திமுக 11 லட்சம் கோடி முதலீடு ஈர்த்ததா சொன்னாங்க .. ஆனா மொத்தமா உள்ள வந்தது ஒரு லட்சம் கோடிக்கும் கம்மி.. 35 லட்சம் வேலை கிடைக்கும்னு சொன்னாங்க அதுவும் 4,00,000-க்கும் கம்மி
- @Ananta_Jit_aji 💥👌🏻
TVK அமைச்சர் ரமேஷ் அவர்கள் one of the promising அமைச்சர் இவர்தான்
இவர் ரொம்ப sincere ஆக இருப்பதால் இவரை பழனி விவகாரத்தில் மாட்டி விட பார்த்தார்கள் - சவுக்கு
ரூ.8 கோடிக்கு மேல் ஊழல் மற்றும் இயற்கை வள கொள்ளை: அமைச்சர் எ.வ. வேலு மீது லஞ்ச ஒழிப்புத் துறையில் அறப்போர் இயக்கம் புகார்!
திருவண்ணாமலை மாவட்டம் மலப்பம்பாடி ஏரியில் ரூ 8 கோடி அளவில் மண் திருட்டில் ஈடுபட்டு ஊழல் செய்து தன் குடும்ப நிலத்தில் அந்த மண்ணை கொட்டி நிலத்தை சமப்படுத்தி திமுக இளைஞர் அணி மாநாடு நடத்திய முன்னாள் அமைச்சர் எ வ வேலு, அவர் மகன் குமரன் மற்றும் அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு இயக்கத்தில் (DVAC) அறப்போர் புகார் அளித்துள்ளது. உடனடியாக FIR பதிவு செய்து நேர்மையான விசாரணை நடத்த கோரி புகார் மற்றும் ஆதார ஆவணங்கள் இன்றைய தினம் அனுப்பி உள்ளோம்.
திமுக மாநாட்டிற்காக அரசு ஏரியில் சட்டவிரோத மண் திருட்டு:
2025 டிசம்பர் 14 அன்று திருவண்ணாமலை மாவட்டம் மலப்பம்பாடி கிராமத்தில் உள்ள "கலைஞர் திடல்" நிலத்தில் திமுக வடமண்டல இளைஞர்அணி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டை ஒருங்கிணைத்தவர் திமுக வடக்கு மண்டல பொறுப்பாளரான முன்னாள் அமைச்சர் எ வ வேலு. இந்த மாநாடு நடந்த 124 ஏக்கர் பரப்பளவு உள்ள கலைஞர் திடல் முன்னாள் அமைச்சர் வேலு மகன் எவ குமரனின் அருணை ப்ராடக்ட்ஸ் அண்ட் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு சொந்தமானது.
இம்மாநாட்டிற்கான நிலத்தைச் சமன்படுத்துவதற்காக,அருகில் உள்ள மலப்பம்பாடி ஏரியிலிருந்து (சர்வே எண்:58) சுமார் 12 ஏக்கர் பரப்பளவில், 10 முதல் 23 அடி (3 முதல் 7 மீட்டர்) ஆழத்திற்கு மண்ணை சட்டவிரோதமாகத் தோண்டி எடுத்துள்ளார் முன்னாள் அமைச்சர் எவ வேலு மற்றும் அவர் மகன். இது நவம்பர் மற்றும் டிசம்பர் 2025 காலகட்டத்தில் நடந்துள்ளது.
தமிழ்நாடு சிறு கனிம சலுகை விதிகள் 1959 (Rule 12(2))-ன் படி, பொதுப் பயன்பாட்டிற்காக ஏரிகளில் மண் எடுக்க 1 மீட்டருக்கு மேல் அனுமதி அளிக்க சட்டத்தில் இடமில்லை. ஆனால், இங்கு முன்னாள் அமைச்சரின் செல்வாக்கைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக 3 முதல் 7 மீட்டர் ஆழம் வரை லாரிகளில் மண் அள்ளப்பட்டு, அப்போதைய அமைச்சரின் மகனின் நிலம் சமன்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அரசுக்கு எட்டு கோடி ரூபாய்க்கு மேல் இழப்பும், விவசாயத்திற்கு பாதிப்பும் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. அறப்போர் இயக்கம் இந்த ஏரியை நேரடியாக ஆய்வு செய்து ஏற்பட்டுள்ள இழப்பை ஆவணம் செய்துள்ளது. கிட்டத்தட்ட 45 லட்சம் கன அடி மண் திருடப்பட்டு கிட்டத்தட்ட ரூபாய் எட்டு கோடிக்கு மேல் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
ஏரி கரையை ஆக்கிரமித்து சட்டவிரோதச் சாலை:
மாநாட்டிற்கு வரும் கூட்டத்திற்கு ஏதுவாக ,மலப்பம்பாடி ஏரியின் கரை மீது அணுகுசாலை அகலமாக பெரியளவில் அமைக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் வேலுவின் குடும்பத்திற்கு சொந்தமான நிலத்தின் வாயில் வரை நெடுஞ்சாலைத் துறை மூலம் சட்டவிரோதமாக அணுகுசாலை அமைக்கப்பட்டுள்ளது. இது தமிழ்நாடு பாசனக் குளங்கள் பாதுகாப்பு மற்றும் ஆக்கிரமிப்பு அகற்றுதல் சட்டம், 2007-க்கு முற்றிலும் எதிரான குற்றச் செயலாகும்.
பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் புகார் அளித்தும் பயனில்லை. இயற்கை வளங்கள் கொள்ளையடிக்கப்படுவதைக் கண்டு அதிகாரிகளிடம் உழவர் உரிமை இயக்கம் நவம்பர் 25 2005 இல் புகார் அளித்தது, ஆனால் ஆட்சியர், தாசில்தார், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதன் மீது நடவடிக்கை எடுக்காமல் அப்போதைய அமைச்சர் எவ வேலு மற்றும் அவரது மகன் சட்டவிரோதமாக மண் திருடுவதற்கும் அவர்கள் சொத்து சேர்ப்பதற்கும் வழிவகை செய்துள்ளது.
கலைஞர் திடல்" நிலம் 124.56 ஏக்கர் நிலம், 12.06.2024 அன்று ரூ.46 கோடிக்கு 'அருணைપ્રોடக்ட்ஸ் அண்ட் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட்' (இயக்குனர்: எ.வ. குமரன்) என்ற நிறுவனத்தால் வாங்கப்பட்டுள்ளது. இந்நிலத்தை விற்பனை செய்த 'ரிஷி என்டர்பிரைசஸ்' நிறுவனம், நெடுஞ்சாலைத் துறையில் பல நூறு கோடி ஒப்பந்தங்களைப் பெற்று வரும் ஒப்பந்ததாரர் பாண்டித்துரையின் நிறுவனமாகும். அந்த நிறுவனம் அவரது மனைவி பெயரில் உள்ளது. அவருடைய நிறுவனங்களில் சோதனையிட்ட வருமானவரித்துறை 2022-ல் பல கோடி ரூபாய் கணக்கில் வராத பணம்கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஒரு சென்ட் நிலமே 1.5 முதல் 2 லட்சம் வரை விலை போகிறது என்று மக்கள் சொல்கிறார்கள். அப்படி இருக்க 124 ஏக்கர் நிலத்தை எப்படி வெறும் 46 கோடிக்கு நெடுஞ்சாலை துறை ஒப்பந்தத்தாரிடமே அப்போதைய நெடுஞ்சாலை துறை எவ வேலு மகன் 2024 இல் வாங்கினார் என்பது குறித்தும் பண பரிவர்த்தனை குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்.
For video watch
https://t.co/IPGtH2wYaI
🧠 CYBER SAFETY QUIZ !
ஒரு நிமிஷம்... உங்களுக்கு சைபர் குற்றங்கள் குறித்து எவ்வளவு தெரியும்? 👀
🎯 காணொளியில் வரும் கேள்விக்கு சரியான பதிலைத் தேர்வு செய்யுங்கள்!
🤔 நீங்கள் தேர்வு செய்யும் பதில் சரியா? என ▶️ வீடியோவைப் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்!
Think. Choose. Stay Cyber Safe! 🛡️
📞 Cyber Crime Helpline – 1930
🌐 https://t.co/pKHOK8ovEy
⚠️ விழிப்புடன் இருப்போம்…
🛡️ சைபர் குற்றங்களை தடுப்போம்!
-----------------------------
🧠 CYBER SAFETY QUIZ!
Take a minute... How much do you know about cybercrimes? 👀
🎯 Choose the correct answer to the question shown in the video!
🤔 Did you choose the right answer? ▶️ Watch the video and find out!
Think. Choose. Stay Cyber Safe! 🛡️
📞 Cyber Crime Helpline – 1930
🌐 https://t.co/pKHOK8ovEy
⚠️ Stay alert…
🛡️ Let’s prevent cybercrimes together!
#CyberSafety #CyberCrimeAwareness #CyberQuiz #StayAlert #TamilNaduPolice
"தயவு செஞ்சு எனக்கு சால்வை கொடுக்காதீங்க, வேஸ்ட் தான் அது .. அதுக்கு பதிலா புத்தகம், செடிகளை கொடுங்க”.. இந்த கலாச்சாரத்தை நம்மளாவது மாத்துவோம் - த.வெ.க நிர்வாகிகளிடம் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ராஜீவ் வேண்டுகோள்
#TVK | #MinisterRajiv | #Books | #PolimerNews
உண்மையின் உரைகல்... உழைப்பின் அடையாளம்... தொழில்கள் துறை அமைச்சர் கீர்த்தனா! @Keerthana4VNR
அவதூறுகளால் அரசை முடக்க நினைக்கும் அரசியல் எதிரிகளே... உங்கள் கண்கள் மறைக்கலாம், ஆனால் தமிழகத்தின் தொழில் வளர்ச்சி என்றும் மறையாது!
@Keerthana4VNR