தமிழக அரசின் நிதிநிலை குறித்து, தவெக அரசு வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கையை (White Paper) படித்துப் பார்த்தேன்.
இந்த வெள்ளை அறிக்கையில், பெரிதாக ஆச்சரியப்படும் அளவுக்குப் புதிய தகவல்கள் எதுவும் இல்லை. கடந்த ஐந்து ஆண்டுகளில் மாநில நிதி நிர்வாகத்தில் ஏற்பட்ட சீர்கேடுகளை வெளிச்சம் போட்டு காட்டும் ஒரு ஆவணமாகவே இது உள்ளது. மேலும், தமிழகத்தின் முக்கிய நிதிக் குறியீடுகளை, பிற தொழில்மயமான மாநிலங்களுடன் ஒப்பிட்டு, தமிழகத்தின் தற்போதைய நிலையைத் தெளிவாகக் கூறியிருக்கிறது.
• தமிழகத்தின் மொத்தக் கடன் நிலுவை ₹10 லட்சம் கோடியை எட்டியுள்ளது; சராசரியாக தமிழக மக்கள் ஒவ்வொருவர் பெயரிலும் ₹1,28,934 கடன் சுமை உள்ளது.
• தமிழகத்தின் மொத்த வருவாயில், 22.8%, வாங்கிய கடன��க்கு வட்டி செலுத்துவதற்கே செலவிடப்படுகிறது.
• தமிழகத்தின் சொந்த வரி வருவாய் (SoTR) மற்றும் GSDP விகிதம், 2021-22ல் 5.93% இருந்தது; 2025-26ல் அது 5.45% ஆக குறைந்துள்ளது.
• மின்சாரம், போக்குவரத்து மற்றும் நுகர்பொருள் விநியோகம் தொடர்பான முக்கிய பொதுத்துறை நிறுவனங்களின் மொத்தக் கடன் ₹3.18 லட்சம் கோடியாக உள்ளது.
• நிலங்களின் மதிப்பை குறைத்து பதிவு செய்வது போன்ற முறைகேடுகளால், பத்திரப் பதிவுத்துறை வருவ���ய் இழப்பு மற்றும் அமைப்பு சார்ந்த ஊழலால் ஏற்பட்ட பெரும் வருவாய் இழப்புகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
தமிழகத்தில் வேலை செய்யும் வயதுடைய மக்கள் தொகை, வரும் 2031 ஆம் ஆண்டில் இருந்து குறையத் தொடங்கும் சூழலில், மாநிலத்தின் வருவாய் அடித்தளத்தை வலுப்படுத்தவும், நிதிநிலையை சீர்செய்யவும் மிகவும் குறுகிய காலமே உள்ளது. இது மிகவும் கவலைக்கிடமான விஷயமாகும்.
எனவே, தவெக அரசு இந்த வெள்ளை அறிக்���ையைக் காரணம் காட்டி, செயல்படாமல் இருக்கக் கூடாது. இந்த பாத���ப்புகளைச் சரிசெய்யத் தேவையான, உடனடி நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.
இது தொடர்பாக, பொருளாதார நிபுணர்கள் மற்றும் கல்வியாளர்கள் மட்டுமின்றி, தொழில், வர்த்தகம், நிர்வாகம், தொழில்நுட்பம், சமூக மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு துறைகளின் வல்லுநர்களையும் உள்ளடக்கிய,ஒரு “செயல்திறன் மிக்க” ஆலோசனைக் குழுவை அமைத்து, தமிழகத்தை மீண்டும் வலுவான நிதிப் பாதைக்கு கொண்டு செல்லும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.
Tamil Nadu’s industrial sector is facing a slowdown. Act swiftly and decisively. Don’t repeat the DMK’s publicity-driven politics. Focus on governance and real outcomes @Keerthana4VNR@TVKVijayHQ
@Rk_Asvalayana Annamalai வானத்திலிருந்து குதித்தவர் அல்ல.
தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்த ஒரு தமிழன்.
தமிழர்களின் நலனை விட டெல்லியின் விருப்பத்திற்கே தலைவணங்கும் 'ஹைப்பர்-ஒபீடியண்ட் டெல்லி அடிமை' அரசியலை சகிக்க முடியாமல் வெளியேறியவர்.
இது தமிழ்நாட்டின் அரசியல் சுயமரியாதைக்கான ஒரு கேள்வி.
@vijayshan "நம்ம ஊர்காரன் லாம் முட்டாளுங்க, எல்லாமெ டெல்லில்ல இருக்குறவன் பாத்துபான் . நாம மூடிட்டு அவங்க சொல்றத கேட்கனும் "
Nothing new with TNBJP , No spine as well. How come spineless Hyper obedient= commitment to ideology .
@KolahalasTV "இனி தமிழகத்தை குறி வைக்கப் போகிறேன்" என்ற செய்தியை வெற்றியாக கொண்டாடுபவர்கள் யோசிக்க வேண்டும்.
தமிழக அரசியலை மாற்ற தமிழர்களால் முடியாதா? தமிழக தலைவர்கள் தேசியவாதிகளாக இருக்க முடியாதா?
மாற்றத்திற்கு வடநாட்டு சாணக்கியர்கள் தேவையில்லை.
நம்ம ஊர் அண்ணாமலைகளே போதும்.💥