும்.. உலோகச்சிலையானாலும் உலோ கத்தை உருக்கி வார்த்த இடம் தெரியும். ஏழுமலையான் திருவுருவச்சிலையில் அப்படி எதுவும் அடையாளம் தெரியவில்லை. எந்த கருங்கல் சிலையை எடுத்துக்கொண்டாலும் சுரசுரப்பாக இருக்கும். ஆனால் ஏழுமலையான் திருமேனியில் நுணுக்க வேலைப்பாடுகள் எல்லாம் மெருகு போடப்பட்டது போல் இருக்கின்றன. ஏழுமலையான் விக்ரகத்தில் நெற்றிச்சுட்டி, காதணிகள், புருவங்கள், நாகாபரணங்கள் எல்லாம் நகைக்கு பாலீஷ் போட்டது போல் பளபளப்பாகஇருக்கின்றன.
4. ஏழுமலையான் திருவுருவச்சிலை எப்போதும் 110 டிகிரி ஃபாரன்கீட் வெப்பத்தில் இருக்கிறது. திருமலை 3000 அடி உயரத்தில் உள்ள குளிர்பிரதேசம். அதிகாலை 4.30 மணிக்கு குளிர்ந்த நீர், பால் மற்றும் திரவியங்களால் அபிஷேகம் செய்கிறார்கள். ஆனால், அபிஷேகம் முடிந்தவுடன் ஏழுமலையானுக்கு வியர்க்கிறது.பீதாம்பரத்தால் வியர்வையை ஒற்றி எடுக்கிறார்கள். வியாழக்கிழமை அபிஷேகத்திற்கு முன்னதாக, நகைகளைக் கழற்றும் போது, ஆபரணங்கள் எல்லாம் சூடாகக்கொதிக்கின்றன.
திருப்பதி ஆலயம், அதன் வழிபாடு, உண்டியல் வசூல், பூஜை முறைகள், சரித்திர சம்பவங்கள் அனைத்தும் அதிசய நிகழ்வுகளாகஇருக்கின்றன.
1. திருப்பதி திருக்கோயில் சமையல்கட்டு மிககூம் பெரியதாகும். பொங்கல், தயிர்சாதம்,புளிச்சாதம், சித்ரான்னம், வடை, முறுக்கு, ஜிலேபி, அதி ரசம், போளி, அப்பம், மெளகாரம், லட்டு, பாயசம், தோசை, ரவாகேசரி, பாதாம்கேசரி, முந்திரிப்பருப்பு கேசரி போன்றவை தினமும் பெரிய அளவில் தயார் செய்யப்படுகின்றன.
2. ஏழுமலையானுக்கு தினமும் ஒரு புதிய மண்சட்டி வாங்குகிறார்கள். இதில் தயிர்சாதம் தவிர வேறு எந்த நைவேத்தியமும் கோவில் கர்பக்கிருகத்திற்குக் குலசேகரப் படியைத் தாண்டாது. வைரம், வைடூரியம், தங்கப்பாத்திரங்கள் எதுவும் குலசேகரப்படியைத் தாண்டச் செல்லாது. ஆண்டவனுக்கு நைவேத்தியம் செய்யப்பட்ட எச்சில் மண்சட்டியும், தயிர்சாதமும் ஒரு பக்தனுக்குக் கிடைக்கப் பெற்றால் அது மிகப்பெரிய பாக்கியமாகும்.
3. ஏழுமலையான் உடை 21 முழ நீளமும் 6 கிலோ எடையும் கொண்ட புடவை பட்டு பீதாம்பரமாகும். இந்த ஆடையை கடையில் வாங்க முடியாது. திருப்பதி தேவஸ்தான அலுவலகத்தில் 12500 ரூபாய் செலுத்த வேண்டும்.வாரத்தில் ஒரு முறை வெள்ளிக்கிழமை அன்று மட்டும் தான் வஸ்திரம் சாத்துவார்கள். இது மேல் சாத்து வஸ்திரம். பணம் செலுத்திய பிறகு வஸ்திரம் சாத்துவதற்கு மூன்று வருடங்கள் காத்திருக்க வேண்டும்.
4. உள் சாத்து வஸ்திரம் ஒரு செட் இருபதாயிரம் ரூபாய் கட்டணமாகும்.ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் 15 வஸ்திரங்கள் சார்த்துவதற்கு சமர்ப்பிக்கப்படும். பணம் செலுத்திய பிறகு வஸ்திரம் சாத்துவதற்கு பத்து வருடங்கள் காத்திருக்க வேண்டும்.
5. பக்தர்கள் சமர்பிக்கும் வஸ்திரங்கள் தவிர அரசாங்கம் சமர்பிக்கும் சீர் வஸ்திரங்கள் ஆண்டுக்கு இரண்டு முறை சாத்தப்படுகிறது.
6. ஏழுமலை ஆண்டவனுக்கு அபிஷேகம் செய்ய இன்று கட்டணம் செலுத்தினால் மூன்று ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.
7. அபிஷேகத்திற்காக ஸ்பெயினில் இருந்து குங்குமப்பூ, நேபாளத்திலிருந்து கஸ்தூரி, சைனாவிலிருந்து புனுகு, பாரிஸ் நகரத்திலிருந்து வாசனை திரவியங்கள் முதலிய உயர்ந்த பொருட்கள் வரவழைக்கப்பட்டு, தங்கத்தாம்பாளத்தில் சந்தனத்தோடு கரைக்கப்படும் 51 வட்டில் பால் அபிஷேகம் செய்யப்படும். பிறகு கஸ்தூரி சாத்தி, புனுகு தடவப்படும், காலை 4,30 மணி முதல் 5,30 மணி வரை அபிஷேகம் நடைபெறுகிறது. அபிஷேகத்திற்கு சுமார் ஒரு லட்ச ரூபாய் செலவு ஆகும்.
8. ஐரோப்பாவில் உள்ள ஆம்ஸ்டர்டாமில் இருந்து பக்குவப்படுத்தப்பட்ட ரோஜா மலர்கள் பக்தர்களால் திருப்பதிக்கு விமானத்தில் அனப்பி வைக்கப்படுகின்றன. ஒரு ரோஜா மலரின் விலைசுமார்80ரூபாய்.
இந்த 5 ஆவணங்கள் இல்லாமல்சொத்து பதிவு செய்ய முடியாது
புதிய விதிகள் என்னென்ன?
இனிமேல், முழுமையான மற்றும் சரியான ஆவணங்கள் இல்லாமல் சொத்து பதிவு செய்வது சாத்தியமில்லை.
மோசடிகள் மற்றும் நிலத் தகராறுகளை சரிபார்த்து, ஒவ்வொரு பரிவர்த்தனையும் உண்மையாக, வெளிப்படையானதாக நடப்பதை உறுதி செய்யும் நோக்கில் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.
நிலம் அல்லது வீடு வாங்கத் திட்டமிடுகிறீர்கள் என்றால், இந்தச் செய்தி உங்களுக்கு மிகவும் முக்கியமானது.
நிலம் மற்றும் சொத்துப் பதிவு விதிகளை அரசாங்கம் மேலும் கடுமையாக்கியுள்ளது.
இனிமேல், முழுமையான மற்றும் சரியான ஆவணங்கள் இல்லாமல் சொத்து பதிவு செய்வது சாத்தியமில்லை.
மோசடிகள் மற்றும் நிலத் தகராறுகளைச் சரிபார்த்து, ஒவ்வொரு பரிவர்த்தனையும் உண்மையாக, வெளிப்படையானதாக நடப்பதை உறுதி செய்யும் நோக்கில் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. அதுபற்றி இந்தப் பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
முன்னதாக, பல சொத்துப் பதிவுகள் முழுமையற்ற அல்லது தவறான ஆவணங்களுடன் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதன் காரணமாக, சொத்து பதிவு செய்த பிறகு தகராறுகள் நடக்கின்றன. அதேபோன்று, நீதிமன்றத்தை நாடும் சூழலும் ஏற்படுகிறது.
இதுபோன்ற சிக்கல்களைத் தவிர்க்க, அரசாங்கம் பதிவு செயல்முறையை மிகவும் பாதுகாப்பானதாக மாற்றியுள்ளது.
இந்த 5 ஆவணங்கள் இல்லாமல் சொத்து பதிவு செய்ய முடியாது!
அடையாள சரிபார்ப்பு...
தற்போது சொத்து பதிவின் போது அடையாள சரிபார்ப்பு கட்டாயமாகும். சொத்து பதிவு செய்யும் போது, வாங்குபவரும் விற்பவரும் தங்கள் அடையாளச் சான்றை வழங்க வேண்டும்.
அதன்படி, ஆதார் கார்டு, பான் கார்டு, வாக்காளர் அட்டை அல்லது அரசாங்கத்தால் வழங்கப்பட்ட ஏதேனும் ஒரு அடையாள அட்டையை வழங்க வேண்டும்.
மேலும், பெயர், புகைப்படம், முகவரி, பிறந்த தேதி போன்ற விவரங்கள் பதிவு அலுவலகத்தில் உள்ள தரவுகளுடன் பொருந்த வேண்டும்.
இவை ஏதேனும் ஒன்று பொருந்தவில்லை என்றால், சொத்து பதிவு உடனடியாக நிறுத்தப்படும்.
ஆவணங்கள் இல்லாமல் சொத்து பதிவு செய்ய முடியாது!
நில உரிமைச் சான்று...
அதேபோல், சொத்தின் உரிமையைக் கோருவது இனி நடக்காது. நிலம் அதிகாரப்பூர்வ அரசாங்க பதிவுகளில் தெளிவாகப் பதிவு செய்யப்பட வேண்டும்.
நிலப் பதிவுகள், உரிமை ஆவணங்கள் மற்றும் கடந்த கால பதிவு விவரங்கள் சரிபார்க்கப்படும்.
நிலம் சர்ச்சையில் இருந்தால், நீதிமன்ற வழக்கில் இருந்தால் அல்லது ஏதேனும் அரசாங்கத் தடையின் கீழ் இருந்தாலும் சொத்தை பதிவு செய்ய முடியாது.
முத்திரை வரி செலுத்துதல் கட்டாயம்... பகுதியளவு கொடுப்பனவுகள் இனி செல்லுபடியாகாது.
செயல்முறை தொடங்குவதற்கு முன்பு சொத்தை வாங்குபவர்கள் முழு முத்திரை வரி மற்றும் பதிவு கட்டணங்களை செலுத்த வேண்டும்.
அதேபோல், ஆன்லைன் கட்டண ரசீதும் அவசியம். கடந்த காலங்களில், சிலர் வரிகளைக் குறைப்பதற்காக சொத்தை குறைத்து மதிப்பிட்டுக் காட்டினர். ஆனால், இப்போது அவ்வாறு செய்வது மிகக் கடினம்.
பான் கார்டு தேவை...
சொத்து பரிவர்த்தனைகளில் அதிக அளவு பணம் இருப்பதால், பதிவு செய்வதற்கு பான் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இது அரசாங்கத்திற்கு நிதியின் மூலத்தை அடையாளம் காணவும், கருப்புப் பணம் மற்றும் வரி ஏய்ப்பைத் தடுக்கவும் அனுமதிக்கிறது.
ஆகையால், பான் கார்டு இல்லாமல், பதிவு முழுமையடையாது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
சில நேரங்களில், தடையில்லாச் சான்றிதழ் (NOC) சில சொத்துக்களுக்கு கூடுதலாக தேவைப்படும்.
நிலம் நகராட்சி பகுதிக்குள், மேம்பாட்டு ஆணைய மண்டலத்தில் அல்லது தடை செய்யப்பட்ட இடத்தில் இருந்தால், தடையில்லாச் சான்றிதழ் (NOC) தேவைப்படலாம்.
தேவையான அனுமதிகள் இல்லாமல், நிலம் அல்லது சொத்தை பதிவு செய்ய முடியாது.
சொத்து பதிவு செய்வதற்கு முன் வாங்குபவர்கள் என்ன செய்ய வேண்டும்?
பதிவு அலுவலகத்திற்குச் செல்வதற்கு முன், உங்களிடம் அனைத்து ஆவணங்களும் முறையாக உள்ளதா என சரிபார்க்க வேண்டும்.
உங்கள் அடையாளச் சான்றுகளை தயாராக வைத்துக் கொள்ளுங்கள். நிலப் பதிவுகளை கவனமாகச் சரிபார்ப்பதுடன்,
அனைத்து கட்டணங்களும் வரிகளும் முழுமையாக செலுத்தப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
ஏதேனும் முரண்பாடுகள் இருப்பதை நீங்கள் கவனித்தால், சட்ட அல்லது சொத்து நிபுணர்களை அணுகுவது நல்லது.
இந்தப் புதிய விதிகள் கடினமாக தோன்றினாலும், வாங்குபவர்களையும் விற்பனையாளர்களையும் பாதுகாக்க இவை அவசியம்.
#இன்றையதகவல் #தெரிந்துகொள்வோம் #அறிவோம்சட்டம் #நிலப்பதிவு
ஒரு நிலம் நம்மிடம் விற்பனைக்கு வந்தால். உடனடியாக நாம் என்ன செய்ய வேண்டும்..!
1.முதன் முதலில் computerized EC 1975 முதல் போட்டு பார்க்க வேண்டும் 1975 முதல் பின்னோக்கி 1908 அல்லது 1858 வரை manual EC கட்டாயம் போட்டு பார்க்க வேண்டும்.
Zero value நிலம் EC யில் நிலத்தின் மதிப்பு Zero மதிப்பு என்று இருந்தால் அது பூமிதான நிலம் & புறம்போக்கு அல்லது வில்லங்க நிலம் எனவே zero value நிலம் வாங்காதீர்.
2.Double Document நிலம்.
Power of attorney(POA) double document
அதாவது power யில் வரும் நிலத்தை வாங்காதீர் இது double டாக்குமெண்ட் க்கு இட்டு செல்லும்.
POA நிலதை வாங்கியே தீர வேண்டும் என்றால் Power கொடுத்தவர் உயிரோட சுய நினைவோட இருக்கிறாரா என்று கண்டுபிடியுங்கள் POA agreement நகல் வாங்கி அதில் குறிப்பிடப்படுள்ள அட்ரஸ் இல் power கொடுத்தவரை நேரில் சந்தித்து விசாரியுங்கள்.
அடுத்து அந்த power பத்திரம் செல்ல கூடியாதா என்று கேளுங்கள் அதாவது power பத்திரம் எழுதி கொடுத்தவர் அதை ரத்து செய்து விட்டாரா என்றும் கேளுங்கள் முகவரும் (agent )விற்கலாம், principal (power எழுதி கொடுத்தவர்) ளும் விற்கலாம் விற்றால் அது double டாக்குமெண்ட்.
3.உயில் பத்திர நில double document.
உயில் மூலம் உரிமை மாறி இருக்கா
உயில் பத்திரம் மூலம் நிலம் விற்பனைக்கு வரும் நிலமெனில்.
எது இறுதி/கடைசி உயில் என்று கவனமாக பார்க்க வேண்டும் பதிவு செய்யபட்ட உயில் மூலம் விற்பனை நடந்தால் அது ஒரு நில விற்பனை பத்திரம்.
பதிவு செய்யப்பட்ட உயிலுக்கு பிறகு ஏதாவது பதிவு செய்யாத உயில் இருக்கான்னு நிலம் விற்பவரின் உறவினர்களை கேட்க வேண்டும் இந்த பதிவு செய்யப்படாத உயில் மூலம் விற்பனை செய்யப்பட்டு இருந்தால் அது double டாக்குமெண்ட்.
4.Settlement பத்திர நிலம் double document .
Settlement பத்திரம் மூலம் நிலம் விற்பனைக்கு வந்தால் செட்டில்மெண்ட் ரத்து செய்ய பட்டு இருக்கிறதா என்று கவனமாக பார்க்கவும் 1990 முதல் 2015 வரை ரெஜிஸ்டர் ஆபீசில் செட்டில்மெண்ட் ரத்து செய்து நிலத்தில் மேலும் சொத்தை சிக்கல் ஆக்கிவிட்டர்கள்.
செட்டில்மெண்ட் பத்திரத்தை civil கோர்ட் மூலியமாக தான் ரத்து பண்ண முடியும் பத்திர ஆபீசில் செய்யும் ரத்து பத்திரம் சொல்லாது.
EC யில் SRO=Sub register Office)மூலம் ரத்து ஆகி இருந்தால் அந்த நிலத்தை வாங்காதீர்.
உயில் பத்திரம் தாய் பத்திரம் ஆக இருந்தால் அந்த தாய் பத்திர உயில் மூலம் கிரயம் நடைபெற்று இருந்தால் அந்த கிரய பத்திரத்துக்கு லிங்க் கவனமாக இறங்கியதா என்று பார்க்க வேண்டும்.
5. Update ஆகாத பட்டா மூலம் கிரயம்-double document.
1987-UDR, 1995-நத்தம் நிலவரி திட்டம் முன்பு நிலம் பத்திரத்தின் மூலம் வாங்கியவர் அதை revenue record எனப்படும் பட்டாவில் தான் தான் தற்போதைய உரிமையாளர் அதாவது current owner என்பதை update செய்யாமல் இருந்தால் 1987முந்தைய owner & அவரின் வாரிசுகள் பழைய பட்டா மூலம் கிரயம் செய்தால்.
அடுத்து நிலம் வாங்கி பட்டாவில் update செய்யாமல் விட்டுவிட்ட அசல் (எ ) original owner றோ இல்லை அவரின் வாரிசுகள் விற்று கிரய பத்திரம் ஆகி இருந்தால் அதுவும் double document.
6.Layout frame, வடிவம், உருவாமாற்றம் மாற்றிய நிலமா?
அடுத்து அந்த நிலம் நத்தம் நிலமா, layout பிளாட் ஆஹ் என்று பாருங்கள்.
DTCP approved or CMDA approved என்றால் DTCP & CMDA website யில் approval நம்பர் போட்டு approval ஒரிஜினல் தானா என்று உறுதி படுத்தி கொள்ளலாம். Website லே கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் நேரில் LPA(local planning authority என்னும் DTCP அல்லது CMDA அலுவலகத்திற்கு சென்று நிலத்தின் approval சரிதானா என்று கேளுங்கள்.
அது பழைய approved layout ஐ திருட்டுதனமாக redraw செய்து விற்பனைக்கு வந்திருக்கும் layout ஆஹ் என்றும் விசாரியுங்கள்.
Layout ப்ளூ பிரிண்ட் இருந்தால் கொண்டு சென்று park, ஸ்கூல் க்கு இடம் விட்டுட்டு layout போட்டு இருக்கிறார்களா என்றும் கேளுங்கள் நிறைய land ப்ரோமோட்டார்ஸ் park, ஸ்கூல் இடத்தை காட்டி approval வாங்கி விட்டு layout வரை படத்தை மறுபடியும் திருட்டுதனமாக வரைந்து(எ ) redraw செய்து park, ஸ்கூல் இடத்திலும் மனை போட்டு விடுவார்கள்.
எனவே ஜாக்கிரதை.
பஞ்சாயத்து approved இடங்கள் வாங்காமல் இருப்பது நல்லது. ஏனென்றால் வாங்கிய பின்பு நீங்கள் தான் நிலத்தை frame work scheme இன் கீழ் வரையறை செய்ய அலைய வேண்டி இருக்கும்.
நத்தம் நிலம் என்றால் VAO வை பார்க்க வேண்டும் உங்கள் சர்வே நம்பர் இன் UDR காலத்து 1987 ஆம் ஆண்டின் சிட்டா அடங்கலை, FMB நேரில் சென்று கேளுங்கள்.
இனாம் கிராமம் ஆக இருந்து இனாம் ஒழிப்பின் மூலம் நத்தம் நிலவரி திட்டத்தின் கீழ் பட்டா வழங்கபட்ட நிலமா என்றும் பார்க்க வேண்டும். அந்த பட்டா UDR காலத்து சிட்டா அடங்கல் ரெஜிஸ்டர் இல் ஏறி இருக்கா னும் பார்க்கணும்.
VAO நேரில் கேட்டும் கொடுக்கவில்லை என்றால் RTI மனுவில் கேளுங்கள் RTI யில் கட்டாயம் கொடுக்க வேண்டும்.
4. EB, சொத்து வரி விற்பவர் பெயரில் இருக்கா என்று பாருங்கள்.இல்லை என்றால் மாற்றி, பின்னர் விற்க சொல்லுங்கள் .
5.பட்டா விற்பவர் பெயரில் இருக்கானு பார்க்கணும்.
கூட்டு பட்டா நிலம் எனில், நிலம் பங்குதாரர்கள்குள் யாருக்கு எவ்வளவு இடம் & எந்த இடம் என்று பிரித்திருக்க வேண்டும் இல்லை என்றால் வாங்கும் உங்களுக்கு சிக்கல். விற்பவருக்கு உரிமை இல்லாத நிலத்தை விற்க வாய்ப்பு இருக்கு
பட்டா வாங்குறது பெரிய process, நிறைய அலைச்சல் & கஷ்டம்.
அதனாலே விற்பவர் பெயரில் பட்டாவை மாற்ற சொல்லுங்கள் அதன் பின்பு நிலத்தை வாங்குங்கள்.
6. நிலத்தின் வகைப்பாடு கண்டிப்பாக பார்க்க வேண்டும்.
நஞ்சை, புஞ்சை, நத்தம், நத்தம் புறம்போக்கு, மேய்ச்சல், வாய்க்கால், ஓடை புறம்போக்க்கா, நெல் போராடிக்கும் இடமா, park, விளையாட்டு திடல்,கோயில் க்கு ஒதுக்கப்பட்ட நிலமா,பொதுவில் மாடு கட்ட விடப்பட்ட இடமா, நிலவியல் பாதை(அரசு நிலம் ), நிலவியல் ஓடை etc.என்று பார்க்கிவேண்டும்.
7. பட்டாவின் பயனாளி யார்?.
முன்னோரு காலத்தில் அது ஜமீன் நிலமா அல்லது இனாம் நிலமா அல்லது ரயட்டுவாரி நிலமா ஆஹ் என்று பார்க்க வேண்டும்
மேஜர் இனாம்
ராயட்டு வாரி
1802 காலத்தின் permanent settlement record காலத்தின் ஜாகிர் இனாம் , ஜமீன் நிலமாக இருந்து ராயட்டுவாரி யாக மாற்றம் பெற்றதா என்றும் பார்க்க வேண்டும்.
வெள்ளைக்காரன் காலத்துல இனாம் ஒழிப்பில் இருந்து ஜமீன் நிலமாக மாறியதா என்றும் ஆராய வேண்டும்.
இதற்கு VAO, தாலுகா & கலெக்டர் அலுவலகத்தில் record section இல் இருக்கும் B-record, OSR, RSR, SLR இன் நகல் தேவை உங்கள் நிலத்தின் சர்வே நம்பர் குறிப்பிட்டு ஒரு மனு கொடுத்து, 50 ரூபாய் கட்டி வாங்கி கொள்ளலாம்.
------------
Minor இனாம்
சுதந்திரத்திற்கு முன் பிரிட்டிஷ்காரர்கள் கொடுத்த DC land (எ) (Depressed Class) நிலமா? என்று பார்க்க வேண்டும்
தொழில் முறை இனாம் நிலம்
----
தச்சர், கருமான், நாவிதர், காவக்காரன்,கர்ணம்,தலையாரி,
வெட்டியான், சக்கிலியர்,புதிரை வண்ணார் இனாம் நிலமா? என்றும் பார்க்க வேண்டும்.
வெள்ளைக்காரன் காலத்தில் மணியமாக அங்கீகாரிக்க பட்ட ஊழிய மானியங்களான பூசாரி, தேவதாசி,பூ கட்டும் மானியம் நிலமா? என்று பார்க்க வேண்டும்.
சோஸ்திராம் மானியம் ஒழிக்கப்பட்ட நிலமா?என்றும் பார்க்க வேண்டும்.
ஹாஜி இனாம் ஒழிக்கப்பட்ட நிலமா? என்றும் பார்க்க வேண்டும்.
------------
DC அல்லாத பிற இனதவர்க்கு கொடுக்கப்பட்ட குறவர், கள்ளர்(குற்றபரம்பரை)
settlement etc யா என்று பார்க்க வேண்டும்.
மேற்சொன்ன வகை பாடு அனைத்தும் வெள்ளைக்காரன் காலத்தாவை.
---------
சுதந்திரத்திற்கு பின் கொடுக்கபட்ட Assigment land.
Assignment land (எ ) ஒப்படை பட்டா நிலங்கள் எனில் அதற்கு உண்டான (HSD பட்டா , D-பட்டா, நமுனா பட்டா, TKT பட்டா,F-பட்டா, B-memo பட்டா, அனுபந்த பட்டா, Assignment land என்னும் ஒப்படை நிலம் ) யா என்று பார்க்க வேண்டும்.
SC & ST பிரிவினற்கு கொடுத்த AD assignment Land (Adi Dravidar )பட்டா உள்ள நிலமா என்றும் பார்க்க வேண்டும்.
F-பட்டா.
இது நிலசீர்திருத்த துறையால் வழங்க பட்டது.நிலசீர்திருத்த துறை வேறு revenue டிபார்ட்மென்ட் வேறு.
ஜமீன் ஒழிப்பில் இருந்த நிலங்களை பயனாளிக்கு கொடுத்தது என்பதை உறுதி படுத்தும் ஆவணமே F-பட்டா.
1970-B-Memo land =பீமா பட்டா.
B memo பட்டா நிலம் விற்பனை க்கு வந்தால் வாங்காதீர். ஏன் என்றால் B-memo என்பது நில உரிமை பட்டா அல்ல. அது நீ ஒரு அரசின் புறம்போக்கு நிலத்தின் ஆக்கிரமிப்பு செய்தவன் என்ற govt நோட்டீஸ் மட்டுமே. B-memo நிலத்தில் குடி இருப்பவர்களை எந்நேரமும் அரசு காலி செய்ய சொல்லும்.
Assignment பட்டாவில் உள்ள கண்டிஷன் பார்க்க வேண்டும். கண்டிஷன் பார்க்காமல் வாங்காதீர்.
ஒப்படை நிலங்களை அரசாங்கமே திருப்பி எடுத்து கொண்டு விட்டாதா என்றும் பார்க்க வேண்டும்.
--------
1956-பூமி தான நிலம்
Manual EC
கட்டாயம் 1950-1965 வரை manual EC போட்டு பார்க்க வேண்டும்.
manual EC யில் மட்டும் தான் பூமி தான போர்டுக்கு நிலங்களை பெரும் நில சுவாந்தார்கள் தான பத்திரம் (கிரயபத்திரம்) கொடுத்த அந்த entry காட்டபட்டு இருக்கும்.
பூமி தான போர்டு பெயரில் பட்டா, சிட்டா ஆகியவை மாறிவிட்டு இருந்தால் VAO அலுவலகத்தின் A-Record இல் காட்டும்.
ஏர் உழவன் பட்டா=பூமி தான நிலத்திற்கு ஆன குத்தகை பட்டா.
Manual EC யில் கிடைக்காத பூமி தான நிலங்களை பற்றிய தகவல்கள் revenue record யில் தான் கண்டுபிடிக்க முடியும்.
பூமி தான நிலம் என்றால் மெட்ராஸ் சைதாப்பேட்டை யில் உள்ள பனகல் மாளிகையில் உள்ள பூமி தான board க்கு சென்று வாங்க விரும்பும் நிலத்தின் சர்வே நம்பர் பூமி தான வரையறைக்குள் வருகிறதா என்று பார்க்க வேண்டும். Master ரெஜிஸ்டர் பார்க்க வேண்டும்.
பூமி தான நிலம் வாங்காதீர்.
பூமி தான நிலத்தை பயனாளி விற்கு அதிகாரம் இல்லை. பயனாளிக்கு குத்தகை உரிமை மட்டுமே உண்டு.
எனவே அது பூமி தான நிலம் என்று தெரியவந்தால் வாங்காதீர்.
-----------
Zero value நிலம்
-EC யில் நிலத்தின் மதிப்பு Zero மதிப்பு என்று இருந்தால் அது பூதிதானம் & புறம்போக்கு அல்லது வில்லங்க நிலம்.
-----------
கோயில் நிலம் -HR&CE நிலமா
வாங்க விரும்பும் நிலம் கோயில் நிலம் ஆஹ் என்று பார்க்க வேண்டும்.
கோயில் நிலம் என்றால் பயந்து விட கூடாது அது இறையிலி(100% கோயிலுக்கு சொந்தம்), தேவதானம், தர்மதாயம் ஆக இருக்க கூடாது அவ்வளவே.
கோயில் நிலத்தில் கட்டளை என்று ஒரு பிரிவு உண்டு இதையும் வாங்க கூடாது. கட்டளை எப்படி உடைக்க வேண்டும் என்று தெரிந்தவர்கள் மட்டுமே வாங்கலாம்.
கோயில் மணியமாக இருந்து ரயத்துவாரி நிலமாக 1963 இல் மாறி இருந்தால் அது கண்டிஷன் பட்டாவா என்று பார்க்கனும்.
இந்த நிலம் வாங்கும் போது கவனம் தேவை. ஏன்னா HR&CE நிறைய நிலங்களை திருப்பி எடுத்து கொண்டு உள்ளது.
-----------
ஜமீன் & மானியம் முற்றாக ஒழித்தது 1950 to 1960 களில்.
land reforms act.
இதற்கு நில சீர்திருத்தம் என்று பெயர். ஜமீன் இடம் இருந்து அரசு எடுத்த உபரி நிலம் கிராம கணக்கில் B register லே இருந்து A-register க்கு மாறும் போது உபரி நிலம் , அனாதீனம், உரிமையாளர்கள் பெயர்கள் மாறி உள்ளது போன்ற சிக்கல் உள்ளதா என்றும் பார்க்க வேண்டும்.
-----
1963 minor இனாம் ஒழிப்பு சட்டம்
இனாம் ஒழிப்பு to ரயட்டுவாரி பட்டா. உழுபவனுக்கே நிலம் சொந்தம் scheme.
RSLR இல் "கிராமத்தார்" என்று பட்டா தாக்கல் செய்யப்பட்டு 1963 minor இனாம் ஒழிப்பு சட்டம்
மூலம் ரயட்டுவரி பட்டாவாக மாறி பின்பு 1987 UDR இல் மீண்டும் RSLR இல் உள்ளது போன்று "கிராமத்தார்" என்று மாறி இருந்தால் அந்த நிலத்தை வாங்காதீர்.
அது தனி நபர் பட்டா என்று மாறி இருக்கா என்றும் பார்க்க வேண்டும்.
-------
1963 கோவில் நிலம் (இனாம் ஒழிப்பு சட்டம், ஒழிப்பு மற்றும் ரயட்டுவாரியாக மாற்றுதல்) சட்டம்
தேவதாசி மானியம் to நிபந்தனை பட்டாவாக உள்ள நிலத்தை பயன்படுத்தி கொள்ளலாமே தவிர சொந்தம் கொண்டாட முடியாது.
ஊழிய மானிய நிலங்கள் கண்டிஷன் பட்டா வா இல்லை normal ராயட்டுவாரி பட்டா நிலமா? ன்னு பார்க்கணும்.
இந்த நிலம் வாங்கும் போது மிகுந்த கவனம் தேவை. தமிழ் நாட்டின் நில நிர்வாக பற்றிய அறிவு உள்ள ஒரு சிவில் லாயர் தான் உங்களை காப்பாற்ற முடியும்
--------
1961(center)to 1972(TN)Land ceiling act நிலம்
நில உச்சவரம்பு வரையறைகுள் மாட்டிக்கொண்ட நிலமா என்று பார்க்க வேண்டும்.
UDR லே celing இடம் என்று இருக்கானு பார்க்கணும்.
Section 37B இல் வந்த நிலாமா என்று பார்க்க வேண்டும்.
--------
1976 களின் Urban land seiling act
ULC ஆக்ட் இல் மாட்டி கொண்ட ULC நிலமா என்று பார்க்க வேண்டும். ULT என்று note இருந்தால் மெட்ராஸ் பரங்கிமலை ரயில் நிலையம் அருகில் உள்ள உச்சவரம்பு ஆபீசில் சர்வே நம்பர் கொடுத்து விசாரிக்கணும். Innocent buyer என்று சொல்லி land கமிசினர் க்கு மனு செய்யனும்.
ULC நிலம் தவறுதலாக நீங்கள் வாங்கினாலும் நிலத்திற்கு revenue department(டாசில்தார், VAO )பட்டா மாற்றம் செய்து கொடுக்க மாட்டார்கள். எனவே ஜாக்கிரதை.
8. கோர்ட் attached property வாங்காதீர்.
9. டிவோர்சஸ் கேஸ் உள்ளவரிடம் நிலம் வாங்காதீர்.
அந்த நிலத்தை அவர் மனைவி maintenance (ஜீவனாம்சம்) வேண்டி மனு செய்து இருந்தால் நீங்கள் போட்ட பணம் காலி.
எனவே விற்பவர் இடம் இந்த விவரத்தை கேளுங்கள். ஒரிஜினல் பத்திரதை காட்டச்சொல்லி பத்திரத்தின் பின் புறம் கோர்ட் சீல் இருக்கா என்று பாருங்கள்.
---------------
10.அடுத்த step, அந்த நிலத்தின் சர்வே என்னை கொண்டுபோய் நிலம் அமைந்துள்ள கிராம VAO கிட்ட அந்த நிலத்தோட FMB, பட்டா, சிட்டா, A ரெகார்ட் வாங்குங்கள்.
11.அடுத்து VAO கிட்ட govt அந்த இடத்தில் ரோடு போட , டேங்க் அமைக்க .i e., பிற்காலத்தில் govt project க்கு எடுத்து கொள்ளுமான்னு கேளுங்கள்?.பாலுமாகேந்திரவின் "வீடு " படத்தை நினைவில் வைத்து கொள்ளுங்கள்.
அவர்(VAO) டாக்குமெண்ட் தர வில்லை என்றால்,
12. மேற்கூறிய டாக்குமெண்ட் அனைத்தின் அட்டெஸ்ட் copy வேண்டும் என்று VAO office மற்றும் டாசில்தார் ஆபீஸில் RPD போஸ்ட் அல்லது நேரடி மனுவோ அல்லது RTI யில் கேட்டு டாக்குமெண்ட் நகல் வாங்கி கொள்ளுங்கள்.(கண்டிப்பாக attest copy வேண்டும் )
13.அடுத்து நிலத்தின் 1858 காலத்து OSR, RSR A-Record எடுக்க முடிந்தால் இன்னும் நல்லது.
1908,1936 ஆண்டின் SLR, RSLR A- Record, FMB ஒரு 80 to 100 வருடத்திற்கு வேண்டும்.
1987 ஆம் ஆண்டின் FMB, A-record, சிட்டா அடங்கல் கட்டாயம் எடுக்கணும்.
இதன் நகல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கேளுங்கள்.இது ஏன் கேட்க சொல்றோம் என்றால்
1.அது வெள்ளைக்காரன் காலத்தில் DC land @பஞ்சமி நிலம் ஆக இருந்தால் போட்ட பணம் எல்லாம் காலி. சுப்ரீம் கோர்ட் போனாலும் கேஸ் நிக்காது.
2. அடுத்து அது ஜமீன் ஒழிப்பு & கோயில் மானிய ஒழிப்பில் அரசால் எடுக்கப்பட்டு ஆனால் revenue record இல் அரசு நிலம் என்று பதிவேற்றம் செய்யப்படாமல் இருக்கும் நிலமா என்று பார்க்க வேண்டும்.
ஏன் என்றால் இவர்கள் revenue record இல் பதிவேற்றம் செய்யாத ஓட்டையை பயன்படுத்தி UDR சர்வே செய்ய வந்த தனியார் கம்பெனி அதிகாரிகளை கரெக்ட் செய்து UDR இல் திரும்பவும் ஜமீன் பெயரே ரயத்துவாரி யாக மாற்றி கொண்டார்கள்.
14.அடுத்து ரெஜிஸ்டர் ஆபிசில் அந்த நிலத்தின் மீது யாராவது பத்திரம் பண்ண கூடாதுனு தடை மனு கொடுத்து இருக்காங்களா கேட்டு confirm(உறுதி )பண்ணிக்கணும்.
15..அடுத்து அந்த பத்திரம் முழுமையானா ஆவணமா அதாவது பத்திரம் முழுமையான ஸ்டாம்ப் டூட்டி கட்டி இருக்கிறதா என்று confirm பண்ணுங்க.
16.அடுத்து நிலம் இருக்கும் இடத்தை குறைந்தது 10தடவை பாருங்கள். அக்கம் பக்கம் இருப்பவர்களிடம் நிலத்தின் மீது ஏதாவது பிரச்சனை, வில்லங்கம், ஆக்கிரமிப்பு இருக்கிறதா என்று கேளுங்கள் இதை ஏற்கனவே யாராவது வாங்கி இருக்கிறார்களா தற்போதைய owner யார் என்றும் கேளுங்கள்
17.அடுத்துநிலம் விற்பவர் வீட்டுக்கு அருகில் இருப்பவர்களிடம் அவருக்கு எத்தனை உடன்பிறத்தோர்,மனைவி, குழந்தைகள், விற்பவருக்கு இந்த நிலம் எப்படி வந்தது . அந்த சொத்தில் விற்பவரின் உடன் பிறந்தோர் க்கு பங்கு இருக்கா?என்று கேளுங்கள்
18.அடுத்து நான் கூறிய டாக்குமெண்ட் எல்லாம் வாங்கி விட்டு உங்கள் நிலத்தின் ரெஜிஸ்ட்டர் ஆபிஸ் ஏரியாவின் நல்ல சிவில் lawyer பாருங்கள்.
நல்ல லாயர் எப்படி கண்டு பிடிப்பது?.
உங்களுக்கு lawyer refer செய்கிறவரிடம்,
லாயர் எங்கு படித்தார் எந்த ஆண்டில் இருந்து practice செய்கிறார் எத்தனை பத்திரம் பதிந்து இருக்கிறார், எத்தனை லீகல் ஒப்பீனியன் கொடுத்து இருக்கிறார் போன்ற கேள்விகள் கேளுங்கள் புரோக்கர் சொல்லும் லாயர் இடம் செல்லாதீர்.
மேற்கூறிய கேள்விகளுக்கு உங்களால் பதில் கண்டுபிடிக்க முடியும் என்றால் நல்ல லாயாரை கண்டுபிடித்தீர்கள் என்று வைத்துக்கொள்ளலாம்.
கண்டுபிடிப்பது உங்கள் சாமர்த்தியம்.
Lawyer க்கு பணம் கொடுக்க அழுக கூடாது. அந்த பணம் தான் நிலத்தின் முதலீடு நீங்கள் விற்பவருக்கு கொடுக்கும் பணம் அல்ல.
19. எல்லாம் சரியாக அமைந்து விட்டால் அடுத்து ஒரு govt registered surveyor பாருங்க. அவர் நிலத்தை அளந்து, encroachment, deviation எல்லாம் சொல்லுவார் பின்பு படத்தை வரைந்து தருவார்.
20. தயவு செய்து டாக்குமெண்ட் writer வைத்து பத்திரம் எழுதலாமா என்று நிதானமாக யோசிக்கவும்..பத்திரம் எழுதிற license govt 1990களில் இருந்து தரவில்லை என்று கேள்வி . சந்தேகம் என்றால் லைசெஸ் நம்பர் கேளுங்கள்.
பாதி பேர் 10வது தாண்டதவர் . மீதி பேர் காலேஜ் ஹே போகாமல் 700KM தள்ளி இருக்கும் ஆந்திர, கருநாடகவில் பணம் கொடுத்து LLB டிகிரி வாங்கினவர் எல்லாம் பழைய டாக்குமென்டில் இருந்து copy paste செய்கிறார்கள் உங்களுக்கு என்று draft செய்வது குறைந்த நபர்களே.
========
காசு போனாலும் நல்ல சிவில் லாயர் வைத்து எழுதுங்கள்.சில ஆயிரம் advocate பீஸ் க்கு கஞ்ச படாதீர்கள். கொஞ்சம் மிஸ் ஆனாலும் பல லட்சம், கோடி நஷ்டம்.
திரும்பவும் சொல்றேன் நல்ல லாயர் கண்டு பிடிப்பது உங்கள் சமர்த்தியம்.
========
நாம் டாக்குமெண்ட் வேண்டி govt ஆபிஸ் க்கு நடப்பது நமது வருங்கால நன்மைக்கே நான் சொன்ன ஆவணங்கள் இல்லாமல் நிலம் வாங்காதீர்.
அடுத்து லாயர், surveyor consulting, நிலம் விற்கும் நபரின் அண்டை வீட்டார், நிலம் இருக்கும் இடத்தின் அண்டை வீட்டார் இடம் பேசாமல் இல்லாமல் புதிய சொத்து வாங்காதீர்.
இதுதான் நீங்கள் கடைபிடிக்க வேண்டியவை...
#இன்றையதகவல் #தெரிந்துகொள்வோம் #நிலம்வாங்கும்முன்
அறிவோம் Cholestrol :
துபாயில் வேலை செய்த 30 வயது ஒருவன் Cholestrol சில வருடங்களாக இருந்ததை கண்டுக்கவில்லை.. BP sugar border என்று daily gym செய்து கொண்டிருந்தார்..tread mill test generalஆக செய்த போது positive வந்தது…என்னை பார்க்க சென்னை வந்துவிட்டார்.. LDL cholesterol மிக
இது அமேசான் மழைக்காடு அல்ல. Mmte திருச்சூரில் உள்ள பாலப்பிள்ளி எஸ்டேட்டின் உள்ளே ஒரு வயல். எங்கள் அழகான சிறிய கிராமத்தின் இந்த காட்சியை உலகிற்கு அழகாக அளித்த குழுவினருக்கு நன்றியும் வாழ்த்துக்களும்.
நிலப்பிரச்சனை தொடர்பான புகாரில் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி காவல்நிலையத்தில் வழக்கறிஞர்கள் ரகளை.. சமாதானம் செய்து அனுப்பி வைக்க முயன்றும் மதுபோதையில் தான் கார் ஓட்டி வந்தோம் முடிந்தால் கைது செய்து பாருங்கள் என்று போலீசாரிடமே சவால்..
➤ மங்களமேடு, பெரம்பலூர்
#Perambalur | #PoliceStation | #Lawyers | #DrunkenMan
🌺யாருக்கேனும் இப்பதிவு உதவலாம்...🌺
4-5 நாட்களுக்கு முன் நன்றாக இருந்த பெண் ( வயது 51) திடீர் என்று மயக்கம் போட, கோவையில் உள்ள பிரபலக்கல்லுரியின் மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள்.
மூளையில் ரத்தக்கசிவு,உடனே அறுவை சிகிச்சை,
8ல் இருந்து 10 லட்சம் ஆகும் என அறிவித்தனர்.