மாண்புமிகு பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் சகோதரர் திரு. ஆதவ் அர்ஜுனா அவர்களை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து முக்கியமான இரண்டு கோரிக்கைகளை முன்வைத்தேன்.
முதலாவதாக
எனது திருச்சி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட திருச்சி – கரூர் சாலையில், குடமுருட்டி ஆற்றின் ��ுறுக்கே 1872-ஆம் ஆண்டு செங்கற்களால் கட்டப்பட்ட பழமையான பாலம் அமைந்துள்ளது.
திருச்சி மற்றும் கரூர் மாவட்டங்களை இணைக்கும் முக்கியப் போக்குவரத்துப் பாலமாக விளங்கும் இப்பாலம் வெறும் 7 மீட்டர் அகலம் மட்டுமே கொண்டுள்ளது.
இப்பாலத்தின் பழமையான கட்டமைப்பு மற்றும் சேதங்களைக் கருத்தில் கொண்டும், மழைக்காலங்கள���ல் குடமுருட்டி ஆற்றில் ஏற்படும் அதிகப்படியான நீர்வரத்தைக் கருத்தில் கொண்டும், பொதுமக்களின் பாதுகாப்பான போக்குவரத்தை உறுதி செய்யப் புதிய உயர்மட்ட மேம்பாலம் அமைப்பது அவசியமாகிறது.
எனவே, தற்போதைய பாலத்தின் வலதுபுறத்தில் சுமார் ரூ.25 கோடி மதிப்பீட்டில் புதிய உயர்மட்ட மேம்பாலம் அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கையை விரைந்து தயாரித்து, உரிய நிர்வாக ஒப்புதல் வழங்கி, கட்டுமானப் பணிகளைத் தொடங்கிட நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினேன்.
இரண்டாவதாக கடந்த 25.06.2026 அன்று தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டபோது, அவசர சிகிச்சைப் பிரிவிலிருந்து பிற வார்டுகளுக்குச் செல்லும் சாலைகள் மிகவும் பழுதடைந்த நிலையில் இருப்பதை நேரில் கண்டறிந்தேன்.
இதனால் நோயாளிகள், கர்ப்பிணிப் பெண்கள், முதியவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து, இச்சாலைகளைச் சீரமைப்பதற்கான செலவின மதிப்பீடு பொதுப்பணித்துறையால் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும், CSR நிதி மூலம் இப்பணிகளை மேற்கொள்ளும் வகையில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வாயிலாக தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி பவுண்டேஷனுக்கு கருத்துருவும் அனுப்பப்பட்டுள்ளது.
இப்பணிகளை விரைந்து ��ேற்கொள்ள வலியுறுத்தி, கடந்த 25.07.2026 அன்று மாண்புமிகு அமைச்சரை நேரில் சந்தித்துக் கோரிக்கை வைத்திருந்தேன் . இது தொடர்பாக 3 மாதத்திற்குள் இதற்கான பணிகள் தொடங்கப்படும் என உறுதி அளித்திருந்தார்.
இந்நிலையில் இந்தப் பணிகளை விரைந்து தொடங்குமாறு மீண்டும் வலியுறுத்தி நினைவூட்டல் கடிதத்தை வழங்கினேன்.
அன்புடன்,
துரை வைகோ
நாடாளுமன்ற உறுப்பினர் (திருச்சி)
மறுமலர்ச்சி திமுக.
13.11.2026
#DuraiVaiko #mdmk #tvk #AdhavArjuna #trichy
குழந்தைகள் தினம் – மாநிலம் முழுவதும் ஒரே நேரத்தில், ஒரே மகிழ்ச்சி!
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் ஒரே நாளி��், ஒரே நேரத்தில் குழந்தைகளுக்குக் கேக் மற்றும் “கால அட்டவணையுடன்” கூடிய வாழ்த்து அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.
மாநிலம் முழுவதும் ஒருங்கிணைந்த திட்டமிடல், முறையான களக் கண்காணிப்பு, துல்லியமான செயல்பாடு என எந்தவிதமான அசம்பாவிதங்களுக்கும், புகார்களுக்கும் இடமளிக்காமல் இந்தப் பணியை வெற்றிகரமாக நிறைவேற்றியிருப்பது தமிழ்நாட்டின் பள்ளிக்கல்வித்துறைக்கு ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல் சாதனையாகும்!
ஒரு மாநிலம் முழுவதும், ஒரே நேரத்தில், ஒரு நிகழ்வைச் சிறப்பாக ஒருங்கிணைப்பது சாதாரணமான காரியமல்ல. இதற்குப் பின்னால் பல நாட்கள் திட்டமிடல், தொடர் ஆலோசனைகள், களப்பணி, கண்காணிப்பு மற்றும் ஒவ்வொரு நிலையிலும் அர்ப்பணிப்புடன் உழைத்த பலரின் கூட்டு முயற்சி இருக்கிறது.
இந்தச் சிறப்பான முன்னெடுப்பு வெற்றிபெற அயராது உழைத்த பள்ளிக்கல்வித்துறை, உணவுத்துறை, சமூக நல��்துறை, மாவட்ட நிர்வாகம், கண்காணிப்பு அலுவலர்கள், முதன்மைக் கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், ��ல்வித்துறைப் பணியாளர்கள் என அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி.
எல்லாவற்றுக்கும் மேலாக, இந்தக் கொண்டாட்டத்தை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டு, பள்ளி வளாகங்களைப் புன்னகையாலும் உற்சாகத்தாலும் நிறைத்த தளபதியின் நெஞ்சில் குடியிருக்கும் குட்டி நண்பா நண்பிகள் அனைவருக்கும் இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்!
நீண்ட இடைவெளிக்குப் பின் நாளை முதல் X - தளத்தில் நம் செய்கை தொடரும்!
ரெடியா இரு @Udhaystalin
உனக்கு ஒத்து ஊதுற @Saattaidurai யையும் தயாரா இருக்க சொல்லு!!
🚨 CSK AUCTION PLAN UPDATE 🚨
According to reports, CSK's scouting team, led by head coach Zaheer Khan, recently conducted trials for emerging Indian talent. A Telugu young all-rounder, currently in the UK working on improving his batting and bowling skills, has reportedly impressed the CSK scouting team. The franchise could consider bidding for him in the upcoming auction. Interestingly, RCB had also invited him for trials, but he reportedly declined the opportunity, confident that CSK would bid for him in the auction.
Local players reportedly call him “Junior Hardik”. Like SRH's Nitish Reddy, he also belongs to the Reddy community. His name is Lohith Reddy.
CSK's Hardik Pandya loading.💛 #IPL2027 #CSK
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, சென்னை நுங்கம்பாக்கம் நடுநிலைப் பள்ளியில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, மாணவச் செல்வங்களுடன் கேக் வழங்கி கொண்டாடினோம்.
குழந்தைகளின் முகங்களில் தவழ்ந்த புன்னகையும், அவர்களின் உற்சாகமும் இந்த நாளை மேலும் சிறப்பாக்கின. குழந்தைகளின் மகிழ்ச்சியே நமது எதிர்காலத்தின் மகிழ்ச்சி! ❤️
**இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்!**
#HappyChildrensDay #ChennaiMiddleSchool #JCDPrabhakar
#DenishDas has been called up for #KKR and #CSK called him trials He is a top order right handed batter He also serves as a senior domestic captain for Assam
He was the most expensive player at the inaugural Assam Premier League auction in July 2026
கோயம்புத்தூருக்கு நன்றி!🇮🇳🇩🇪
Deeply impressed to see Coimbatore’s deep-rooted industrial ties with 🇩🇪, from business partnership to knowledge exchange. With the @GoetheZentrum and 🇩🇪-certified vocational training (@gttiinfo) students are multiplying their professional options.