சென்னை புத்தகக் காட்சி பிப்ரவரி 24 முதல் மார்ச் 9 வரை நடைபெறுகிறது. 44 ஆண்டுகளாக நடக்கும் கலாச்சார நிகழ்வு. தமிழின் மாபெரும் அறிவியக்கத்தின் விஸ்வரூப தரிசனத்தை ஒரே இடத்தில் தரிசிப்பதற்கான வாய்ப்பு இது. பாதுகாப்பான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளுடன் அறிவமுதம் பருக வருக.
டோரண்டோ பல்கலைக்கழகத்தில் அமைய உள்ள தமிழ் இருக்கைக்கு நிதி வழங்கக் கோரிய எனது அறிக்கைக்கு உடனே செவி சாய்த்து 1 கோடி ரூபாய் நிதிநல்கை அறிவித்த தமிழக அரசுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். வெல்க தமிழ்!
சாதி, மதங்களை வைத்து மக்களை பிரித்தாளும் சூழ்ச்சி வலை பின்னி அரசியல் வணிகத்தை கச்சிதமாக செய்யும் கழகங்களுக்கு மத்தியில் அவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் விருப்ப மனு விண்ணப்பத்தை தயாரித்திருப்பதில் இருந்தே @maiamofficial மக்களுக்கான கட்சி என்பதை உணர்த்தியுள்ளது @ikamalhaasan
மக்கள் நீதி மய்யம் கட்சியின் நான்காம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு திட்டக்குடி அரச��� மருத்துவமனையில் நோயாளிகளுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பாக இளைஞரணி மற்றும் நற்பணி இயக்கம் அணி இணைந்து பெட்ஷீட் வழங்கப்பட்டது.
@ikamalhaasan
@Thangavelukovai
@SnehanMNM
கமல்ஹாசனின் கட்சி 3 அமாவாசைகளை தாண்டாது.
கருவிலேயே கலைக்கப்பட வேண்டிய சப்பானி.
சினிமாவில் வாய்ப்பு இல்லாமல் அரசியலுக்கு வந்து விட்டார்.
காகித பூ மணக்காது.
இப்படி பல விமர்சனங்களை தாண்டி விதை முளைத்து நான்காம் ஆண்டில் கெத்தா காலடி எடுத்து வைக்கும் ம நீ ம விற்கு வாழ்த்துக்கள்.
உலக தாய்மொழிகள் தினத்தன்று கி.ராஜநாராயணனின் ‘மிச்சக் கதைகள்’ நூல் வெளியாக இருப்பது பொருத்தப்பாடு மிக்கது. கிராவுக்கு வயது 99. இந்த வயதிலும் அவரது படைப்பிலக்கியப் பங்களிப்பு தொடர்வது தமிழுக்குப் பெருமை. கிராவைப் போற்றுவோம்.
மக்கள் நீதி மய்யம் சார்பாக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்பும் நேர்மையாளர்கள் உங்கள் விருப்பமனுவை இங்கே தாக்கல் செய்யலாம் 👇
https://t.co/9EVJZKOw2a
#சீரமைப்போம்_தமிழகத்தை
சூட்கேஸ் அரசியல்
சுவீட்பாக்ஸ் அரசியல்
வாரிசு அரசியல்
என தமிழகத்தை சீரழிக்கும் அரசியலுக்கு பின் மக்கள் நீதி மய்யம் ஒருபோதும் செல்லாது.
- பொதுக்குழுவில்
தலைவர் கமல்ஹாசன்!!!
#தலை_நிமிரட்டும்_தமிழகம்
காதலினால் சாதிகள் போகும். காதலினால் சமநிலை ஆகும். காதலினால் பெண்மை உயரும். பெண் உயர்ந்தால் ஆண்மை மிளிரும். மனிதர் உயர்வில் சமூகம் உயரும். ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே.
ஜம்மு காஷ்மீரின் புல்வாமா தாக்குதல் நினைவு நாள் இன்று. 70 பேருந்துகளில் சென்ற 2,500 ரிசர்வ் படையினர், வெடிப் பொருட்கள் நிரம்பிய வாக��த்தால் தாக்கப்பட்டதில் 40க்கும் அதிகமானோர் உயிரைப் பறிகொடுத்தார்கள். அவர்களின் உயிர் ஈகையை நினைவுகொள்வோம்.
ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களுக்கென்றால் உடனடியாக கடைக்கண் திறக்கும் நீதிதேவதை, சாமான்ய மக்களுக்கு, எதிர்க்கட்சிகளுக்கென்றால் கடலில் தூக்கி வீசப��பட்ட பாறாங்கல்லைப் போல் மயான அமைதி காக்கிறாள் தாமதிக்கப்படும் நீதி மறுக்கப்படும் நீதிக்கு சமம் என்பதை நீதியரசர்கள் உணரும் காலம் எப்போது?
தனது 90ஆவது வயதில் அடியெடுத்து வைத்த உலகின், ஃபிரான்ஸ் நாட்டின், மிக முக்கிய எழுத்தாளரும், என் நண்பருமான ஜான�� கிளாட் கேரியார் இன்று காலமானார் அவர் எழுத்துக்களும் மனித நேயமும் அவர் தொட்ட மனங்களால் தொடர்ந்து வாழும்.
மோசமான பொருளாதாரக் கொள்கைகளால் ஏற்கனவே சீரழிந்த இந்தியப் பொருளாதாரத்தில் இடியென இறங்கியது பெருந்தொற்றுக் கால லாக்டவுண். ஒவ்வொரு இந்தியரும் கடுமையான பாதிப்பிற்குள்ளாகி இருக்கும் சூழலில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் பட்ஜெட் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவில்லை. (1/2)
"சீரமைப்போம் தமிழகத்தை" எனும் எமது தமிழ்க் கனவின் இன்னொரு அங்கம்தான் "புதியதோர் புதுவை செய்வோம்" என்பதுவும். இன்று புதுச்சேரியில் மக்கள் நீதி மய்யத்தின் புதிய அ��ுவலகம் திறக்கப்பட்டுள்ளது. புதுவை அரசியலின் புதிய அத்யாயம் ஆரம்பமாகி விட்டது. நாளை நமதே!
மருத்துவர் கோரிக்கைகள் கிடப்பில். செவிலியர் போராட்டம் அறிவித்திருக்கிறார்கள். மருத்துவ மாணவர் கட்டணப் பிரச்னையால் தவிப்பு. மருத்துவம் படிக்க விரும்புவோர்க்கும் தடைகள்... உயிர்காக்கும் துறையைத் தேர்ந்தெடுப்போரை என்னதான் செய்ய உத்தேசம்?