சொல்ல என்னிடம் பெரும் கதைகளில்லை
எதையும் சுமந்து திரியவுமில்லை
சுருக்கிச் சொன்னால் நதியில் மிதக்கும் கட்டைத்துண்டு
உன்னைத் தவிர வேறெதையும் யாசித்ததுமில்லை
ஒடுங்க அகல நிதானிக்க ஆர்ப்பரிக்க
எல்லை தாண்ட கரையுடைக்க கரையொதுக்கவல்ல
நதி எங்குவரை கொண்டுசெல்லுமோ
செல்லுமிந்த மிதவையை
தயங்கி நிற்கிறார்கள்
சிலர் நிமிர்ந்து காண்கிறார்கள்
கடந்து செல்கிறார்கள்
சிலர் உடைந்து தங்குகிறார்கள்
மௌனிக்கிறார்கள்
சிலர் சொல்லிவிடுகிறார்கள்
அனுக்க உறவுகளைத்தான்
கல்லாமல் சிதைத்துவிடுகிறோம்
இறக்கையிருப்பின் இருப்பு எதற்கு
எங்கோ பற
முடிந்தால் வா
உனது மொழி உணரும் நாள் நன்னாள்
💜