கற்றுக்கொள்ளும்
மனம் இருந்தால்,
நீங்கள் முட்டாள்களிடமிருந்து கூட பாடம் கற்க முடியும்..
அந்த மனம் இல்லாவிட்டால் உங்களால் புத்தனிடமிருந்து கூட எதையும் கற்க முடியாது..
#இனியகாலை🙏💐💐
மூன்றடுக்கு மாடி பளிங்கு தரை வெல்வெட் மெத்தை விரிப்பு இப்படி வசதியுள்ள வீட்டில் குடியிருந்தாலும்...
என் மனம் நாடுவது என்னவோ இயற்கை எழில் நிறைந்த இடத்தில் சுற்றிலும் மண் சுவர் கூரையால் வேயப்பட்ட வீட்டை தான்...!✍️
குளத்தில் குளிக்க மறுக்கப்பட்டவனின் உடல் மீதுதான்
பருவத்தின் முதல் மழைத்துளி விழுந்தது..
அவனை புதைக்கையில்
அதே துளியோடு புதைத்தார்கள்
அன்றிலிருந்து அந்நிலத்தடி நீரைப் பருகியவர்கள்
காதலால் செழித்து தழைத்து நின்றார்கள்..
குரல்வளையை கவ்விக் கொண்டிருக்கும் பழக்கப்பட்ட மிருகத்திடம் இருந்து விடுபட முயற்சி செய்யாத இரைகள் எல்லாம் அதன் போலி அன்பிற்கு எப்போதோ இரையாகிவிட்டதென அர்த்தம்....✍
#கவிதையின்_கிறுக்கல்
எழுத்துக்களில்
கருத்து வேண்டாம்
எளிமை போதும்
எளிமை வேண்டாம்
கருத்து போதும்
அதையும் தாண்டி
கவர்ச்சி மட்டும் போதும்
(சில மூடர் கூட்டம்)
முரண் முரண்பாடு
முரண்பட்ட சில மக்கள்
எதுவாயினும் சிலர் எழுத்தின்
வலிமையை வெல்ல முடியாது.
#நற்காலை#நறுவீ